Friday, July 25, 2008

திருவிளையாடல் நிறைவு பெற்றுவிட்டதா? :-(((


சன் தொலைக்காட்சியில் தினம் இரவு 8 மணிக்கு வந்து கொண்டிருந்த 'திருவிளையாடல்' தொடர் இன்றோடு நிறைவு பெற்றுவிட்டது போலிருக்கிறது. என்றைக்கும் 'தொடரும்' என்று முடிப்பார்கள். இன்றைக்கு 'சுபம்' போட்டுவிட்டார்கள்.

புராணம் சொன்னதில் புதுமை புகுத்துகிறோம் என்று எதையாவது செய்து குளறுபடி செய்யாமல் மிகவும் அழகாகத் தந்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்து விரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த நல்லத் தொடர் இவ்வளவு விரைவில் முடிந்ததில் மிகவும் வருத்தம்.

ஏதேனும் அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா? அதனால் தான் இவ்வளவு விரைவில் இந்தத் தொடரை நிறுத்திவிட்டார்களா? அடுத்து ஞாயிற்றுக்கிழமை வரும் இராமாயணமும் நின்றுவிடுமோ?

4 comments:

Prabhu said...

I guess thiruvilayadal was stopped becoz of lack of advertisers, they have spent more than 1 crore for the settings alone. Lack of ads and low trp ratings have forced them to end the serial soon. Ramayanam wont be stopped becoz it is a dubbed serial and cost of making the serial is less compared with thiruvilayadal and also ramayanam is getting good trp ratings and advertisements.

TBCD said...

நிறுத்திட்டாங்களா...நல்லது...

புராணக்காலத்திலே, வெள்ளை வெள்ளேரென்று விதவைக்கோலம் ப்போட்டு கொடுமை செய்த தொடரை நிறுத்திய புண்ணியவான்கள் அனைவருக்கும் இதன் மூலம் நன்றி சொல்லிக் "கொல்லு"கிறேன்.

:))))))))))))

கோவி.கண்ணன் said...

//புராணம் சொன்னதில் புதுமை புகுத்துகிறோம் என்று எதையாவது செய்து குளறுபடி செய்யாமல் மிகவும் அழகாகத் தந்து கொண்டிருந்தார்கள்.//

:)

புராணங்களே புதுமைக்காக புகுத்தப்பட்டது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?

விக்ரமாதித்தன் கதை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் புதுமை புகுத்தப்ப்ட்ட வந்தது நன்றாகத்தான் இருந்தது. வெறும் புராணக்கதையாக சொல்லி இருந்தால் அந்த தொடருக்கு அவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன்.

Kavinaya said...

எனக்கும் ரொம்ப ஏமாற்றம்தான் குமரா. தமிழும், வசனங்களும், காட்சி அமைப்புகளும், இப்படி எல்லாமே நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.