ஓம்காரப் பொருளே ஐங்கரனே
வாயார வாழ்த்தினேன் பரம்பொருளே
மாங்கனி விரும்பிய ஆனைமுகா
தாயொடு தந்தை வலம் வந்தவா
தஞ்சமென்று வந்தவரை ஆதரிப்பாய்
வஞ்சகரானாலும் அருட்துணையாவாய்
நெஞ்சைத் தந்தவரை அணைத்திடுவாய்
அஞ்சேல் அஞ்சேல் என அருள் புரிவாய்
இயற்றியவர்: புனிதாச்ரி
இராகம்: ஹம்ஸ விநோதினிதாளம்: ஆதிஇந்தப் பாடலை தன் கந்தர்வ கானக் குரலில் ஜேசுதாஸ் பாடியதைக் கேட்க
இங்கே அழுத்தவும்.
***
இந்தப் பாடல் ஏற்கனவே 08 மே, 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்ட பாடல்.
1 comment:
இந்தப் பாடல் ஏற்கனவே 08 மே, 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்ட பாடல். அப்போது இந்த இடுகைக்கு வந்தப் பின்னூட்டங்கள்:
27 comments:
சந்தோஷ் aka Santhosh said...
நல்ல பாடல் குமரன்.
Tuesday, May 09, 2006 9:17:00 PM
tbr.joseph said...
ஜேசுதாசின் குரலில் பாடல் மிக ஜோராக இருந்தது.
நன்றி.
குமரன் இப்படி பாடல்களை தளத்தில் இணைப்பது எப்படி? இதற்கு ஏதாவது பிரத்தியேக மென்பொருள் தேவையா? அது எந்த தளத்தில் கிடைக்கும். தனி மயிலில் தயவுசெய்து கூறுங்களேன்.
Wednesday, May 10, 2006 12:05:00 AM
Merkondar said...
பாடல் அருமையாக உள்ளது நன்றி
//வஞ்சகரானாலும் அருட்துணையாவாய்//
வஞச்சகருக்கும் அளுவானா?
Wednesday, May 10, 2006 12:52:00 AM
சிவமுருகன் said...
நல்ல பாடல்.
என்னிடத்தில் speaker இல்லாததால் கேட்க முடியவில்லை, பாடல் வரிகள் இனிமை.
Wednesday, May 10, 2006 12:53:00 AM
manu said...
குமரன் நம்ம பிள்ளையார் அவரோட
பாட்டு, பாடினவர் எல்லாமெ அருமையாக இருந்தன.தினம் ஒரு பாடல் கிடைக்குமா/:-))
Wednesday, May 10, 2006 6:04:00 AM
G.Ragavan said...
திரைப் பாடகர்களின் இறையிசைப் பாடல்கள் என்றால் டீ.எம்.எஸ், சீர்காழி ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எஸ்.பீ.பி அவ்வளவு ரசிப்பில்லை. ஜேசுதாஸ் பாசாகிறார்.
Wednesday, May 10, 2006 6:54:00 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
நன்றி குமரன்.நல்ல பாட்டு. அருமையான வரிகள்.இதை ஆரம்பமாக வைத்துகொள்ளலாமா? அன்பன் தி.ரா.ச.
Wednesday, May 10, 2006 7:03:00 AM
கால்கரி சிவா said...
குமரா, அதிகாலையில் ஒரு நல்லப் பாட்டு. அதுவும் என் அபிமான பாடகர்.
//திரைப் பாடகர்களின் இறையிசைப் பாடல்கள் என்றால் டீ.எம்.எஸ், சீர்காழி ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எஸ்.பீ.பி அவ்வளவு ரசிப்பில்லை. ஜேசுதாஸ் பாசாகிறார்//
ஜிரா, ஜெசுதாஸ் பாடிய திருப்புகழைக் கேளுங்கள். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.
திருப்புகழை வித்தியாசமாக சம்பிரதாய கர்நாடக சங்கீதத்தில் பாடியிருப்பார். அதில் ஒரு ஆலாபனையில் "ஜெபமாலை தந்த சத்குருநாதா...திருவாவினங்குடி பெருமாளே..பெருமாளே" என்று நெஞ்சை கசியவிடுவார்.
முருக பக்தர் நீங்கள். நிச்சயம் இந்த கேசட்டைக் கேட்டிருப்பீர்கள்
Wednesday, May 10, 2006 9:47:00 AM
lakshmi said...
mika arumaiyaana paadal...
Wednesday, May 10, 2006 12:42:00 PM
குமரன் (Kumaran) said...
இந்தப் பாட்டு உங்களுக்குப் பிடித்ததா? ரொம்ப சந்தோஷம் சந்தோஷ் :-)
Thursday, May 11, 2006 3:28:00 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் ஜோசப் ஐயா. எனக்கு ஜேசுதாஸின் குரல் மிகவும் பிடிக்கும்.
தனி மடல் அனுப்பியிருக்கிறேன். பார்த்தீர்களா?
Thursday, May 11, 2006 3:29:00 PM
குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. ஆமாம். பாடல் அப்படித் தான் சொல்கிறது. இதற்கு விளக்கம் கீதையில் இருக்கிறது. தீயவரானாலும் என் பக்தர்கள் என்றால் அவர்கள் நல்லவர்களே; அவர்கள் இப்போது தீயவர்களாய் இருந்தாலும் என் பக்தர்கள் ஆகிவிட்ட காரணத்தால் மெதுவாக நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்று சொல்கிறான் கண்ணன். அது போலத் தான் இதுவும் என்று பொருள் கொள்ள வேண்டும். வஞ்சகரானாலும் நெஞ்சைத் தந்தவருக்கு ஐங்கரன் அருட்துணையாவான்; அந்த வஞ்சகர் அவன் துணையாலே நல்லவராவார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
Thursday, May 11, 2006 3:33:00 PM
குமரன் (Kumaran) said...
அடடா. அப்படியா சிவமுருகன். விரைவில் காதில் அணிந்து கேட்க உதவும் கருவியை வாங்கிவிடுங்கள். இல்லை மிக நல்லப் பாடல்களைக் கேட்க முடியாமல் போகும்.
Thursday, May 11, 2006 3:35:00 PM
குமரன் (Kumaran) said...
இராகவன். ஜேசுதாஸுக்கு பாஸ் மட்டும் தானா? அவரைத் திரையிசைப் பாடகர்கள் வரிசையில் பார்த்தால் மற்றவர்களை விடக் குறைவாக இருக்கலாம். ஆனால் அவரை கர்நாடக சங்கீதப் பாடகராகப் பார்க்கும் போது அவர் ஒரு தனித்துவம் வாய்ந்தவர் என்பது தெளிவாகத் தெரியும். உங்களால் அவருக்குப் பாஸ் மட்டும் தான் கொடுக்க முடிந்தது என்றால் உங்கள் ஒலிப்பெருக்கியில் ஏதோ கோளாறு என்று தான் தோன்றுகிறது. :-)
Thursday, May 11, 2006 3:40:00 PM
குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. எப்படி இருக்கிறீர்கள்? ஆமாம். இந்தப் பாடலைத் தொடக்கமாகத் தான் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் பாடல் ஐங்கரனுக்கு. இரண்டாவது பாடல் சத்குருவுக்கு. மூன்றாவது பாடலில் இருந்து தடம் கொஞ்சம் மாறும். :-)
Thursday, May 11, 2006 3:42:00 PM
குமரன் (Kumaran) said...
உங்களுக்கும் இவர் அபிமான பாடகரா சிவா அண்ணா. ரொம்ப மகிழ்ச்சி.
நீங்கள் சொல்வது சரி தான். ஜேசுதாஸ் பாடிய திருப்புகழை நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். உங்களிடம் எம்பி3யாகவோ வேறு மின்பதிப்பாகவோ இருக்கிறதா அந்தப் பாடல்கள்? இருந்தால் அவற்றையும் இங்கே பதிக்கலாம். என்னிடம் காசட் மட்டும் தான் இருக்கிறது (இருந்தது. இப்போது எங்கே இருக்கிறதோ? கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன).
ஆமாம் இராகவன். சிவா அண்ணா சொல்வது போல் அந்தப் பாடல்களைக் கேட்டால் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள்.
Thursday, May 11, 2006 3:46:00 PM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி லக்ஷ்மி.
Thursday, May 11, 2006 3:46:00 PM
rnateshan. said...
அற்புதமான பாடலை பாடிய கேட்கும் வாய்ப்பித்ட் தந்தக் குமரனுக்கும் நன்றி
Friday, May 12, 2006 9:04:00 AM
Merkondar said...
தவறு செய்தாலும் அவன் அவரது பிள்ளையல்லவா? நன்றி தெரிந்து கொண்டேன்
Friday, May 12, 2006 9:45:00 AM
கால்கரி சிவா said...
குமரன், என்னிடம் காசெட் இருக்கிறது. முடிந்தால் இந்த வீக் எண்ட் இல் mp3 ஆக மாற்றி அனுப்புகிறேன்
Friday, May 12, 2006 10:44:00 AM
arunagiri said...
கால்கரி சிவா, ஜேசுதாசின் திருப்புகழ்- ஆஹா, அது ஒரு தெய்வீக அனுபவம்.
அவரது குரலின் தெய்வீகம் உள்ளத்தினுற் சென்று உருக்கும். திருப்புகழ் மேல் எனக்கு ஈடுபாடு வந்ததே ஜேசுதாஸின் குரலில் அவற்றைக்கேட்ட பின்தான் என்பதை வெட்கமின்றிச் சொல்லுவேன். தமிழ் நன்றாகப்பேசுபவர்களுக்கே சவாலாக இருப்பது திருப்புகழின் சரள அடுக்கு நடை. ஜேசுதாஸ் அதனை மிகச் சிறப்பாகக்கையாண்டு, பாவத்துடன் தனது தெய்வீகக் குரலில் தந்திருப்பது நமக்கு ஒரு பெரும்பேறு.
Saturday, May 13, 2006 12:50:00 AM
குமரன் (Kumaran) said...
பாடல் உங்களுக்கும் பிடித்திருந்ததா? மிக்க நன்றி நடேசன் ஐயா.
Monday, May 15, 2006 2:49:00 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. மிகச் சுருக்கமாக அதனைச் சொல்லிவிட்டீர்கள். மிகவும் சரி.
Monday, May 15, 2006 2:50:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவா அண்ணா. ஏற்கனவே நீங்கள் அனுப்பிய பாடல்களையும் இனிமேல் தான் வலையேற்ற வேண்டும்.
Monday, May 15, 2006 2:50:00 PM
குமரன் (Kumaran) said...
அருணகிரிக்கே திருப்புகழ் மேல் ஈடுபாடு வந்தது ஜேசுதாஸின் குரலில் திருப்புகழைக் கேட்ட பின் தானா? ஆஹா. இந்த வாக்கியத்தைச் சொல்லிப் பார்த்தாலே அருமையாக இருக்கிறதே. :-)
ஆமாம் அருணகிரி. திருப்புகழை ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்கும் போது திருப்புகழ் மிக எளிதாக விளங்கும்.
Monday, May 15, 2006 2:52:00 PM
கால்கரி சிவா said...
அருணகிரியாரே, உங்களுக்ககா முதல் இரண்டுப் பாடல்களை குமரனுக்கு அனுப்பிவிட்டேன். மேலும் 11 பாடல்கல் கூடிய சீக்கிரம் அனுப்பிவிடுவேன்
Tuesday, May 16, 2006 1:01:00 PM
குமரன் (Kumaran) said...
சிவா அண்ணா. நீங்கள் அனுப்பிய பாடல்கள் கிடைத்தன. விரைவில் அவற்றை இங்கே இடுகிறேன். மிக்க நன்றி.
Thursday, May 18, 2006 12:24:00 PM
Post a Comment