Friday, August 08, 2008

டி.எம்.எஸ் பாராட்டு விழா படங்கள்

மதுரையில் அண்மையில் முதல்வர் தலைமையில் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவின் படங்கள் சில நண்பர்கள் மூலமாகக் கிடைத்தன. அவற்றை இங்கே பதிகிறேன்.


















25 comments:

சதங்கா (Sathanga) said...

விருதுகளுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல டி.எம்.எஸ். ஆனால் படங்களைப் பார்க்கும்போது ஒரு சிறு வேதனை, இதையுமா அரசியல்படுத்தணும் என.

குமரன் (Kumaran) said...

சதங்கா. என்ன இப்படி சொல்கிறீர்கள்? இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட விழா என்பதே என் பார்வை. டி.எம்.எஸ் தங்களின் தவப்புதல்வன் என்றும் வாழவைக்கும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் தாங்கள் தந்த நன்றியும் கொடையும் என்றும் எண்ணும் மதுரை வாழ் சௌராஷ்ட்ரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது இந்தப் பாராட்டு விழா என்பது என் எண்ணம். :-)

இதுவரை தி.மு.க. மதுரையை கம்யூனிஸ்ட்களுக்கே தொகுதிப் பங்கீட்டில் கொடுத்து வந்தது. இனி மேலும் அப்படி செய்தால் இளவரசரின், மதுரைக் குறுநிலமன்னரின் செல்வாக்கிற்குச் சரி வராது என்று நினைத்து அரசியல் நகர்வுகளை நடத்தி வருகின்றது. மதுரையில் மக்கள் எண்ணிக்கையில் மட்டும் (செல்வாக்கில் இல்லை) முதலிடத்தில் இருக்கும் சௌராஷ்ட்ர மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற நடக்கும் நிகழ்வுகளாகத் தான் இது தெரிகிறது. இதுவரை காங்கிரஸ், ஜனதா, பா.ஜ.க., அ.தி.மு.க., என்றே ஆதரவு தந்திருக்கும் சௌராஷ்ட்ரர்கள் இனிமேல் தி.மு.க.விற்கும் கட்சி மாறத் தொடங்குவது நடக்கும் என்று நினைக்கிறேன். அதுவே தி.மு.கவின் ஆசையும்.

எப்படியோ 'தனக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை' என்று பல முறை நொந்து கொண்ட டி.எம்.எஸ்.ஸுக்கு இந்த விழா மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர் இருக்கும் போதே அவருக்கு உரிய விருதுகளும் மரியாதைகளும் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

வடுவூர் குமார் said...

டி எம் எஸ் மாதிரி பழம் கலைஞர்களுக்கு இனி இம்மாதிரி சான்ஸ் இனி அடிக்கக்கூடும்.
மேடை முகப்பு அலங்காரம் தான் வேறொதையே முன்னிருத்துகிறது.

சகாதேவன் said...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
என்று டி.எம்.எஸ் அன்று பாடிய பாட்டு நினைவு வருகிறதே.
சகாதேவன்

கோவி.கண்ணன் said...

உள் அரங்கத்தில் பாராட்டுவிழா யாருக்குன்னு தெளிவாக போட்டு இருக்கிறார்கள் :)

நேரம் கிடைத்தால் பதிவையும், பின்னூட்டங்களையும் பாருங்க, இதன் தொடர்பிலான இடுகைதான்.

http://govikannan.blogspot.com/2008/08/blog-post_4313.html

Unknown said...

It seems that TMS has announced two as his successors in the function.Who are they? His sons
Palraj and selvakumar?

Unknown said...

TMS was made president of IyalIsai
Nataka Manram by Jayalalitha.He also got Padmasri when she was the
CM.What did Karunanidhi do
to him when he was CM. MGR also did
not do much to him when he was CM.

வெற்றி said...

குமரன்,
படங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

தமிழ்த் திரையுலகின் சரித்திர நாயகர்களில்[Legend] ஒருவர் திரு.செளந்தரராஜன் அவர்கள் என்றால் மிகையல்ல.

உண்மைத்தமிழன் said...

குமரன்,

அரசியல்தான் பிரதான காரணம் என்றாலும், தான் ரசித்த ஒரு கலைஞனுக்கு பாராட்டு விழாவை நடத்தியதற்காக அஞ்சாநெஞ்சனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

இந்தப் பாராட்டுதல் விழாவுக்காக நடத்தப்பட்ட வசூல் வேட்டையும், கொடுக்காதவர்களை பணிய வைத்த முறையும் காலம்காலமாக தமிழ்மண்ணில் நடக்கின்ற அரசியல் அக்கிரமம்தான்.. என்ன செய்ய?

சரி.. திட்டிக் கொள்வோம்.

மூன்று தலைமுறை தமிழர்களுக்கு நல் உறக்கத்தையும், புத்துணர்ச்சியையும், கலைத் தாகத்தையும் ஏற்படுத்தி இன்னமும் தமிழர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இசைக் கலைஞர்களை எந்த அரசு பாராட்டியுள்ளது.. கலைமாமணி விருது வழங்கியதோடு சரி..

நேற்றைக்கு வந்த கர்நாடக சங்கீதப் பாடகர்களும், இசைக் கலைஞர்களும் பத்மபூஷன் வரையிலும் சென்ற பின்னும் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, டி.எம்.எஸ். பி.சுசீலா, கண்ணதாசன், கே.வி.மகாதேவன் என்ற கலைஞர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்தது என்ன..? பூஜ்யம்தானே..

அந்தக் கலைஞர்களின் பாடலையும், இசையையும் கேட்டு நமக்கு உறக்கம் வருகிறது. ஆனால் அவர்களுக்கு..?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படங்களுக்கு நன்றி குமரன்!
TMS மகிழ்ச்சி அவர் முகத்திலேயே தெரிகிறது :)

அருகில் இருப்பது முக அழகிரி அவர்களின் பையனா?

TMS பாடும் கண்ணன் பாட்டு ஒன்றும் கண்ணன் பாட்டில் இடுங்களேன்! :)

Kavinaya said...

//அவர் இருக்கும் போதே அவருக்கு உரிய விருதுகளும் மரியாதைகளும் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.//

உண்மைதான். நன்றி குமரா.

மெளலி (மதுரையம்பதி) said...

டி.எம்.எஸ் அவர்களுக்கு பாராட்டு விழா நல்ல காரியம் தான். எத்தனை அருமையான பாடல்களை தந்திருக்கிறார். இன்றாவது அவர் மனம் மகிழ ஒரு காரியம் நடந்ததே...

ராஜ நடராஜன் said...

அரசியல் நெடி அடித்தாலும் அந்த சாகாவரம் பெற்ற பாடகனுக்கு பாராட்டுவிழா எடுப்பதில் மகிழ்ச்சிதான்.

கானா பிரபா said...

ராஜ நடராஜன் சொன்னது போல அரசியல் இதில் இருந்தாலும் அந்த கலைஞனுக்கு இந்த கெளரவம் சேர்ந்திருப்பதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கு.

திவாண்ணா said...

//அவர் இருக்கும் போதே அவருக்கு உரிய விருதுகளும் மரியாதைகளும் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.//

இது!

குமரன் (Kumaran) said...

டி.எம்.எஸ்.ஸில் தொடங்கி இனி பலருக்கும் இப்படி பாராட்டு விழா நடைபெறும் என்று சொல்கிறீர்களா வடுவூர் குமார்? நடக்கலாம். ஆனால் அஞ்சாநெஞ்சர் முன்னின்று நடத்துவாரா தெரியவில்லை. நெல்லையிலும் கோவையிலும் சென்னையிலும் பிறந்து வளர்ந்த ஒரு சமுதாயத்துடன் அடையாளப்படுத்தக் கூடிய கலைஞர்கள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களுக்கும் பாராட்டு விழா நடக்கும். :-)

குமரன் (Kumaran) said...

சகாதேவன்.

எல்லோரும் அவரவர் வரையில் மற்றவரை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். :-) என்னளவில் அது உண்மை தான். அதனால் இந்த அரசியல்வாதிகள் செய்வதைக் கண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று இருக்க வேண்டியது தான். :-)

குமரன் (Kumaran) said...

இடுகை வந்த போதே கூகுள் ரீடரில் படித்துவிட்டேன் கோவி.கண்ணன். ஒவ்வொரு இடுகையையும் குறைந்த பட்சம் ஒரு பார்வையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் ab. தன் மகன்களைத் தான் தன்னுடைய இசை வாரிசுகளாக டி.எம்.எஸ். அறிவித்திருக்கிறார். அவர்களும் இந்தப் படங்களில் இருக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

ஜெயலலிதா ஆட்சியின் போது டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்த விருதுகளை/பெருமைகளைப் பற்றி சொன்னதற்கு நன்றி ab. எம்.ஜி.ஆர் கண்டு கொள்ளவே இல்லை என்று பல முறை பொதுவிலும் நண்பர்களிடமும் டி.எம்.எஸ். வருத்தப்பட்டிருக்கிறார். நானும் இரண்டு நிகழ்வுகளில் அவரிடமிருந்து அந்தக் குறையைக் கேட்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆகா. இதுவரை எங்கே சென்றிருந்தீர்கள் வெற்றி. உங்களையும் யோகன் ஐயாவையும் பல நாட்களாகக் காணவில்லை. அடுத்த வாரம் நிறைய இடுகைகளைக் கூடலில் இட இருக்கிறேன். நேரம் ஏற்படுத்திக் கொண்டு வந்து படித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் உண்மைத் தமிழன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. டி.எம்.எஸ்.ஸிற்கு மிக்க மகிழ்ச்சி என்று தான் நினைக்கிறேன்.

கூட இருக்கும் இளைஞர் என்று யாரைக் கேட்கிறீர்கள் தெரியவில்லை. நான் நினைப்பவரைத் தான் நீங்களும் கேட்கிறீர்கள் என்றால் விடை 'ஆமாம்'. :-)

டி.எம்.எஸ். பாடுன ஒரு பாட்டை மட்டும் கண்ணன் பாட்டுல போட்டா போதுமா? நிறைய போடலாங்க. ஒவ்வொன்னா. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் மௌலி, இராஜ நடராஜன் & கானா பிரபா நன்றி.