Tuesday, July 08, 2008
வடநூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே!
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் - எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும், எல்லாத் துறைகளிலும் இயங்கும் கல்வியும்,
சொற்சுவைதோய் வாக்கும் - சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்திறமையும்,
வடநூல்கடலும் - வடதிசையில் வாழ்ந்தவர் இயற்றிய கடல் போன்ற நூல்களும் (வடமொழியில் இருக்கும் கடல் போன்ற நூல்களும்),
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - இன்பத்தையும் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களான நூல்களும்,
பெருகப் பணித்தருள்வாய்! - எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்!
தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 28 ஜனவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
4 comments: ஞானவெட்டியான் said...
நன்று! நன்று!
8:09 PM, January 29, 2006
குமரன் (Kumaran) said...
நன்றி ஞானவெட்டியான் ஐயா.
3:13 AM, January 30, 2006
G.Ragavan said...
மிகவும் அருமையான விளக்கம் குமரன். அற்புதம்.
9:00 AM, February 12, 2006
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன்.
1:26 PM, February 12, 2006
//வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று//
இதைப் படிக்கையில் குமரன் நினைவுதான் வருது :) உங்கள் தொண்டு வளரட்டும்!
:-)
நன்றி கவிநயா அக்கா.
திரு குமரன் அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
அழைப்பிற்கு நன்றி அகரம்.அமுதா. ஆனால் வெண்பா எழுதும் திறன் எனக்கு இல்லை. ஜீவ்ஸ் வாத்தியார் சொல்லித் தந்ததைக் கொண்டு எப்போதோ முயன்றிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் அவை எல்லாம் இப்போது மறந்துவிட்டது. உங்கள் பதிவிலும் வெண்பா எழுதச் சொல்லித் தருவதைப் பார்த்தேன். இயன்ற வரையில் எழுதலாம் என்றாலும் தற்போது வேண்டிய ஊக்கமும் நேரமும் மனமும் இல்லை. மன்னிக்கவும். :-)
Post a Comment