Thursday, June 26, 2008

பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய்


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

சகலகலா வல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அருள்பவளே! கலைவாணியே!

பங்கயாசனத்தில் கூடும் - தாமரை மலர் இருக்கையில் வீற்றிருக்கும்

பசும்பொற் கொடியே - பசும்பொன்னால் செய்யப்பட்டக் கொடி போன்றவளே!

கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் - நானும் இந்த உலகமும் விரும்பும், பொருட்சுவையும் சொற்சுவையும் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையும் பாடும் பணியில் என்னைப் பணித்தருள்வாய்!

----------

நான்குவிதமான கவிதைகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்று கவிதைகள் நான்கு வகை. நினைத்தவுடன் புதுமையாக இதுவரை யாரும் பாடாத ஒரு பொருளைப்பற்றிப் பாடுவது ஆசுகவி. இசையுடன் கூடி இனிமையான சொற்களும் உவமைகளும் கூடி வரும்படிப் பாடுவது மதுரகவி. தேர் போன்ற ஒரு சித்திரத்தில் வைக்கலாம் படி சொற்களை அழகுற அமைத்துப் பாடுவது சித்திரக் கவி. பலவிதமான வடிவங்களில் அமைத்துப் பாடுவது வித்தாரக் கவி.

ஐம்பால் காடு - விளக்கம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 13 ஜனவரி 2006 அன்று 'சகலகலாவல்லிமாலை' பதிவில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

7 comments:

rnateshan said...
பொங்கல் நல்வாழ்த்துக்கல் நண்பரே!படிச்சு மாளாது போலிருக்கே!நன்றி ,நன்றி!பொங்கல் நல்வாழ்த்துக்கல்பொங்கல் நல்வாழ்த்துக்கல் நண்பரே!படிச்சு மாளாது போலிருக்கே!நன்றி ,நன்றி! நண்பரே!படிச்சு மாளாது போலிருக்கே!நன்றி ,நன்றி!படிச்சு மாளாது போலே இருக்கே!வாழ்த்துக்கள் நண்பரே ,மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!

9:04 PM, January 13, 2006
--

Anonymous said...
பொங்கல் நல்வாழ்த்துக்கல் நண்பரே!படிச்சு மாளாது போலிருக்கே!நன்றி ,நன்றி!பொங்கல் நல்வாழ்த்துக்கல்பொங்கல் நல்வாழ்த்துக்கல் நண்பரே!படிச்சு மாளாது போலிருக்கே!நன்றி ,நன்றி! நண்ப�

9:10 PM, January 13, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி rnat. பலமுறை வாழ்த்துகள் கூறியதற்கு நன்றிகள்.

4:10 AM, January 14, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
புதுவருடம், புதுபோட்டோ, புதுப்பதிவு கலக்கறிங்க குமரன்
அன்பன் தி. ரா. ச

7:55 PM, January 14, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி தி.ரா.ச. உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த வருடமும் உங்கள் ஆதரவை, ஊக்குவிப்பை, ஆசிகளை வேண்டி நிற்கிறேன்.

8:40 PM, January 14, 2006
--

ஜெயஸ்ரீ said...
அருமையான விளக்கம் குமரன்.

ஐம்பால் என்றால் பெண்களின் கூந்தல் என்று பொருள் வருவதைப் பார்த்திருக்கிறேன். ஐந்து விதமாக அலங்கரிக்கப்படுவதால் ஐம்பால் எனப்பட்டது. ஐம்பால் காடு என்றால் காடு போன்ற கூந்தல் என்று பொருள் கொள்ளலாம்.

2:48 PM, February 12, 2006
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி ஜெயச்ரி. ஐம்பால் என்பதற்கு கூந்தல் என்னும் பொருள் நன்றாகப் பொருந்தி வருகிறது. அதற்கும் நன்றி.

10:03 AM, February 14, 2006

Kavinaya said...

நல்ல விளக்கம் குமரா. ஆசுகவிங்கிற பிரயோகம் மட்டுமே கேட்டிருக்கேன். நாலு விதமான கவிகளைப் பற்றி இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

Meru_News said...

கருமை, நீட்சி, உறுதி, குழைவு, நுனி பிரியாத தன்மை
இவை ஐந்தும் கூந்தலின் நல்ல கூந்தலின் ஐந்து தன்மைகள் என்கிறது சாமுத்ரிகா சாத்திரம். இவையே ஐம்பால் காடு.