நீங்கள் திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய இந்த பாடலை கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீட சங்கராசாரியார் ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டது. ஐக்கிய நாட்டுச் சபையின் 50ம் ஆண்டு (அப்படித் தான் நினைவு) நிறைவு விழாவில் பாட எம்.எஸ்ஸிற்கு அழைப்பு வந்தது. எம்.எஸ் இந்த அழைப்பைப் பற்றி ஆசாரியரிடம் சொன்ன போது ஆசாரியர் இந்த பாடலை எழுதிக் கொடுத்தார்.
இந்த பாடலை எழுதி ஏறக்குறைய 40 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் இந்த பாடலின் கருத்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வகையில் உள்ளது.
மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் - பணிவுடனும் நட்புடனும் உலக மக்கள் எல்லோருக்கும் சேவை செய்யுங்கள். அது எல்லோர் இதயத்தையும் வெல்ல உதவும்.
ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத - பிறரையும் உங்களைப் போலவே எண்ணிப் பாருங்கள்.
யுத்தம் த்யஜத - போரினை விடுங்கள்.
ஸ்பர்தாம் த்யஜத - தேவையற்ற அதிகாரப் போட்டியினை விடுங்கள்.
த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமனம் - பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்ரமிக்கும் அக்கிரம செயலை விடுங்கள்.
ஜனனீ ப்ருதிவீ காமதுகாஸ்தே - பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள்.
ஜனகோ தேவ: சகல தயாளு: - நம் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிக்கக் கருணை கொண்டவன்.
தாம்யத - ஆதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள்.
தத்த - ஆதலால் எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள்.
தயத்வம் - ஆதலால் எல்லோரிடமும் கருணையோடு இருங்கள்.
ஜனதா - உலக மக்களே!
ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!
ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!
ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!
இந்தப் பாடலின் பொருள் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். தமிழ் அறியாத உங்கள் நண்பர் யாருக்காவது நீங்கள் இந்த பாடலின் பொருளை அனுப்ப விரும்பினால் இங்கே சொடுக்கி அனுப்பவும்.
4 comments:
இந்த இடுகை 20 ஏப்ரல் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
10 comments:
இலவசக்கொத்தனார் said...
நியூயார்க்கில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்பாடலைப் பாடிய பொழுது எடுக்கப்பட்ட விடியோ
http://video.google.com/videoplay?docid=-3587832026748961324&q=T+M+Krishna&hl=en
Friday, April 20, 2007 9:08:00 PM
--
மதுரையம்பதி said...
அருமையான பதிவு, விளக்கங்களும் ந்ன்றே. மிக்க நன்றி குமரன்.
Saturday, April 21, 2007 4:40:00 AM
--
குமரன் (Kumaran) said...
டி.எம். கிருஷ்ணா இந்தப் பாடலைப் பாடிய போது எடுக்கப்பட்ட விடியோவின் சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி கொத்ஸ்.
Saturday, April 21, 2007 7:05:00 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி மௌலி ஐயா.
Saturday, April 21, 2007 7:06:00 AM
--
nagai.s.balamurali said...
ஆஹா!
Sunday, April 22, 2007 8:22:00 AM
--
சிவபாலன் said...
Kumaran Sir,
Thanks for sharing!
Sunday, April 22, 2007 7:56:00 PM
--
கால்கரி சிவா said...
பாடலுக்கும் பாடலின் பொருளுக்கும் மிக்க நன்றி குமரன்
Sunday, April 22, 2007 8:08:00 PM
--
குமரன் (Kumaran) said...
ஒற்றைச் சொல்லில் பாராட்டிய நாகை பாலமுரளிக்கு நன்றி. :-)
Sunday, April 22, 2007 9:18:00 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
முதலில் நீங்கள் என் பேரை குமடன் என்று எழுதியிருந்தீர்களே. அதனை ஏன் அழித்தீர்கள்? ஆஹா. இவருக்கும் நம்மள பத்தி தெரிஞ்சிருச்சான்னுல்ல நெனைச்சேன்?! :-)
Sunday, April 22, 2007 9:19:00 PM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி சிவா அண்ணா.
Sunday, April 22, 2007 9:19:00 PM
இன்றைக்கும் தேவையான சிந்தனைதான், குமரா. நல்ல விஷயங்களை யாராவது அப்பப்ப நினைவுபடுத்திக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா மறந்துடும் :) நன்றி, உங்களுக்கு!
உண்மை தான் கவிநயா அக்கா. அறிவுரைகள் எல்லாமே அப்படித்தானே. தகுந்த நேரத்தில் நினைவிற்கு வந்தால் பிழைத்தோம். இல்லையே பிழை செய்தோம் என்று பின்னர் வருந்துதல் தான்.
நன்றி.. குமரன்.
Post a Comment