Friday, March 07, 2008
என்ன புண்ணியம் செய்தேனோ?
அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
விளையாடும் போது தோழன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை
இப்படி உலவும் என் குருநாதன் வாழி வாழி
என்ன புண்ணியம் செய்தேனோ - சத்குருநாதா
எத்தனை தவம் செய்தேனோ - நின் அருள் பெறவே
பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்
உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)
வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே
படர்முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போல
தேடியும் காணாத த்ரவ்யமே சத்குரு
தேவா தேவா சத்குரு நின் அருள் பெறவே (என்ன)
இயற்றியவர்: ஊத்துக்காடு வெங்கட கவி
இராகம்: ரீதி கௌளா
தாளம்: ஆதி
இந்தப் பாடலை தன் கந்தர்வ கானக் குரலில் ஜேசுதாஸ் பாடியதைக் கேட்க இங்கே அழுத்தவும்.
***
இந்த இடுகை 10 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்த இடுகை 10 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
16 comments:
Lakshmi said...
mikavum arumaiyaana paadal...dinam oru paadal ippadi koduthaal mikavum nanraagha irukkum!!!
Wednesday, May 10, 2006 3:10:00 PM
வெற்றி said...
குமரன்,
நல்ல அருமையான பாடலை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றிகள்.
Thursday, May 11, 2006 11:45:00 AM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி லக்ஷ்மி.
தினமும் ஒன்று இப்படி கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. முடிந்த போதெல்லாம் கொடுக்கிறேன்.
Thursday, May 11, 2006 3:49:00 PM
குமரன் (Kumaran) said...
மிக்க மகிழ்ச்சி வெற்றி. இந்தப் பாடல் அருமையான பாடல் என்பதில் சந்தேகமும் இல்லை. நான் அடிக்கடி கேட்கும் பாடல். என்னுடைய நூறாவது பதிவிலும் இந்தப் பாடலைப் பற்றி சொல்லியிருந்தேன்.
Thursday, May 11, 2006 3:50:00 PM
Ram said...
குமரன்,
முதல் இரண்டு பாடல்களும் அருமை தேர்வு.
என்னுடைய விருப்ப பாடலான "பிரபோ கணபதி பரிபூரண வாழ்வருள்வாயே..." இங்கு அரங்கேற்ற தங்களால் முடியுமா ?
-ராம்
Thursday, May 11, 2006 7:27:00 PM
johan -paris said...
அன்புக் குமரனுக்கு!
சீர்காழிக்குப் பின் என்மனம் கவர்ந்த கலைஞர், ஜேசுதாஸ்; இவர் குரலில் எது கேட்டாலும் தெவிட்டாது!
தொடருங்கள்.
யோகன்
பாரிஸ்
Friday, May 12, 2006 3:46:00 AM
Sivabalan said...
Good Work!!
Friday, May 12, 2006 10:29:00 AM
Samudra said...
நல்ல பாட்டுங்க.
//தினமும் ஒன்று இப்படி கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.//
தினமும் ஒன்னு?
வானாம், ஒரிஜினாலிடி இருக்காது.கெடச்சத தூக்கி போட்டு பதிவு போட சொல்லும்.நேரங் இருக்குறப்ப ஒன்னு ரெண்டு பதிவு போடுங்க.
Friday, May 12, 2006 11:04:00 AM
Natarajan said...
Miga nalla paddal Kumaran.Nandri...thanks for introducing...
Anbudan,
Natarajan
Friday, May 12, 2006 7:39:00 PM
சிவமுருகன் said...
பாடல்கள் அருமை, தெய்வீக குரல், அழகான வரிகள்.
Saturday, May 13, 2006 9:35:00 PM
குமரன் (Kumaran) said...
இராம்பிரசாத். நீங்கள் கேட்கும் பாடலைத் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
Monday, May 15, 2006 2:38:00 PM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் யோகன் ஐயா. ஜேசுதாஸின் குரலில் எது கேட்டாலும் திகட்டாது. சில பாடல்கள் இவர் பாடியதாலேயே என் மனம் கவர்ந்ததோ என்றும் எண்ணியிருக்கிறேன். சீர்காழி அவர்களின் பாடல்களும் வரும்.
Monday, May 15, 2006 2:40:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்
Monday, May 15, 2006 2:40:00 PM
குமரன் (Kumaran) said...
சமுத்ரா. ஒத்துக் கொள்கிறேன். தினமும் ஒன்று கொடுப்பதாகத் திட்டம் இல்லை. பாராட்டுக்கு நன்றி.
Monday, May 15, 2006 2:41:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றி நடராஜன்.
Monday, May 15, 2006 2:41:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.
Monday, May 15, 2006 2:42:00 PM
Post a Comment