Thursday, March 20, 2008

நமச்சிவாயம் என சொல்வோமே!! நாராயணா என சொல்வோமே!! (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் உத்திர நாட்காட்டுடன் கூடி வரும் இந்த நன்னாளாம் பங்குனி உத்திரத்தைப் பற்றி நிறைய ஏற்கனவே பேசிவிட்டேன். அவற்றை எல்லாம் முன்பு படிக்காதவர்கள் படித்துக் கொள்ளும் படி தொடுப்புகளாகக் கீழே கொடுத்துள்ளேன்.

இந்த நன்னாளில் இந்தப் பாடல்களை எல்லாம் உங்களுடன் சேர்ந்து பாடியும் கேட்டும் மகிழும் பெரும் வாய்ப்புக்கு நன்றிகள்.நமச்சிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே

நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே

வெள்ளிப்பனிமலையில் அமர்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்

பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
உள்ளத்திலும் இருப்பான் அருள்வடிவில்

(நமச்சிவாயம்) (நாராயணா)

மலைமகள் மகிழ்ந்திட மணம் கொண்டான் - அந்த
மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
அலைமகள் அன்பில் ஆடியவன் - அந்த
அன்னையை மார்பில் சூடியவன்
கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
நிலை தரும் சிவனை நாடுபவன் - நான்
நெடியவன் புகழைப் பாடுபவன்

(நமச்சிவாயம்) (நாராயணா)

ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமோ நாராயணாய நம:


படம்: அகத்தியர்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர். மகாலிங்கம்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன் (?)

இன்னொரு பாடலை முருகனருள் கூட்டுப் பதிவில் எதிர்பாருங்கள்.

***

பங்குனி உத்திரத்திற்காக முன்பு இட்ட இடுகைகள்:

பங்குனி உத்திரத் திருநாள்
பங்குனி உத்திரம் - 1
பங்குனி உத்திரம் - 2
பங்குனி உத்திரம் - 3

14 comments:

SP.VR. SUBBIAH said...

என்ன கூடலாரே (மனோரமா தொனியில் படிக்கவும்) உத்தரமும் அதுவுமா ரெண்டு
பாட்டை அடுத்தடுத்துப் போட்டு அசத்திரீகளே!

நான் எங்கினபோய் உக்காந்து கேக்கிறது?
அதையும் சத்த சொல்லீட்டிகன்னா புண்ணியமாப் போகும் தம்பி...!

அமர பாரதி said...

குமரன்,

//நாளில் உத்திர நாட்காட்டுடன் கூடி வரும் //

தயவு செய்து நட்சத்திரம் என்றே உபயோகப்படுத்தலாமே !!! Why do we need to re-invent the wheel?

மதுரையம்பதி said...

தலைப்பைப் பாத்துட்டு சைவ வைஷ்ணவ ஒற்றுமையினை எனக்கு விளக்க்கும் பதிவுன்னு நினைச்சு வந்தேன்..... :-)

ஆனாலும் நீங்க ஏமாத்தல்ல, பழைய பதிவுகளின் லிங்க் கொடுத்துட்டீங்க. நன்றி.

உங்களுக்கும், உங்கள் செல்வ மகளுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :-)

சிவமுருகன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நண்பர்கள் அனைவருக்கும்
பங்குனி உத்திர நன்னாள் வாழ்த்துக்கள்!
சரியான சமயத்தில் சரியான பாடல்!
சேர்த்தி சேவை அற்புதம்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இன்னொரு பாடலை முருகனருள் கூட்டுப் பதிவில் எதிர்பாருங்கள்//

அதற்கப்புறம்? :-))))

குமரன் (Kumaran) said...

வாத்தியார் ஐயா. பங்குனி உத்திரம் தான் எல்லா கடவுளர்களுக்கும் உரியதாக இருக்கே. அதனால் தான் அடுத்தடுத்து பாடல்கள். முருகனருளிலும் இங்கும் இட்டப் பாடல்களைக் கேட்டுவிட்டீர்கள். அப்படியே கண்ணன் பாட்டையும் அம்மன் பாட்டையும் பார்த்துவிடுங்கள். அங்கும் ஒவ்வொரு பாடல்களாக இட்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அமரபாரதி ஐயா.

நட்சத்திரம் என்ற சொல்லுடன் நாட்காட்டு என்ற சொல்லும் இருந்துவிட்டுப் போகட்டுமே. ஒரே பொருளில் பல சொற்கள் இருப்பது இயற்கை தானே. :-)

குமரன் (Kumaran) said...

மௌலி,

உங்களுக்கு சைவ வைணவ ஒற்றுமையை விளக்க வேண்டிய தேவையே இல்லையே? அது தான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே. ஏற்கனவே பங்குனி உத்திரத்தைப் பத்தி நிறைய சொல்லிட்டதால சும்மா சுட்டி மட்டும் குடுக்காம ஒரு பாட்டோட குடுத்தேன்.

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன்.

குமரன் (Kumaran) said...

சரியான நேரம்ன்னா என்ன இரவிசங்கர்? நீங்க தமிழ்மணத்துல விண்மீனா ஒளிவீசும் நேரமா? :-)

சேர்த்தி சேவையை இங்கே போடலியே? கண்ணன் பாட்டுல பாத்துட்டு இங்கே வந்தீங்களோ?

குமரன் (Kumaran) said...

//அதற்கப்புறம்? :-))))//

அதற்கப்புறம் கண்ணன் பாட்டில் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரங்கள், அம்மன் பாட்டில் கருணைத் தெய்வம் கற்பகவல்லியின் மேல் ஒரு பாடல். :-)

Mariappan Gnanaraj said...

சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த பாடல் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அந்த பாடலில் சிவனடியாராய் வந்து பாடுபவர் பெயர் "கோவிந்தராஜன்".
திருமால் அடியவராய் வந்து பாடுபவர் பெயர் "மகாலிங்கம்".
இந்த ஒற்றுமையை பார்த்தீர்களா?????

குமரன் (Kumaran) said...

உண்மை தான் மாரியப்பன் ஞானராஜ். நிறைய இடங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். நன்றி.