Thursday, March 13, 2008

எனக்கு மிகவும் பிடித்த கலவை (வீக் எண்ட் பதிவு 3)

இதைத் தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடிச்ச பாட்டுகளை எல்லாம் மறுகலவை (ரீமிக்ஸ்) செய்வதோடு மட்டும் இல்லாமல் இயற்கைக் காட்சிகளோடும் காட்டுவது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா இறைவான்னு பாடத் தோணுமே அப்போது!

1. பிடிச்ச பாட்டுகளைக் கேட்பதே இன்பம்.
2. அந்தப் பாட்டைக் கொலை செய்யாமல் மறுகலவை செய்து கேட்பது அதிலும் பெரும் இன்பம்.
3. அந்த மறுகலவை செய்யப்பட்டப் பாடலையும் இயற்கைச் சூழ்நிலையில் கேட்பது பெரும் பேரின்பம்.

அந்த மூன்றாவது நிலையைத் தான் இந்தப் பாடல் காட்சி எனக்குத் தந்தது.



இந்தப் பாடலை மறுகலவை செய்தவர்கள் 'சுப்ரபாதம்' என்று குறித்திருக்கிறார்கள். இது சுப்ரபாதம் இல்லை. ஆதிசங்கரரின் மேல் அவரது சீடர் தோடகர் எழுதிய 'தோடகாஷ்டகம்' இது.

***

இதே பாடலை இன்னொரு இயற்கை அழகோடு மறுகலவை செய்திருக்கிறார்கள். அந்தப் படத்தை அடுத்த வாரம் இடுகிறேன். அதற்குள் நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். :-)

7 comments:

குமரன் (Kumaran) said...

Test

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கமலா குச சூசுக குங்குமதோ-ன்னு மெட்டில் வருவதால் வேங்கடேச சுப்ரபாதம்-னு !(ஸ்தோத்திரம்) போட்டிருப்பாங்க போல.

தோடகாஷ்டகம்-னு பாட்டின் ஒவ்வொறு ஈற்றடியும் கேட்டா சொல்லிடலாம்! அங்கே கமென்டுங்க குமரன்! மாத்திருவாங்க!

அழகான ரீ-மிக்ஸ்! ரொம்பவும் கூச்சல் இல்லாம! :-)

jeevagv said...

ஹீம்...படங்கள் அசைவற்று இருப்பதால் மனம் ஒப்பவில்லை...But that's me!

ஜெகதீசன் said...

நன்றி!!!
இந்தப் பாடலைக் காலையில் போட்டு அண்ணியிடம் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டேன்...(இன்னைக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்தாயேன்னு...)

:)

குமரன் (Kumaran) said...

ம்ம்ம். இப்ப புரியுது ஏன் இதை சுப்ரபாதம்ன்னு சொன்னாங்கன்னு. நன்றி இரவிசங்கர்.

குமரன் (Kumaran) said...

அசை படங்களாக இருந்திருந்தால் இன்னும் நன்றாகத் தான் இருந்திருக்கும் ஜீவா.

குமரன் (Kumaran) said...

எப்படியோ நல்ல பேரு வாங்குனீங்களே அது வரைக்கும் மகிழ்ச்சி ஜெகதீசன். :-)