Monday, May 12, 2008

எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது!

எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவை ஆனது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலெ அலெ ...

ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்
ஒரு எறும்பாய்...
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்
ஒரு இலையாய்... (அலே அலே...)

காதல் சொன்ன கணமே - அது
கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ...ஹோ... (காதல்)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலவுதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே (அலே அலே...)

கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளை தான் குடித்ததும் வற்றிவிட்டேன் (காதல்)

மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
கரை முழுதும் உந்தன் சுவடுகளா?
அலை முழுதும் உந்தன் புன்னகையா?
காகிதம் என் மேல் பறந்ததும்
அது கவிதை நூல் என மாறியதே! (அலே அலே)

வானவில் உரசியே பறந்ததும்
இந்தக் காக்கையும் மயில் என மாறியதே (காதல்)
திரைப்படம்: பாய்ஸ்
வெளிவந்த வருடம்: 2003
பாடியவர்கள்: சாதனா சர்கம், கார்த்திக்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: கபிலன்

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 25 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

21 comments:

கோவி.கண்ணன் [GK] said...
குமரன்,

இளமை துள்ளல், ம் வயசாயிடுச்சி !
பெருமூச்சு தான் வருது !
:))

Saturday, November 25, 2006 10:30:00 PM
--

SK said...
நல்ல பாடலுக்கு நன்றி.

Saturday, November 25, 2006 11:16:00 PM
--

கலாநிதி said...
போய்ஸ் படத்தில் உள்ள ஒரே ஒரு ஆங்கில கலப்பில்லா பாடல் இது,யாருடைய பாடல்வரி என தெரியவில்லை ஆனால் வாலி இல்லை என்பது நிச்சயம்

Sunday, November 26, 2006 10:27:00 AM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கலாநிதி சொல்வது உண்மை தான் குமரன்.
இந்த ஒரு பாட்டு மட்டும் தான் ஆங்கிலக் கலப்பே இல்லாமல் வரும் படத்தில்.

எழுதியவர் பேர்: கபிலன்

Sunday, November 26, 2006 1:01:00 PM
--

Anonymous said...
ரிச்சாட் ப்ரான்சனின் 'screw it , Just do it' எனும் புத்தகம் இன்று வாசித்தேன். Boys ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை

Sunday, November 26, 2006 1:32:00 PM
--

Anonymous said...
குமரன்,

அந்த male voice அட்னன் சமி-யா என்பது சந்தேகமாய் உள்ளது. கார்த்திக் குரல்போல் உள்ளது.

ஜகன்
Doha, State of Qatar.

Sunday, November 26, 2006 3:14:00 PM
--

இன்பா said...
//
அந்த male voice அட்னன் சமி-யா என்பது சந்தேகமாய் உள்ளது. கார்த்திக் குரல்போல் உள்ளது.
//

பாடியவர் கார்த்திக் தான்.

Sunday, November 26, 2006 3:33:00 PM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன். உங்க படத்தை இப்பத் தானே பாத்தேன். உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னா நம்புவேனா? :-)

Sunday, November 26, 2006 4:30:00 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி எஸ்.கே.

Sunday, November 26, 2006 4:30:00 PM
--

குமரன் (Kumaran) said...
அட ஆமாம். சரியா சொன்னீங்க கலாநிதி. இந்தப் படத்தின் வேறு பாடல்களில் சில எனக்குப் பிடித்திருந்தாலும் (கருத்தளவில்) இந்தப் பாடல் மட்டுமே மனதில் நின்றது. அதற்குக் காரணம் இப்போது தெரிந்தது. முழுக்க முழுக்க தமிழிலேயே எழுதப்பட்ட இளமைத் துள்ளலுடன் கூடிய பாடல் இது. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநிதி.

Sunday, November 26, 2006 4:33:00 PM
--

குமரன் (Kumaran) said...
எழுதியவர் வாலி இல்லை என்று கலாநிதி சொன்னார். கபிலன் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் இரவிசங்கர். பதிவிலும் அப்படியே மாற்றிவிட்டேன். நன்றி.

Sunday, November 26, 2006 4:34:00 PM
--

குமரன் (Kumaran) said...
பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. நீங்கள் சொன்ன புத்தகத்தை முடிந்தால் படிக்கிறேன். :-)

Sunday, November 26, 2006 4:35:00 PM
--

குமரன் (Kumaran) said...
ஜகன் & இன்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொன்னது போல் பாடியவரின் பெயரை கார்த்திக் என்று மாற்றிவிட்டேன். நன்றி.

Sunday, November 26, 2006 4:36:00 PM
--

பாலராஜன்கீதா said...
பாடியவர்கள் பெயர் கார்த்திக், சித்ரா சிவராமன் என்று சில தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

Sunday, November 26, 2006 9:43:00 PM
--

Anonymous said...
அன்புக் குமரா!
இப்பாடலில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. காரணம் என் வயதாகவும் இருக்கலாம்.
யோகன் பாரிஸ்

Monday, November 27, 2006 5:02:00 AM
--

குமரன் (Kumaran) said...
பாலராஜன்கீதா. நீங்கள் வேறு பெயர்கள் சொல்கிறீர்கள். ஆனால் மியூசிக் இண்டியா ஆன்லைன் வலைத்தளத்தில் வேறு பெயர்கள் இட்டிருக்கிறார்கள். டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., ஜேசுதாஸ் என்றால் குரலை வைத்தே கண்டுபிடிக்கலாம். புதியவர்களாக இருப்பதால் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் பெயரையும் பதிவில் இடுகிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Monday, November 27, 2006 5:22:00 AM
--

குமரன் (Kumaran) said...
வயது காரணம் என்று எண்ணவேண்டாம் யோகன் ஐயா. எங்க வீட்டுலயும் இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்ன்னு சொல்றப்ப எல்லாம் அவ்வளவு ஒன்றும் இந்தப் பாடல் நன்றாக இல்லை என்று சொல்வார்கள்.

Monday, November 27, 2006 5:23:00 AM
--

Merkondar said...
வயல்களில் உள்ள கிணறுகளில் இப்படித்தான் அந்த நாட்களில் மேலிருந்த வித்தியாசமாக குதிப்போம் ஆடல் பாடல் ஆட்டம் கொண்டாட்டம் இது இப்போது இல்லை. அந்த நாள் ஞாபகம் வந்தது.

Tuesday, November 28, 2006 7:10:00 AM
--

நாமக்கல் சிபி said...
நல்ல பாடல் குமரன். எனக்கும் அந்தப் படத்தில் பிடித்தது மற்றும் புரிந்தது இந்தப் பாடல்தான்.

//எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது
//

ஹெல்மெட் அணிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

Tuesday, November 28, 2006 10:06:00 AM
--

குமரன் (Kumaran) said...
அட ஆமாம் என்னார் ஐயா. நானும் வயலில் உள்ள கிணற்றில் அப்படித் தான் குளித்தேன். :-)

Thursday, November 30, 2006 3:25:00 PM
--

குமரன் (Kumaran) said...
வானம் மிக மென்மையானது சிபி. அதனால் அது இடித்தால் தலைக்கு ஒன்றும் ஆகாது. ஹெல்மெட் எல்லாம் தேவையில்லை. :-)

Thursday, November 30, 2006 3:27:00 PM

ஆயில்யன். said...

//
//ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன் ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்///

எனக்கும் பிடித்த பாடல்:)
மகிழ்ச்சியான தருணங்களில் கேட்கும்போது மகிழ்ச்சியினை இரட்டிப்பாக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று :))

குமரன் (Kumaran) said...

எனக்கும் தான் ஆயில்யன். இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் பாடல் தான் இது. அடிக்கடி நான் விரும்பிக் கேட்பது/பார்த்து. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாடலுக்கு எங்கள் வீட்டுக் குட்டிப்பையல் (1 1/2 வயது) நன்றாக ஆடுவான். :-)

கவிநயா said...

//வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்//

எனக்குப் பிடித்த வரிகள்..

உங்க குட்டிப் பையன் நல்லா ஆடறதாலதான் உங்களுக்குப் பிடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன், குமரா...

பல பாடல்களைக் கேட்கும்போது (அ) கேட்காமலிருக்கும்போது... எனக்கு அடிக்கடி தோணறது - நமக்கு வயசாயிடுச்சு போல :)

குமரன் (Kumaran) said...

இந்தப் பாட்டில் பிடிப்பதற்கு நிறைய வரிகள் இருக்கின்றன கவிநயா அக்கா. படம் எடுத்த விதமும் நன்றாக இருக்கிறது. பையன் பிறப்பதற்கு முன்னரே எனக்கு இந்தப் பாடல் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அடிக்கடி நாங்க பாக்கிறதால/கேக்கிறதால அவனுக்கும் பிடிச்சு போய் ஆடத் தொடங்கிட்டான்னு நினைக்கிறேன். எப்பவாவது அவங்க அக்கா ஆடறதைப் பாத்திருப்பான். என் வழி அக்கா வழின்னு தானே இப்ப இருக்கான். :-)