Saturday, March 15, 2008

என்னவளே அடி என்னவளே

இன்னைக்கு ஒரு பழைய பாட்டு. இதெல்லாம் பழசான்னு கேக்கறவங்களும் இருப்பீங்க. :-) இது புதியபாட்டுன்னு சொன்னா இதெல்லாம் புதுசான்னு சண்டைக்கு வர்றவங்களும் இருப்பீங்க. அதனால இது பழைய புதுப்பாட்டுன்னு வச்சுக்கலாம். :-)

நான் பி.ஈ. படிக்கும் போது வந்த படம். உன்னிகிருஷ்ணனின் முதல் திரைப்பட பாடல். முதல் தடவையாக இந்தப் பாடலைக் கேட்டது ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியின் நடுவில். நம்ம தலைமையில ஒரு இருபது மாணவர்கள் சேர்ந்து ஒவ்வொரு வார இறுதியிலும் மாணவர் விடுதியில் எங்கள் அறையில் கூடி இறைவழிபாட்டுப் பாடல்கள் (பஜனைப்பாடல்கள்) பாடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் பாடிக் கொண்டிருந்தோம். எங்கள் கூச்சல்(?!!) தாங்க முடியாமலோ இல்லை தற்செயலாகவோ ஒரு நண்பர் அவருடைய அறையில் இந்தப் பாடலை விடுதி முழுக்கக் கேக்கறமாதிரி போட்டுவிட்டார். பல்லவி, அனுபல்லவி எல்லாம் வரும் போது நான் வழிபாட்டு அறைக்குள் தான் இருந்தேன். ஆனால் அதற்கு மேல் என்னால் முடியவில்லை. அருமையான இந்தப் பாடல் அழைக்கிறது. வெளியே வந்து இந்தப் பாடல் முழுவதும் முடியும் வரை அருமையான இந்தப் பாடலை கேட்டுவிட்டுச் சென்றேன். அருமையான குரல், அருமையான இசை, அருமையான கவிதை. கேட்டுப் பாருங்கள். ஒவ்வொரு வரியும் அருமை என்பதால் தனியாக விளக்கம் சொல்லப்போவதில்லை. நீங்களே கேட்டு ரசித்து உங்களுக்குத் தோன்றும் விளக்கத்தைச் சொல்லுங்கள். :)

திரைப்படம்: காதலன்
வெளிவந்த வருடம்: 1993
பாடகர்: உன்னிகிருஷ்ணன்
இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றிவர்: வைரமுத்து (என்று தான் நினைக்கிறேன்)


என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)



வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)




***

இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 12 மே 2006 அன்று இடப்பட்டது.

7 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 12 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

28 comments:

கால்கரி சிவா said...
குமரா, மதுரைக் கோயில் கச்சேரி மாதிரில்லே போவுது. மொதல்லே சாமி பாட்டு அப்புறம் 'நல்ல' சினிமா பாட்டு அதுக்கப்பறம் குத்துப் பாடல்களா?

மதுரைக் காரங்க கொத்து பரோட்டவே சாப்பிட்டு, ஜிகர்தண்டாவே குடிச்சிட்டு கச்சேரி கேக்க ஆரம்பிச்சட்டாங்கப்பா

இனி திருவிழா தான்

Friday, May 12, 2006 12:45:00 PM

Ram said...
குமரன்,

முதல் இரண்டு பாடல்களும் அருமை.

என்னுடைய விருப்ப பாடலான "பிரபோ கணபதி பரிபூரண வாழ்வருள்வாயே..." இங்கு அரங்கேற்ற தங்களால் முடியுமா ?

-ராம்

Friday, May 12, 2006 6:29:00 PM

Anonymous said...
may be u were in love and hence u cud not be there in the room...ellam mayakamthaan...:-) Yennaku innavo appadi rom_ai vittu oddi vanthukeekura allavuku intha paadal irrupathaga padavillai...

Friday, May 12, 2006 7:30:00 PM

விட்டுது சிகப்பு said...
பாட்டு நல்லாக்கீது குமரன் டீச்சர். நல்ல வேளைக்கா இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொல்லாம விட்டீக. காதல் கீதல் பண்ணிருக்கியா வாத்யார்?

Saturday, May 13, 2006 6:51:00 AM

சிங். செயகுமார். said...
குமரன் நமக்கும் ரொம்ப புடிச்ச பட்டு இது.இரவு நேரங்களில் அமைதியான தருணங்களில் இதை போல இசையை கேட்பதே ஆனந்தம் தான்.

Saturday, May 13, 2006 11:40:00 AM

குமரன் (Kumaran) said...
அட ஆமா சிவாண்ணா. நீங்க சொல்ற மாதிரி நம்ம கோவில் திருவிழா கச்சேரி மாதிரி தான் போகுது. குத்துப் பாட்டுகளும் வரும் - எனக்குப் பிடித்திருந்தால். எனக்குப் பிடித்தது இன்னும் எத்தனைப் பேருக்குப் பிடித்திருக்கிறது என்று பார்க்கலாம் என்று தான் இந்த வலைப்பூவே. :)

ஜிகர்தண்டா எங்கே குடிச்சேன்? நீங்க செஞ்சு நீங்களே குடிச்சிட்டீங்க. எங்களுக்கு குடுத்தீங்களா? :(

Saturday, May 13, 2006 9:24:00 PM

குமரன் (Kumaran) said...
நன்றி இராம்ப்ரசாத். முதல் இரண்டு பாடல்களும் அருமைன்னு சொல்லியிருக்கீங்களே. இந்தப் பாடல் பிடிக்காதா? :-)

நீங்கள் கேட்கும் பாடல் என்னிடம் இல்லையே. இணையத்திலும் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. ஹரிதாஸ்கிரி சுவாமிகள் பாடிய பஜனைப் பத்ததி பாடலா இது?

Saturday, May 13, 2006 9:25:00 PM

சிவமுருகன் said...
இது என்னுடைய விருப்ப பாடல். உன்னிகிருஷ்னன் அவர்கள் இந்த பாடல் மூலம் ஜனாதிபதி விருது பெற்றார். எதாவது சிறிய பிரச்சனை என்று வரும் போது "வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி" என்று சொல்வது வழக்கம். உடனே தவறு பிடிபட்டுவிடும்.

Saturday, May 13, 2006 9:45:00 PM

வெற்றி said...
குமரன்
நல்ல அருமையான பாடல். எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து அவர்கள் தான். இப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

"வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி"

சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இவ் வரிகளை என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

Saturday, May 13, 2006 11:34:00 PM

G.Ragavan said...
மிகவும் நல்ல மென்மையான பாட்டு குமரன். எனக்கும் மிகப் பிடிக்கும். இப்ப உன்னி கிருஷ்ணன் சினிமால பாடுறதில்ல போல.

பாட்டு கேக்கக் கேக்க எண்ணங்கள் பின்னோக்கிப் போகுது....ஆகா!

Monday, May 15, 2006 8:05:00 AM

Vishvesh Obla said...
Kumaran,

I was browsing through your various blogs when I came across this one. Since you have a good interest in Tamil poetry, you might be interested to know that there is a version of the same song the lyrics of which is a stanza from 'kutrAla kuravanji' ? ('indiraiyo ivaL sundariyO, theyva rambaiyO, mOginiyO'). I set tune to this stanza for a dance presentation once, and I was surprised someone let me know of this version from a movie. I dont know if it is available online, if it appears only in the movie, or if it was specially recorded, but if you can get hold of it, I am sure you would enjoy listening to it.

Monday, May 15, 2006 2:29:00 PM

குமரன் (Kumaran) said...
விட்டுது சிகப்பு. காதல் பண்ணாதவர்கள் யார்? அப்படிப்பட்டவர் உயிர் வாழவும் முடியுமா? :-)

இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் தொடர் தான் போடவேண்டும். அதனால் விளக்கம் சொல்லாமல் விட்டேன். நீங்கள் நல்ல வேளை என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால் எனது சினிமாப்பாடல் விளக்கத்தைப் படித்திருப்பீர்கள் போலிருக்கிறதே?

Monday, May 15, 2006 3:07:00 PM

குமரன் (Kumaran) said...
//may be u were in love and hence u cud not be there in the room...ellam mayakamthaan...:-) Yennaku innavo appadi rom_ai vittu oddi vanthukeekura allavuku intha paadal irrupathaga padavillai...

//

இருக்கலாம் அனானிமஸ் நண்பரே. ஆனால் இன்றைக்கும் இந்தப் பாடல் வந்தால் எது செய்து கொண்டிருந்தால் நிறுத்திவிட்டு இந்தப் பாடலைக் கேட்கிறேன். மயக்கம் இன்னும் தீரவில்லையோ? :-)

Monday, May 15, 2006 3:07:00 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் செயகுமார். இரவு நேரங்களில் அமைதியான தருணங்களில் கேட்பதற்கு இயைந்த பாடல் தான் இது. இந்த வலைப்பூவில் இதுவரை நான் இட்ட மூன்று பாடல்களுக்கும் இது பொருந்தும். இனி வரும் பாடல்களில் பலவற்றிற்கு இது பொருந்தாமல் போகலாம்.

Monday, May 15, 2006 3:10:00 PM

குமரன் (Kumaran) said...
உங்களுக்கும் விருப்பப் பாடலா சிவமுருகன். மிக்க மகிழ்ச்சி.

//எதாவது சிறிய பிரச்சனை என்று வரும் போது "வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி" என்று சொல்வது வழக்கம். உடனே தவறு பிடிபட்டுவிடும்.
//

புரியவில்லையே?

Monday, May 15, 2006 3:12:00 PM

குமரன் (Kumaran) said...
வெற்றி. உங்கள் அனுபவம் இங்குள்ளோர் ஒவ்வொருவரின் அனுபவமும். இந்தப் பாடலில் அப்படிப் பட்ட வரிகள் எத்தனையோ உண்டு. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு கதை சொல்லும். :-) உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.

Monday, May 15, 2006 3:13:00 PM

குமரன் (Kumaran) said...
பாட்டு கேக்கக் கேக்க எண்ணங்கள் பின்னோக்கிப் போகுதா? அது தான் இந்தப் பாடலில் பெருமை இராகவன். எல்லோருக்கும் இது நடக்கும் என்று எண்ணுகிறேன். :-)

உன்னி கிருஷ்ணன் இப்போதெல்லாம் திரைப்படத்தில் பாடுவதில்லையா இல்லை வாய்ப்புகள் குறைந்துவிட்டனவா தெரியவில்லை இராகவன்.

Monday, May 15, 2006 3:15:00 PM

குமரன் (Kumaran) said...
விஸ்வேஷ். நீங்கள் சொல்லும் அந்தக் குற்றாலக் குறவஞ்சிப் பாடல் வரிகளை நானும் கேட்டிருக்கிறேன். பள்ளியிலும் படித்ததாக நினைவு. அருமையான பாடல். இந்த 'காதலன்' திரைப்படத்தில் நல்ல சமயத்தில் அதனைப் பயன்படுத்தியிருப்பார்கள். அந்தப் பாடல் இணையத்தில் கிடைத்தால் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

Monday, May 15, 2006 3:17:00 PM

johan-paris said...
இப் பாடல் ஒருதலைக் காதலனில் ,அவஸ்தை போல் உள்ளது. மெல்லவும் ;விழுங்கவும் முடியாத் தவிப்பாக உள்ளது.
காதல் வயப் பட்டால் ,காதலியினதோ/காதலனதோ;;;அசைவுகளேல்லாம்;அற்புதமாக இருப்பது போல் ஒருமாயத் தோற்றம் இருக்கும்.
அதை கவிஞரும்" உன் காலடி எழுதிய கோலங்கள்- புதுக்கவிதைகள் என்றுரைப்பேன்"- என் கிறுக்கல்கள் கோலமாகி; பின் புது கவிதைகளாக அவனுக்கு பிரமையை ஏற்படுத்துவதை அழகாகச் சொல்லியுள்ளார்.
யானும் குரலினிமைக்காக இப்பாடலை ரசித்துள்ளேன்.
யோகன்
பாரிஸ்

Monday, May 15, 2006 4:57:00 PM

Anonymous said...
இருக்கலாம் அனானிமஸ் நண்பரே. ஆனால் இன்றைக்கும் இந்தப் பாடல் வந்தால் எது செய்து கொண்டிருந்தால் நிறுத்திவிட்டு இந்தப் பாடலைக் கேட்கிறேன். மயக்கம் இன்னும் தீரவில்லையோ? :-)
****
May be ...only u know the truth....ellam first love_a irrukum :-))) hahahaha....

Monday, May 15, 2006 7:14:00 PM

சிவமுருகன் said...
//புரியவில்லையே?//

சிறிய தவறுகள் ஏற்படுவது சகஜம், ஆனால் அது கண்களுக்கு தெரிவதில்லை, ஆனால் தவறு நடக்கிறது என்று மட்டும் தெரியும், அது போன்ற சமயங்களில் இந்த வரிகளை பாடுவேன் அவ்வளவே.

Tuesday, May 16, 2006 8:18:00 AM

johan -paris said...
ஆகா! அப்படியா!
தேவார திருவாசகம், வேதங்களுக்குத் தான் நோய் தீர்க்கும் தன்மையுள்ள தெனக் கேள்விப்பட்டேன்!!
இவ்வரிக்குமா,,,??
யோகன்
பாரிஸ்

Tuesday, May 16, 2006 9:24:00
AM

குமரன் (Kumaran) said...
ஒரு தலை காதல் மட்டுமன்று யோகன் ஐயா. இருபக்கக் காதலிலும் இந்த உணர்வுகள் தோன்றுவதுண்டு. பாரதி தான் அழகாகக் கூறியிருக்கிறானே 'மானிடப்பூச்சிகள் வாழ்க்கையோர் கனவிலும் கனவாகும்; அதனிடை சில தினங்கள் உயிர்க்கமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால் திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விகக் கனவன்னது வாழ்கவே'.

ஆமாம் ஐயா. பாடகரின் குரலினிமையும் இந்தப் பாடல் எனக்கு மிகப் பிடிக்க ஒரு முக்கிய காரணம்.

Wednesday, May 17, 2006 4:22:00 PM

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. 'ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்' வலைப்பூவைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் தான் சொல்கிறாரே அழகாய் 'அவளால் ஏற்படும் நோய்க்கு அவளே மருந்து' என்று. :-)

Wednesday, May 17, 2006 4:23:00 PM

Karthik Jayanth said...
குமரன்,

இதுக்கு நிறைய கொசுவத்தி இருக்கு.. சொல்ல முடிஞ்சது. இத எழுதுறதான்னு இம்மா நாளு யோசிச்சேன்.

படிக்குறப்ப பக்கத்து கிளாஸ் பொண்ணு ஒரு நாள் இந்த பாட்டை பத்தி ரொம்ப உணர்வு பூர்வமா சொல்லிட்டு அவங்க இந்த ஒரு பாட்டை மட்டும் ஒரு கேசட் முழுவதும் பதிந்து வைத்திருப்பதாகவும், நீ கேக்கனும்னா அந்த கேசட்டை தர்றேன் அப்படின்னு சொன்னாங்க.

என்னாங்க நீங்க உங்க காது டமாரமா ?. எதுக்கு ஒரே பாட்ட ஒரு கேசட் முழுசும் கேக்கனும் அப்படின்னு கேட்டேன்.

You senseless Idiot அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டங்க..

Wednesday, May 24, 2006 4:30:00 PM

பொன்ஸ்~~Poorna said...
//You senseless Idiot அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டங்க.. //
க பி க கண்ட தல கார்த்திக் வாழ்க :)

Wednesday, May 24, 2006 4:44:00 PM

குமரன் (Kumaran) said...
ஹாஹாஹாஹாஹா.... அருமை கார்த்திக்..... நல்ல பேரு தான் வாங்கியிருக்கீங்க.

அந்தப் பொண்ணை எங்க வீட்டம்மாக்கிட்ட அனுப்பணும். ரொம்பப் பொருத்தமா இருக்கும். இந்தப்பாட்டு எனக்கு எவ்வளவு தூரம் பிடிக்குதோ அந்தளவுக்கு அவங்களுக்குப் பிடிக்காது. அவங்க முதல்ல பாட்டைப் பாத்துட்டாங்க. நடிச்சவங்க ரெண்டு பேரும் பிடிக்கலை. அதனால பாட்டே பிடிக்கலை அவங்களுக்கு. :-)

Wednesday, May 24, 2006 4:44:00 PM

குமரன் (Kumaran) said...
க.பி.க.ன்னா என்னங்க?

Wednesday, May 24, 2006 4:48:00 PM

தி. ரா. ச.(T.R.C.) said...

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் குமரன்.

naan yaar said...

இந்தப் பாடல் உன்னிகிருஷ்னன் குரலுக்கு எழுதியது போலவே அமைந்ததுதான் வெற்றிக்கு காரணம்..

இந்த பாடலை பிடிக்காதவர்களும் இருப்பார்களா??

பாடல் காட்சியை பார்க்காமல் பாட்டை கேட்பவர்களுக்கு பாடல் அதிகம் பிடிக்கும்...:)

நன்றி குமார்...

நெல்லைக் கிறுக்கன் said...

குமரன்,
நமக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்ட ரொம்ப நாள் கேக்காம இருந்துட்டு திடீர்னு எதிர்பாராம ஒரு நாள் கேக்குறதுல ஒரு தனி சுகம்... மத்தவுக எல்லாரும் சொன்ன மாதிரியே இது என்னை மறந்து போன பழய நாட்களுக்கு கூட்டிட்டு போகுது...

குமரன் (Kumaran) said...

உண்மை தி.ரா.ச. மிக அருமையான வரி அது.

குமரன் (Kumaran) said...

உண்மை மல்லிகை. சரியாகச் சொன்னீர்கள். பாடல் காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் முதலில் கேட்டிருந்தால் இந்தப் பாடல் பிடிக்காமல் இருக்காது.

குமரன் (Kumaran) said...

மறுபதிவு செய்யும் போது எனக்கும் அப்படித் தான் இருந்தது நெல்லை அறிவரே.