Thursday, April 10, 2008

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன்...

இந்தப் பாடல் வரிகளை யாராலும் மறக்க முடியாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழலில் இந்தப் பாடல் தாங்களே பாடுவது போல் தோன்றும். இந்த ஞானம் எல்லாருக்கும் எப்போதாவது வருவது தான். இதுவரை உங்களுக்கு இது தோன்றவில்லை என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர்.

திரைப்படம்: படிக்காதவன்
வெளிவந்த வருடம்: 1985
இயற்றியவர்: தெரியவில்லை (பாடல் வாளிப்பா இருப்பதைப் பார்த்தால் இது வாலிப்பாவாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்)
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடலைப் பிரபலப்படுத்தியவர்: சூப்பர் ஸ்டார் :-)

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி (ஊரைத்)

பச்சைக் கொழந்தையின்னு பாலூத்தி வளத்தேன்
பாலைக் குடுச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடி (ஊரைத்)

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்டக் காயத்துல தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)

நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளைக் கரை சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)


இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 26 ஜூன் 2006 அன்று இட்டது.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 26 ஜூன் 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

57 comments:

Karthik Jayanth said...
குமரன்,

:-)

//பணங்காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி

இது 101 % உண்மை

Monday, June 26, 2006 10:18:00 PM

பொன்ஸ்~~Poorna said...
எனக்கு இந்தப் பாட்டு அவ்வளவா பிடிக்காது.. ஆனா தலைவர் பாட்டாச்சே.. அதனால போட்டதுக்கு தாங்க்ஸு :)

Monday, June 26, 2006 10:21:00 PM

இலவசக்கொத்தனார் said...
//ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி//

அட. நாலு போயி ஆறு வந்து இவ்வளவு நாளாச்சு. இன்னும் நாலு நாலுன்னுகிட்டு. இந்த ஓல்ட் பீபுள்னாலே இப்படித்தாம்பா. சே சே.

Monday, June 26, 2006 10:41:00 PM

SK said...
ஒரு ஏரியல் ஷாட்!
மேலேருந்து zoom பண்ணுவாங்க!
தலைவர் ஒரு ரவுண்டு அடிச்சு, முடியைக் கோதிவிட்டு, அப்படியே கேமெராவைப் பாத்து,
'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டென்'அப்படீம்பாரு!
இன்னும் மனசுல நிக்குது!

நல்ல பாடல்!
நன்றி குமரன்!

Monday, June 26, 2006 10:47:00 PM

குமரன் (Kumaran) said...
கார்த்திக். புலி புல்லை நிஜமாவே தின்னும்ன்னு படிச்சிருக்கேன் - அப்பத் தான் அதுக்கு சாப்பிட்ட கறி எல்லாம் செரிக்குமாம். அப்படி இருக்கிறப்ப பணங்காசைப் பாத்துட்டு நம்மாளுக மாறினா அதுல என்ன தப்புங்கறேன்?! :-) என்ன சொல்றீக?

Monday, June 26, 2006 10:50:00 PM

நாமக்கல் சிபி said...
இதே மாதிரி ஒரு பாட்டு "சம்சாரம் அது மின்சாரம்" படத்துல கூட உண்டு!

எனிவே! தலைவர் பாட்டை போட்டதுக்கு தாங்க்ஸுங்க!

Monday, June 26, 2006 10:51:00 PM

குமரன் (Kumaran) said...
பொன்ஸ். உங்க யானையை அந்தப் பக்கமா ஓடவைக்க முடியுமா? சும்மா தொரத்திக்கிட்டே இருக்குங்க. நிம்மதியா பின்னூட்டம் போட முடியலை.

Monday, June 26, 2006 10:51:00 PM

குமரன் (Kumaran) said...
பொன்ஸு. உங்க டாங்க்ஸுக்கு டாங்க்ஸு.

சூப்பர் ஸ்டார் பேரச் சொன்னா உங்களை மாதிரி நாலு பேராவது பிடிக்காது; ஆனாலும் பிடிக்கும்ன்னு சொல்லுவாங்கன்னு தெரியும். :-)

Monday, June 26, 2006 10:52:00 PM

குமரன் (Kumaran) said...
யப்பூ இலவசக் கொத்ஸு. நீங்க அறிவாளியப்பு. நாங்க எல்லாம் அப்படியா? நாங்க எல்லாம் குழல் விளக்கு இல்லியா? அதான் இப்பத் தான் நாலே புரியுது. இனிமே தான் ஆறு புரியுதான்னு பாக்கணும். :-)

Monday, June 26, 2006 10:53:00 PM

குமரன் (Kumaran) said...
அட ஆமாங்க எஸ்.கே. எனக்கும் அப்படியே மனசுல நிக்குது...

ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால பாத்ததெல்லாம் மனசுல நிக்காட்டி என்ன தான்யா மனசுல இருக்குன்னு வீட்டுல சவுண்டு விடறாங்க எஸ்.கே.

ஹிஹி. இன்னைக்கு K TVல இந்தப் பாட்டைப் போட்டாங்க. அதுல வந்த இன்ஸ்பிரேஷன் தான் இந்தப் பதிவு. :-)

Monday, June 26, 2006 10:56:00 PM

நாமக்கல் சிபி said...
//சூப்பர் ஸ்டார் பேரச் சொன்னா உங்களை மாதிரி நாலு பேராவது பிடிக்காது; ஆனாலும் பிடிக்கும்ன்னு சொல்லுவாங்கன்னு தெரியும்//

:))

கரெக்டா சொல்லிட்டீங்களே!

Monday, June 26, 2006 10:57:00 PM

நாமக்கல் சிபி said...
//ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால பாத்ததெல்லாம் மனசுல நிக்காட்டி என்ன தான்யா மனசுல இருக்குன்னு வீட்டுல சவுண்டு விடறாங்க எஸ்.கே.
//

அது சரி!

Monday, June 26, 2006 10:58:00
PM

குமரன் (Kumaran) said...
தலைவர் பாட்டுன்னு சொல்லிகிட்டு நாலு பேராவது வருவாங்கன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள இதோ இன்னொருத்தர் வந்துட்டாருப்பா...

வாங்க சிபி. உங்கப் பதிவுக்கு வந்து கலாய்ச்சாத் தான் நாங்க எல்லாம் இருக்கிறதே உங்க நினைவுக்கு வருது... ஹும். என்னா பண்றது? கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி.

சம்சாரம் அது மின்சாரம் படத்துல விசு மனோரமா உதவியோட பாடிக்கிட்டு வருவாரே. அந்தப் பாட்டு தானே சிபி? என்ன பாட்டுன்னு சொல்லுங்களேன்.

Monday, June 26, 2006 11:00:00 PM

நாமக்கல் சிபி said...
//வாங்க சிபி. உங்கப் பதிவுக்கு வந்து கலாய்ச்சாத் தான் நாங்க எல்லாம் இருக்கிறதே உங்க நினைவுக்கு வருது... ஹும். என்னா பண்றது? கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி.
//

அட! அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க!

விடுவோட பாட்டு,

"ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் உலகைப் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா!" ன்னு வரும்.
முழுசாத் தெரியாதுங்களே!

Monday, June 26, 2006 11:02:00 PM

நாமக்கல் சிபி said...
//தலைவர் பாட்டுன்னு சொல்லிகிட்டு நாலு பேராவது வருவாங்கன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள இதோ இன்னொருத்தர் வந்துட்டாருப்பா...
//

நமக்கு மெய்யாலுமே தலைவர்தானுங்கோ!

Monday, June 26, 2006 11:04:00 PM

Karthik Jayanth said...
குமரன்,

//என்ன சொல்றீக?

செரிக்குறதுக்காக புல்லு சாப்பிடுறது வேற. சாப்பாடே புல்லா இருக்குறது வேற.

ஆனா என்னை பொறுத்த வரைக்கும் இந்த பணக்காசு மேட்டர்ல புலியா இருக்குறத விட நாணலா இருக்கவே விரும்புகிறேன்(To an extend- இப்ப எல்லாம் எதை எழுதுனாலும் ஒரு டிஸ்கி போட வேண்டியதா இருக்கு:-)). அப்படி இருந்தா எப்படியாவது காலம் தள்ளலாம் :-)

Monday, June 26, 2006 11:08:00 PM

johan -paris said...
அன்புக் குமரா!
எனக்கு ரொம்பப் பிடிச்சபாட்டு மாத்திரமல்ல! பொருத்தமான பாட்டும் கூட!!! கேட்டும் போது மனம் கனக்கும்; வரிக்கு வரி கவிஞர் அனுபவித்து; எழுதியிருப்பாரோ!
கண்ணதாசனுக்குப் பின் தத்துவப்பாடல் ;எழுத முடியும் ;என எழுதியதுபோல் எழுதியுள்ளார். இது வைரமுத்து பாடல் என்பது என் அபிப்பிராயம். அருமையான இசை.
மீண்டும் நல்ல தொரு தெரிவு.
யோகன் பாரிஸ்

Tuesday, June 27, 2006 5:18:00 AM

Anonymous said...
i like this song
my situwation song

Tuesday, June 27, 2006 12:29:00 PM

குமரன் (Kumaran) said...
இப்ப நினைவுக்கு வந்துடுச்சு சிபி. கண்மணிக்குப் பதிலா கண்ணம்மான்னு பாடுவார் விசு அந்தப் படத்துல.

Tuesday, June 27, 2006 1:26:00 PM

குமரன் (Kumaran) said...
டிஸ்கி போட்டதால தப்பிச்சீங்க பேராசிரியரே :-). (ஆமாம். நீங்க பேராசிரியர்ன்னு சொல்லவே இல்லையே?! மத்தவங்க சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. ஊர்க்காரவுகளா இருந்து என்ன லாபம்? :-( )

பாட்டுல தான் அப்பு பணங்காசு புலி அப்படின்னெல்லாம் பாடுறது நல்லா இருக்கும். ஆனால் நடைமுறையில எல்லாருமே நாணல் தான் அதுல. யாருமே புலி கிடையாது. நாகை சிவா உட்பட ( அட கோவிச்சுக்காதீங்க நாகை சிவா. நீங்க புலி தானே. இல்லீங்களா? சொன்னாங்க ஊருல...)

Tuesday, June 27, 2006 1:29:00 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. தத்துவம் பேசுவதிலும் ஒரு தனி சுகம் தான் இல்லையா? நாம் இந்தப் பாட்டில் வருவது போல் எத்தனையோ பேரிடம் நடந்து கொண்டிருப்போம்; ஆனால் நமக்கு யாராவது இப்படிச் செய்துவிட்டால் மனசு கேக்காது; தத்துவப் பாடல்களாப் படிக்கத் தொடங்கிடுவோம்.

நீங்க சொல்ற மாதிரி வரிக்கு வரி அனுபவிச்சு எழுதுன மாதிரி தான் இருக்கு. எடுத்துக்காட்டா எத்தனையோ கூறலாம் இந்தப் பாட்டுல.

என்ன இருந்தாலும் தத்துவப் பாடல்கள் எழுதுறதுல கண்ணதாசனை மிஞ்ச முடியாது. அவருக்கு நிகர் அவரே. கவிப்பேரரசு என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம்; ஆனால் கவியரசு போல் தத்துவப் பாடல்கள் எழுதமுடியாது. (அதுவுமில்லாம கண்ணதாசனுக்குத் தானே எம்.ஜி.ஆர்., சிவாஜி போல தத்துவப் பாடல்கள் பாடும் கதாநாயகர்கள் கிடைத்தார்கள். ரஜினி, கமல், இப்ப இருக்கிற கதாநாயகர்கள் தத்துவப் பாடல்கள் பாடுனா அது காமெடியாத் தான் இருக்கும்).

Tuesday, June 27, 2006 1:34:00 PM

குமரன் (Kumaran) said...
உங்க சிச்சுவேஷன் பாட்டா? என்ன சொல்றீங்க பெயர் சொல்லாத (இல்லை பெயர் சொல்ல விரும்பாத) நண்பரே? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தப் பாட்டோட பெருமையே அது தானே. எல்லாருக்கும் இந்தப் பாட்டு எப்பவாச்சும் பொருத்தமா இருந்தே தீரும். இல்லைன்னா அவங்க புத்தன், காந்தி, ஏசு வரிசையில வந்தவங்கன்னு சொல்லிக்கலாம். :-)

Tuesday, June 27, 2006 1:36:00 PM

Venkataramani said...
சின்ன வயசில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு இது. அர்த்தம் முழுவதாய் புரியாமலே.

Tuesday, June 27, 2006 1:50:00 PM

Sivabalan said...
குமரன்,

பாடல் சூப்பருங்க...

நன்றி!!

Tuesday, June 27, 2006 2:22:00 PM

Karthik Jayanth said...
குமரன்,

//டிஸ்கி போட்டதால தப்பிச்சீங்க பேராசிரியரே :-). ஆமாம். நீங்க பேராசிரியர்ன்னு சொல்லவே இல்லையே?!

ஐயாம் தி எஸ்கேப் :-) குமரன் அது ஒண்ணும் படிச்சி வாங்குன பட்டம் எல்லாம் இல்ல.. அந்த அளவுக்கு நல்லா படிச்சிருந்தா நான் எதுக்கு இப்படி இருக்குறேன் :-) நம்ம நண்பன் சிபி கொடுத்த பட்டம். அதையே ஒரு நாலு பேரு சொல்ல, நம்ம பேரு அப்படி ஆகிபோச்சி.

//பாட்டுல தான் அப்பு பணங்காசு புலி அப்படின்னெல்லாம் பாடுறது நல்லா இருக்கும். ஆனால் நடைமுறையில எல்லாருமே நாணல் தான் அதுல. யாருமே புலி கிடையாது

வாழ்கை பாடத்துல இப்படி பின்னுறிங்களே நம்ம சிவா சார் மாதிரியே..

Tuesday, June 27, 2006 2:26:00 PM

இலவசக்கொத்தனார் said...
அட என்ன நீங்க தலைவர் பாட்டை போட்டுட்டு புல்லு நாணல்ன்னு பேசிக்கிட்டு. இதோட நிறுத்துங்க. அடுத்து சிங்கமொன்று புறப்பட்டதேன்னு ஆரம்பியுங்க.

Tuesday, June 27, 2006 2:41:00 PM

குமரன் (Kumaran) said...
கொத்ஸு. நீங்க ஆறு பதிவு போட்டுட்டு நூறு பின்னூட்டம் வாங்குவீங்க. தலைவர் பாட்டைப் போட்டுட்டு ஒரு அம்பது பின்னூட்டம் கூட வாங்காட்டி எப்படி? இப்பத்தான் இருபத்தி அஞ்சைத் தாண்டியிருக்கு. அம்பதைத் தாண்டட்டும். அப்புறம் அடுத்தப் பாட்டப் போடலாம்.

Tuesday, June 27, 2006 3:25:00 PM

குமரன் (Kumaran) said...
அட ஆமாம் வெங்கடரமணி. நானும் அப்படித் தான். பாட்டு புரியாமலேயே பாடிகிட்டுத் திரிஞ்சேன் அப்ப எல்லாம். :-) அப்படி நிறைய பாட்டு இருக்கே புரியாமலேயே பாடுனது..

Tuesday, June 27, 2006 3:26:00 PM

குமரன் (Kumaran) said...
சூப்பர் ஸ்டார் பாடல் சூப்பரு தான் சிவபாலன். :-) பாட்டைக் கேட்டீங்களா?

Tuesday, June 27, 2006 3:27:00 PM

Venkataramani said...
notification வந்து என்னை இங்கே மறுபடி இழுத்துவிட்டது. இதக்கேளுங்க. அப்போதெல்லாம் இந்தமாதிரி ஒண்ணு ரெண்டு பிரபல பாட்டுக்களை (முக்கியமா தலைவர் பாட்டுங்க) மனப்பாடம் செய்து பாடிட்டா என்னவோ சாதிச்சமாதிரி தோணும். இதைமாதிரி ரெண்டு மூணுபேர் பாடிக்கிட்டு திரிஞ்சோம். ஆனா வரிகள் புரியறமாதிரி இசையும் இருந்ததுங்கறதையும் சொல்லணும்.

Tuesday, June 27, 2006 3:41:00 PM

வெற்றி said...
குமரன்,
வணக்கம்.
நல்ல கருத்தாழமுள்ள தத்துவப் பாடல். ஜேசுதாசின் குரலில் இப் பாடலைக் கேட்க மிகவும் இதமாக உள்ளது.

நன்றி

Tuesday, June 27, 2006 4:16:00 PM

குமரன் (Kumaran) said...
//ஆனா வரிகள் புரியறமாதிரி இசையும் இருந்ததுங்கறதையும் சொல்லணும்.
//


என்ன சொல்ல வர்றீங்க வெங்கட்ரமணி? இப்ப எல்லாம் வரிகள் புரியற மாதிரி இசை இல்லைங்கறீங்களா? இந்தக் குசும்பு தானே வேணாங்கறது? :-) இப்பக் கூட வரிகள் புரியற மாதிரி இசையோட பாடல்கள் வருதுங்க. என்ன அந்த மாதிரிப் பாடல்கள் 'Rare Species' ஆகிக் கொண்டிருக்கின்றன. இல்லையா? :-)

Tuesday, June 27, 2006 9:47:00 PM

குமரன் (Kumaran) said...
அப்பாடா. வெற்றி. நீங்களாவது ஜேசுதாஸ் பாட்டுன்னு சொன்னீங்களே?! மிக்க மகிழ்ச்சி. டி.எம்.எஸ். எப்பவும் கச்சேரிகள்ல ரொம்ப நொந்துக்குவார். நான் உயிரைக் கொடுத்து எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் மத்தவங்களுக்கும் வேறுபாடு வர்றமாதிரி குரலில் வேறுபாடு காட்டிப் பாடியிருப்பேன். ஆனா எல்லோருமே இது சிவாஜி பாட்டு; இது எம்.ஜி.ஆர். பாட்டுன்னு தான் சொல்றாங்களே ஒழிய இது டி.எம்.எஸ். பாட்டு; இது சீர்காழி பாட்டுன்னு சொல்றதில்லை. தமிழ்த்திரைப்பட உலகத்துல பின்னணிப் பாடகர்களோட நிலைமை அப்படித் தான் இருக்குன்னு சொல்லுவார். அந்த மாதிரி இந்தப் பாட்டை எல்லாரும் 'தலைவர் பாட்டு'ன்னு தான் சொன்னாங்களே ஒழிய உங்களைத் தவிர வேற யாரும் இதை ஜேசுதாஸ் பாட்டுன்னு சொல்லலை. நானும் உங்க கட்சி தான். இந்தப் பாட்டு ஜேசுதாஸ் பாடுனதாலத் தான் எனக்குப் பிடிக்குதுன்னு நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் பாட்டுக்கு வாயசைச்சது என்னைப் பொறுத்தவரைக்கும் தேவையில்லாத (ஆனா மத்தவங்களுக்கு மிக முக்கியமான்) விதயம். ;-)

பாட்டின் கருத்தாழத்தைப் பற்றி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

Tuesday, June 27, 2006 9:53:00 PM

இலவசக்கொத்தனார் said...
//கொத்ஸு. நீங்க ஆறு பதிவு போட்டுட்டு நூறு பின்னூட்டம் வாங்குவீங்க. தலைவர் பாட்டைப் போட்டுட்டு ஒரு அம்பது பின்னூட்டம் கூட வாங்காட்டி எப்படி?//

அடடா. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே. சும்மா சிங்கம் மாதிரி இருக்கற தலைவர் பாட்டை போட்டுட்டு புல்லு பூண்டுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே. அதைத்தான் நிறுத்தச் சொன்னேன். மத்தபடி எல்லாரும் பின்னூட்டங்கள் நிறையா வாங்கணும், நிறையா கொடுக்கணம் அதுதானே நம் வாழ்க்கை கோட்பாடே.

அதுகுள்ள 'அந்த சேட் கம்மனாட்டியை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்' ரேஞ்சுக்கு டயலாக் பேசறீங்களே!

Tuesday, June 27, 2006 10:54:00 PM

இலவசக்கொத்தனார் said...
//அம்பதைத் தாண்டட்டும். அப்புறம் அடுத்தப் பாட்டப் போடலாம். //

ஓஹோ. இதுதான் டார்கெட்டா? என்னாலானது இன்னும் ஒண்ணு. சாப்பிடுங்க. :)

Tuesday, June 27, 2006 10:55:00 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் கொத்ஸ். இப்ப எல்லாம் 50க்கு மேல ஆசைப்படறதில்லை. ஆனால் சில நேரம் கரியும் கந்தனும் வந்து விளையாடத் தொடங்கிடுவாங்க. பக்கத்துல (சைடுல) நின்னுக்கிட்டு வெற்றியும் நல்லாக் கைதட்டுவார். அப்பப் பாக்கணுமே. பின்னூட்ட மழை தான். அவங்க ரெண்டு பேரும் மனசு வக்காட்டி 50ஐத் தாண்டுனா போதும்ன்னு ஆயிடும். :-)

Tuesday, June 27, 2006 11:00:00 PM

பொன்ஸ்~~Poorna said...
//வக்காட்டி //
ஐ தேவையா எனக் கேட்கும் குமரன்... வையுங்கள் ஐயா.. வக்காதீர்கள் :)))

Tuesday, June 27, 2006 11:05:00 PM

குமரன் (Kumaran) said...
துரத்தும் யானை அவர்களே. எங்க ஊருல அப்படித்தேன் சொல்லுவாய்ங்க. வையுங்கன்னு சொன்னா வகையா வய்ஞ்சுருவாய்ங்களே. அதான் வக்கச் சொன்னேன். மனசு வச்சீங்களா? நீங்களெல்லாம் மனசு வச்சாச் சரி. வக்காட்டி நான் பண்ணமுடியும்? :-)

அப்புறம்... ஐ தேவையான்னு கேக்கலைங்க. ஐ தேவையில்லாமப் பண்ணிப்புடுவாய்ங்க போலிருக்கேன்னு கேக்கறேன்.

Tuesday, June 27, 2006 11:24:00 PM

கோவி.கண்ணன் said...
பாட்டு தத்துவப் பாட்டுத்தான். ஆனால் பாடல் படமாகப்பட்ட விதம்..? தீர்த்தம் சாப்பிட்டால் தான் தத்துவம் பேசமுடியும் என்று சொல்லும் தவறான சூழல். மேலும் அமைதியாக சைவமாக ராகவேந்திரர் படத்தை கொடுத்துவிட்டு அடுத்தப்படமான படிக்கதவன் சுத்த அசைவமாக இருந்ததால் இந்த பாடலின் தத்துவம் ஏதோ சொல்லவந்தாலும் இடிக்குது.

Wednesday, June 28, 2006 11:14:00 AM

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் = தனித்துவமான பார்வை. அப்படித்தானே கோவி.கண்ணன் ஐயா? :-)

தீர்த்தம் சாப்பிட்டாத் தான் தத்துவம் வரும்ன்னு நிறைய பாடல்கள்ல பாத்தது தானே?! ஒரு கோப்பையிலே என் குடியிருப்புன்னு எழுதினவர் தானே நிறைய தத்துவப் பாடல்களும் எழுதியிருக்கார்.

எனக்கு இப்பப் புரியுது. நான் ஏன் தத்துவப் பாடல்களே எழுதுவதில்லைன்னு. தீர்த்தம் சாப்பிட்டாத் தானே?! :-)

ஆத்திகர் நாத்திகர் பற்றி எஸ்.கே. பதிவில் பேசிக் கொண்டிருக்கும் நீங்களா இங்கே இராகவேந்திரர் படத்தைச் சைவம் என்றும் படிக்காதவன் படத்தை அசைவம் என்று சொல்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. ஒரு வேளை அங்கு சொல்வது வேறு. இங்கு சொல்வது வேறோ? நான் தான் புரியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேனோ?

Thursday, June 29, 2006 12:00:00 AM

சிவமுருகன் said...
அண்ணா,
தலைவர் பாட்டு,
பல முறை நானே பாடியுள்ளேன்(!), ஆனால் முழு பாடலையும் கேட்டுள்ளேன், பாடியதில்லை. பாடிவிட்டேன்.

Thursday, June 29, 2006 4:32:00 AM

கோவி.கண்ணன் said...
//ஆத்திகர் நாத்திகர் பற்றி எஸ்.கே. பதிவில் பேசிக் கொண்டிருக்கும் நீங்களா இங்கே இராகவேந்திரர் படத்தைச் சைவம் என்றும் படிக்காதவன் படத்தை அசைவம் என்று சொல்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. ஒரு வேளை அங்கு சொல்வது வேறு. இங்கு சொல்வது வேறோ?//

இங்கு சொல்வது
நான் ஒழுக்கம் - சைவம், தீர்த்தம் சாப்பிடுவது அசைவம் என்ற பொருளில் சொன்னேன். நீங்கள் சைவத்திற்கு ஆத்திகத்தையும், அசைவத்திற்கு நாத்திகத்தையும் முடிச்சுப் போட சொன்னால் எப்படி போட முடியும் ?

Thursday, June 29, 2006 9:31:00 AM

இலவசக்கொத்தனார் said...
ஆஹா. 50 நெருங்கிடிச்சு. விரைவில் எதிர் பாருங்கள். வலைப்பூ உலகில் முதல்முறையாக...நடித்த....புத்தம் புதிய தமிழ் திரைப்படம்.

(என்ன பாட்டோ, அடிக்குரலில் கத்திச் சொல்லிடுங்க கும்ஸ்)

Thursday, June 29, 2006 9:56:00 AM

இராம் said...
தலைவர் பாட்டு என்னிக்குமெ சூப்பருதான்....

ரீப்பிட்டு :-))))

Thursday, June 29, 2006 9:59:00 AM

நாமக்கல் சிபி said...
//எனக்கு இப்பப் புரியுது. நான் ஏன் தத்துவப் பாடல்களே எழுதுவதில்லைன்னு. தீர்த்தம் சாப்பிட்டாத் தானே//

குமரன்,

தங்களிடமிருந்து நிறைய தத்துவப் பாடல்களை எதிர்பார்க்கிறேன். வேண்டுமெனில் சேர்ந்து எழுதுவோம்.

:)

Thursday, June 29, 2006 9:59:00 AM

நாமக்கல் சிபி said...
//வலைப்பூ உலகில் முதல்முறையாக...நடித்த....புத்தம் புதிய தமிழ் திரைப்படம்.
//

கொத்ஸ்,
வலைப் பூ உலகில் நடித்தவர் யார்?
அதிலும் முதல் முறையாக நடித்தவர் யார்?

Thursday, June 29, 2006 10:08:00 AM

இலவசக்கொத்தனார் said...
சிபி,

அதுக்கெல்லாஅ பதில் தெரிஞ்சா நாங்களே fill up the blanks எல்லாம் பண்ணியிருக்க மாட்டோமா?

விடுங்க குமரன் எதாவது சமாளிப்பாரு.

Thursday, June 29, 2006 10:31:00 AM

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். உங்களுக்கும் இது தலைவர் பாட்டு தானா? ஜேசுதாஸ் பாட்டு இல்லையா? சரி. இது தலைவர் பாட்டுங்கறதால அவரைப் போல வாயசைச்சீங்களா இல்லை ஜேசுதாஸ் மாதிரி வாய்விட்டுப் பாடினீங்களா? வாய்விட்டுப் பாடியிருந்தா இது ஜேசுதாஸ் பாட்டு; இல்லாட்டி தலைவர் பாட்டு. :-)

Thursday, June 29, 2006 4:17:00 PM

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. வாதிப்பதில் உங்களை மிஞ்ச முடியுமா? ஐ'ம் சரண்டர். :-)

Thursday, June 29, 2006 4:18:00 PM

குமரன் (Kumaran) said...
வரு.வா.சங்கத்தில் சேர்ந்ததற்காக என் சிறப்பு வாழ்த்துகள் கோவி.கண்ணன் ஐயா.

Thursday, June 29, 2006 4:19:00 PM

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். இன்னும் என்ன பாட்டுன்னு முடிவு பண்ணலை. அதனால அடிக்குரல்லயும் சொல்ல முடியாது; அடியில்லாதக் குரல்லயும் சொல்லமுடியாது. :-)

வலைப்பூவுலகில் முதல்ல்ல்ல்ல்முறையாக ***** பாஅடிய புத்தம்புது தமிப்பாடல் உங்கள் 'கேட்டதில் பிடித்ததில்' வருகிறது விரைவில். :-)

Thursday, June 29, 2006 4:21:00 PM

குமரன் (Kumaran) said...
ராம். ரிப்பீட்டுன்னு சொல்லி எத்தனை தடவை கேட்டீங்க? :-)

Thursday, June 29, 2006 4:22:00 PM

குமரன் (Kumaran) said...
சிபி. தத்துவப் பாடலுக்கு கூட்டணி வேணும்னா சொல்லுங்கள் கால்கரி கூட்டணி ஏற்கனவே உண்டு. கொத்ஸும் கால்கரியண்ணாவும் நல்லாவே ஊத்திக் குடுப்பாங்க. நீங்க தத்துவப் பாடல் எழுதலாம். என்னை விட்றுங்க. :-)

Thursday, June 29, 2006 4:24:00 PM

குமரன் (Kumaran) said...
சிபி. என்ன இப்படி கேட்டுட்டீங்க? வலைப்பூ உலகில் நடிக்காதவர் யார்? எல்லோருமே நடிகர்கள் தானே. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.... (ஆகா. சிபியோட பேசினாலே தத்துவப் பாட்டெல்லாம் வருதே... ஆபத்தாச்சே...)

முதல் முறையா நடிச்சது யாருன்னு கேட்டாத் தெரியலைங்களே. வெங்கட்ரமணிக்குத் தெரியுமோ?

Thursday, June 29, 2006 4:26:00 PM

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். நீங்க எதிர்பார்த்த அளவு சமாளிச்சேனா? பாத்து. பெயிலாயிருந்தா ஒரு ரெண்டு மூனு மார்க்கு அதிகமா போட்டு பாஸ் பண்ணிவிட்றுங்க.

Thursday, June 29, 2006 4:32:00 PM

Anonymous said...
அண்ணாச்சி,
தத்துவப் பாடல்களுல எனக்கு சந்திரபாபு பாடினா "பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்"ங்ற பாட்டு ரெம்பப் பிடிக்கும்.

அடுத்து அதெப் போடுங்க.

Friday, June 30, 2006 1:44:00 AM

குமரன் (Kumaran) said...
பெயர் சொல்ல விரும்பாத அண்ணாச்சி. நீங்க சொல்லியிருக்கிற சந்திர பாபு பாட்டும் அருமையான பாட்டு. குறிச்சு வச்சுக்கறேன். விரைவில் அந்தப் பாடலை இடுகிறேன். ரொம்ப நன்றி.

Friday, June 30, 2006 6:42:00 AM