Tuesday, March 25, 2008

பச்சை நிறப் பேய்

ஒரு முறை உடலின் எல்லா பாகங்களும் நாக்கைப் பார்த்துப் பொறாமைப் பட்டன. அவை தங்களுக்குள் 'நாம் தான் எல்லா வேலைகளும் செய்து கொண்டிருக்கிறோம். உணவு பெறுவதற்கான எல்லா முயற்சிகளும் செய்கிறோம். அப்படிக் கஷ்டப்பட்டுப் பெறும் உணவை வாயில் இட இந்த நாக்கு எந்த வேலையும் செய்யாமல் அந்த உணவை உண்டு அனுபவிக்கிறதே. இன்று முதல் எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஒன்று எல்லோரும் அந்த நாக்கினைப் போல் உட்கார்ந்து தின்ன வேண்டும். இல்லை அந்த நாக்கைப் போல் ஒரு வேலையும் செய்யக்கூடாது' என்று முடிவு செய்து வேலைநிறுத்தம் செய்து விட்டன. என்ன ஆனது என்று சொல்லவும் வேண்டுமா?

பொறாமையில் அவை மறந்தது உண்மை - நாக்கு உணவைச் சுவைத்து உள்ளே அனுப்பினால் தான் அது சக்தியாக மாறி உடலில் எல்லா பாகங்களும் சுகமாக இருக்க முடியும் என்பது. வேலைநிறுத்தம் செய்ததால் தங்களின் முடிவைத் தாங்களே தேடிக்கொண்டன. இந்தப் பொறாமை என்னும் பச்சை நிறப் பேயே எல்லாத் தாழ்வுகளுக்கும் காரணம்.

***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 26 ஜூலை 2006 அன்று இட்டது.

2 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 26 ஜூலை 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

30 comments:

விடாதுகருப்பு said...
எதையும் பார்க்காமல் கேள்விப்படாமல் படிக்காமல், கட் அண்டு பேஸ்ட் செய்யாமல் அது எப்படிங்க சொந்தமாகவே இப்படி கட்டுரை எல்லாம் எழுதுகிறீர்கள்? பண்டாஸ்டிக்... பின்றீங்கோ!

July 26, 2006 6:50 PM

நன்மனம் said...
//இந்தப் பொறாமை என்னும் பச்சை நிறப் பேயே எல்லாத் தாழ்வுகளுக்கும் காரணம்.//

கற்ற கல்வி இந்த பேயை விரட்ட பயன் படாதது வருந்த தக்கதே :-(

July 26, 2006 9:41 PM

Anonymous said...
Nalla Kathai. Azhukarukku Pachai Niram Koduthathai Koncham Vilakavum. Please.

Raja

July 27, 2006 6:16 PM

SK said...
//Nalla Kathai. Azhukarukku Pachai Niram Koduthathai Koncham Vilakavum. Please.//

'பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்'ணனுக்கு
பச்சை நிறம் பொருத்தம்தானே!

'பச்சைப்புயல் மெச்சத்தகு பொருள்'
என அருணையார் சொல்லியதை இங்கு பார்க்கவும்!!

http://aaththigam.blogspot.com/2006/07/3.html

//"பச்சைப் புயல்"


மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்//


[சொ. செ. வி.!!]


http://aaththigam.blogspot.com/2006/07/3.html

July 27, 2006 7:39 PM

குமரன் (Kumaran) said...
நன்றி விடாது கறுப்பு அண்ணா.

July 27, 2006 11:36 PM

குமரன் (Kumaran) said...
கற்ற கல்வியாலேயே இந்தப் பேய் இன்னும் பலமாக நம்மைப் பிடித்துக் கொள்வதும் உண்டே நன்மனம்.

July 27, 2006 11:36 PM

குமரன் (Kumaran) said...
இராஜா. கதையைப் பாராட்டியதற்கு நன்றி. இந்தப் பதிவில் இதுவரை எழுதியது எதுவும் என் சொந்தக் கதையில்லை. ஏற்கனவே பெரியவர்கள் சொன்ன கதையை அவர்களிடம் இருந்து கேட்டதை வைத்து என் எழுத்துகளில் எழுதுகிறேன். அதனால் உங்கள் பாராட்டு கதையைச் சொன்னவருக்குச் செல்லட்டும்.

அழகருக்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டதா? அது அவர் இயற்கை நிறம் அல்லவா? மக்களில் சிலர் சிவப்பாகவும் சிலர் மாநிறமாகவும் இருப்பதைப் போல் அழகர் நீல மேனியனாகவும் பச்சைவண்ணனாகவும் இருக்கிறார். அது கொடுக்கப்பட்ட நிறம் இல்லை. :-)

சரி. சரி. கோவித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிகிறது. பச்சை நிறத்தின் தத்துவத்தை எஸ்.கே. அவருடைய பின்னூட்டத்தில் எடுத்துக் காட்டுகளாகக் கொடுத்திருக்கிறார். பாருங்கள்.

July 27, 2006 11:40 PM

johan -paris said...
அன்பு குமரா!
நல்ல புத்திமதிக் கதை!
எல்லாம் சரி! ;இந்தப் "பச்சைப் பேய்" க்கு; உள்குத்து ஒண்ணுமில்லையே! பேய் கறுப்பு என்பாங்களே!
யோகன் பாரிஸ்

July 28, 2006 3:43 AM

செந்தழல் ரவி said...
பொறாமைக்கு ஏன் பச்சை நிறம் கொடுத்தீங்க ? மஞ்சள் கொடுத்திருக்கலாமே ?

சும்ம்ம்ம்மா...தேர் ஈஸ் னோ உள்குத்து...

நான் கேட்கவந்தது - ஏன் அந்த நிறம் என்பது மட்டும்தான்..

July 28, 2006 4:34 AM

குமரன் (Kumaran) said...
சொ.செ.வி.ன்னா என்னங்க எஸ்.கே? சொந்தச் செலவில் விளக்கமா?

July 28, 2006 5:43 AM

குமரன் (Kumaran) said...
அன்பு யோகன் ஐயா. எந்த உள்குத்தும் இல்லைங்க ஐயா. உங்க பின்னூட்டத்தைப் படிச்சப்ப ஏன் நீங்க இப்படி கேக்கறீங்கன்னு வியப்பா இருந்தது. செந்தழல் ரவியுடைய பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் பொருள் புரிந்தது. எந்த உள்குத்தும் இல்லை ஐயா. ஆங்கிலத்தில் பொறாமையை 'க்ரீன் ஐட் டெமன் (Green eyed Demon)' என்று சொல்வார்களே அதனைக் குறிக்க தலைப்பில் அப்படிச் சொன்னேன். அவ்வளவு தான்.

July 28, 2006 5:45 AM

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. பேய் கறுப்புன்னு சொல்லுவாங்களா? ஜகன் மோகினி போன்ற படங்களில் வெள்ளை நிறத்துல இல்ல காட்டுவாங்க? எல்லாப் பாட்டுலயும் வெள்ளைச் சேலை கட்டிக்கிட்டு தானே பேய்களெல்லாம் வரும்?

நீங்க சொன்ன மாதிரி 'கறுப்பு நிறப் பேய்' என்று மட்டும் நான் தலைப்பு வைத்திருந்தேன் என்றால் அது சரியான உள்குத்து என்று எண்ணி இந்நேரம் என்னைக் குத்து குத்து என்று குத்தியிருப்பார்கள். அதுவும் இந்தப் பதிவிற்குப் பார்த்தீர்களா கறுப்பு அண்ணா தான் முதல் பின்னூட்டம். :-)

July 28, 2006 5:48 AM

குமரன் (Kumaran) said...
செந்தழல் ரவி. நம்ம ஊருல எதைச் சொன்னாலும் உள்ளர்த்தம் கண்டுபிடிக்கிறாங்கப்பா. தாங்க முடியலை. பொறாமைக்கு பச்சை நிறம் கொடுத்ததற்குக் காரணம் மேலே சொல்லியிருக்கேன். நீங்க எந்த நிறம் வேண்டுமானாலும் கொடுத்துக்கலாம் - பச்சையோ மஞ்சளோ பொறாமை பொறாமை தான் இல்லையா? :-)

அப்புறம் நம்ம பதிவெல்லாம் சும்மா எட்டிப் பார்த்துட்டுப் போற நீங்க பின்னூட்டம் எல்லாம் போடறீங்க. ரொம்ப நன்றி. :-)

July 28, 2006 5:50 AM

சிவமுருகன் said...
அண்ணா,
கற்பனை நயத்துடன் கூடிய நல்ல கருத்துள்ள கதை.

July 28, 2006 6:39 AM

johan -paris said...
என்ன! குழப்புறீங்க!
வெள்ளையில் வருவது ஆவி!; கறுப்பில் வருவது பேய்!
என்றுதானே சொல்லுவாங்க!
யோகன் பாரிஸ்

July 28, 2006 6:40 AM

SK said...
//சொ.செ.வி.ன்னா என்னங்க எஸ்.கே? சொந்தச் செலவில் விளக்கமா?//அதே! அதே!

கடைசி சொல் மட்டும் "விளக்கம்" அல்ல! "விளம்பரம்"!

நம்ம பதிவு சுட்டியும் கொடுத்தேனில்லையா??!

அதற்கு!!
:)))

July 28, 2006 8:29 AM

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.என் சொந்தக் கற்பனை இல்லை. எப்போதோ படித்தது.

July 29, 2006 7:56 PM

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. அப்படி வேற ஒரு வேறுபாடு இருக்கா? நான் பேயும் ஆவியும் ஒன்னு தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்?!!

July 29, 2006 7:57 PM

குமரன் (Kumaran) said...
சொந்தச் செலவில் விளம்பரமா? அப்ப சரி எஸ்.கே. அவங்கவங்க செலவில விளம்பரம் பண்ணிக்கிட்டா ஒரு பிரச்சனையும் இல்லை தான். :-)

July 29, 2006 7:58 PM

நாகை சிவா said...
குமரன்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

August 06, 2006 8:06 AM

நாகை சிவா said...
குமரன்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

August 06, 2006 8:06 AM

குமரன் (Kumaran) said...
நன்றி நாகை. சிவா. உங்களுக்கும் வாழ்த்துகள்.

August 06, 2006 8:09 AM

கோவி.கண்ணன் said...
திரு குமரன் ... அனைவருக்கும் பிடித்த பிரியமான நண்பரான உங்களுக்கு ... நண்பர் தின நல்வாழ்த்துக்கள் !
:)

August 06, 2006 8:18 AM

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன். என்ன இது உ.கு.? :-) அனைவருக்கும் பிடித்த நண்பராக இருக்க ஆவல் உண்டு. ஆனால் நடைமுறையில் முடியாதது அது. என்னைப் பிடிக்காது என்று சொல்லும் இணைய நண்பர்களை எனக்குத் தெரியும். :-)

உங்களுக்கும் நண்பர்கள் நாள் வாழ்த்துகள்.

August 06, 2006 8:39 AM

கோவி.கண்ணன் said...
//என்னைப் பிடிக்காது என்று சொல்லும் இணைய நண்பர்களை எனக்குத் தெரியும். :-) //

குமரன் ... நானும் தொடர்ந்து பார்த்துவருகிறேன் உங்களை பிடிக்காது என்று யாரும் சொல்ல முடியாது ... சொல்லவில்லை ....கொஞ்சம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பார்கள் அவ்வளவே !
உ.கு நிச்சயமாக இல்லை... எனக்கு தோன்றியதைச் சொன்னேன் !

August 06, 2006 8:48 AM

Merkondar said...
இந்த நாக்க இருக்கே நாக்கு அது தான் உடம்புக்கு எதிரி. எதை உண்ணக்கூடாதோ அதை உண்ணச் சொல்லும். நல்லவரை திட்டும் பொல்லாதவனை வாழ்த்தும். ஊர் வம்பை வாங்கும்.

August 06, 2006 9:22 AM

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. தங்களின் பார்வை தருமரின் பார்வை. அதனால் நல்லதே தெரிகிறது. :-) உங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. என்னைக் கேட்டால் 'அனைவருக்கும் பிடித்த நண்பர்' என்பதற்கு எல்லாத் தகுதியும் உடையவர் நீங்களே.

August 06, 2006 7:46 PM

குமரன் (Kumaran) said...
உண்மைதான் என்னார் ஐயா. நாவடக்கம் என்று தனி அதிகாரமே ஐயன் எழுதியிருக்கிறாரே. யாகாவாராயினும் நாகாக்க என்று சொல்வது உண்பதையும் குறிக்கும் என்று எண்ணுகிறேன்.

August 06, 2006 7:47 PM

கோவி.கண்ணன் said...
//என்னைக் கேட்டால் 'அனைவருக்கும் பிடித்த நண்பர்' என்பதற்கு எல்லாத் தகுதியும் உடையவர் நீங்களே.//

இந்த பெரும்தன்மை இருக்கிறதே ... இதுவே உங்களைப் பற்றி நான் சொன்னது உண்மை என்பதை மெய்பிக்கும் சான்றாக இருக்கிறது... வேறென்ன சொல்ல ... எனக்குத் தெரிந்து நீங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை, நீங்கள் அத்தகைய நோக்கம் உடையவரும் இல்லை ... உங்கள் எழுத்துக்களும் அத்தகையது இல்லை.

August 07, 2006 3:07 AM

குமரன் (Kumaran) said...
நன்றி கோவி.கண்ணன் ஐயா. நீங்களும் நானும் ஒரே ஆள் என்று யாராவது சொல்வதற்கு முன் நிறுத்திக் கொள்வோம். :-))

தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

August 07, 2006 5:42 AM

குமரன் (Kumaran) said...

இப்போது இன்னொரு முறை இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும் போது இராஜா கேட்ட கேள்வி புரிகிறது. அவர் அழுக்காறு என்பதை தங்கிலீஷில் அடிக்கப் போய் எல்லோரும் அழகருக்கு என்று படித்திருக்கிறோம். :-(

இராஜா. உங்கள் கேள்விக்கு இந்தப் பின்னூட்டங்களிலேயே பதில் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி.