சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்குச் சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்குச் சம்மதம் தருமே
கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
அந்தி வானம் அரைத்த மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண் மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்துன் கூந்தல் நிறமே
எல்லாம் சேர்ந்துன் கூந்தல் நிறமே
சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் ஒடியும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் ஒடியும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
திரைப்படம்: அலைபாயுதே
வெளிவந்த வருடம்: 2000
பாடியவர்கள்: ஹரிஹரன், கிளின்டன்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: வைரமுத்து
1 comment:
இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 30 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
12 comments:
Divya said...
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று!!
Thursday, November 30, 2006 4:17:00 PM
--
குமரன் (Kumaran) said...
நிறைய பேருக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன் திவ்யா. உங்களுக்கும் பிடிதததில் வியப்பில்லை. :-)
Friday, December 01, 2006 9:59:00 AM
--
நாமக்கல் சிபி said...
My Fav song too :-)
அப்பறம் ஒரு ஒரு கலருக்கும் அதுக்கேத்த மாதிரி Font color போட்டிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் (வெள்ளைக்கு மட்டும் சாய்ஸ்ல விட்டுருக்கலாம் :-) )
Friday, December 01, 2006 11:04:00 AM
--
சிவமுருகன் said...
அண்ணா,
பாடல் அருமை, ஸ்நேகியே என்று தான் இது வரை கேட்டுள்ளேன் இப்போது தான் ஸ்நேகிதியே என்பதை பார்க்கிறேன்.
பச்சை - அவள் நரம்பு (மிகவும் நீளமானது, பசுமையான நீளமானது)
சிவப்பு - அவள் கோபம் (கோபம் குறைவான கோபம் தூரத்திலேயே தெரியக்கூடியது)
மஞ்சள் - அவள் மங்களம்
நீலம் - அவள் கண்
கறுப்பு - அவள் கூந்தல்
வெள்ளை - அவள் மனசு
ஒரு வித்யாசமான கோனத்தில் எழுதப்பட்ட ஒரு பாடல்.
Friday, December 01, 2006 11:20:00 AM
--
குமரன் (Kumaran) said...
பாலாஜி. நீங்க சொன்ன மாதிரி பதிவை வண்ணமயமாக்கியாச்சு. :-)
Friday, December 01, 2006 11:36:00 AM
--
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். இன்னும் ஆழ்ந்து கேளுங்கள். இன்னும் நிறைய இந்தப் பாடலில் கண்டுபிடித்து ரசிக்கலாம். :-)
Friday, December 01, 2006 11:36:00 AM
--
நாமக்கல் சிபி said...
//குமரன் (Kumaran) said...
பாலாஜி. நீங்க சொன்ன மாதிரி பதிவை வண்ணமயமாக்கியாச்சு. :-) //
வாசகரின் எண்ணத்திற்கு மதிப்பளித்த வண்ணமயமாக்கிய குமரனுக்கு ஒரு 'ஓ' :-)
Friday, December 01, 2006 11:57:00 AM
--
நாமக்கல் சிபி said...
//வாசகரின் எண்ணத்திற்கு மதிப்பளித்த வண்ணமயமாக்கிய குமரனுக்கு ஒரு 'ஓ' :-)
//
ரிப்பீட்டேய்...
(ரிவீட்டேய் அல்ல!)
Friday, December 01, 2006 12:19:00 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்//
இப்படி இலக்கியப் பாடல்களில் அதிகம் பயின்று வரும் பூ-கொன்றைப் பூ; அதை அழகாய், திரை இசையில் கொண்டு வருவது கவியரசர் வைரமுத்துவிற்கு கைவந்த கலை!
பொன்னார் மேனியனே தேவாரப் பாடலில், "மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே", என்று கொன்றைப் பூ அவ்வளவு பிரபலம்!
Saturday, December 02, 2006 4:46:00 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
"காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!" பாடலில் வரும் வண்ணங்களும்,
"பச்சை கலரு ஜிங்கு ஜாங்" பாடலில் வரும் வண்ணங்களும்,
ஏனோ இரண்டையும் கம்பேர் செய்து மகிழலாம்! :-))))
Saturday, December 02, 2006 4:48:00 PM
--
குமரன் (Kumaran) said...
ஓ போட்டதற்கு மிக்க நன்றி பாலாஜி & சிபி.
Monday, December 18, 2006 7:34:00 PM
--
குமரன் (Kumaran) said...
உண்மை இரவி. கொன்றைப் பூ என்றாலே பொன்னார் மேனியனே பாடல் நினைவிற்கு வருமளவிற்கு அது பிரபலம் தான்.
பச்சை கலரு ஜிங்கு ஜாங்க் பாட்டு கேட்டிருக்கேன். இனிமே தான் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கணும். :-)
Monday, December 18, 2006 7:36:00 PM
Post a Comment