கடைசியாகப் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்கிறீர்களா? என்ன செய்வது? மனத்தில் இருப்பதை எத்தனை நாட்களுக்குத் தான் மறைத்து வைப்பது? அதனால் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன்.
எட்டெழுத்துகளை ஏற்றுக் கொண்ட மனது உடனே ஐந்தெழுத்தைத் தள்ளிவிடுவது இயல்பு தானே. இதனை ஏன் மறைக்க வேண்டும்?
என்னடா குமரன் திடீரென்று இப்படி எல்லாம் பேசுகிறானே என்று குழப்பமாக இருக்கிறதா? நண்பர் ஆனந்த் குமார் எழுதியதைப் படித்த பிறகு தோன்றுவது தான் இவையெல்லாம். அப்படி அவர் என்ன எழுதிவிட்டார் என்கிறீர்களா? அவருடைய அனுமதியின்றி அவருடைய இடுகையை இங்கே அப்படியே எடுத்து இடுகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.
****
கட்டையன்: என்னடா ரொம்ப சோகமா வர்றே?
கரட்டாண்டி: எங்கப்பா என் loveக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருடா
கட்டையன்: எவன்டா இவன்? கமலே love பண்ணா அப்பாவை கண்டுக்காதேனு தசாவதராத்தில சொல்லிருக்காரு.இன்னமும் அப்பாட்ட பர்மிஷன் கேட்டுக்கிட்டு.
கரட்டாண்டி: தசாவதாரத்தில love scenea இல்லையேடா? சாமிய கண்டுக்காதேனுதான எப்பவும் சொல்லுவார். இப்ப அப்பாவையும் கண்டுக்காதேனு சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? நான் கவனிக்கலையே.
கட்டையன்: இந்த பாட்டு நீ கேக்கலையா? "அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது".
கரட்டாண்டி: ஆமாம். அது சாமி பாட்டு இல்லையா? இதுல எங்கே love வருது? எங்க அப்பா எங்கே வர்ரார்?
கட்டையன்: ம்ம்.. உங்க அப்பா வேற இந்த பாட்டுல வரனுமா? இந்த பாட்டுக்கு அர்த்த்ம் தெரியுமா உனக்கு?
கரட்டாண்டி: தெரியாதே?
கட்டையன்: I Love You ஏற்கும் மனது Daddyயை பார்க்காது
கரட்டாண்டி: டேய்.. கதை விடாதே.
கட்டையன்: அஷ்ட அட்சரம்னா எட்டு எழுத்து அதாவது எட்டு லெட்டெர்ஸ் . I Love Youல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. எட்டு லெட்டெர்ஸ் வருதா?
கரட்டாண்டி: ஆமாம்
கட்டையன்:பஞ்ச அட்சரம்னா அஞ்சு எழுத்து அதாவது அஞ்சு லெட்டெர்ஸ். Daddyல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. அஞ்சு லெட்டெர்ஸ் வருதா? இப்ப கணக்கு சரியா வருதா?
கரட்டாண்டி: அது சரி. அப்ப கமல் I Love You சொல்லலைங்கறதக்காகவா அந்த அடி அடிச்சாங்க.
கட்டையன்: பாட்டுக்கு அர்த்தம் சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது.
***
என்ன? இனிமேல் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு குமரன் பதிவிற்குள் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அடடா. அப்படியெல்லாம் தப்பா நினைச்சுறாதீங்க. நீங்க வழக்கம் போல வந்து படிச்சுகிட்டே இருக்கணும். நண்பர்கள் சிலர் நகைச்சுவை இடுகை எழுது எழுது என்று வற்புறுத்தியதால் இப்படி ஒரு கடன் இடுகை இட்டிருக்கிறேன். அவ்வளவு தான்.
ஆனந்த் குமார். உங்களிடம் கேட்காமல் எடுத்து இட்டதற்காகக் கோவித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ;-)
27 comments:
//கரட்டாண்டி: அது சரி. அப்ப கமல் I Love You சொல்லலைங்கறதக்காகவா அந்த அடி அடிச்சாங்க.//
அய்ய்ய்ய்ய்ய.....
எட்டெழுத்துச் சொன்னதுக்குதான் கொன்னே போட்டுட்டாங்க!!!!
குமரா! இப்படி ஒரு ஓ.பி. (ஓசி!) பதிவா, உங்ககிட்ட இருந்து! சரியான ஆளுதான் :D
உம்மை நகைச்சுவை எழுதத்தானே சொன்னோம் கட் பேஸ்ட் பண்ணச் சொல்லவில்லையே!!
எழுதிடுங்களேன் - 8
கட் பேஸ்ட் - 5
//Daddyல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. அஞ்சு லெட்டெர்ஸ் வருதா? //
mummy கூட ஐந்து எழுத்து தான். பாருங்க, நீங்க ஒரு ஆணியவாதி!னு நிரூபிச்சீட்டீங்க.(கட் பேஸ்ட் பண்ணி இருந்தாலும், குத்தம் குத்தமே!) :))
@கொத்ஸ், நீங்க இந்த பாயிண்டை புடிப்பீங்க?னு பாத்தேன்.
சரி எப்படியும் உஷாஜி வந்து சாமியாட போறாங்க!னு சும்மா இருந்துட்டீங்களோ? :p
ரொம்ப நன்றி குமரன்.
என்னோட பதிவை அனைத்து பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தியதற்காக நன்றி.
ஆனந்த் குமார் பதிவை அறிமுகம் செய்ததுக்கு நன்றி. :)
KRS எங்கே? இதுக்கெல்லாம் ஏதாவது rule போட்டு மேலும் 2 பதிவு (cut & paste) இல்லாமல் போடச் சொல்லக்கூடாதா
Seenu
KRS எங்கே? இதுக்கெல்லாம் ஏதாவது rule போட்டு மேலும் 2 பதிவு (cut & paste) இல்லாமல் போடச் சொல்லக்கூடாதா
Seenu
நல்ல பதிவு ஆனந்த் குமார்! ரசித்தேன்! வாழ்த்துக்கள்! :)
//துளசி கோபால் said...
அய்ய்ய்ய்ய்ய.....
எட்டெழுத்துச் சொன்னதுக்குதான் கொன்னே போட்டுட்டாங்க!!!!//
இப்ப தான் புரியுது டீச்சர்...எல்லாச் சினிமாவிலும் பொண்ணோட காதலனை ஏன் அப்பா கொல்ல முயற்சி பண்ணுறாரு-ன்னு! எல்லாம் நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சியோட ரிவர்ஸ் பட்டர்ஃபிளை எபெஃக்ட்டு! :)
ambi said...
//.(கட் பேஸ்ட் பண்ணி இருந்தாலும், குத்தம் குத்தமே!)//
மதுரைக்கேவா? :)
அது சரி நெல்லை நெல்லை தான்! தில்லை தில்லை தான்! :)
//பாருங்க, நீங்க ஒரு ஆணியவாதி!னு நிரூபிச்சீட்டீங்க :))//
அட, கட் & பேஸ்ட் பண்ணதே அதுக்குத் தானேப்பா! :)
// Seenu said...
KRS எங்கே? இதுக்கெல்லாம் ஏதாவது rule போட்டு மேலும் 2 பதிவு (cut & paste) இல்லாமல் போடச் சொல்லக்கூடாதா//
ஹா ஹா!
வேணாங்க!
வெட்டி வந்து சொல்லட்டும்! அப்பத் தான் குமரன் கேட்டுக்குவாரு! :)
//ambi said...
@கொத்ஸ், நீங்க இந்த பாயிண்டை புடிப்பீங்க?னு பாத்தேன்.
சரி எப்படியும் உஷாஜி வந்து சாமியாட போறாங்க!னு சும்மா இருந்துட்டீங்களோ? :p//
ஏங்க, அடியேனுக்கு ரொம்ப நாளா ஒரு ஜந்தேகம்!
நீங்க ஐஐடில நுண்ணரசியல் படிச்சீங்களா? இல்லை ஐஐஎம்-ல நுண்ணரசியல் படிச்சீங்களா? :)
உஷாக்கா...யாரை விட்டாலும் இவரை மட்டும் விடவே விடாதீங்க! :)
அட ஆமாம்ங்க துளசி அக்கா. நான் கவனிக்கலையே அதை.
நான் தான் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவன்னு நினைச்சேன். நீங்க தம்பிக்கேத்த அக்காவா இருக்கீங்களே. :-)
ஓ.பி.யும் ஓ.சி.யும் கைவந்த கலை கவிநயா அக்கா. அலுவலகத்திலயும் அப்படித் தான். :-)
எது எழுத வருதோ அதைத் தானே கொத்ஸ் எழுத முடியும்? நகைச்சுவை நகைச்சுவைன்னு நீங்க சொல்லிகிட்டு இருந்தா எனக்கு நகைச்சு வை நகைச்சு வைன்னு கேக்குது. அதான் சிரிப்பானா போட்டுத் தள்றேன். :-)
அடப்பார்றா.
அம்பிங்க அம்பிங்க. நான் கூட அதை நினைச்சேன் அம்பிங்க. குற்றமுள்ள மனசு குறுகுறுக்குமாம். அப்ப நம்ம ரெண்டு பேருகிட்டயும் குற்றமிருக்கு போல. நாம ரெண்டு பேருமே ஆணியன் தோசை சாப்புடுவோம் போல. :-)
உஷா இந்த மாதிரி தலைப்பெல்லாம் வச்சா உள்ளேயே வர மாட்டாங்க. சாமி பதிவுன்னு ஓடியே போயிடுவாங்க. :-)
ஆனந்த் குமார். அப்படித் தான் நீங்க நினைக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன். நன்றிகள். அனைத்து பதிவர்களுக்கும் அறிமுகமானதோ இல்லையோ மதுரையம்பதி மௌலிக்கு மட்டுமாவது அறிமுகம் ஆனது. அதுவே போதும் இல்லையா? :-)
மௌலி,
நீங்க மட்டும் தான் என் உண்மையான நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டீங்க. மத்தவங்க எல்லாம் பாருங்க. கட் & பேஸ்டு, கட் & பேஸ்டுன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க. :-)
சீனு.
இரவிசங்கர் விதித்தால் நாங்கள் பின்பற்றிவிடுவோமா என்ன? அப்படிப் பின்பற்ற இது என்ன அவரு பதிவா?
ஐயோ இரவிசங்கர் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க உங்க பதிவுல 'கோவி.கண்ணனுக்கு நான் சொல்ற வரைக்கும் யாரும் பதில் சொல்லக்கூடாது'ன்னு ஒரு கட்டளை இட்டீங்களே. அதை நான் அப்படியே கடைபிடிக்கலை?! அதைச் சொல்றேன். அம்புட்டு தான். :-)
இரவிசங்கர். என் பதிவுக்கு வந்துட்டு என் கிட்ட பேசாம மத்தவங்ககிட்டேயே பேசுறீங்களே? இது என்ன நியாயம்? :-(
//வெட்டி வந்து சொல்லட்டும்! அப்பத் தான் குமரன் கேட்டுக்குவாரு! :)//
அதுல என்ன ஐயம்? சிலருக்கு சிலர் மேல ரொம்ப மரியாதை. அம்புட்டு தான். அதுக்கெல்லாம் என்ன செய்யமுடியும்? :-)
அருமையான பதிவு
ஹிஹிஹி, நட்சத்திர வாரத்திலேயே இது ஒளிவிட்டுப் பிரகாசித்த நட்சத்திரமோ???? :)))))))))) அருமை, இதுக்காகவாவது தசாவதாரம் பார்க்கணும், பார்க்கலாம், இங்கே பக்கத்திலேயே தியேட்டரிலே காத்தாடுது, ஆனாலும் போக முடியலை, அல்லது பிடிக்கலை??? ஏதோ ஒண்ணு! :))))))
நன்றி திகழ்மிளிர். :-)
தில்லையைப் பத்தி படத்துல வர்றது பிடிக்கலையோ கீதாம்மா? என்ன தான் சொல்லியிருக்காங்கன்னு பாக்குறதுக்காகவாவது போய் ஒரு தடவை அந்தப் படத்தைப் பார்த்துவிடுங்கள். :-)
Post a Comment