கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
(கன்றும் உண்ண முடியாது கலத்திலும் தங்கியிருக்காது
நல்ல தீம்பாலானது நிலத்தில் வீழ்ந்தது போல
எனக்கும் பயனில்லாது என் தலைவனுக்கும் உதவாது
பசலை நோய் தீர்ந்திடுமோ
என்னுடைய தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கவின் மிகு அழகே!)
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
யேசுநாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிரே என்னைப்பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க
(தீண்டாய்)
கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன
(தீண்டாய்)
1 comment:
இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 19 நவம்பர் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
2 comments:
கோவி.கண்ணன் said...
குமரன்,
இதே பாடல் குறித்து வேறு சிலவற்றை சென்ற வாரம் நண்பர் ரத்னேஷ் எழுதி இருந்தார். ஆனால் பாடல் ஏற்றவில்லை.
http://rathnesh.blogspot.com/2007/11/blog-post_3345.html
இனிமையான பாடல்
Monday, November 19, 2007 6:23:00 PM
--
குமரன் (Kumaran) said...
நானும் படித்தேன் கோவி.கண்ணன். வெகு நாட்களுக்கு முன்னர் இந்தப் பதிவில் இந்தப் பாட்டைப் போடுவதற்காகச் சேமித்து வைத்திருந்தேன். இரத்னேஷின் இடுகையைப் பார்த்தவுடன் 'நாம் இந்தப் பாட்டைப் போட்டிருந்தோமே. அதைச் சொல்லலாம்' என்று எண்ணி வந்து பார்த்தால் அது ட்ராப்டாகவே இருந்தது. உடனே பதித்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர் அவருக்குப் பின்னூட்டத்தில் சொல்லலாம் என்று எண்ணினேன். இப்போது போய் சொல்கிறேன். :-)
Monday, November 19, 2007 7:24:00 PM
Post a Comment