Monday, June 16, 2008

கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்

கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டே கடவுள் செயலால் நடந்ததுன்னு ஒரு பிரிவினரும் தற்செயலாக நடந்ததுன்னு ஒரு பிரிவினரும் வாதிக்கும் படியாக காட்சியமைப்புகளுடன் வந்திருக்கிறார் தாமரைநகையார். நான் யாரை சொல்றேன்ன்னு புரியாவிட்டால் இராகவன் (ஜிரா), இரவிசங்கர் கண்ணபிரான் இவர்கள் பதிவுகளைப் பாருங்கள். தாமரைநகையார் யார் என்று தெரியும். :-)



ஒழுங்கா குறுந்தகட்டில இந்த படம் வரும் வரை காத்திருந்து பார்க்கலாம்ன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா சிலருடைய விமர்சனங்கள் (முக்கியமாக பெனாத்தலார் விமர்சனம்) சரி திரையரங்கில் சென்றே பார்த்துவிடலாம்ன்னூ தூண்டிவிட்டது. என் குடும்பச் செலவிற்கோ பொதுநலனுக்கோ சென்றிருக்க வேண்டிய $32.50 இந்தப் படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்காகச் சென்றது - அந்தப் பாவம் என்னைத் தூண்டி விட்ட பதிவர்களுக்குச் செல்லாமல் இருக்க கோவிந்தராஜனை வேண்டிக்கிறேன்.

இராகவனுடைய விமர்சனத்தைப் படிக்காமல் போயிருக்கலாம். சைவர்களை அக்கிரமக்காரர்களாகக் காட்டிவிட்டார்கள்ன்னு அவருக்கு ஏற்பட்ட வேகத்தில் எழுதப்பட்ட விமர்சனத்தைப் படித்துச் சென்றதால் அப்படி அவர் கோவித்துக் கொள்ளும் படி என்ன தான் காட்டியிருக்கிறார்கள் என்று கவனித்ததில் படத்தின் சுவை குறைந்துவிட்டதோ என்று கூட தோன்றுகிறது.

எனக்கு திரைப்பட விமர்சனம் எல்லாம் எழுத வராது. சும்மா நானும் படத்தைப் பார்த்துவிட்டேன்ன்னு ஒரு மொக்கை போடலாம்ன்னு தான் போட்டேன். அம்புட்டுத் தான்.

27 comments:

பினாத்தல் சுரேஷ் said...

பழி என் மேலேயா.. நடக்கட்டும் நடக்கட்டும் :-)

சுத்தமாவா புடிக்கல?

Kavinaya said...

யூ டூ, குமரா?! :))

Kavinaya said...

சரி... கண்ணனோட குவிஜுக்கு பதில் சொல்லிட்டீங்களா? :)

rapp said...

ஏனுங்க ஒட்டுமொத்தமா உங்களுக்கு பிடிக்கலை போலருக்கு. விடுங்க இதுவும் ஒரு பரிதாபத்துக்குரிய நபருக்குத்தான் ஒருவகைல போயிருக்கும்.வேற யாருங்க நம்ம ஆஸ்கார் ரவிச்சந்திரன்தான். கமலோட டார்ச்சர ரெண்டு வருஷமா தாங்கிகிட்டு, அவர பத்தி வெளிப்படையா ஒண்ணும் சொல்ல முடியாம புழுங்கினாரில்லே, அதுக்கு நீங்க குடுத்த ஊக்கத்தொகயா இருக்கட்டும்.

குமரன் (Kumaran) said...

பழி ஓரிடம்; பாவம் மற்றோரிடம்ன்னு சொல்லுவாங்க இல்ல சுரேஷ்? பாவம் மட்டும் பதிவர்களுக்கு வரக்கூடாதுன்னு கோவிந்தராஜரை வேண்டிக்கிட்டேன்; பழியைப் பத்தி ஒன்னும் சொல்லலையே. அதான் உங்க மேல பழின்னு நீங்களே எடுத்துக்கிட்டீங்க போல. :-)

மொத்தமா புடிக்கலைன்னு சொல்லுவேனா? அசின், மல்லிகா - ரெண்டு பேரையும் விரயமாக்கிட்டாரேன்னு ஒரு கோவம்; அதான் இப்படி எழுதிட்டேன்னு உள்ளார ஒரு கொரல் சொன்னாலும் அதையெல்லாமா வெளியில சொல்லுவேன்? நல்லாத் தான் இருந்தது படம். இராகவன் விமர்சனத்தைப் படிக்காம போயிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா இரசிச்சிருப்பேன். அம்புட்டுத் தான்.

வெட்டிப்பயல் said...

அப்ப பழி பினாத்தலாருக்கு... பாவம் இராகவனுக்கு. அப்படி தானே? ;)

குமரன் (Kumaran) said...

ஆமாம்ன்னு சொல்ற வரைக்கும் நீங்க விடப் போறதில்லை போலிருக்கே பாலாஜி. பாவம் இராகவன். விட்டிருங்க. :-)

குமரன் (Kumaran) said...

மொக்கை போட்டதுக்காக இப்படி கேக்கறீங்களா கவிநயா அக்கா? நான் நிறைய மொக்கை போட்டிருக்கேன் அக்கா. கூடல்ல தேடினா கிடைக்கும். :-)

இரவிசங்கர் (அவர் கண்ணன் இல்லை - உங்களை ஏமாத்துறார்) போட்ட 'புதிரா - புனிதமா'வுக்கு முதல் பின்னூட்டமே நான் தான்(னு நினைக்கிறேன்). பாதிக்குப் பாதி பதில் தெரிஞ்சது. ஆனா சொல்லலை. எப்படியும் பரிசு எனக்கில்லைன்னு தெரியும். அதான் பழம் புளிக்கும்ன்னு வந்துட்டேன். :-)

இப்ப பாருங்க இரவிசங்கர் வந்து எந்தப் பழத்தைச் சொல்றீங்கன்னு கேப்பார். நான் அப்புறம் 'அது' இல்லை 'இது' இல்லைன்னு சொல்லிக்கிட்டுத் திரியணும். எல்லாம் சேர்க்கை சரியில்லை. என்ன பண்றது? நாய் வேடம் கட்டுனா குரைச்சுத் தானே ஆகணும்?! :-)

குமரன் (Kumaran) said...

ராப்,

ஒட்டுமொத்தமா எல்லாம் பிடிக்காம போகலைங்க. அப்படி பிடிக்காம போறதுக்கு இதென்ன புதுமுகம் படமா? பலமுகம் - ஆறுமுகம் இல்லை பத்துமுகம்ன்னு சொன்னா இராகவன் கோச்சுப்பார் - அதனால பலமுகம் நடிச்ச படமாச்சே. :-)

rapp said...

என்னங்க இப்டி கமலை சப்போர்ட் பண்றேன்னு புதுமுகங்களை டீலுல விட்டுட்டீங்க? எங்க தல ஜே. கே. ரித்தீஷோட திறமைய பார்த்துமா உங்களுக்கின்னும் புதுமுகங்களோட திறமைகள் விளங்கல? என்னமோ போங்க!

குமரன் (Kumaran) said...

ஜே. கே. ரித்தீஷ் யாருங்க? எந்த படத்துல வர்றார்? படம் நல்ல படம்ன்னு நீங்க சொன்னீங்னா அதையும் பாக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

உங்களை விட எனக்கு ரெண்டு டாலர் அதிகச் செலவு. நான் போனதுக்கும் பெனாத்தல்தான் காரணம். மனுஷன் எவ்வளவு கமிஷன் அடிச்சாரோ தெரியலையே...

குமரன் (Kumaran) said...

ஆமாம் கொத்ஸ். பெனாத்தலாரோடு இந்த இராகவனும் இரவிசங்கரும் கூட கூட்டுன்னு நினைக்கிறேன். வல்லினக்கூட்டணி. :-)

bala said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

பாலா. உங்கள் பின்னூட்டத்தில் இருந்த ஒரு தாக்குதல் வார்த்தைக்காக உங்கள் பின்னூட்டம் நீக்கப்பட்டது.

bala said...
This comment has been removed by a blog administrator.
புதுகை.அப்துல்லா said...

//தாமரைநகையார்//

அண்ணே உலக நக்கல்ங்க உங்களுக்கு!
:)

குமரன் (Kumaran) said...

அப்துல்லா,

உலக நாயகனுக்கு ஏத்த நக்கல்ன்னு வச்சுக்கோங்க.

டிஸ்கி: நக்கல் பண்ணினது நான் இல்லை. நம்ம ஜிரா கோரா இராகவன். அவரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா 'ஜிரா கோரா இராகவன்'ன்னு தலைப்புல போட்டு ஒரு ரெண்டு இடுகைகள் இந்தப் பதிவுல இருக்கும் படிச்சுப் பாருங்க. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணா, சாரி கொஞ்சம் லேட்டு!
பாவத்தை எங்க ராகவனுக்குச் சேர்க்கும் பதிவுக்கு எல்லாம் அவன் நண்பன் கேஆரெஸ் வரமாட்டான் தெரிஞ்சிக்கோங்க! :-)

//பாவம் மட்டும் பதிவர்களுக்கு வரக்கூடாதுன்னு கோவிந்தராஜரை வேண்டிக்கிட்டேன்//

எந்த கோவிந்தராஜரை!
கடல் கோவிந்தா? இல்லை ஓடிக்கிட்டே இருக்குற அசின் கோவிந்தா? :-)

//இரவிசங்கர் (அவர் கண்ணன் இல்லை - உங்களை ஏமாத்துறார்)//

கவிநயா அக்கா செல்லமா கூப்புடுறது கண்ணா! அதுல ஒங்களுக்கு ஏன் பொறாமை குமரன்? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எல்லாம் சேர்க்கை சரியில்லை. என்ன பண்றது? நாய் வேடம் கட்டுனா குரைச்சுத் தானே ஆகணும்?! :-)//

ஓஓஓஓ...
அப்போ நாய் வேடம்-னா உங்களுக்குப் புடிக்காது!
அதாச்சும் நாய் உங்களுக்குப் புடிக்காது!
அதாச்சும் பைரவர் உங்களுக்குப் புடிக்காது!
அதாச்சும் சைவம் உங்களுக்குப் புடிக்காது!

உங்க கருடக் குட்டி வெளியே வந்து விட்டது குமரன்! :-)

(***அடப்பாவி கேயாரெஸ், நீ எப்போ இப்படி எல்லாம் மாறிப் போன? உனக்கும் சேர்க்கை சரி இல்லையோ? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவித்துக் கொள்ளும் படி என்ன தான் காட்டியிருக்கிறார்கள் என்று கவனித்ததில்//

ஹூம்!
அப்போ கவனிச்சி இருக்கீங்க!
என்ன கவனிச்சீங்க குமரன்? :-)

Kavinaya said...

//கவிநயா அக்கா செல்லமா கூப்புடுறது கண்ணா! அதுல ஒங்களுக்கு ஏன் பொறாமை குமரன்? :-)//

:)))

G.Ragavan said...

ஹா ஹா ஹா நான் பாத்தப்ப இப்ப இருக்குற கும்மிகள்ளாம் இருக்கலை. ஆனா இப்பிடி புகுந்து விளையாடுறீங்க. :D

எனக்கு இந்தப் படத்தப் பாக்க எவ்ளோ செலவாச்சு தெரியுமா?

ஆம்ஸ்டர்டாம்ல இருந்து அல்மெராவுக்கு டிரெயின் டிக்கெட் - 5.60 யூரோ
அல்மெரா ஸ்டேஷன்ல டோனேர் கபாப் - 7.5 யூரோ
படம் பாக்க டிக்கெட் - 12.50 யூரோ
காப்பி - 2 யூரோ
படப் பெட்டி தாமதமானதால கடைசி டிரெயினை விட்டாச்சு. அதுனால டாக்சிக்கு 16 யூரோ

ஆக மொத்தம் = 41 யூரோ 60 செண்ட்டுகள். நீங்கள்ளாம் டாலர்ல பொலம்புறீங்க. நான் யூரோவுல பொலம்புறதப் பாத்து சந்தோஷப்படுங்க.

Kavinaya said...

இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில், நானும் படத்தைப் பார்த்துட்டேன்!

நோ கமெண்ட்ஸ் :)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். நான்கு பின்னூட்டங்களும் நன்றாக இருக்கின்றன. நன்றிகள். :-)

குமரன் (Kumaran) said...

கும்மி தானே. கத்துக்கிறேன் இராகவன். கொஞ்சம் கூடக் குறைய இருக்கும். அம்புட்டு தான். பொறுத்துக்கோங்க. :-)

ஆமாம். உங்க கதை ரொம்ப கொடுமை தான். இம்புட்டு பணம் செலவழிச்சிருக்கீங்க. அந்தக் கடுப்புல தான் விமர்சனத்துல இப்படித் தாக்கிட்டீங்க போலிருக்கு. ;-)

குமரன் (Kumaran) said...

படத்தைப் பார்த்துட்டுப் படத்தைப் பத்தி நோ கமென்ட்ஸ்னா எப்படிங்க கவிநயா அக்கா? எதாவது ஒரு வரி விமர்சனமாவது சொல்றதில்லையா? நோ கமென்ட்ஸ் தான் அந்த விமர்சனமோ? :-)