Monday, June 30, 2008
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ?
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து - என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு
உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? - உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோ?
உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் - உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள்
கவிமழை சிந்தக் கண்டு - கவிதை மழை சிந்த அதனைக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! - மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே!
சகலகலாவல்லியே! - கலைவாணியே!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 23 ஜனவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
18 comments:
முத்துகுமரன் said...
//சகலகலாவல்லியே! //
சகலகலாவல்லியே உன்னை வணங்குகிறேன் என்று சொல்கிறீர்கள் தானே. தாய் வணக்கம் அன்பையும் அருளையும் தரும். தாயின் தயையுடன் களம் இறங்கி இருக்கிறீர்கள். வெற்றி உங்களை வந்து சேரும். வாழ்த்துகள்
3:42 AM, January 23, 2006
--
G.Ragavan said...
இது குமரகுருபர சுவாமிகளால் இயற்றப்பட்டது. தெள்ளும் அழகும் கூடிக் களித்து இறையோடு இயைந்து வந்த மாதவத் தமிழ். கலைவாணியின் அருளால் கலை "வா நீ" என்றழைத்து பெருமிதங் கூட்ட வெற்றிக் கொடி நாட்ட அவள் அருள் புரிவாள். வளர்க. வெல்க.
4:07 AM, January 23, 2006
--
குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கு நன்றி முத்துக்குமரன்
4:12 AM, January 23, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன்.
4:13 AM, January 23, 2006
--
Kanags said...
//இது குமரகுருபர சுவாமிகளால் இயற்றப்பட்டது//
மேலும் சில தகவல்கள்:
குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார்.
அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.
தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ் மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.
அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.
சகலகலாவல்லி மாலை
4:20 AM, January 23, 2006
--
சிவா said...
குமரன்! கலைவாணியை வணங்கி தொடர்கிறீர்களா...தொடருங்கள்.
4:35 AM, January 23, 2006
--
இராமநாதன் said...
சிவா சொன்னது போல் கலைவாணியுடன் தொடங்கிட்டீங்க. தொடரவும்.
பேசாம வழிமொழிஞ்சிருக்கலாமோ? ரொம்ப நாள் ஆச்சுல்ல டச் விட்டுப்போச்சு.
4:39 AM, January 23, 2006
--
குமரன் (Kumaran) said...
சிவா, இராமநாதன். ஆமாம். கலைவாணியைத் தொழுது தொடங்கியிருக்கிறேன் விண்மீன் வாரத்தை. :-)
6:57 AM, January 23, 2006
--
Anonymous said...
ரொம்ப நன்னாயிருக்கு பேஷ் பேஷ்.
1:38 PM, January 23, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி அனானிமஸ். அப்படியே உங்க பேரையும் போட்டுட்டுப் போயிருக்கலாமில்ல. :-)
1:57 PM, January 23, 2006
--
செல்வன் said...
'படித்துவிட்டேன் குமரன்'
2:37 PM, January 23, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி செல்வன்.
7:34 PM, January 23, 2006
--
தி. ரா. ச.(T.R.C.) said...
சகலாவல்லிமாலை அறிந்து கொள்ள வைத்தற்கு நன்றி. தி. ரா ச
சேலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே. 13
9:23 PM, January 25, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி தி.ரா.ச. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்கள் அவசியம் பாடல்களுக்குப் பொருளும் சொல்லவேண்டும். எனக்கெல்லாம் புரியமாட்டேன் என்கிறதே.
3:43 AM, January 26, 2006
--
தி. ரா. ச.(T.R.C.) said...
சேலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே. 13
வயல்கள் சிறந்த திருவெற்றியூரில் தன் தொண்டனான சுந்தரருக்கு சேலைகட்டிய பெண்ணை கலியாணம் செய்துவிக்க ஒரு வேலைக்காரன் போல் ஒடிய பித்தன், உடம்பில் உடுத்திக்கொண்டு இருப்பதோ யாணைத்தோல், தொழிலோ கூத்தாடுவது(ஆடுதல்)இப்பேர்பட்டவனை எப்படி துணிந்து மாலையிட்டாய், எதைக்கண்டு இச்சை கொண்டாய் திருவெற்றியுரில் விளங்கும் வடிவுடைய மாணிக்கவல்லியே.
மணிக்கவல்லி மாலைக்கு பொருள் விளக்கம் செய்யலாம் என்று இருக்கிறேன் நண்பர்கள் இதைப் திபடித்துவிட்டு கருத்துக்கள் கூறினால் நலமக இருக்கும்.தி.ரா. ச
9:47 AM, January 27, 2006
--
தி. ரா. ச.(T.R.C.) said...
சேலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே. 13
வயல்கள் சிறந்த திருவெற்றியூரில் தன் தொண்டனான சுந்தரருக்கு சேலைகட்டிய பெண்ணை கலியாணம் செய்துவிக்க ஒரு வேலைக்காரன் போல் ஒடிய பித்தன், உடம்பில் உடுத்திக்கொண்டு இருப்பதோ யாணைத்தோல், தொழிலோ கூத்தாடுவது(ஆடுதல்)இப்பேர்பட்டவனை எப்படி துணிந்து மாலையிட்டாய், எதைக்கண்டு இச்சை கொண்டாய் திருவெற்றியுரில் விளங்கும் வடிவுடைய மாணிக்கவல்லியே.
மணிக்கவல்லி மாலைக்கு பொருள் விளக்கம் செய்யலாம் என்று இருக்கிறேன் நண்பர்கள் இதைப் திபடித்துவிட்டு கருத்துக்கள் கூறினால் நலமக இருக்கும்.தி.ரா. ச
9:47 AM, January 27, 2006
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி கனக்ஸ். குமரகுருபரரின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறி சுட்டியையும் கொடுத்திருக்கிறீர்கள். அந்தச் சுட்டியில் இருக்கும் வலைப்பக்கத்தில் இருந்து தான் இந்தப் பாடல்களைப் படித்து அதற்கு விளக்கம் கொடுக்கிறேன். இந்தப் பாடல்களை வலையேற்றியமைக்கு மிக்க நன்றி. என்னைப் போல் புத்தகங்களை வைத்துக் கொள்ளாமல் இணையத்திலேயே எல்லாவற்றையும் தேடுபவர்களுக்கு இது மிக வசதி. மிக்க நன்றி.
7:19 PM, January 27, 2006
--
குமரன் (Kumaran) said...
அற்புதம் தி.ரா.ச. பின்னூட்டத்திலேயே மிக அழகாய்ப் பொருள் கூறிவிட்டீர்கள். நிச்சயம் வலைப்பூ தொடங்கி மாணிக்க வல்லி மாலைக்குப் பொருள் சொல்லுங்கள். அப்படிப் பொருள் சொல்லும் போது சொல்லுக்கு சொல்லோ, வரிக்கு வரியோ எடுத்துப் பொருள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். இந்தக் கருத்தை இன்னும் விரிவாக 'மதுரையின் ஜோதி' வலைப்பூவில் 'வள்ளல் வாஸுதேவன்' பதிவிற்கு இட்டப் பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அதனையும் பார்த்து உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.
7:23 PM, January 27, 2006
அழகான பாடலும் விளக்கமும் தந்தமைக்கு நன்றி குமரா. பின்னூட்டங்களிலிருந்தும் பல செய்திகள் அறிந்து கொண்டேன்.
தங்களின் வலைகள் பலவற்றையும் பல நாட்களாகக் கவனித்துவருகிறேன். மிகஇயல்பாகப் பாடல்களுக்குப் பொருள் விவரிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். வெறும் பாடலும் பாடலின் சொற்களுக்குப் பொருளும் உரைப்பதுபோல் பாடல் உணர்த்தும் பொருளைச் சற்றே விரிவாக நனிதமிழில் அளித்தால் சுவைப்பதற்று நன்றாயிருக்கும். நன்றி
அகரம் அமுதா.
இவையெல்லாம் முன்னர் எழுதியவை. எல்லாவற்றையும் 'கூடல்' பதிவிற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறேன். அபிராமி அந்தாதிக்கு முன்னர் தொடங்கிய முறையிலேயே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இராகவனும் கோனார் உரை எழுதுகிறீர்கள் என்று சொல்வார்.
அண்மையில் எழுதிய சில இடுகைகளில் நீங்கள் சொன்னதைப் போல் பாடலின் கருத்தை ஒட்டிய சில விளக்கங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறேன்.
எல்லா வகையிலும் எல்லா வடிவிலும் முயல்கிறேன். சில வெறும் சொற்பொருள் கூறும் வகையில் அமைகின்றன. சில விரிவான பொருள் தரும் வகையில் அமைகின்றன.
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.
நன்றி கவிநயா அக்கா.
சுவைதருவதாக சின்ன உரையுடன் உரைத்தால் நன்றாயிருக்கும் என்பது என்கருத்து. பதிலலித்தமைக்கு என் நன்றிகள்
நன்றி அகரம் அமுதா.
Post a Comment