முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக்கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
ஒற்றை முத்தத்தில் ஒற்றை முத்தத்தில் நீ
உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போல் நான்
இடைவெளியில்லாமல்
அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?
இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எலும்பெல்லாம் தூளாய் போகும் (முத்தம்)
மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு?
இருதயம் மேலே மூளை கீழே பௌதிக மாற்றம் எனக்கு
சிந்திய முத்தம் அது சைவம் தான்டா இனி
அசைவ முத்தம் இங்கு ஆரம்பம் தான்டா
அடி உலகின் பசி எல்லாம் முழுவுருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மூர்க்கம் அதில் செத்தாலும் செத்துப் போவேன் (முத்தம்)
கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம் இந்தப்
பெண்சாரத்தால் தினம் பலமுறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா (முத்தம்)
திரைப்படம்: 12 B
வெளிவந்த வருடம்: 2001
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
1 comment:
இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' வலைப்பதிவில் 6 ஜூலை 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
சிவபாலன் said...
சார்,
நல்ல பாடல். அதுவும் இந்த படத்தின் இயக்குநர் ஜீவா சமீபத்தில் ரஷ்யாவில் படபிடிப்பின் போது இறந்துவிட்டார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இப்பாடல் உள்ளது.
நன்றி
Saturday, July 07, 2007 11:40:00 AM
--
குமரன் (Kumaran) said...
சிவபாலன். எப்போது என்னைச் சார் என்று அழைப்பதை நிறுத்தப் போகிறீர்கள்? :-)
இந்தப் படத்தின் இயக்குனர் ஜீவா காலமானது எனக்குத் தெரியாது சிவபாலன். அவருக்கு அஞ்சலியாக இது தற்செயலாக அமைந்தது நல்லதே. இறைவன் திருவருள் புரியட்டும்.
Saturday, July 07, 2007 1:12:00 PM
Post a Comment