Monday, March 24, 2008

தொடரும் தமிழ்த் திருவிழா (அ) இந்த வாரமும் போர் (boring) அடிக்குமா?

என்னடா இது முன்னுக்குப் பின் முரணான தலைப்பு என்று பார்க்கிறீர்களா? எல்லாம் காரணமாகத் தான். தலைப்பின் இரண்டாவது பகுதி ஒரு பதிவர் (என்று சொல்லிக் கொள்பவர்) சொன்னது. முதல் பகுதி தான் நான் சொல்ல நினைப்பது.

சென்ற வாரம் முழுவதும் விண்மீன் வார நாயகனாக இருந்து மிக மிக அருமையான இடுகைகளாக இட்டு நம்மை எல்லாம் மகிழ்வித்தார் இரவிசங்கர். அவற்றில் பாதிவரை நேரம் கிட்டாமல் நான் இன்னும் படிக்கவில்லை என்றாலும் இன்னும் படிக்காதவையும் மிக நன்றாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. (இதனைத் தான் முன்முடிவு என்கிறார்களோ? :-) இருக்கலாம்) கடைசி இரு நாட்களில் அடுத்த வாரமும் (அதாவது இந்த வாரம்) ஒரு அருமையான பதிவர் விண்மீனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று ஏனோ மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. உள்மனத்தில் தோன்றும் இந்த எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தால் கட்டாயம் 'தொடரும் தமிழ்த் திருவிழா' என்ற தலைப்பில் இடுகை இடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

காலையில் எழுந்தவுடன் தமிழ்மண முகப்பைப் பார்த்தால் உள்ளுணர்வு சொன்னது உறுதியாகிவிட்டது. நினைத்தது போல் அந்தத் தலைப்பில் இடுகை இட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்படியே இரவிசங்கரின் இடுகைகளுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை ஒரு பார்வை பார்த்த போது ABN என்ற பெயரில் தன்னைப் பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர் ஒருவர் அனானியாக இட்டிருக்கும் பின்னூட்டம் கண்ணில் பட்டது. பின்னூட்டத்தைப் பார்க்க இந்த இடுகையைப் பாருங்கள். அவரும் அவரது கருத்தை மிக நாகரிகமாக நன்றாகத் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொன்னதில் மிகவும் கவர்ந்தது இந்த வார்த்தை: I would say this week was pretty boring to an average tamil blog reader. பல கேள்விகள் எழுந்தன. வரிசையாக அவற்றைக் கேட்கலாம் என்று தான் நினைக்கிறேன். நேரமிருந்தால் பின்னர் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் இந்த வாரமும் ABN அவர்களுக்கு சுவையான வாரமாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் சராசரி பதிவர்கள் சென்ற வாரம் இரவிசங்கர் இடுகைகளைப் படித்துச் சுவைத்தது போல் இந்த வாரமும் படித்துச் சுவைப்பார்கள் என்று உறுதி கூறுகிறேன்.

வாழ்க வாத்தியார் ஐயா! வளர்க அவர்தம் தமிழ்ப்பணி!

10 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன குமரன் இது?...இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு....விட்டுத்தள்ளுங்க...

ஆனா, வாத்தியாரய்யாவை வரவேற்கும் பதிவாக என் ++.

குமரன் (Kumaran) said...

நான் எங்கே மௌலி பதில் சொல்லியிருக்கேன்? அந்தப் பின்னூட்டம் ஒரு பெரிய சிரிப்பை வரவழைத்தது. அதனை இங்கே பகிர்ந்து கொண்டேன். சராசரி பதிவர் யார்? பல விண்மீன் வாரங்கள் எனக்குச் சுவையாக அமையவில்லை. அதனால் சராசரி பதிவரான எனக்குச் சுவையில்லாத பதிவினை விண்மீன் வாரத்தில் முகப்பில் காட்டியதைக் குறை சொல்லலாமா? மாற்றுக் கருத்துகள் நிறைந்துள்ள தமிழ்மணத்தில் ஒரு குறிப்பிட்டக் கருத்தாக்கத்தை முன்வைக்கும் ஒரு பதிவரை விண்மீனாக நிறுத்தினால் அது மற்ற கருத்தாக்கங்கள் உள்ள பதிவர்களுக்குச் சுவைக்குமா? அது தமிழ்மணம் போன்ற சார்பில்லாதத் திரட்டிக்கு உகந்தது தானா? அது Professionalism ஆகுமா? இப்படி எல்லாம் பதில் கேள்விகள் தான் கேட்கவில்லையே? :-)

jeevagv said...

I guess the law of the averages will then take care of the definition of what an average reader is!

jeevagv said...

:-)

மெளலி (மதுரையம்பதி) said...

அப்பாடி எத்தனை கேள்விகள்....

நானில்லை, வரமாட்டேன்....சொக்கா!!!! கூடலாரிமிருந்து என்னை காப்பாத்துப்பா :-)

ஜெகதீசன் said...

:)
விட்டுத் தள்ளுங்க இது போல ஆட்களையெல்லாம்...


அப்புறம்,
ரிபிசிடி என்னை "செகதீசன்" என்றழைப்பது எனக்கு சம்மதமா எனக் கேட்டிருந்தீர்கள்.. எனக்கு சம்மதமே. வடமொழி எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டாம் என நீங்கள் நினைத்தால் நீங்களும் அவ்வாறே அழைக்கலாம்....
:)

குமரன் (Kumaran) said...

சரி விட்டுத் தள்ளிட்டேன் ஜெகதீசன். :-)

உங்க பதிலை அங்கேயும் பார்த்தேன். கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் இல்லை என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அவை வடமொழியைத் எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்துகளின் சொச்சம். அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது சில தமிழறிஞர்களின் ஆவல்/அறிவுரை. நான் இது வரை அவற்றைத் தவிர்க்காமலேயே எழுதி வந்திருக்கிறேன். அப்படியே தொடர்ந்து செய்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

Jeeva,

As I did not know what is 'law of averages' I googled and got this definition from Wikipedia. Good definition. :-)

law of averages is a lay term used to express a belief that outcomes of a random event will "even out" over a large sample.

As invoked in everyday life, the "law" usually reflects bad statistics or wishful thinking rather than any mathematical principle. While there is a real theorem that a random variable will reflect its underlying probability over a large sample (see the law of large numbers), the law of averages typically assumes that unnatural short-term "balance" will occur.


[edit] Examples
Examples of the law of averages include:

Belief that an event is "due" to happen: For example, "The Roulette wheel has landed on red three consecutive times. The law of averages says it's due to land on black!" Of course, the wheel has no memory and its probabilities do not change according to past results. Similarly, there is no statistical basis for the belief that a losing sports team is due to win a game or that lottery numbers which haven't appeared recently are due to appear soon. For more, see the gambler's fallacy.
Belief that a sample's average must equal its expected value: For example, Daily Show host Jon Stewart joked that out of 10 Republican candidates for president, "the law of averages says one of these guys is a little Barney in the Franks." Even if 10% of the population is homosexual, there is no guarantee that one member in a group of ten must be homosexual. There is a measurable chance that all ten candidates are homosexual or that none are homosexual - the average only indicates that the occurrence of homosexuals in a large, randomly sampled population should approach 10%. Similarly, if you flip a fair coin 100 times, there is only an 8% chance that there will be exactly 50 heads.
Belief that a rare occurrence will happen given enough time: For example, "If I send my résumé to enough places, the law of averages says that someone will eventually hire me." This may actually be true assuming nonzero probabilites and the law of averages is simply named in place of the law of large numbers.
In mathematical terms, where p is the probability of an event occurring and N is the number of times it occurs in n tries, then the probability P that the absolute value of (N/n -p) exceeds some arbitrary real value ε with 0 < ε < 1 is bounded as P(|N/n - p| > ε) <= 1/(2 exp(n(ε/2)exp(2)). The limiting case as n goes to infinity is that the difference between the observed proportion of results and the theoretical will approach 0 or that the observed approaches the expected probability.

The law of large numbers has a strong form and a weak form.

வவ்வால் said...

குமரன்,

தோற்றப்பிழை எனலாமோ உங்களின் தலைப்பை, எனக்கு புரியவில்லை இதற்கு முந்தைய விண்மீன் வாரம் தமிழ் வாரமா இல்லை தொடர்வதும் தமிழ் வாரமா?

வாரம் என்பதே வடமொழிதானே அதுக்கு தமிழ் என்ன?

எதாவது தமிழில் அறிய வாய்ப்பிருந்தால் சரி, ஆனால் எல்லாமே சரியான கலப்பட தமிழாக வரும் பதிவுகளை தமிழ் வாரம் என்று கொண்டாடுவதா?

இந்தவார விண்மீன் பதிவில் இருந்து சில,

செஞ்சுரி,
டபுள் செஞ்சுரி,
பெவிலியன்,
ஹலோ,
ஹால்மார்க்,
கியாரண்டி,
over to star postings
(இதெல்லாம் ஒரே ஒரு பதிவில், இன்னும் நிறைய இருக்கு)

அப்புறம் நீங்களே விண்மீன் என்று சொன்னாலும் வாத்தியார்(இதுவே உபாத்தியார் என்பதன் வடமொழி மூலத்தின் மருவூ தானே)
அவர்கள் நட்சத்திரம் என்றே சொல்வதையும் பாருங்களேன்!

ஹா ..ஹா(வடமொழி சிரிப்பு) எப்படி... நாங்களும் கண்டுப்பிடிப்போம்ல இப்படி புதுசு புதுசா!

எனவே இதெல்லாம் தொடரும் தமிழ் திருவிழாவா ?

இதெல்லாம் விண்மீன் வாரப்பதிவர்களை நோகடிக்க அல்ல , சும்மா கலாய்த்தல் தான் :-))

குமரன் (Kumaran) said...

கலாய்த்தல் என்றால் கலகம் விளைவித்தல் என்றும் பொருளுண்டு; வயிற்றைக் கலக்க வைத்தல் என்றும் பொருளுண்டு. நீங்கள் இரண்டையும் செய்கிறீரே வவ்வால்? :-)

அடடா வழக்கம் போல காய் கவரத் தொடங்கிட்டாரேன்னு படிச்சுக்கிட்டு வந்தேன். கடைசியில கனி கவர்ந்தீங்களா நிம்மதியா போச்சு. :-)

இந்த உலகத்துல எல்லாமே தோற்றப்பிழை தானே வவ்வால்? வலையுலகம் மட்டும் அதற்கு விலக்காகுமா?

வாரம் என்பது வடமொழியா? கிழமை என்றொரு சொல் புழங்குவதைக் கண்டிருக்கிறேன்; புழங்கியிருக்கிறேன். ஆனால் வாரம் என்பது வடமொழியா என்பதில் எனக்குத் தெளிவில்லை.

தனித்தமிழ் பதிவுகள் இருந்தால் மட்டுமே அது தமிழ் வாரம் என்றால் இராம.கி. ஐயாவின் வாரத்தை மட்டுமே அப்படிச் சொல்ல முடியும். மத்ததெல்லாமே கலப்புத் தமிழ் பதிவுகள் தான். உங்கள் வார்த்தியில் சொன்னால் கலப்படத் தமிழ் பதிவுகள் தான். :-)

பார்த்துப் பேசுங்க. வாத்தியார் என்பது உபாத்தியாயர் என்ற வடசொல்லின் திரிபுன்னு சொல்லாதீங்க. இராம.கி. ஐயா அதன் அடிச்சொல் வேர்ச்சொல் தமிழ் என்று அழகாகக் காட்டியிருந்ததைப் படித்திருக்கிறேன். அவர் சொன்ன விளக்கத்தின் படி தமிழிலிலிருந்து வடக்கே போய் பின்னர் தெற்கே வந்து நம்மைக் குழப்பிக் கொண்டிருக்கும் சொற்களில் ஒன்று இது. என்ன விளக்கம் சொன்னார்ங்கறது தான் இப்ப மறந்து போச்சு. வழக்கம் போல. :-)

தலைகீழா தொங்கித் தொங்கி இப்படி புதுசு புதுசா கண்டுபிடிக்கிறது தானே ஐயா உங்க வேலை. உங்க வேலையை ரொம்பச் சரியா செஞ்சுக்கிட்டிருக்கீங்க. :-)