Thursday, April 24, 2008

Intelligence: அறிவாற்றல், அறிவாண்மை

ஓகை நடராஜன் அவர்கள் தற்போது இளைஞர்கள் நடுவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை இந்த 'சொல் ஒரு சொல்' வலைப்பூவில் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அது எனக்கும் சரியாகத் தோன்றியது. அதனால் தமிழில் கலந்திருக்கும் பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழாகவே பாவிக்கப்பட்டு தற்போது புழங்கும் ஆங்கிலச் சொற்களில் எளிதாகத் தமிழ்ப்படுத்த முடியாத (தமிழ்ச்சொல் என்னவென்று உடனே நினைவிற்கு வராத) சில சொற்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.

இன்டெலிஜென்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவாற்றல், அறிவாண்மை என்ற சொற்களைப் புழங்கலாம் என்று எண்ணுகிறேன். என்ன சொல்கிறீர்கள்? வேறு ஏதாவது சொல் இன்னும் பொருத்தமாக இருக்குமா? அப்படியானால் அதனையும் சொல்லுங்கள்.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 7 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

14 கருத்துக்கள்:

Venkataramani said...
பாத்து குமரன். அறிவை ஆண்மையோட இணைச்சீங்கன்னா பெண் வலைப்பதிவர்கள் சண்டைக்கு வரப்போறாங்க ;-)

June 07, 2006 12:46 AM
--

வெற்றி said...
குமரன்,
இன்டெலிஜென்ஸ் = கெட்டித்தனம், திறமை போன்ற சொற்களையும் பாவிக்கலாம் என நினைக்கிறேன்.

குமரன், இப் பதிவு பற்றி இல்லாத ஒரு கேள்வி.

serious, seriously என்ற சொற்களுக்கு இணையன தமிழ்ச்சொற்கள் என்ன என்பதையும் தயவு செய்து நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்.

எடுத்துக்காட்டு:
Are you serious?
அல்லது
I am very serious.
போன்ற ஆங்கில வசனங்களை தமிழில் எப்படிச் சொல்வது?

June 07, 2006 1:12 AM
--

G.Ragavan said...
அறிவுடமை என்ற சொல் மிகப் பொருத்தம்.

தமிழில் intelligence என்ற சொல்லை விட intelligent என்ற சொல்லே நிறைய புழக்கம். அதற்கு இணைச்சொல் அறிவாளி.

June 07, 2006 4:16 AM
--

sivagnanamji(#16342789) said...
நன்முயற்சி,வாழ்க!
ஒத்த சொற்களைத் தொகுத்து பிறகு மொழி பெயர்த்தல் நலம்
wisdom அறிவு
scholarship அறிவார்ந்த
knowledge விபரமான
intelligenceபுத்திசாலித்தனம்
intelligent புத்திசாலி
scholar அறிஞர்
தவறாக இருக்கலாம்;திருத்துங்கள்

June 07, 2006 5:00 AM
--

Anonymous said...
"intelligence"க்கு மதிநுட்பம், நுண்ணறிவு போன்ற சொற்கள் புழங்கப்படுவதை அறிந்துள்ளேன். இராகவன் சொன்ன "அறிவுடமை" "intellectual property"க்குப் புழங்க்கப்படுவதைப் பார்த்துள்ளேன். "intelligent"க்கு இராகவன் சொன்னது போல் அறிவாளி பொருத்தமாயுள்ளது. நீங்கள் பரிந்துரைத்த சொற்களும் நன்றகவே இருப்பதாக தென்படுகிறது. ஒரு ஆங்கிலச் சொல்லுக்குப் பல தமிழ்ச்சொற்கள் இருப்பது பிழை இல்லை. காலப் போக்கில் சில புழக்கத்தில் நிற்கும், அதே வேளை சில சொற்கள் சில விதுப்புப் பொருள் கொள்ளூம்.

June 07, 2006 5:30 AM
--

குமரன் (Kumaran) said...
வெங்கடரமணி. அப்ப மேலாண்மைக்கு (Management) என்ன சொல்றீங்க? பெண் மானேஜரே இல்லையா என்ன? மேல் (Male) + ஆண்மை அவங்களுக்கு சினமூட்டாதா? :-)

June 07, 2006 6:35 AM
--

இலவசக்கொத்தனார் said...
மேலாண்மை

மேல் (male)ன்னா ஆண்மைதானே.

செய்யத்தான் முடியலை சொல்லிக்கிட்டாவது போகட்டுமேன்னு விட்டுட்டாங்க போல இருக்கு.

Intelligence - அறிவுன்னு இருந்தாலேப் போதுமே. இல்லையா?

June 07, 2006 7:03 AM
--

வவ்வால் said...
வணக்கம் குமரன்!

இன்டெலிஜென்ஸ் மற்றும் பிரில்லியன்ட் என்ற இரண்டு சொல்லையும் வைத்து ஒப்பிட்டு நோக்கினால் ,அறிவாற்றல்,அறிவாண்மை என்பது சரியாக ஒத்து வரவில்லை.கற்றலின் மூலம் வரும் ஒன்று அறிவு அதை பிரில்லியண்ட் எனலாம். யாரும் சொல்லி தராமலே ஒரு அறிவு ஏற்படுமாயின் அதனை இன்டெலிஜென்ஸ் எனலாம் ,சுயம்பு வாக இருப்பார் இன்டெலிஜென்ஸ் உள்ளவர்.அதற்கு தமிழில் மேதமை என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

உதாரணமாக ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பிரில்லியண்ட் ,அறிவாளி எனலாம் ஆனால் உண்மையில் ஒன்றை புதிதாக கண்டு பிடிக்கும் ஆற்றல் அவர்களிடம் இருக்கிறதா எனப்பார்த்தால் இருக்காது,அது போல சுயமாக கண்டுபிடிக்கும் ஆற்றலே இன்டெலிஜென்ஸ் எனவே ஐன்ஸ்டைன் ஒரு இன்டெலிஜென்ட் அதாவது மேதை எனலாம்.

அறிவை (brilliant )விட ஒரு படி மேலானது இன்டெலிஜென்ஸ் அதனை உள்ளார்ந்த அறிவு, மேதை ,மேதமை என வித்தியாசப்படுத்தி காட்டுவதே சரியாகும், இங்கு அனானி ஒருவர் சொன்னது போல நுண்ணறிவு,மதினுட்பம் கூட பிரயோகிக்கலம் என நினைக்கிறேன்.

//இன்டெல்லிகென்cஎ"க்கு மதிநுட்பம், நுண்ணறிவு போன்ற சொற்கள் புழங்கப்படுவதை அறிந்துள்ளேன்//

June 07, 2006 8:48 AM
--

வவ்வால் said...
//மேலாண்மைக்கு (Management) என்ன சொல்றீங்க? பெண் மானேஜரே இல்லையா என்ன? மேல் (male) + ஆண்மை அவங்களுக்கு சினமூட்டாதா? :-) //

ஆண்,பெண் சமத்துவம் காணவென்று இப்போதெல்லாம் பால் வேறுபாடு அற்ற சொல் பிரயோகம் உபயோகிக்க துவங்கியுள்ளார்கள்.

மேலாண்மை கு பதிலா நிர்வாகம் , நிர்வாகவியல், மேனஜர்- நிர்வாகி , Chairman= Chairperson, என பொதுவான சொற்களை இப்போது நடைமுறையில் உள்ளது.

June 07, 2006 8:56 AM
--

சிறில் அலெக்ஸ் said...
மேலாண்மையிலுள்ள ஆண் ஆட்சி/ஆளுமையை குறிப்பது என நினைக்கிறேன்.

செயலலிதா தமிழ்நாட்டை ஆண்டாரா பெண்டாரா?

June 07, 2006 10:28 AM
--

johan -paris said...
குமரன்!
சில ஆங்கிலச் சொற்களுக்கு! இது தான் தமிழ்ச்சொல்;என்று சொல்லமுடியுமா,,,இங்கு குறிப்பிட்ட சொல்லுக்கு;;;இடம்;பொருள் நோக்கி ;தமிழ்ச் சொல்லெனில்;பேச்சுக்கு;எழுத்துக்கெனப் பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன;தமிழ்நாடு;ஈழம்;மற்றும் தமிழ்பேசும் நாடுகளில்;பல வகையான சொற்பயன்பாடு உண்டு.ஆகவே இவற்றுள் தேர்வு செய்யும் போது;எழுத்தெண்ணிக்கை குறைந்ததைப் பாவிப்பதே!!பயனுறும் என்பது என் கருத்து.
புலமை;என்பதும் இவ்வாங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லே!
எங்கள் ஈழத்தில் கிராமப்புறங்களில்"அந்தாள் விசயம் தெரிஞ்ச மனிசன்" என்பது கூட;நீங்கள் குறிப்பிட்ட;எல்லாவற்றையும் அடக்கும் பாவனை!!
யோகன் பாரிஸ்

June 08, 2006 5:05 AM
--

சிவமுருகன் said...
அண்ணா,
நல்ல அறிவாற்றலுள்ள சிந்தனை & பதிவு.

இன்னும் பலவற்றை எதிர்நோக்குகிறேன்.

June 09, 2006 1:17 AM
--

நாகையன் said...
குமரன்,

அறிவுடமை பொருந்தி வரும் என நினைக்கிறேன்.

-நாகையன்.

June 16, 2006 11:18 AM