Wednesday, May 19, 2010

விநாயகர் நான்மணி மாலை


விநாயகர் நான்மணி மாலை என்ற தலைப்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் புதுவை மணக்குள விநாயகப் பெருமான் மேல் ஒரு நூலை இயற்றியுள்ளார். வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு வித பா வகைகளில் பாடல்கள் புனைந்திருக்கிறார். மொத்தம் நாற்பது பாடல்கள் இந்த நூலில் இருக்கின்றன. மிக அருமையான கருத்துகள் பல இந்தப் பாடல்களில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தானே!
நின் தனக்குக் காப்புரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்பு நீயே.


சக்தியின் அருள் பெறும் பாக்கள் இயற்றுவதில் வல்லவர்கள் எந்தப் பொருளைப் பற்றி நூற்களை எழுதினாலும் அது நன்கு அமையும் படி வாக்கு வன்மை பெற தலைவனே உனக்கு காப்புச் செய்யுள் உரைப்பார்கள். உன் மீது இயற்றப்படும் இந்த நூலுக்கும் நீயே காப்பு.

3 comments:

குமரன் (Kumaran) said...

Kishore said...
கற்பக விநாயகக் கடவுளே போற்றி
July 19, 2007 10:06 PM

--

குமரன் (Kumaran) said...
கிஷோர். நீங்கள் சொல்லும் வரி இந்த நூலில் வரும் ஒரு பாடலின் தொடக்கம். அதைத் தான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?
July 20, 2007 7:07 AM
--

ஜெயஸ்ரீ said...
மிக நல்லதொரு தொடரைத் தொடங்கியிருக்கிறீர்கள். பாரதியின் பக்திப் பாடல்களில் அதிகம் பிரபலமடையாதவற்றில் மிக அரிய கருத்துகள் பொதிந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" -மகாகவியின் உள்ளத்தில் எவ்வளவு உயரிய சிந்தனைகள் ஊற்றெடுத்திருக்கின்றன!
July 20, 2007 5:13 PM
--

ஜீவா (Jeeva Venkataraman) said...
//உன் மீது இயற்றப்படும் இந்த நூலுக்கும் நீயே காப்பு.
//

:-)
;-)
:-)
July 23, 2007 8:46 PM
--

குமரன் (Kumaran) said...
ஜெயஸ்ரீ,

உண்மை தான். பாரதியாரின் பல பாடல்கள் பிரபலமாகவில்லை. அந்தப் பாடல்களில் மிக மிக நல்ல அரிய கருத்துகள் இருக்கின்றன. இந்த விநாயகர் நான்மணிமாலையிலும் அப்படிப்பட்ட கருத்துகள் நிறைய இருக்கின்றன. பல நேரங்களில் பாரதியார் கவிதை புத்தகத்தை எடுத்தவுடன் நான் விரும்பிப் படிப்பது இந்தப் பாடல்களையே.
July 24, 2007 10:00 AM
--

குமரன் (Kumaran) said...
ஜீவா. :-))

அடுத்தப் பாடலும் இடுகையில் இட்டுவிட்டேன். பார்த்தீர்களா?
July 24, 2007 10:00 AM

Unknown said...

யொகேவா தான் உண்மை கடவுள் என்று பாரதியே ஒப்புக்கெண்டார்

Unknown said...

ஸ்டாலின்