Wednesday, May 05, 2010

எந்தையும் தாயும்...

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

எளிமையான பாடல். அதனால் விளக்கம் தரவில்லை. :-)

3 comments:

குமரன் (Kumaran) said...

ஜோ / Joe said...
முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகள்! வாழ்க அவன் புகழ்!!
January 25, 2006 11:45 PM
--

ஞானவெட்டியான் said...
வாழ்க! வளர்க!!
January 25, 2006 11:51 PM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு அர்த்தமே தேவையில்லைதான்.அவன் காலத்தை வென்றவன்.திருப்பூர் குமரன் கொடி காப்பான் என்று தெரிந்து முன்னாலேயே தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர் என்று பாடியவர்தானே. தி. ரா. ச
January 25, 2006 11:56 PM
--

மணியன் said...
ஆஹா,அருமையான பாட்டு ! சரியான நேரத்தில் நினைவூட்டல் !
January 26, 2006 12:09 AM
--

G.Ragavan said...
விளக்கம் தேவையா! அற்புதமான பாடல். பாரதியின் புகழ் ஓங்குக.
January 26, 2006 2:39 AM
--

சிங். செயகுமார். said...
"வந்தே மாதரம்" உணர்வு பூர்வமாக சொல்லி பார்க்கின்றேன். இன்று குடியரசு தினமல்லவா!
January 26, 2006 4:24 AM
--

குமரன் (Kumaran) said...
அமாம் ஜோ. முண்டாசுக் கவிஞனின் வரிகள் எல்லாமே முத்துக்கள் தான். மிக்க நன்றி.
January 26, 2006 5:37 AM
--

குமரன் (Kumaran) said...
வாழ்த்துக்களுக்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.
January 26, 2006 5:38 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி தான். இன்று நடப்பதெல்லாம் அவர் என்றோ பாடல்களாகப் பாடி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
January 26, 2006 5:39 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி மணியன்.
January 26, 2006 5:39 AM
--

குமரன் (Kumaran) said...
வாழ்க பாரதி! வாழிய செந்தமிழ்!

நன்றி இராகவன்.
January 26, 2006 5:40 AM
--

குமரன் (Kumaran) said...
இன்று மட்டுமன்று சிங். அடிக்கடி ஏன் தினந்தோறும் வந்தே மாதரம் என்று உணர்வு பூர்வமாகச் சொல்லுங்கள்.
January 26, 2006 5:40 AM
--

நாமக்கல் சிபி said...
நன்றி குமரன்,
அருமையான பாரதியின் பாடல்.


வந்தே மாதரம் சொல்லும்பொதோ, காதால் கேட்கும்போதோ உள்ளுக்குள் ஏதோ ஓர் உணர்வும், உற்சாகமும் ஏற்படுவதைக் கவனித்து இருக்கிறீர்களா குமரன்?
January 26, 2006 8:38 AM
--

குமரன் (Kumaran) said...
வந்தே மாதரம் மட்டும் இல்லை சிபி. நல்ல விஷயம் எதுவாய் இருந்தாலும் அதனைச் சொன்னாலும் கேட்டாலும் நன்றாகத் தான் இருக்கிறது.

பாராட்டுக்கு மிக்க நன்றி சிபி.
January 26, 2006 7:24 PM
--

சிவமுருகன் said...
மிக சிறந்த பாடல். பாடவும் எளிதாக உள்ளது.

இயற் தமிழ் போலவும், இசை தமிழ் போலவும், இதையே வசனமாக பேசினால் நாடக தமிழ் போலவும், தொன்றும் அற்புதமான பாடல், வாழ்க பாரதி, வாழ்க தமிழ் பேசும் நற்றமிழர்.

சிவமுருகன்
February 07, 2006 3:15 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவமுருகன். முத்தமிழாகவும் இந்தப் பாடலைப் பார்க்கலாம். புதிய கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
February 07, 2006 8:50 AM
--

Jeeves said...
கண்ணின் மணியெனவே செந்தமிழைக் கொண்டிருக்கும்
எண்ணம் தனையிங்கு ஏற்றத்தில் - நண்ணுமென்
இன்பத் தமிழாநாம் இன்னிசையில் நாளும்
வெண்பா வடிக்கலாம் வா.

நீங்க எழுதிய வெண்பால லேசா தளைத் தட்டியது.. சரி பண்ணி போட்டிருக்கேன்.. சரியா பாருங்க.. அப்படியே ..

http://payananggal.blogspot.com/2006/03/2_14.htmல் பாருங்க.. தவறிருந்தால் திருத்தி தாங்க..

அன்புடன்
ஜீவா
March 13, 2006 11:01 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி ஜீவா... நீங்க சொன்ன மாதிரியே திருத்தி எழுதிட்டேன்.
March 15, 2006 11:04 AM
--

தமிழ் குழந்தை said...
தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
May 05, 2006 3:15 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி தமிழ்க்குழந்தை
May 06, 2006 4:33 PM

Unknown said...

முப்பாட்டன் புகழ் ஓங்குக...

மதிவதனி செல்வராஜ் said...

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்! வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே! வான் புகழ் கொண்டு வாழ்ந்திடும் பா'ரதி வாழிய வாழியவே!🙏🙏🙏🙏