Tuesday, March 18, 2008

TBCD என்று சொன்னால் தான் சரியா? த.பி.கு.தி என்றோ த.பி.உ.தி என்றோ சொன்னால் தான் என்ன?

1. கிரந்த எழுத்துகளை இனி மேல் பயன்படுத்த மாட்டேன்.
2. மாற்றுத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பேன். அவற்றைப் புழங்குவேன்.
3. இயன்றவரை/தெரிந்தவரை சந்திப் பிழை இல்லாமல் எழுதுவேன்.

இப்படியெல்லாம் என் மனதுக்கிசைந்த முறையில் பேசியும் எழுதியும் வரும் அரவிந்த் தனது பெயரை மட்டும் TBCD என்று வைத்திருப்பதில் எனக்கு இசைவில்லை. அதனால் இந்தப் பரிந்துரைகள்.

த.பி.கு.தி = தமிழ்நாட்டில் பிறந்த குழம்பிய திராவிடன்
த.பி.உ.தி = தமிழ்நாட்டில் பிறந்த உறுதிபடுத்தப்பட்ட திராவிடன்

TBCD என்றால் Tamiznadu born confused dravidian or Tamiznadu born confirmed dravidian என்று தெரியாததால் இரண்டையும் மாற்றித் தந்திருக்கிறேன்.

11 comments:

குமரன் (Kumaran) said...

பின்னூட்டமாகப் போட வேண்டியதை எல்லாம் பதிவா போடறியே? உருப்படுவியான்னு திட்டாதீங்க.

இந்தக் கூடல் பதிவில் என்றைக்கும் இல்லாத முறையில் ஒரே மாதத்தில் நிறைய இடுகைகள் போட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறேன். ஒழுங்காக வாராவாரம் எழுதும் இடுகைகள், மற்ற பதிவுகளில் இருந்து எடுத்துப் போடும் மறுபதிவுகள் இவற்றின் நடுவே அவ்வப்போது சில மொக்கைகள்.

இந்த இடுகையை மொக்கை என்று சொல்ல மனம் வரவில்லை. 'சொல் ஒரு சொல்' வகை என்றும் சொல்ல மனம் வரவில்லை. சில நிமிட மனப் போராட்டத்திற்குப் பின்னர் மொக்கை என்றே குறித்துவிட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

சூடான இடுகைகளைத் தூக்கிய பின்னரும் இந்த முயற்சி ஏன் என்று தானே நினைக்கிறீர்கள். ஹும் என்ன செய்வது? எல்லாம் பழக்க தோஷம் தான். :-)

வவ்வால் said...

குமரன் ,
இது என்ன தனக்கு தானே திட்டமா , நீங்களே பதிவு போட்டு , நீங்களே பின்னூட்டமும் போட்டு பேசிக்கிட்டு இருக்கிங்க :-))

நான் அப்படியே டிரான்ஸ்லிடரேஷனாக திபிசிடி என்றே அவரை அழைத்து விடுவது, பெயர்ச்சொல்லை மொழிப்பெயர்க்க தேவை இல்லை தானே !

காலம் போன காலத்தில் சூடான இடுகை இல்லையேனு வருத்தப்படுறிங்களே :-)).

நம்ம(நானும் சேர்ந்துக்கிறேன்) பதிவெல்லாம் அகஸ்துமஸ்தாக சூடான இடுகையில வந்தா தான் உண்டு , திட்டம் போட்டா வர வைக்கிறோம், அந்த சாமர்த்தியம்லாம் இருந்தா ஏன் இப்படி தனக்கு தானே :-))

Unknown said...
This comment has been removed by a blog administrator.
ஜெகதீசன் said...

:)

மருதநாயகம் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் :-)

சிவமுருகன் said...

:)

நையாண்டி நைனா said...

TBCD க்கு இது தான் அர்த்தமா?.....
TBCD சார்,
பு.த.செ.வி
மிக்க நன்றி

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றிகள் பாலசந்தர், ஜெகதீசன், மருதநாயகம், சிவமுருகன், நையாண்டி நைனா.

குமரன் (Kumaran) said...

வவ்வால் உங்களோட என்னை சேத்துக்காதீங்க. என்னோட இடுகைகள் சிலது சூடாகியிருக்கு. :-)

சிபியோட பினாங்க் பயணத்தைப் படிச்சுட்டு அங்கே பின்னூட்டம் போட்டுட்டு அப்படியே உங்க பதிவுக்கு வந்து கருப்பர் நகரத்தைப் படிச்சேன். அப்பத் தான் நீங்க திபிசிடின்னு கூப்புடறதைக் கவனிச்சேன். அப்பத் தான் இந்த விவகாரமான சிந்தனை ஓடிச்சு. பாருங்க. திபிசிடி கோவமாயிட்டார் போல. அவங்க வீட்டுக்குப் போனா அடி விழும்ன்னு சொல்றார். :-)

இந்த மாதிரி நானே பின்னூட்டம் போட்டுக்கிறதெல்லாம் அப்பப்ப செய்றது தான் வவ்வால். இல்லாட்டி இந்த மொக்கைக்கெல்லாம் யாருமே பின்னூட்டம் போட மாட்டாங்க. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது மொக்கையே அல்ல! அடி சக்கை!
டிபிசிடி அண்ணாச்சி...
சாரி
தபிஉதி அண்ணாச்சி....வாழ்க வாழ்க!
அரவிந்தானந்தா...கீ ஜெய் ஹோ! :-))