Thursday, June 12, 2008
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!!!
இதை யாரு தொடங்கினாங்கன்னு தெரியலை. சிறில் பதிவுல தான் முதல்ல பார்த்தேன். சரி நானும் முயற்சி செய்யலாமே என்று முயல்கிறேன். எவ்வளவு நாள் தான் மறுபதிவாகவே போட்டுக் கொண்டிருப்பது?
உங்களுக்கு அடியேனிடம்/என்னிடம் (யாருக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்) ஏதாவது கேள்விகள் கேட்கும் எண்ணம் இருந்தால் அவற்றை பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ தாருங்கள். முடிந்த வரை சுவையாகப் பதில் சொல்கிறேன். (எல்லாம் ஒரு முயற்சி தான். சுவையாக எழுதுறது தான் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராதுல்ல).
எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை. என் பெயரில் இருக்கும் பதிவுகள் குறைந்து கொண்டு வருகின்றன. 'படித்ததில் பிடித்தது', 'கேட்டதில் பிடித்தது', 'சொல் ஒரு சொல்', 'சின்ன சின்ன கதைகள்', 'விவேக சிந்தாமணி' போன்ற பதிவுகளில் இருந்த இடுகைகளை எல்லாம் கூடலுக்கு மாற்றிவிட்டு அவற்றை எல்லாம் அழித்துவிட்டேன். இன்னும் சில பதிவுகளும் இங்கே வந்துவிடும். 'எத்தனை இடத்துக்குத் தான் போவது? ஒரே இடத்தில் எழுது' என்று என்னை விரட்டும் நண்பர்கள் மகிழ்வார்கள் என்று நினைக்கிறேன். :-)
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
//'எத்தனை இடத்துக்குத் தான் போவது? ஒரே இடத்தில் எழுது' என்று என்னை விரட்டும் நண்பர்கள் மகிழ்வார்கள் என்று நினைக்கிறேன். :-)//
நிச்சயமா, குமரா! எதுக்கு கோவில் கோவிலா போய் உங்கள பாக்கணும்? ஒரே கோவில்னா எம்புட்டு வசதி! :)
//இத்தனை கடவுள்களை பற்றி எழுதுகிறீர்களே..இதில் உங்கள் ஃபேவரைட் யார்? ஏன்? (ஒருத்தர் பேரை தான் சொல்லவேண்டும்)//
அச்சோ! என் கேள்வியை அவரே கேட்டுட்டார் :(
ஒரே ஒரு கேள்வி தானா கவிநயா அக்கா? மேலும் என்னென்ன கேக்கணும்ன்னு தோணுதோ கேளுங்க. :-)
நீங்களுமா ?
:)
கேள்விகள் தயாராகிறது....
வாத்தியார் ஐயா. ஒரே ஒரு கேள்வி தானா?
இன்னும் சில பதிவுகளும் இங்கே வந்துவிடும். 'எத்தனை இடத்துக்குத் தான் போவது? ஒரே இடத்தில் எழுது' என்று என்னை விரட்டும் நண்பர்கள் மகிழ்வார்கள் என்று நினைக்கிறேன். :-) ///
நான் விரட்டலைப்பா. ஆனா இவ்வளவு பின்னூட்டங்களில் இருக்கும் எல்லாக் கேள்விகளையும் நானும் கேட்கிறேன்:)
//4) இதுவரை சுற்றி பார்த்ததில் மறக்க முடியாத சுற்றுலா தளம் எது?//
சுற்றுலா தளமா? தலமா?
//வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க.//
வேற? வேர?
:))
போட்டுத் தாக்குங்க. :-)
இது வரை வந்திருக்கும் சில கேள்விகளைப் பார்த்தால் சொ.செ.சூ. வைத்துக் கொண்டேனோ என்று தோன்றுகிறது. ஆனாலும் மனத்தில் அந்தக் கேள்விகளைப் படித்த உடன் என்ன பதில் தோன்றுகிறதோ அதனைச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.
ஒருவர் - கேள்விகள் குவிகின்றன; பதில்கள் எங்கே - என்று கேட்டிருக்கிறார். நேற்று தானே இந்த இடுகையை இட்டிருக்கிறேன். இன்னும் சில கேள்விகள் வரட்டும். பொறுமையாகப் பதில் சொல்கிறேன். சில கேள்விகள் நான் என்ன தான் பதில் சொன்னாலும் இன்னும் கேள்விகளாகவே தானே தொடரப் போகின்றன. அப்புறம் எதற்கு அவக்கரம்? :-)
பின்னூட்ட மட்டுறுத்தல் இந்தப் பதிவில் எடுத்து பல வாரங்கள் ஆகிவிட்டன. அதனால் இங்கே வரும் பின்னூட்டங்களை நான் படித்துப் பார்த்துத் தான் அனுமதித்தேன் என்று எண்ண வேண்டாம். யாரையேனும் தனிப்பட்ட முறையில் தாக்கி ஏதேனும் பின்னூட்டங்கள் வந்தால் அவற்றை நான் பார்த்தவுடனேயே நீக்கிவிடுகிறேன். அதனால் தயங்காமல் கேள்விகளைக் கேளுங்கள்; இங்கே வேண்டாமென்றால் தனிமடல்களை அனுப்புங்கள். :-)
குமரன்
என்னோட கேள்விகள் இது தான்!
1. மேலே அன்பர்கள் கேட்ட எல்லாக் கேள்விக்கும் கட்டாயம் பதில் சொல்வீங்கல்ல?
2. தசாவதாரம் நேற்றிரவு பார்த்தாச்சா?
அடுத்த நாலு மாசத்துக்கு ஜிம் மெம்பர்ஷிப் கான்சல் பண்ணிருங்க குமரன்! பதில் சொல்லியே தானா இளைச்சிருவீங்க! :-))
என்ன இரவிசங்கர் நான் பதிவெழுதுற வேகத்தைக் கிண்டல் பண்றீங்க போலிருக்கே? இங்கே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நாலு மாசம் எடுத்துக்குவேன்னா நினைக்கிறீங்க? :-) உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. என்னோட மற்ற தொடர்கள் எல்லாம் அப்படித் தான் இழுத்துக்கிட்டுப் போகுது. :-)
செல்வன் மன்னிக்கவும். :-)
முதலில் இரவிசங்கர் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள்:
கேள்வி 1. மேலே அன்பர்கள் கேட்ட எல்லாக் கேள்விக்கும் கட்டாயம் பதில் சொல்வீங்கல்ல?
பதில் 1அ: அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னா போதுமா? 'அன்பர்கள்' என்பதற்கு அளவுகோல் எது? ஐயன் வள்ளுவர் ஏதாவது 'நீட்டி அளப்பதோர் கோல்' சொல்லியிருக்காரா? உடனே 'அது' இல்லை; 'இது' இல்லை என்று சொல்லிக்கொண்டு வந்துவிடக்கூடாது. :-)
பதில் 1ஆ: அன்பர்கள் மட்டும் இல்லை மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் (கேள்விக்கும் என்று சொன்னது இலக்கணப்பிழை - வைரமுத்து செய்தால் மன்னிப்போம் - நீங்கள் செய்தால் மன்னிப்பு கிடையாது. :-) ) காட்டாயம் பதில் சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறேன். 'இன்று போல் நாளை இல்லை' என்பது தானே இந்த உலகத்தின் நியதி. அதனால் நாளை இந்த எண்ணம் மாறாது என்று கட்டாயம் இல்லை. :-)
கேள்வி 2: தசாவதாரம் நேற்றிரவு பார்த்தாச்சா?
பதில் 1அ: இணையத்தில் இதற்குள் வந்துவிட்டதா? ஆம் என்றால் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள். :-)
பதில் 1ஆ: இரண்டு குழந்தைகளுடன் திரையரங்கிற்குச் சென்று பார்க்க வசதிபடுவதில்லை. தனியாகவோ நண்பர்களுடனோ சென்று பார்க்கும் அளவிற்குத் துணிவும் இல்லை. சென்றால் குடும்பத்துடன்; இல்லையேல் எப்போது முடிகிறதோ அப்போது வீட்டிலேயே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். :-)
நான் ஜிம் மெம்பர்சிப் வச்சிருக்கேன்னு யாரு சொன்னது? நானொரு வாழைப்பழச் சோம்பேறி என்பது சென்ற மாதம் நேரில் பார்த்த போது கூட தெரியவில்லையா?
ஒரே ஒரு கேள்வி மட்டும் போட்டுட்டுப் போயிடறேன்.
திடீர்னு என்ன ஆச்சு?? இதன் என் கேள்வி, பதில் சுலபம்.
இப்போ உஷாவின் முதல் குற்றச்சாட்டு(?)க்குப் பதில், நான் ஆன்மீகப் பதிவரே இல்லை, ஆன்மீகத்தையும், பக்தியையும் சேர்த்தே நினைப்பதால், ஒரே விஷயம் என்றும் நினைப்பதால் வரும் வினைதான் இது. ஆன்மீகம் வேறே, பக்தி வேறே. மற்றபடி திணிப்பது, மூளைச் சலவை என்றெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது. ஒரு லெவெலுக்கு மேலே போனால் குழந்தைகளும் மனதுக்குப் பிடித்தால் தான் பக்திக் கதைகளோ, ஆன்மீகம் சம்மந்தப் பட்டவைகளோ படிக்கவோ, கேட்கவோ செய்வார்கள், நாம் கட்டாயம் செய்ய முடியாது. எனினும் இறை உணர்வை உண்டாக்க இம்மாதிரிக் கதைகள் தேவை தான். மன முதிர்ச்சி அடைந்தால் அவர்கள் விருப்பம் போல் நடப்பார்கள். இது அவர்கள் விருப்பம்.
கீதா, குமுதம், விகடன் போன்ற இதழ்கள் வெளியிடும் இந்து மத நம்பிக்கைச் சார்ந்த
பத்திரிக்கைகளுக்கு ஆன்மிக சிறப்பிதழ் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் நாம் குரான், பைபிள்
விஷயங்களை பேசும் பதிவுகளுக்கு ஏன் ஆன்மீக பதிவு என்று சொல்வதில்லை என்பதே என்
சந்தேகம் :-)
அடுத்து அரும்பிலேயே இதுதான் நம் கடவுள், நம்மை படைத்தவன், காப்பவன் என்று ஏன் பிரித்து
காட்ட வேண்டும்? அந்த குழந்தை வயதில் மனதில் பதியும் விஷயம், உருவம் மாறாது இல்லையா?
பார்க்கலாம் குமரன் என்ன பதில் சொல்கிறார் என்று :-))))
குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது?
1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?
2. ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?
3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?
4. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உங்கள் குழந்தைகளுக்குக்குக் கொடுக்கப்படுமா?
5. சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
//2. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் 16..18..20..24..28..35..45..50..போதும் என்ன தோன்றும் (வயது) ?
//
துரை தியாகராஜ்,
இந்த கேள்வி மட்டும் கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கிறது. படித்தவுடன் ஒரு விதமாகப் புரிந்து கொண்டேன். இப்போது பார்த்தால் அந்தப் புரிதல் சரி தானா என்று ஐயாமாக இருக்கிறது. வேறு விதமாக, வேறு சொற்களில் கேளுங்களேன். நன்றி.
//கீதா, குமுதம், விகடன் போன்ற இதழ்கள் வெளியிடும் இந்து மத நம்பிக்கைச் சார்ந்த
பத்திரிக்கைகளுக்கு ஆன்மிக சிறப்பிதழ் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் நாம் குரான், பைபிள்
விஷயங்களை பேசும் பதிவுகளுக்கு ஏன் ஆன்மீக பதிவு என்று சொல்வதில்லை என்பதே என்
சந்தேகம் :-)//
உஷாக்கா
நான் எழுதும் கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும், மற்றும் யேசு பிரான் பற்றி எழுதிய பிற பதிவுகளுக்கும் கூட ஆன்மீகப் பதிவுகள்-னே தானே சொல்லுறாங்க!
ஒரு வேளை நான் ஆன்மீகப் பதிவன் இல்லீயோ? :-))
இது உங்களுக்கான கேள்வி!
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன! :-)
1. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வேறு ஒருவராக இடம் மாறி வாழ வாய்ப்புக் கிடைத்தால் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள்.
கூடிய விரைவில நீங்க போய் படிக்க வேண்டிய இடங்கள் குறைஞ்சிரும் கவிநயா அக்கா. இன்னும் ரெண்டு மூணு வலைப்பதிவு/வலைப்பூக்களைக் கூடலுக்குக் கொண்டு வரவேண்டும். சில பதிவுகள் ஸ்தோத்ரமாலாவுக்குச் சென்றுவிடும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எண்ணிக்கை குறையும் என்று தான் நினைக்கிறேன். :-)
கேள்விகளுக்குப் பதில்கள் சொன்ன பிறகு அந்தக் கேள்விகள் இங்கிருந்து நீக்கப்படுகின்றன. காரணத்தோடு. அந்தக் காரணம் பின்னர் சொல்லப்படும். :-)
அன்பரே,
சங்கநூல்களில் காணப்படும் தெய்வ வழிபாடு, புராணச்செய்திகள் குறித்த
பதிவுகளை எங்கிருந்து பெறலாம்?
தேவராஜன்
கே ஆர் எஸ், ஆன்மீக பதிவு என்று நினைத்து ஜூட் விட்டிருப்பேன். லிங்க் ப்ளீஸ் .
குமரன் ஏன் சைலண்ட் ஆயிட்டாரு :-)
உஷா.
ரெண்டு கேள்வி பதில் இடுகை போட்டாச்சு. மூன்றாவது எழுதிக்கிட்டு இருக்கேன். உங்க கேள்விகளுக்குப் பதில்கள் நாலாவது இடுகையில். :-)
வல்லியம்மா. நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒவ்வொன்னா பதில் சொல்லிகிட்டு வர்றேன். படிச்சுப் பாருங்க. :-)
நீங்க விரட்டி விரட்டி படிக்கிறதில்லை தான். ஆனா இந்தக் கவிநயா அக்கா இருக்காங்களே. அவங்க விரட்டி விரட்டிப் படிக்கிறாங்க. ஒரு இடுகையைப் போட்டுட்டு போய் தண்ணி குடிச்சுட்டு வந்து பாத்தா அவங்க பின்னூட்டம் போட்டிருக்காங்க. இப்படி விரட்டுனா எப்படி? :-)
//ஒரு இடுகையைப் போட்டுட்டு போய் தண்ணி குடிச்சுட்டு வந்து பாத்தா அவங்க பின்னூட்டம் போட்டிருக்காங்க. இப்படி விரட்டுனா எப்படி? :-)//
குமரா. இனிமே அப்படிப் போகும்போது, தண்ணி குடிச்சுட்டு வரேன், அதுவரை பொறுங்கன்னு சொல்லிட்டு போங்க :)
தல கொத்ஸ். இப்ப எல்லாம் எழுத்துப்பிழைகளை ரொம்ப கவனிக்கத் தொடங்கிட்டீங்க போலிருக்கு. ஏன் சிலரோட பதிவுகள் உங்களுக்கு அலர்ஜியா இருக்குன்னு இப்ப தானே தெரியுது. அவங்க பதிவுகள்ல நிறைய எழுத்துப்பிழை இருக்குறது தானே? :-)
இந்து மதத்தில் உள்ள எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பக்தி சிரத்தையாக எழுதுகிறீர்கள். படிக்கும் எனக்கு இவருக்கு சாமியே கிடையாதா என்பதுவே.
இப்படி எல்லாசாமிக்கும் அரோகரா pottaal, எந்த சாமிதான் உங்களை நம்புவார்?
Hinduism does have polytheism at lower levels. It says as man grows up in his spirituality, he reaches a level of having one Ultimate Reality, the Supreme Being, nameless and formless.
If you continue with polytheism, does it not indicate that you are still at the lowest level of polytheism!
You could clarify.
Post a Comment