Saturday, June 07, 2008

காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல...

ஆண்:

ரகசியமானது காதல் மிக மிக
ரகசியமானது காதல் (ரகசியமானது)

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரச்யமானது காதல் மிக மிக
சுவாரச்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தைப் போல
அது சுதந்திரம் ஆனதும் அல்ல
ஈரத்தை இருட்டினைப் போல
அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல (ரகசியமானது)

பெண்:

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல (ரகசியமானது)

பாடியவர்கள்: ஹரிஷ் இராகவேந்த்ரா, ஹரிணி
படம்: கோடம்பாக்கம்
வெளிவந்த வருடம்: 2005
இசை: சிற்பி

***

இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மிக ஆழமானதாக இருக்கின்றன. பாடலின் தொடக்கத்தில் இருந்து மிக நன்றாக எடுத்துக் கொண்டு சென்று ஆணும் பெண்ணும் அவரவர் பகுதியின் சரணத்தில் பாடலின் உச்சிக்குச் செல்வது போல் அமைத்திருக்கிறார் கவிஞர். இந்தப் பாடலில் என்ன என்ன பிடிக்கிறது என்று சொல்ல ஆசை தான். ஆனால் அபப்டி சொல்லி இந்தப் பாடல் கொடுக்கும் உணர்வுகளுக்கு வரையறை ஏற்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்வுகளை அவரவர் அனுபவிக்க வேண்டும். சரி தானே?!

பாடலை ஒலி வடிவத்தில் முதலில் கேட்டுப் பாருங்கள். பின்னர் ஒளிஒலி வடிவத்தைப் பார்க்கலாம்.


3 comments:

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 10 நவம்பர் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

4 comments:

RATHNESH said...
என்ன குமரன், வீட்டுக்கு ஏதும் MESSAGE -ஆ?

Saturday, November 10, 2007 10:16:00 PM

குமரன் (Kumaran) said...
இரத்னேஷ். பல நாட்களாக இந்தப் பாட்டை ரெண்டு பேரும் காருல கேட்டுகிட்டு இருக்கோம். ஒவ்வொரு வரியும் என்ன சொல்லுதுன்னு விலாவாரியா பேசியாச்சு. என்ன இம்புட்டு நாளாச்சு இந்தப் பாட்டை இன்னும் உங்க ப்ளாக்குல போடலையான்னு நேத்து ஒரு கேள்வி வந்தது. கட்டளையை உடனே இன்னைக்கு நிறைவேத்தியாச்சு. :-)

அதனால என்ன சொல்ல வர்றேன்னா இந்தப் பாட்டு போட்டு வீட்டுக்கு எந்த மெசேஜும் அனுப்பலை. அம்புட்டுத் தான். :-)

Saturday, November 10, 2007 10:44:00 PM

Kishore said...
Super Song.

Tuesday, November 13, 2007 7:35:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி கிஷோர்.

Wednesday, November 14, 2007 9:02:00 AM

Kavinaya said...

//இந்தப் பாட்டு போட்டு வீட்டுக்கு எந்த மெசேஜும் அனுப்பலை. //

அப்போ அனுப்பல, சரி, இப்போ?? :))) நீங்க தலைப்பா வச்சிருக்க வரிதான் ரொம்ப சிறப்பா இருக்கு ('பெஸ்ட்'ன்னு சொல்ல வந்து மாத்திட்டேன்! :)

குமரன் (Kumaran) said...

சேதி அனுப்ப வேறு மிடையத்தைத் தான் தேர்ந்தெடுக்கணும் கவிநயா அக்கா. தங்கமணி நான் எழுதுன எதையுமே படிக்க மாட்டாங்க. அவங்களுக்கு இதில எல்லாம் ஆர்வம் இல்லை. :-)