Monday, March 03, 2008

இல்லாத இராமர் பாலத்தைக் காப்பதில் இருக்கும் அக்கறை, இருக்கும் தமிழ்நாட்டு ஆன்மீகத் திருமுறைகளை, மரபுகளைக் காப்பதிலே இல்லையா??

நல்ல கேள்வி இது. இல்லையா? பதில் சொல்வதற்கு முன் இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள்.

22 comments:

குமரன் (Kumaran) said...

திரு. நாக. இளங்கோவன் தில்லையில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி ரொம்பவும் நன்றாக எழுதியிருந்தார். அந்த இடுகையை இன்னும் நிறைய பேர் படிக்க வேண்டும் என்று விரும்பியதால் அவர் கேட்டிருந்த கேள்வியையே எடுத்து இங்கே தலைப்பாக இட்டு இந்த இடுகையைப் போட்டிருக்கிறேன்.

Unknown said...

இல கணேசனும் சரி, இராம கோபாலனும் சரி இப்போது வாயையே திறக்கமாட்டார்கள்.

கோவை சிபி said...

இல.கனேசன் வழக்கம்போல் தன் திரு வாயை திறந்து விட்டார்.

VSK said...

தில்லையில் மட்டுமா? திருவண்ணாமலையையும் தான் சுட்டியிருக்கிறார்!

அதை விடுங்கள்.
அவரது கேள்வியுடன் நானும் உடன்படுகிறேன். இதைக் கண்டிக்காத இராம கோபாலன்கள் நமக்குத் தேவையில்லை தான்!

எனக்கிருக்கும் ஒரே சந்தேகம் இதுதான்!

தில்லையில் மட்டும்தான் இறைவன் இருக்கிறானா?

இந்த ஆறுமுக ஓதுவார் தில்லையைத் தவிர வேறு எந்தக் கோவிலிலாவது போய் தினமும் பாடுகிறாரா?

இல்லையென்றால் சொல்லுங்கள்.
எங்களுக்குத் தெரிந்த சிவன் கோவில் ஒன்றில் கருவறைக்கே சென்று தினமும் பாட நான் ஏற்பாடு செய்கிறேன். சன்மானத்துடன்.

எல்லாரும் இதை அரசியல் பண்ணுகிறார்கள்.
இதற்கு உங்களைப் போன்றோரின் ஆதரவு வேறு.

நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்களேன், குமரன்.

VSK said...

நாஸா போன்ற அமைப்புகளே உறுதிப்படுத்திய ஒன்றை 'இல்லாத ஒன்று' என அப்படி அறுதியிட்டுச் சொல்கிறீர்கள்?

அப்படிப் பார்த்தால் இன்றிருக்கும் எல்லாக் கடவுள்களுமே இல்லை என்றும் சொல்லமுடியுமே!
பின் ஏன் பதிவுகள் இட்டு நேரத்தை வீணாக்குகிறீர்ர்கள்?

Machi said...

தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் இது தானே நிலைமை ;-(

குலவுசனப்பிரியன் said...

//நாஸா போன்ற அமைப்புகளே உறுதிப்படுத்திய ஒன்றை 'இல்லாத ஒன்று' என அப்படி அறுதியிட்டுச் சொல்கிறீர்கள்?//

நாசா எங்கே ஐயா அது பாலம் என்று உறுதிபடுத்திற்று. செயற்கைக்கோள் எடுத்த படத்தை வெளியிட்டார்கள் அவ்வளவே. முன்பு அவர்கள் வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் ஒரு படத்தை பார்த்து அங்கே பிரமிட் இருக்கிறது, மனித முகம் தெரிகிறது என்று சிலர் கதை விடவில்லையா? அதுபோலத்தான். இராமர் பாலம் என்று கூவும் கும்பலில் சிலர் இன்னமும், இதே நாசா நிலவுக்கு ராக்கெட்டில் அனுப்பிய ஆட்களை தேவர்கள் ராகு கிரகத்துக்கு திருப்பி விட்டார்கள் என்று ஷ்ரீமத் பாகவதத்தை மேற்கோள் காட்டி சொல்லித் திரிகிறார்கள். இந்தக் கண்டராவி கருத்துக்கு நாசா மறுப்பு சொல்லவில்லையாம். எங்கே உறுதிபடுத்தினார்கள் என்று காண்பித்தால் உதவியாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

கோவை சிபி. இல.கணேசன் என்ன சொன்னார்?

குமரன் (Kumaran) said...

தில்லை, திருவண்ணாமலை மட்டும் இல்லை எஸ்.கே. எல்லா சைவ ஆலயங்களிலும் இதே தான் நிலைமை. ஓதுவார் மூர்த்திகள் கருவறைக்கு வெளியே நின்று தானே பாடுகிறார்கள்?!

கோவில் என்று சொன்னாலே சைவத்தில் அது தில்லையைத் தானே குறிக்கிறது? இறைவன் அங்கு மட்டும் தான் இருக்கிறானா? மற்ற கோவில்களில் இல்லையா? ஏன் தில்லைக்கு மட்டும் இந்த பெருமை? :-)

'கோவில்' என்று பெருமைபடுத்தப்படும் தில்லையிலேயே ஆறுமுக ஓதுவாருக்கு தடை இருக்கும் போது வேறு எங்கு சென்று 'சன்மானத்துடன்' பாடி என்ன பயன்?

நிலைமையை நான் சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன் எஸ்.கே. அதே நேரத்தில் 'சன்மானத்தை'ப் பற்றிப் பேசிய உங்கள் வார்த்தைகளில் இருக்கும் அரசியலையும் புரிந்து கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நாசா இது 'இராமர் கட்டிய பாலம்' தான் என்று அறுதியிட்டுச் சொல்லியதா? எனக்கு அந்த செய்தி தெரியாது எஸ்.கே. அந்த செய்தி வந்த சுட்டியைத் தந்தால் படித்துத் தெளிவேன். எனக்குத் தெரிந்த வரை நாசா இப்படி ஒரு மணல் திட்டு இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டியிருக்கிறது; அதற்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று பெயர் வைத்திருக்கிறது. அவ்வளவு தான். அது தான் இராமர் பாலம் என்பதெல்லாம் நாமே கட்டிவிட்ட கதை தானே?!

ஓகை said...

குமரன்,

முற்றிலும் வசவுகளால் விரவப்படிருக்கும் ஒரு பதிவு உங்களை கவர்ந்துவிட்டதா?

'சித்தந்தெளிய மருந்தொன்றிருக்குதாம்....'

உங்கள் தலைப்பு விசமத்தனமானது. ஆன்மிக திருமுறை மரபுக்களுக்கு அப்படி என்னதான் ஆபத்து இப்போது வந்துவிட்டது? அறியத் தாருங்கள் குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த ஆறுமுக ஓதுவார் தில்லையைத் தவிர வேறு எந்தக் கோவிலிலாவது போய் தினமும் பாடுகிறாரா?//

தில்லை - சைவத்தின் தலைநகரம்!
ஊரெல்லாம் தேசியக் கொடியேற்றி விட்டு, தில்லி செங்கோட்டையில் மட்டும் அந்நியருக்குப் பயந்து ஏற்றாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
அதே போல் தான் இதுவும்!

தில்லையில் தானே பிரச்சனை! வேற எங்காவது போய் பாடிக் கொள்ளூங்கள்-னு யாரும் சொல்ல முடியாது!
வேறு இடங்களில் பாடினாச் சன்மானமும் கிடைக்கும்-ன்னு சொல்லும் போது, ஆறுமுகசாமி போய் விடலாமே! ஏன் போக மாட்டேன் என்கிறார்?

தில்லையில் பிரச்சனை இல்லாமல் இருந்தால் அப்போ ஊர் ஊராப் போயி பாடலாம்! ஈசன் தான் எங்கும் இருக்கிறாரே! ஈசன் எங்கும் எனாதவர்க்கு இல்லையே என்பது தானே அப்பர் பெருமான் வாக்கு! ஆனால் தில்லையில் பிரச்சனை என்பதால் தான் இந்த நிலைப்பாடு!

வீட்டின் வாசக்காலைச் சரி செஞ்சாப் பிறகு தான் மற்ற அறைகளுக்கு உள்பூச்சு, வண்ணங்கள் எல்லாம்!

//எல்லாரும் இதை அரசியல் பண்ணுகிறார்கள்//

இதை அடியேனும் ஒப்புக் கொள்கிறேன் SK! தில்லையில் இரு பக்கமும் அரசியல் படுஜோராக நடந்து கொண்டு தான் இருக்கு! ஆனா எதில் தான் அரசியல் இல்லை? மற்றொன்று சூழினும் தான் முந்துறும்-னு அரசியல் எப்படியும் வந்துரும்! அதையும் நீந்தித் தான் கடந்தாகணும்! ஏன் என்றால் நோக்கம் அப்படி!

கலகத்தில் தான் சில சமயம் நன்மைகள் பிறக்கின்றன! என்ன செய்வது! :-(

VSK said...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்!

புரிகிறது, குமரன்!

தில்லைதான் இறை இருக்கும் இடம் எனச் சொல்ல நாத்திகருக்கு உரிமை இருக்கிறது!

அதை, ஆத்திகர் என்னும் போர்வையில் வந்து சொல்பவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் இராம. கோபாலனை நிலையைக் கண்டித்திருக்கிறேன்.

ஆனால், நாக. இளங்கோவனுக்குத் துணை போகிறவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை!

எனது 'சன்மானம்'என்னும் சொல்லை அரசியலாக்கிய உங்களது அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்.

நான் எந்தப் பொருளில் அதைச் சொன்னேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்!

இந்த ஓதுவார்களும் அரசியல் பலிகடா ஆக்கப் படுகிறார்கள் என்பதையே குறிப்பிட்டிருந்தேன்!

VSK said...

மற்ற ஊர்களில் ஏற்றச் சொல்லவில்லை ரவி!

மற்ற ஊர்களில் ஏற்றுகிறார்களா என்பதே என் கேள்வி!

அதை 'ட்விஸ்ட்' செய்து திசை திருப்பிய உங்களுக்கும் நன்றி!

பி.கு.: எனக்குத் தெரிந்து ஒரு கொடி டில்லியில் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே நான் அறிந்த செய்தி!

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. அந்த இடுகையில் உண்மைகள் தான் என் கண்களுக்குத் தெரிந்தன. வசவுகள் எதுவும் தென்படவில்லை. வைதிக ஆதிக்கத்தைப் பற்றி அந்த இடுகையில் பேசப்பட்டிருப்பவை உங்களுக்கு வசவுகளாகத் தென்பட்டால் அடியேனால் ஒன்றும் செய்ய இயலாது. எனக்கும் அவை தேவையற்ற ஆதிக்கங்கள் என்ற புரிதல் தான் இருக்கிறது; அதனால் அவை உண்மைகளாகவும் தென்படுகின்றன.

இந்தத் தலைப்பை காரணமாகத் தான் தேர்ந்தெடுத்தேன். உண்மைகளால் நிரம்பிய திரு. நாக. இளங்கோவன் அவர்களின் இடுகை இன்னும் நிறைய பேர்களால் பார்வையிடப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு அவர் இடுகையில் அவர் கேட்டிருந்த ஒரு கேள்வி பொருத்தமானதாகத் தோன்றியது. அதனால் அந்தக் கேள்வியையே இந்த இடுகைக்குத் தலைப்பாக இட்டேன். அதற்குரிய பயனையும் கண்டேன்.

திருமுறைகளுக்கு இருக்கும் ஆபத்தை திரு. நாக.இளங்கோவனே அழகாகச் சொல்லியிருக்கிறார். அறையில் பூட்டி கரையான்களால் அரிக்கப்பட விட்டுவைத்த போது அவற்றை மீட்க 150 வருடங்களே போதுமானதாக இருந்தது. ஆனால் அந்தத் திருமுறைகளுக்குத் தகுந்த இடத்தைப் பெற்றுத் தர 1000 ஆண்டுகள் செல்ல வேண்டி இருந்திருக்கிறது. அருளாளர்கள் பாடிய அந்தத் திருமுறைகளுக்குத் தகுந்த இடத்தைத் தர இவ்வளவு ஆண்டுகள் ஆக வேண்டியிருப்பது யார் மனத்தையும் அதிர வைக்கவில்லையா? அதனைக் கேள்வி கேட்கும் படியாகத் தான் இந்தத் தலைப்பு அமைந்திருக்கிறது. இந்த தலைப்பில் இருக்கும் உண்மையை நான் உணர்கிறேன். இராமர் பாலத்திற்கு வக்காலத்து வாங்கி தமிழ்மறைகளுக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லும் வாதத்தின் பின்புலத்தையும் பார்க்கிறேன் ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்கு சொன்னீர்கள். நன்றி இரவிசங்கர்.

✪சிந்தாநதி said...

மதவாதிகள் காட்டும் ஆதாரங்கள் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே?

சமீபத்தில் "அது ஆடம்ஸ் பிரிட்ஜ், உலகின் முதல் மனிதன் ஆதம் அங்கு தான் வாழ்ந்தான். ஆதமின் மூன்றாவது தலைமுறை வாரிசான செய்யது பெயரால் உருவான செய்யது கால்வாய் தான் சேது கால்வாயாக மாறியது" என்றும் ஒரு ஆய்வாளர் புத்தகமே வெளியிட்டிருக்கிறார். இதை வைத்தே சில அமைப்புகள் பிஜேபிக்கு எதிரான போராட்டங்களை செய்து வருவதாக செய்தி படித்தேன்.

இதிலிருந்து - எந்த மதமும் இம்மாதிரியான 'ஆ'தாரங்களை காட்ட முடியும் என்று தெரிகிறது.

நாசாவின் ஆதாரம் தான் சான்று என்றால் இதையும் ஏற்றாக வேண்டும் தானே? நாசா ஆதம் பாலம் என்றுதானே சொல்லி இருக்கிறது.

கோவை சிபி said...

குமரன்,
தீட்சதர்கள் கைது குறித்து அரசு நீதி விசாரணை நடத்த வேண்டுமாம்.நாத்திகர்கள் சிலர் வேண்டுமென்றே மரபுகளை உடைத்து குழப்பம் பண்ணுகிறார்களாம்,சொல்கிறார் இல.கனேசன்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொல்பவை எனக்குப் புரியவில்லை எஸ்.கே. ஏதோ சொல்கிறீர்கள் என்று தெரிகிறது; ஆனால் தெளிவாகப் புரியவில்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும் பழமொழி இங்கே எந்த வகையில் பொருந்துகிறது?

தில்லை மட்டும் தான் இறை இருக்கும் இடம் என்று நாத்திகரோ ஆத்திகரோ சொன்னார்களா? தில்லை தான் 'கோவில்' என்று காலம் காலமாகச் சொல்லுவது ஆத்திகர்கள் தானே?

இங்கே ஆத்திகர் என்ற போர்வையில் யார் வந்து என்ன சொன்னார்கள்?

நீங்கள் கண்டிக்கும் இராம.கோபாலனின் நிலை எது?

ஏன் நாக. இளங்கோவனுக்குத் துணை போகக் கூடாது? அப்படிச் செல்பவர்களை ஏன் உங்களால் மன்னிக்க முடியவில்லை? நாக. இளங்கோவன் நாத்திகரா ஆத்திகர் என்னும் போர்வையில் எழுதுபவரா? உங்கள் பார்வையில் அவர் யார்? அவரது பதிவினைத் தொடர்ந்து படித்து வருகிறேன் நான். அவர் வைதிக எதிர்ப்பு உணர்வு கொண்டவர்; ஆதே நேரத்தில் சைவ உணர்வும் கொண்டவர். அவரை சைவ உணர்வு கொண்ட ஆத்திகராகத் தான் நான் அறிவேனே ஒழிய நாத்திகராக அறியேன்.

நீங்கள் சன்மானம் என்று எழுதியதன் நக்கலைப் பார்த்தவுடனேயே புரிந்து கொள்ள முடிகிறது எஸ்.கே. அதை அரசியலாக்க வேண்டிய தேவையும் இல்லை. தனித்த அறிவுக்கூர்மையும் தேவையில்லை. எனக்கு உரிய பாராட்டுகளைத் தலைவணங்கி மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன். இந்தப் பாராட்டுகளுக்குத் தகுதியான அறிவுக்கூர்மை எனக்கு இல்லை.

சைவ ஆலயங்களில் இந்தப் போராட்டம் சென்ற நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து பல வடிவங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது எஸ்.கே. அதனால் ஓதுவார்களை வைத்து அரசியல் நடக்கிறதா ஓதுவார்களே இந்தப் போராட்டத்தில் முழு மனதாக ஈடுபடுகிறார்களா என்பதை அவர்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

குமரன் (Kumaran) said...

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிவரும் பின்னூட்டங்களை வெளியிட மாட்டேன். அப்படிப்பட்ட பின்னூட்டங்களை எழுதியவர்களுக்கும் இனி மேல் எழுதப் போகின்றவர்களுக்கும் இந்த இடுகையைப் படித்துப் பின்னூட்டம் இட எண்ணிய உங்கள் எண்ணத்திற்கு நன்றிகளை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஏறக்குறைய அனைத்துக் கோவில்களிலும் என்று சொல்லலாம் தான் குறும்பன். அரசாணைக்கு இணங்கி இன்று தலைநகரான தில்லை கொடி ஏறியிருக்கிறது. இது தொடர்ந்து எல்லா ஊர்களிலும் ஏறினால் நன்றாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

கோவை சிபி. இல. கணேசன் அவருக்குப் பிடித்தது போல் சொல்லியிருக்கிறார். கைது செய்யப்பட்டவர்களை எல்லாம் விடுவிக்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறாராம். சன் தொலைக்காட்சி செய்திகளில் சொன்னார்கள்.