பத்ராசல இராமதாசரின் சரிதத்தைத் தெலுங்கில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். (எப்போது எடுத்தார்கள் என்று தெரியாது). அண்மையில் அந்தத் திரைப்படத்திலிருந்து பாடல்களைக் கேட்கவும் பார்க்கவும் கிடைத்தது. அதில் ஒன்று கீழே இருக்கிறது. மற்றவற்றை யூட்யூபில் பாருங்கள்/கேளுங்கள்.
ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராமா
காலாத்மக பரமேஸ்வர ராமா
சேஷதல்ப சுக நித்ரித ராமா
ப்ரஹ்மாத்யமர ப்ரார்த்தித ராமா
ராம ராம ஜெய ராஜா ராமா
ராம ராம ஜெய ஸீதா ராமா
ப்ரிய குஹ விநிவேதித பத ராமா
சபரீ தத்த பலாஸ்ரய ராமா
ஹனுமத் ஸேவித நிஜபத ராமா
ஸீதா ப்ராணாதாரக ராமா
ராம ராம ஜெய ராஜா ராமா
ராம ராம ஜெய ஸீதா ராமா
முக்குணங்களைக் கடந்த சுத்த பிரம்மமயமான பெரிதிலும் பெரிதான இராமனே!
காலத்தின் உருவாக இருக்கும் பெருந்தலைவனே இராமனே!
பாம்பணையில் பள்ளி கொண்டவனே இராமனே!
பிரம்மன் முதலான தேவர்களால் வணங்கப்படும் இராமனே!
அன்புடைய குகனால் வணங்கப்பட்ட இராமனே!
அன்புடன் சபரியால் கொடுக்கப்பட்ட பழங்களை ஏற்றவனே இராமனே!
அனுமனால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவனே இராமனே!
சீதையின் உயிருக்கு ஆதாரமே இராமனே!
5 comments:
இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 18 மே 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
6 comments:
ஜீவா (Jeeva Venkataraman) said...
ஆம், குமரன். இந்த படம் வெளிவந்தபோது (சென்ற ஆண்டு என நினைக்கிறேன்) ட்ரெயிலர் பார்த்திருக்கிறேன். அப்புறம் மறந்தேவிட்டேன்...
இப்போது எடுத்து வெளியிட்டு நினைவு படுத்தியதற்கும், மொழி பெயர்ப்பை வெளியிட்டதற்கும் நன்றிகள்!
Friday, May 18, 2007 5:12:00 PM
--
வல்லிசிம்ஹன் said...
பாட்டுப் பூராவும் போட்டுப் படம் எடுத்தால் போரடிக்கும்னு அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் எடுத்து இருக்கிறார்கள்.
அப்பவும் நன்றாக இருக்கிறது.
நன்றி குமரன்.
Saturday, May 19, 2007 12:36:00 AM
--
குமரன் (Kumaran) said...
ஜீவா. சென்ற ஆண்டு தான் இந்தப் படம் வந்ததா? இன்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படவில்லை போல. அன்னமாச்சாரியா படத்தைப் போல் இதனையும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Sunday, May 20, 2007 8:37:00 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் அம்மா. முழுப்பாடலையும் திரைப்படத்தில் இடமுடியாது. அதனால் முக்கியமான வரிகளை மட்டும் எடுத்து மிக அழகாக இட்டிருக்கிறார்கள்.
Sunday, May 20, 2007 8:40:00 PM
--
Sridhar Venkat said...
மிக நன்றாக இருக்கிறது. பாட்டை பகிர்ந்தமைக்கும், விளக்கியமைக்கும் மிக்க நன்றி!
Sunday, May 20, 2007 10:46:00 PM
--
குமரன் (Kumaran) said...
மிக்க மகிழ்ச்சி Sridhar Venkat. நன்றி.
Monday, May 21, 2007 6:10:00 AM
எம் எஸ் அம்மா பாடுன பாட்டை எப்பவும் ரசிச்சுக் கேட்போம். முழு ராமாயணமும் வந்துருது பாருங்க.
நீங்க போட்டுருக்கும் பகுதி அமர்க்களமா இருக்கு.
இந்தத் தெலுங்குப்படங்களில் கேமெராவேலை ரொம்பச் சுத்தமா இருக்குல்லே?
பளிச்ன்னு இருக்கு படம்.
இன்றைக்கு ராமதாஸரைப்பற்றிய சொற்பொழிவு ஒன்றினைக் கேட்டுக் கொண்டுருந்தேன்...அதில் கிடைத்த ஒரு செய்தி: தியாகராஜரே, தன்னை - "ராமதாஸ தாஸன், தியாகராஜன்"
என்று பெருமையாக சொல்லி இருக்கிறாராம்!
ஆமாம் துளசியக்கா. முழு இராமாயணமும் வந்துவிடும். இந்தப் பாடலுக்கு நாம இராமாயணம்ன்னு பெயர். எம்.எஸ். அம்மா பாடி நானும் கேட்டிருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும். 'ஸ்தோத்ர மாலா' பதிவுல விரைவில் இந்தப் பாடலை (முழுப்பாடலையும்) பொருளுடன் எதிர்பார்க்கலாம்.
எனக்கும் இந்தப் படம் பளிச்சுன்னு இருக்கிறா மாதிரி தான் ஒவ்வொரு தடவையும் தோணும். :-)
தியாகப் பிரம்மம் பற்றி இன்னொரு தகவலைச் சொன்னதற்கு நன்றிகள் ஜீவா. பத்ராசல இராமதாசரின் கீர்த்தனைகளை பாலமுரளிகிருஷ்ணா பாடிக் கேட்டிருக்கிறேன்.
Post a Comment