Sunday, March 02, 2008

நண்பர்களுக்காக மட்டும் இந்த செய்தி....

இதைச் சொல்லத் தேவை இல்லை தான். ஆனால் நானாகச் சொல்லாமல் விட்டால் வேறு யாராவது என் செயலுக்குத் தவறான பொருள் கண்டுபிடித்து சொல்லிவிட்டால்?!! அதனால் சொல்லிவிடுகிறேன்.

என்ன பில்டப் ரொம்ப அதிகமா இருக்கா? அப்படியெல்லாம் பில்டப்பை தலைப்பிலேயே வைக்கிறதும் முதல் நாலு வரி இப்படி எழுதுறதும் தப்புன்னு எனக்குத் தோணலை. ஆனா பாத்து செய்யணும் போலிருக்கு. உள்குத்து தேடி அலையுற இந்தக் காலத்துல இல்லாத உள்குத்தை எல்லாம் மக்கள் பாக்குறாங்க. :-)

சரி சொல்ல வந்ததைச் சொல்றேன். நிறைய வலைப்பதிவுகளைத் தொடங்கிட்டு அங்கெல்லாம் தொடர்ந்து எழுத முடியாம இருக்கு. அந்தப் பதிவுகளை எல்லாம் தொடங்குன காலத்துல இந்த லேபல் பண்ற வசதி இல்லாம இருந்தது. இப்பத் தான் அந்த வசதி இருக்கே. எதுக்குத் தனித் தனியா இம்புட்டு வலைப்பதிவு? முடிஞ்சவரைக்கும் அந்த வலைப்பதிவுகளை எல்லாம் 'கூடல்' வலைப்பதிவுக்குள்ளேயே கொண்டு வந்துவிட்டு அந்தப் பதிவுகளுக்கு மூடு விழா நடத்திவிடலாம் என்று நினைக்கிறேன். அந்தப் பதிவுகளிலும் தொடர்ந்து எழுதுவதில்லை. அது வேறு மனத்தை உறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி அவற்றை கூடலுக்குக் கொண்டு வந்துவிட்டால் பின்னர் அந்த உறுத்தல் இருக்காது பாருங்கள். :-)

அந்தப் பதிவுகளில் இருக்கும் இடுகைகளை எல்லாம் ஒவ்வொன்றாக கூடலுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். அதனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு மறுபதிவுகள் நிறைய பார்க்கலாம். :-)

44 comments:

TBCD said...

புகையின் நடுவே தீ இருக்கும் என்று நீங்களே எடுத்துக் கொடுத்துட்டு...

இப்படிச் சொன்னா எப்படி..

//உள்குத்து தேடி அலையுற இந்தக் காலத்துல இல்லாத உள்குத்தை
எல்லாம் மக்கள் பாக்குறாங்க. :-) //

குமரன் (Kumaran) said...

அரவிந்த். இந்த இடுகையின் தலைப்பில் 'நண்பர்களுக்காக மட்டும்...'ன்னு சொன்னேன். அதனை ஏற்று உள்ளே வந்து செய்தியைப் படித்த உங்களுக்கும் இது வரை வந்து பார்த்த இனிமேலும் வந்து பார்க்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

சொல்ல மறந்தேனே. இந்த இடுகையை வந்து படிப்பவர்கள் அப்படியே மற்ற இடுகைகளையும் படித்து உங்கள் கருத்தைச் சொன்னால் மகிழ்வேன். அவை எல்லாம் இப்படி தலைப்பிலும் முதல் நான்கு வரிகளிலும் சுவையாரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பதிவின் உட்பொருள் தமிழ் ஆர்வம் உடையவர்களுக்கு எல்லாம் சுவையாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். படிப்பீர்களா? படிக்க மாட்டேன் என்றால் இப்படி எல்லாம் தொடர்ந்து அவ்வப்போது எழுத வேண்டி இருக்கும் தான். சினந்து கொள்ள வேண்டாம். :-)

TBCD said...

உங்க விளக்கம் புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.
///
குமரன் (Kumaran) said...
அரவிந்த். இந்த இடுகையின் தலைப்பில் 'நண்பர்களுக்காக மட்டும்...'ன்னு சொன்னேன்.
///

குமரன் (Kumaran) said...

அரவிந்த்,

அந்த இடுகையை இப்போது படித்துப் பார்த்தால் அப்படி எடுத்துக் கொடுத்ததாகத் தான் தோன்றுகிறது. ஆனால் முழுப்பதிவைப் படித்தால் பழமொழியை பாரதியார் எப்படி வேறு மாதிரியாய் பொருள் கொண்டிருக்கிறார் என்று சொல்ல வந்ததற்கு முதல் நாலு வரியை அப்படியாக எழுதியது எப்படி வேறு பொருள் கொடுத்தது என்று புரிகிறது. அதனால் தான் உங்கள் நண்பர் கோவித்துக் கொண்டதும் அதனை மாற்றி எழுதிவிட்டேன். ஆனால் அந்த மாற்றி எழுதிய இடுகையிலும் 'புகை நடுவில் தீ இருக்கும்' என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அதில் எந்த உள்குத்தும் காணக் கிடைக்கவில்லை என்று நம்புகிறேன்.

வழக்கமாக கோபித்துக் கொள்ளாதீர்கள் என்று எழுத நினைத்தால் கோவித்துக் கொள்ளாதீர்கள் என்று எழுதுவேன். ஆனால் இன்று சென்ற பின்னூட்டத்தில் அப்படி எழுத வந்துவிட்டு ஒரு நொடி நிதானித்து சினந்து கொள்ளாதீர்கள் என்று எழுதியிருக்கிறேன். இல்லாவிட்டால் அதுவும் எடுத்துக் கொடுத்ததாக ஆகியிருக்கும் இல்லையா? :-)

குமரன் (Kumaran) said...

இதில் விளக்குறதுக்கு என்ன அரவிந்த் இருக்கு? 'நண்பர்களுக்காக மட்டும் இந்த செய்தி...' என்று தலைப்பிருக்கும் இடுகையைப் படித்துப் பின்னூட்டம் இட்டதால் நீங்களும் என் நண்பர் என்பதை உறுதி செய்தீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். இதற்கு இன்னும் விளக்கம் கேட்டால் சொல்லத் தெரியவில்லை.

வடுவூர் குமார் said...

சரி,இடுகை இருக்கட்டும்,அந்த திருவள்ளுவர் காசில் 1995 என்று போட்டிருக்கு,இன்னும் ஒரு 40 ஆண்டுகள் போனால் நம் இளைஞர்கள் என்ன திருவள்ளுவர் 1995யிலா பிறந்தார் என்று கேட்கவாய்ப்பு கொடுப்பது போல் இருக்கு. :-)

துளசி கோபால் said...

இதுக்குத்தான் வம்பே வேணாமுன்னு நான் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரே பதிவை வச்சுக்கிட்டு இருக்கேன்.

எழுதறதும் ஒரே ஒரு விஷயத்தைப் பத்தின்னு யாரும் சொல்லப்பிடாது ஆமாம்:-))))

குமரன் (Kumaran) said...

வாங்க வடுவூர் குமார். நீங்க ரொம்ப நாளைக்கப்புறம் 'கூடல்' பதிவுக்கு வந்திருக்கீங்க அல்லது ரொம்ப நாளைக்கப்புறம் தான் திருவள்ளுவர் காசைக் கவனிக்கிறீங்க சரியா? :-) நீங்க சொன்ன மாதிரியும் சொல்றதுக்கு ஆளுங்க இருப்பாங்க தான். ஆனா அவிங்களை ரொம்ப எளிதா மடக்கிப்புடலாம். அதான் எட்டாவது உலகத் தமிழ் மாநாடுன்னு வேற சொல்லியிருக்கே. அது நடந்த 1995ல். அச்சடிச்ச காசு அது.

நீங்க கவனிக்காத இன்னொரு விவகாரமும் அந்தக் காசுல இருக்கு. ஆனா அது என்னன்னு நான் சொல்ல மாட்டேன். :-)

TBCD said...

தொந்திரவிற்கு மன்னிக்கனும்..

அந்தக் காசுப் பற்றி பேசினதாலே..

யாருங்க அந்த அறீவாளி..

அது என்ன அரசாங்கம் வெளியிட்ட காசா, பரிசுப் பொருள் தானே..

தமிழில் அடிக்காமல்..இந்தியில் போட்டு இருக்காங்க...

கொடுமை... :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீங்க கவனிக்காத இன்னொரு விவகாரமும் அந்தக் காசுல இருக்கு. ஆனா அது என்னன்னு நான் சொல்ல மாட்டேன். :-)//

என்னடா, விவகாரம் கிளம்பலையே-ன்னு நினைச்சேன்! கிளம்பிருச்சிப்பா கிளம்பிருச்சி! :-))

வல்லிசிம்ஹன் said...

நானும் நண்பர்தாங்க. அதான் வந்து செய்தி தெரிஞ்சுகிட்டேன்:0)

Udhayakumar said...

there is no tamil in that coin :-)

ஜெகதீசன் said...

//
நீங்க கவனிக்காத இன்னொரு விவகாரமும் அந்தக் காசுல இருக்கு. ஆனா அது என்னன்னு நான் சொல்ல மாட்டேன். :-)
//
அந்தக் காசில் தமிழ் இல்லை??
:P
.....................
//
"நண்பர்களுக்காக மட்டும் இந்த செய்தி...."
//
அப்ப உங்கள் வாசகர்கள்?? உங்கள் நண்பர்கள் மட்டும்தான் உங்களுக்கு வாசகர்களா?
:)

மெளலி (மதுரையம்பதி) said...

படிச்சுட்டேன்னு மட்டும் சொல்லிட்டு எஸ்கேப்....

குமரன் (Kumaran) said...

என்ன துளசி அக்கா இப்படி சொல்லிட்டீங்க? நீங்க தான் பல்கலை வித்தகர்ன்னு எல்லாருக்கும் தெரியுமே. நீங்க ஒரே விஷயத்தைப் பத்தி எழுதுறீங்கன்னு சொல்லுவாங்களா என்ன? :-)

குமரன் (Kumaran) said...

பின்னூட்டம் போட்டா தொந்தரவா? இப்படி நீங்க சொன்னா எப்படி அரவிந்த்? அதிக பின்னூட்டம் பெறுவது எப்படின்னு அந்தக் காலத்துலேயே ஒரு இடுகையைப் போட்டவன் நீங்க பின்னூட்டம் போட்டா தொந்தரவா நினைப்பேனா? http://koodal1.blogspot.com/2006/02/140.html

அது அரசாங்கம் வெளியிட்ட காசுன்னு தான் நினைக்கிறேன். உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி நடுவண் அரசு வெளியிட்ட நாணயம்ன்னு நினைக்கிறேன். நானும் அந்தக் காசைப் பாத்ததில்லை. எனக்கு பரிசு கொடுத்தவரும் நாணயத்தைக் கொடுக்கலை. சும்மா படத்தை மட்டும் தான் கொடுத்தார். காசு கொடுத்திருந்தா பைக்குள்ள போட்டுக்கிட்டு போயிருப்பேன். படத்தை மட்டும் கொடுத்ததால இங்கே போட்டு வச்சிருக்கேன். :-)

நடுவண் அரசு வெளியிட்ட நாணயம்ங்கறதால இந்தியும் ஆங்கிலமும் இருக்கு. சரி. போகட்டும். ஒரு நாலு எழுத்தாவது தமிழிலும் அடிச்சிருக்கலாம். மும்மொழிக் கொள்கை பேசும் தமிழக அரசும் அதனைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டதா என்ன? யாருங்க 1995ல் தமிழகத்தை ஆண்டது?

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். விவகாரத்தை விவகாரம்ன்னு சொன்னா விவகாரம்; விவரம்ன்னு சொன்னா விவரம். நீங்க என்னன்னு சொல்ல விரும்புறீங்க? :-)

அரவிந்திற்கு சொன்ன பதில் சரி தானா? எங்கே இந்தக் காசுக்கான படத்தை எடுத்து எங்களுக்குப் பரிசாகக் கொடுத்தீர்கள்? பாருங்க நீங்க வெறும் படத்தை மட்டும் குடுத்தீங்க; அரவிந்த் காசையே பரிசா கொடுத்திருக்கீங்கன்னு நினைச்சுட்டார்.

குமரன் (Kumaran) said...

வாங்க வல்லியம்மா. இந்தப் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப வேலைன்னு நினைக்கிறேன்.

ஆமாங்க. நீங்க நண்பர் தான். அதுல என்ன ஐயம்? :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் உதயகுமார். அந்தக் காசுல தமிழ் இல்லாமல் இருக்கிறது. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜெகதீசன். அந்தக் காசுல தமிழ் இல்லாததைத் தான் சொன்னேன்.

எழுத்தாளர்ன்னு என்னைச் சொல்லிக்கிட்டா நான் எழுதுறதைப் படிக்கிறவங்க வாசகர்கள்ன்னு சொல்லிக்கலாம். நான் தான் அப்படி சொல்லிக்கிறதில்லையே? :-)

வலைப்பதிவுல எழுதுற எல்லோருமே எழுத்தாளர்கள் தான்; எல்லோருமே வாசகர்கள் தான். சரி தானா? அதனால நான் இந்த வாசகர்கள்ங்கற சொல்லைப் பயன்படுத்த விரும்புறதில்லை. அதனால, நீங்க சொன்னதை நான் வேற வகையில சொல்வேன்.

என் நண்பர்கள் மட்டும் தான் எனக்கு வாசகர்கள்ன்னு சொல்றதை விட 'என் வாசகர்கள் எல்லாம் என் நண்பர்கள்'ன்னு சொல்ல விரும்புவேன். சரி. ரொம்ப அதிகமா விளக்கம் சொன்னா போரடிக்கும். இத்தோட நிறுத்திக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

வந்து படிச்சதோட மட்டும் விட்டுடாம அதை சொல்லிட்டும் போனதுக்கு நன்றி மௌலி. :-)

ஓகை said...

குமரன்,

என்னை சொல் ஒரு சொல் பதிவிலிருந்து நீக்கி விடுங்கள். நான் அதில் எழுதியிருக்கும் ஒரே ஒரு பதிவை உங்கள் கூடல் பதிவில் இணைப்பீர்களானால் மகிழ்வேன்.

அன்புடன்
நடராஜன்.

குமரன் (Kumaran) said...

ஓகை நடராஜன் ஐயா. நான் நேற்று எழுதிய மின்னஞ்சலுக்கும் பதில் சொல்லியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஜிமெயிலை பணியிடத்திலிருந்து பார்க்க இயலாது. அதனால் வீட்டிற்குச் சென்ற பிறகு பார்க்கிறேன்.

சொல் ஒரு சொல் பதிவில் இருக்கும் எல்லா இடுகைகளும் - மற்ற நண்பர்கள் இட்ட இடுகைகளும் - இங்கு எடுத்து இடுவதாகத் தான் எண்ணியிருக்கிறேன் ஐயா. அந்த இடுகைகள் எழுதப்பட்ட வரிசையில் ஒவ்வொன்றாக எடுத்து இங்கே இடுகிறேன்.

நன்றிகள்.

G.Ragavan said...

:) சரி. இப்பவாச்சும் செஞ்சா சரி :)

குமரன் (Kumaran) said...

இராகவன்.

நான் இப்ப இப்படி பதுங்கறதுக்கு என்ன காரணம்ன்னு உண்மையிலேயே தெரியலையா? போன வாரமோ அதுக்கு முந்துன வார்மோ 'இப்படி செய்யப் போறேன்'னு சொன்ன உடனே இரவிசங்கர் டக்குன்னு நான் பதுங்கறது எதுக்குன்னு சொல்லிட்டாரே! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உடனே இரவிசங்கர் டக்குன்னு நான் பதுங்கறது எதுக்குன்னு சொல்லிட்டாரே! :-)//

ஐயகோ! நான் என்ன சொன்னேன் தல? எனக்கே மறந்து போச்சே!

கூடல் ஒரே கொழப்பமாப் போகாமப் பாத்துக்குங்க குமரன்!
பழைய இடுகை-ன்னு நினைச்சி உள்ளார வராமப் போவப் போறாங்க! :-)

புது இடுகைக்குப் புதுசு-ன்னு தலைப்பில் லேபிள் ஒட்டுங்க! இல்லீன்னா பழசுக்கு பழசு-ன்னு ஒட்டுங்க! நட்சத்திரம்-ன்னு ஒட்டினீங்கள்ள? அது போல! :-)

குமரன் (Kumaran) said...

மறந்துட்டீங்களா? ரொம்ப மகிழ்ச்சி. :-)

அப்படி ஒன்னும் ரொம்பக் குழம்பிப் போயிடாதுன்னு நினைக்கிறேன்.

மீள்பதிவுகளுக்கு மீள்பதிவுன்னு போடலாமான்னு யோசிக்கிறேன். பாக்கலாம்.

அப்ப பழசெல்லாம் நீங்க படிச்சு முடிச்சாச்சா? உள்ளேயே வரமாட்டேன்னு சொல்றீங்க? :-)

enRenRum-anbudan.BALA said...

ஜூனியர்,

என்னய்யா இது வம்பாப் போச்சு :)

"நண்பர்களுக்காக மட்டும் இந்த செய்தி.... " --- இந்த தலைப்பில போட்ட பதிவுக்கு பின்னூட்டம் போடலைன்னா, நான் உங்க எதிரியா என்ன ? ;-)

(உங்க நாலாயிர விளக்க உரையை வாசிச்சுட்டுத் தான் இருக்கேன்னா, நம்பணும்!!)

பின்னூட்டம் வாங்கறதுக்கு இப்படி ஒரு டெக்னிக்கா ???

பேஷ் பேஷ், ரொம்ப நன்னா இருக்கு :)

சீனியர்

ramachandranusha(உஷா) said...

நண்பர்கள், நண்பரல்லாதவர்கள் என்று எல்லோரும் கூடும் இடம் இந்தக் கூடல்- அப்படின்னு தலைப்புல போட்டுவிட்டு, நண்பர்களுக்காக மட்டும் ஒரு செய்தின்னா எப்படி? நண்பர்கள், நண்பரல்லாதவர்களுக்கு ஒரு செய்தி என்று தானே போட்டு இருக்க வேண்டும்???

குமரன் (Kumaran) said...

சீனியர்,

பின்னூட்டம் போடணும்ன்னு கட்டாயம் இல்லை. படிச்சா போதும். நீங்க நம்ம நண்பர் தான். :-)

நாலாயிரம் உரையை நீங்கள் தொடர்ந்து படிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியாதா என்ன? இனிமேலும் தொடர்ந்து படிச்சுக்கிட்டு வாங்க. பின்னூட்டம் போட முடிஞ்சா போடலாம். கட்டாயம் இல்லை. :-)

குமரன் (Kumaran) said...

இப்படி தலைப்பு போட்டாத் தானே உஷா நீங்க எல்லாம் இந்த மாதிரி மொக்கையை எல்லாம் படிக்க வருவீங்க. ஏதோ என்னாலான முயற்சி. :-)

கூடல் என்னவோ நண்பர்கள் நண்பர்கள் அல்லாதவர்கள் எல்லோரும் கூடும் இடம் தான். சில நேரங்கள்ல ஊடலும் கொள்ளும் இடம். ஆனால் இந்த இடுகைக்கு வந்து படிக்கிறவங்க எல்லாம் கட்டாயம் 'நண்பர்கள்' மட்டுமே. :-)

இலவசக்கொத்தனார் said...

////நீங்க கவனிக்காத இன்னொரு விவகாரமும் அந்தக் காசுல இருக்கு. ஆனா அது என்னன்னு நான் சொல்ல மாட்டேன். :-)//

என்னடா, விவகாரம் கிளம்பலையே-ன்னு நினைச்சேன்! கிளம்பிருச்சிப்பா கிளம்பிருச்சி! :-))//

படத்தைப் போட்ட அன்னிக்கே கை பரபரன்னு இருந்தது. ஆனாலும் இங்க ஆரம்பிச்சா நீங்க கோவிச்சு, சாரி, சினம் கொள்ளுவீங்களோன்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன்! :))

குமரன் (Kumaran) said...

அதானே. உங்க கண்ணுக்கு இதெல்லாம் தென்படாம இருக்குமா? வடுவூர் குமார் அந்தக் காசைப் பத்தி கேட்ட பின்னாடி தான் நான் கவனிச்சுப் பாத்தேன். சில நேரங்கள்ல எதுக்கு கோவிச்சுக்கிறேன்னே தெரியாக கோவிச்சுக்கிறேன் இல்லையா கொத்ஸ்? அதான் உங்களை அப்படி தயங்க வச்சிருக்கு. :-)

cheena (சீனா) said...

படித்துப் பின்னூட்டம் இட்டு நண்பன் தான் என்பதை உறுதி செய்கிறேன்.

பல பதிவுகள் படிக்க வேண்டும் மறு மொழி இட வேண்டும் என ஆசை. பணிச் சுமை - நேரமின்மை - வயது - நினைவாற்றல் - இவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன.

மீள் பதிவுகளைப் படிக்கிறேன் நண்பனே - குமர - நல்வாழ்த்துகள்

ரவி said...

எக்ஸ்க்யூஸ்மீ...நான் உள்ள வரலாமா ???

ச்ச்சும்மா ஒரு அட்டெண்டெண்ஸ் போட !!!

ஜீவி said...

இப்போது இன்னும் வசதியாகப் போயிற்று. தொடர்ந்து படித்துக்கொண்டு தான் வருகிறேன்.

குமரன் (Kumaran) said...

படித்தும் பின்னூட்டம் இட்டும் நண்பர் என்று உறுதி செய்ததற்கு நன்றிகள் சீனா ஐயா. :-)

மீள்பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள் ஐயா. நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

வருகைப்பதிவைச் செய்ததற்கு நன்றிகள் செந்தழல் இரவி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜீவி ஐயா. கூட்டுப் பதிவுகளைத் தவிர்த்து மற்றவற்றை இங்கே கொண்டு வந்துவிட்டால் நல்ல வசதியாகத் தான் இருக்கும். நன்றிகள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஒவ்வொரு இடுகையாக கைப்பட நகர்த்துவது சிரமமாக இருக்கலாம். விரும்பினால் கூடல் உட்பட உங்கள் எல்லா பதிவுகளையும் வேர்ட்பிரெஸ்ஸுக்கு நகர்த்தலாம். அது தானியக்கமாக உங்கள் எல்லா பதிவுகள், இடுகைகளையும் தேதி மாறாமல் அதே போல் ஒரு சில நிமிடங்களில் இடம் பெயர்த்துக் கொடுத்துவிடும்.

சிவமுருகன் said...

//நடுவண் அரசு வெளியிட்ட நாணயம்ங்கறதால இந்தியும் ஆங்கிலமும் இருக்கு. சரி. போகட்டும்.//

ஆமா சார், இது நடுவண் அரசு வெளியிட்ட ரூ.5 நாணயம். இப்போதைக்கு எங்கிட்ட இதே மாதிரி நாலு காசு இருக்கு இது தான் என்னோட சொத்துன்னு வச்சிக்கோங்க :).

//ஒரு நாலு எழுத்தாவது தமிழிலும் அடிச்சிருக்கலாம்.//

அதெப்படி முடியும் இடமே இருக்காது என்பது கமிட்டியோட வாதம்.

//மும்மொழிக் கொள்கை பேசும் தமிழக அரசும் அதனைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டதா என்ன?//

இன்னும் கேப்டன் ஆட்சிக்கு வரவில்லையே. :-). இப்போதைக்கு தமிழகத்தில் மும்மொழி கொள்கை என முழங்குபவர் அவர் மட்டும் தான் மற்ற அனைவரும் இருமொழி கொள்கையே! (உங்களுக்கே இது நல்லா இருக்கா? :-))

//யாருங்க 1995ல் தமிழகத்தை ஆண்டது?//

அம்மா தான்!

குமரன் (Kumaran) said...

ஆலோசனைக்கு நன்றி இரவிசங்கர். வேர்ட்பிரஸ்ஸில் அனுபவமில்லை. அது மட்டும் இல்லாமல் பழைய இடுகைகளை ஒவ்வொன்றாக நகர்த்தும் போது அதனையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. :-) அதனால் ஒவ்வொன்றாக நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அவ்வளவு எளிதாக இந்தியும் ஆங்கிலமும் தவிர்த்த மற்ற மொழி எழுத்துகளை நாணயத்தில் இட்டுவிட மாட்டார்கள் சிவமுருகன். மற்ற மாநிலங்களுக்கு அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற பயம் இருக்கும்; அப்புறம் ஒவ்வொருவராகக் கேட்கத் தொடங்கிவிட்டால்? :-)

தமிழும் ஆங்கிலமும் போதும் தமிழ்நாட்டுக்கு என்று தமிழக அரசு சொல்கிறதா? ஆனால் நடைமுறையில் தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றும் இருக்கிறதே? ஒரு வேளை தமிழக அரசு ஆவணங்களில் தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான்; நடுவண் அரசு ஆவணங்களில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் தான். அப்படியா?