Monday, March 31, 2008

நீர் மேல் நடந்தாலும்....

நமக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர்கள் செய்யும் சாதாரணமான செயல்களும் செயற்கரிய செயல்களாகத் தோன்றுவதும் அவற்றை நாம் விழுந்து விழுந்து பாராட்டுவதும் நடக்கிறது. நம் வாழ்க்கையிலும் அதனைப் பார்க்கலாம்; இங்கே வலைப்பதிவுகளிலும் அதனைப் பார்க்கலாம். அதே நேரத்தில் நமக்கு ஒருவரைப் பிடிக்காவிட்டால் அவர்கள் செயற்கரிய செய்தாலும் அந்தச் செயல்களிலும் ஏதேனும் குறை கண்டுபிடித்து அதனைப் பெரிதாகச் சொல்கிறோம். இதனையும் நம் வாழ்க்கையிலும் வலையிலும் பார்க்கலாம். :-)

ஒரு ஊரில் ஒரு குரு ஒருவர் இருந்தார். எண்பெரும் சித்திகளையும் அடைந்து எல்லா வல்லமையும் கொண்டவராக இருந்தார். அவரிடம் ஐந்து சீடர்கள் இருந்தார்கள். அந்த குரு ஒரே நேரத்தில் ஐவருக்கு மேல் சீடராகக் கொள்வதில்லை என்று இருப்பவர். ஒரு சீடர் எல்லா கல்விகளிலும் தேர்ந்து குருவிடம் இருந்து விடை பெற்றுச் சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நாட்களிலேயே ஒரு பெண் வந்து குருவை வணங்கி அவருடைய சீடராக இருக்க வேண்டினார். குருவும் அந்தப் பெண்ணைத் தகுந்த சோதனைகள் எல்லாம் செய்து பின்னர் சீடராக ஏற்றுக் கொண்டார்.

முன்பிருந்த நான்கு ஆண் சீடர்களுக்கும் இது பிடிக்கவில்லை. 'ஒரு பெண் நம் குருவிடம் சீடராக இருப்பதா? இவளுக்கு ஆன்மிகத்தைப் பற்றி என்ன தெரியும்? சாஸ்திரம் இதனை ஒப்புக் கொள்ளுமா?' என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஆனால் குருவின் முடிவை மீற முடியாமல் அதே நேரத்தில் அந்தப் பெண்ணை எல்லா விதத்திலும் ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு முறை பக்கத்து ஊரில் ஒரு ஆன்மிகத் திருவிழா நடந்தது. அதற்கு குரு தன் சீடர்களுடன் செல்ல முடிவு செய்தார். பெண் சீடரிடம் சொல்லாமல் மற்ற நான்கு சீடர்களும் குருவுடன் சென்றனர். அந்த ஊருக்குச் செல்ல ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றங்கரையை அடைந்தால் பெண் சீடர் எல்லோருக்கும் முன்னால் வந்து அங்கே படகில் ஏறி அமர்ந்திருக்கிறார். வேண்டா வெறுப்பாக எல்லா சீடர்களும் அந்தப் படகில் ஏறினார்கள்.

படகு பாதி தூரம் சென்ற பிறகு நின்று விட்டது. என்ன காரணம் என்று படகுக் காரரைக் கேட்டபோது எரிபொருள் (டீசல்) தீர்ந்துவிட்டது என்றார். உடனே பெண் 'இதோ நான் போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லி ஆற்றின் மேல் நடந்து செல்லத் தொடங்கினார்.

அதனைக் கண்டு திகைத்தார்கள் நான்கு சீடர்களும். இவ்வளவு காலம் குருவிடம் கற்றும் இந்த வித்தையை நமக்கு குரு இன்னும் சொல்லித் தரவில்லையே. இந்தப் பெண் மட்டும் இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டாளே என்று. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

'பார்த்தீர்களா இந்தப் பெண்ணை? தண்ணீரில் நடக்கிறாள். ஹும். இவளுக்கு நீச்சல் கூட தெரியவில்லையே'

***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 3 மே 2007 அன்று இடப்பட்டது.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 3 மே 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

22 comments:

Kishore said...
hahaha

May 03, 2007 12:03 PM
--

வெட்டிப்பயல் said...
:-))

May 03, 2007 12:21 PM
--

குமரன் (Kumaran) said...
சிரிப்புக்கு நன்றி கிஷோர்.

May 03, 2007 6:09 PM
--

குமரன் (Kumaran) said...
சிரிப்பானுக்கு நன்றி பாலாஜி. பரவாயில்லையே. இப்ப எல்லாம் என் பதிவுகளைப் படிக்கிறீங்களே?! என்ன ஆச்சு திடீர்ன்னு? :-)

May 03, 2007 6:10 PM
--

வெட்டிப்பயல் said...
//குமரன் (Kumaran) said...

சிரிப்பானுக்கு நன்றி பாலாஜி. பரவாயில்லையே. இப்ப எல்லாம் என் பதிவுகளைப் படிக்கிறீங்களே?! என்ன ஆச்சு திடீர்ன்னு? :-) //

உங்க பதிவுல இப்பவெல்லாம் சண்டை நடக்குதானு பாக்க வரேனா... அப்படியே பதிவையும் படிக்கற நிலைமைக்கு ஆளாயிடறேன் ;)

May 03, 2007 9:05 PM
--

குமரன் (Kumaran) said...
நல்ல வேளை. இப்பத் தான் நீங்க உருப்படியா எழுதுறீங்கன்னு சொல்லாம விட்டீங்க. :-)

May 04, 2007 5:05 AM
--

வெட்டிப்பயல் said...
//குமரன் (Kumaran) said...

நல்ல வேளை. இப்பத் தான் நீங்க உருப்படியா எழுதுறீங்கன்னு சொல்லாம விட்டீங்க. :-) //

:-))

(இப்பக்கூட அத சொல்லலனு ஃபீல் பண்ணாம பாஸிடீவ பாக்கறீங்க பாருங்க... அங்க தான் நீங்க நிக்கறீங்க)

May 04, 2007 5:51 PM
--

வெட்டிப்பயல் said...
//வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

நல்ல வேளை. இப்பத் தான் நீங்க உருப்படியா எழுதுறீங்கன்னு சொல்லாம விட்டீங்க. :-) //

:-))

(இப்பக்கூட அத சொல்லலனு ஃபீல் பண்ணாம பாஸிடீவ பாக்கறீங்க பாருங்க... அங்க தான் நீங்க நிக்கறீங்க) //

தெய்வமே,
இது சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... சீரியசா எடுத்துக்காதீங்க...

தலைப்பு வித்யாசமா இருக்கற பதிவு தானா உள்ளே அழைத்து வருகிறது...

இதுவுமில்லாம கதை கேக்க எனக்கு எப்பவும் பிடிக்கும்...

May 04, 2007 7:09 PM
--

குமரன் (Kumaran) said...
ஆகா. என்னமோ சொல்லிட்டோமே. குமரன் குன்றேறிடுவாரோன்னு பயந்துட்டீங்களா பாலாஜி. இப்ப எல்லாம் அலுவலகத்துலயும் வீட்டுலயும் எல்லாம் நல்லபடியா போயிக்கிட்டு இருக்கு. அதனால கோவிச்சுக்க மாட்டேன். :-)

May 04, 2007 7:28 PM
--

குமரன் (Kumaran) said...
கதை எழுதணும்; தலைப்பு நல்லபடியா வைக்கணும்ன்னு முயற்சி செய்யறேன் பாலாஜி. சில நேரம் அமையுது. சில நேரம் அமைவதில்லை. :-)

கடைசியில பாருங்க இந்த இடுகை நீங்களும் நானும் அரட்டையடிக்கிற இடுகையா மாறிடுச்சு. பேசாம அதுக்கு வேற எங்காவது சாட் பண்ணிக்கிட்டு இருக்கலாம். :-)

May 04, 2007 7:30 PM
--

சிவமுருகன் said...
அண்ணா,

நேற்று ஒரு(முதல்) வலை பதிவுமாநாட்டில் கலந்து கொண்டேன். இப்போது ஒரு கதையையும், ஒரு அரட்டையும் படித்து விட்டேன். :-)

இக்கதையை படிக்கும் போது "-ve person are always -ve. be +ve". என்ற லாங்ஃபெல்லோவின் வார்த்தைகள் நினைவில் வந்தது. எல்லாம் இணையம் கொடுத்த கொடை.

நன்றி.

May 06, 2007 9:32 PM
--

குமரன் (Kumaran) said...
நீங்கள் கலந்து கொண்ட வலைமாநாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே சிவமுருகன்?

May 07, 2007 5:11 AM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பெண் சீடர் எல்லோருக்கும் முன்னால் வந்து அங்கே படகில் ஏறி அமர்ந்திருக்கிறார். "வேண்டா வெறுப்பாக" எல்லா சீடர்களும் அந்தப் படகில் ஏறினார்கள்//

என்ன குமரன் நீங்க!
எவ்வளவு நல்ல சிஷ்யர்கள் அவுங்க! பாருங்க ஒரு பெண் சீடர் கூடவே வர்றாருன்னு தெரிஞ்சும் கூட கொஞ்சம் கூட டிஸ்டிராக்ட் ஆகாம "வேண்டா வெறுப்பாக" வருகிறார்கள். :-)

என்ன பாலாஜி, கரெக்டு தானே! :-)

May 07, 2007 5:36 PM
--

கோவி.கண்ணன் said...
:)

May 07, 2007 7:07 PM
--

குமரன் (Kumaran) said...
ஹும். கதை இப்படி இருந்தும் பாலாஜிக்கு எப்படி பிடிச்சதுன்னு தெரியலை இரவிசங்கர். அவரைத் தான் கேக்கணும். :-)

May 08, 2007 5:01 AM
--

குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. :-)

--

May 08, 2007 5:01 AM
வல்லிசிம்ஹன் said...
ஆகா. என்னமோ சொல்லிட்டோமே. குமரன் குன்றேறிடுவாரோன்னு பயந்துட்டீங்களா பாலாஜி. இப்ப எல்லாம் அலுவலகத்துலயும் வீட்டுலயும் எல்லாம் நல்லபடியா போயிக்கிட்டு இருக்கு. அதனால கோவிச்சுக்க மாட்டேன்//
இப்படியே இருக்கட்டும்.
நல்ல கதை,பாடம் குமரன்.
ஏறக்குறைய எல்லோர் மனமும் இப்படித்தான் செயல்படுகிறது.,
வாழ்க்கையிலும்.

May 08, 2007 5:16 AM
--

இராமநாதன் said...
:)))

இதே மாதிரி கும்மியடித்தல், ஜல்லியடித்தல் பத்தியெல்லாம் கதை இருக்கா கும்ஸு???

May 08, 2007 3:08 PM
--

வெட்டிப்பயல் said...
//என்ன குமரன் நீங்க!
எவ்வளவு நல்ல சிஷ்யர்கள் அவுங்க! பாருங்க ஒரு பெண் சீடர் கூடவே வர்றாருன்னு தெரிஞ்சும் கூட கொஞ்சம் கூட டிஸ்டிராக்ட் ஆகாம "வேண்டா வெறுப்பாக" வருகிறார்கள். :-)

என்ன பாலாஜி, கரெக்டு தானே! :-)//

தலைவா,
வேண்டா வெறுப்பா ஏறியது பெண் சீடர் ஏறிருக்காங்கனு இல்லை. கூடவே ஏறுகிற மற்ற சீடர்களால் தான் ;)

என்ன குமரன்,
நான் சரியா தானே புரிஞ்சிக்கிட்டேன் :-)

May 08, 2007 7:48 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் வல்லியம்மா. நல்லா சொன்னீங்க. நன்றி.

May 09, 2007 3:24 PM
--

குமரன் (Kumaran) said...
கும்மியடித்தல், ஜல்லியடித்தலுக்கெல்லாம் கதை வேணுமா இராம்ஸ். அதைத் தான் தினம் தினம் தமிழ்வலைப்பதிவுலகத்துல பாக்குறோமே. :-)

May 09, 2007 3:25 PM
--

குமரன் (Kumaran) said...
பாலாஜி. ஏற்கனவே நான் ரொம்ப குழம்பிப் போயிருக்கேன். நீங்க வேற கவுண்டமணியைக் குழப்புற கணக்கா குழப்பாதீங்க. அப்புறம் கரகாட்டக்காரன், கார், நடிகை, செந்திலுக்கு விட்டு விட்டு கன்னத்துல அறை கதை தான். :-)

May 09, 2007 3:26 PM