கானகம் நடுவே கண்மூடிக் கைவிதிர்த்து
நானழும் போதினில் நாயகன் வருவான்!
தானவர் சூழும் தரணியாம் காட்டினில்
தான் அவன் துணையாய் தமையனாய் வருவான்!
காணிலம் அவனை! கண்டவர் உளரோ?
மாநிலம் முழுவதும் மயங்கியே கேட்கும்!
நானிலம் எங்குமே நாயகன் உள்ளான்!
ஞானியர் சொல்லும் ஞானமே வாழ்க!
6 comments:
அற்புதமான பாடல் குமரன் ஐயா. சிறுமியின் கையில் பிரம்பினால் ஏற்பட்ட தழும்பை நீக்கும் போது, அன்று அணிலின் முதுகில் கோடு போட்ட சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.
ராமனுக்கு முதல் தங்கை என்று நினைக்கிறேன்.
இராகவ், அந்த வகையில் நானும் ஒரு தங்கை தான் இராகவனுக்கு. :-)
பாடலின் வரிகளையும் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
என்னடா யாருக்குமே இந்த இடுகையும் பாடலும் பிடிக்கவில்லையா? வியப்பாக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தொடங்கி வைத்ததற்கும் என் ஐயத்தை நீக்கியதற்கும் நன்றிகள். :-)
//குமரன் (Kumaran) said...
இராகவ், அந்த வகையில் நானும் ஒரு தங்கை தான் இராகவனுக்கு. :-)
//
பு.த.செ.வி !! ஹிந்தியில் சில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும், இந்த பாடலில் ஆழ்ந்து விட்டேன்..
கானகம் நடுவே தனியே போகும் போது சுற்றி வந்து பயமுறுத்துகின்றதே ஏதேதோ. அப்போது அங்கே தோன்றுகிறான் இந்த 'ஜங்கல்வாலா ப்ஹாயி'. இதனைத் தான் நான் இந்த இடுகையில் இட்டிருக்கும் பாடலின் முதல் நான்கு வரிகளில் சொன்னேன். அந்த வகையில் எனக்கு அவன் அண்ணன். நான் அவனுக்குத் தங்கை. கொஞ்சம் சுவையாக இருக்கட்டுமே என்று 'இராகவனுக்கு' என்று போட்டு உங்களையும் கொஞ்சம் வாரிவிட நினைத்தேன். நீங்களும் புதசெவி போட்டுவிட்டீர்கள். :-)
ஹிந்தியில் எனக்கும் சிறிதளவே பயிற்சி உண்டு. இந்தப் பாடலைப் பார்த்து புரிந்து கொள்ள ஹிந்தி தெரியவேண்டியதில்லை. அதனால் தான் நீங்களும் ஆழ்ந்துவிட்டீர்கள்.
பாடல் முடியும் தருணம் கண்களில் இருந்து வந்த கண்ணீரைத் தடுக்க முடியவில்லை, குமரன்!
அற்புதமான பதிவு!
வருவான் அவனே
என்றும் எமக்குத் துணையாய்!
மிக்க நன்றி எஸ்.கே. எனக்கும் மிகவும் பிடித்து போய் இந்த இடுகை இட்டேன்.
Post a Comment