Friday, April 04, 2008

சுட்டும் விழிச் சுடரே...

அண்மையில் வந்து பலருடைய மனதையும் கவர்ந்த பாடல் இது. சுட்டும் விழிச்சுடரே என்று தொடங்கும் பாரதியாரின் பாடலின் முதல் அடியை மட்டும் எடுத்துக் கொண்டு மிக அருமையான பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு வரியும் அருமை. எந்த வரி மிகப் பிடித்தது என்று சொல்ல முடியாத படி எல்லா வரியும் பிடித்திருக்கிறது. புதிய கற்பனைகள் ஒவ்வொரு வரியிலும். அருமையான இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

திரைப்படம்: கஜினி
வெளிவந்த வருடம்: 2005
இயற்றியவர்: கவிஞர் நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: பாம்பே ஜெயச்ரி, ச்ரிராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண்:

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்



மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்

பெண்:

தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

ஆண்:

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

பெண்:

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றி கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனம் கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்

ஆண்:

தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

பெண்:

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு

ஆண்:

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே

பெண்:

உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்


பாடியவர்கள் ஒற்று மிகுத்துப் பாடியிருந்தால் இங்கே வரிவடிவிலும் ஒற்று மிகும்; ஒற்று மிகாமல் பாடியிருந்தால் இங்கும் மிகாது. இலக்கணம் பார்க்கவில்லை. :-)

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 11 ஜூன் 2006 அன்று இட்டது.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 11 ஜூன் 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

30 comments:

இலவசக்கொத்தனார் said...
யாருக்கோ வாக்கு கொடுத்தா மாதிரி மெல்லினம், இடையினம், வல்லினம் பத்தி சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்.

Sunday, June 11, 2006 9:15:00 PM

நாமக்கல் சிபி said...
நல்ல பாடல்தான் குமரன்.

வல்லினம், இடையினம், மெல்லினம் என்றெல்லாம் சொன்னால் நான் பயந்துவிடுவேனா என்ன?

கசடதபற - வல்லினம்
ஙஞணநமன - மெல்லினம்
யரலவழள - இடையினம்
யாருமிங்கே ஓரினம்

என்று ஒன்றாம் வகுப்பிலேயே படித்திருக்கிறேன்.

Sunday, June 11, 2006 9:30:00 PM

KK said...
கவிஞரின் பெயரை விட்டுவிட்டீரே...

Sunday, June 11, 2006 9:38:00 PM

குமரன் (Kumaran) said...
உண்மை. கவிஞரின் பெயர் தெரியாதே. உங்களுக்குத் தெரியுமா?

Sunday, June 11, 2006 9:40:00 PM

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். அதென்ன யாருக்கோ கொடுத்த வாக்கு. வெளிகண்டநாதருக்குச் சொன்ன மாதிரின்னு சொல்லவேண்டியது தானே :-)

Sunday, June 11, 2006 10:24:00 PM

குமரன் (Kumaran) said...
சிபி, நீங்க ஒன்றாம் வகுப்பிலே அந்த வல்லினம், மெல்லினம், இடையினம் பத்திப் படிச்சிருக்கலாம். ஆனா இந்தப் பாட்டுல சொல்லியிருக்கிற வல்லினம், மெல்லினம், இடையினம் பத்தி ஒன்றாம் வகுப்புல படிச்சீங்களா? புரிஞ்சதா?

Sunday, June 11, 2006 10:26:00 PM

நன்மனம் said...
:-)

Sunday, June 11, 2006 10:33:00 PM

வெளிகண்ட நாதர் said...
வல்லினம், மெல்லினம், இடையினம் கேட்டா பாட்டை போட்டுட்டீங்க! நல்ல இனிமையான பாட்டு, சொற்களும், வரிகளும் அருமை, நன்றி குமரன்!

Sunday, June 11, 2006 10:53:00 PM

Anonymous said...
கடேசியா சொல்லியிருக்ற "ஒற்று"னா என்னா தலைவா ?

Sunday, June 11, 2006 11:06:00 PM

KK said...
குமரன், கவிஞர் தாமரை என்று நினைக்கிறேன். நா. முத்துக்குமாராக இருக்கவும் வாய்ப்புண்டு. கஜினி பாடல் தகடு யாரிடமும் இல்லையா என்ன?! தெரிந்தால் சொல்லுங்களேன்..
காக்க காக்க - உயிரின் உயிரே மற்றும் என்னைக் கொஞ்சம் மாற்றி பாடல்களின் கவிஞரும் யார் என்று தெரியவில்லை. இந்நாட்களில் இதுபோன்ற பாடல்கள் மிகக் குறைவு..!

Monday, June 12, 2006 2:20:00 AM

Dharumi said...
இசையோடு கேட்கும் போது இந்த அழகிய வரிகள் எல்லாமே 'அமுங்கி'ப் போகின்றனவே...

Monday, June 12, 2006 3:00:00 AM

johan -paris said...
சமீபத்தில் வந்த பாடல்களில் ;இசை;எழுத்து;குரல் ஒருங்கேயமைந்த அழகிய பாடலொன்று;இப்பாடல் நம் தமிழ் இரசிகர்கள்;நல்லதை விரும்புகிறார்கள்;குத்துப் பாடலல்ல!!!!!:என்பதன் எடுத்துக்காட்டு.
"கறுப்பு வெள்ளைப் பூக்களுண்டா,,,,உன் கண்களில் நான் கண்டேன்." அழகான உதாரணம்;இந்நிறக்கூட்டில் இயற்கையில் பூக்கள் இருப்பதாகத் தெரியவில்லை;;;இசையில் சைக்சோபோன் மிக அருமையாக "தன்னத் தானா" போடவைத்த ஹரிஸ் ஜெயராஸை எவ்வளவும் பாராட்டலாம். இன்னும் இரண்டு சரணம் சேர்த்திருக்கக் கூடாதாவெனும் ,ஆசையையேர்ப்படுத்தியது.இதனை நா.முத்துக்குமார் எழுதியிருக்கலாம். என் அபிமான தமிழிசை வித்தகி பம்பாய் ஜெயசிரியின் குரல் மிக அருமை.
ஒட்டுமொத்தம் ,நல்ல பாடலைத் தந்ததற்கு நன்றி!!!
வால் செய்தி! பம்பாய் ஜெயசிரி ;நவம்பர் 2006; 5வது தடவையாக பிரான்சிற்கு!பாரிஸ் மாநகரசபை சார்பில் இசை விருந்தளிக்கவருகிறார். பிரான்சியர்கள் பலர் நம் இசையை வெகுவாக ரசிக்கிறார்கள்
யோகன் பாரிஸ்

Monday, June 12, 2006 3:59:00 AM

G.Ragavan said...
நல்ல பாடல். பாடல் முத்துக்குமார். ஒற்று மிக வேண்டும். ஆனால் பாட்டில் மிகவில்லை.

கண்விழித்துச் சொப்பனம் கண்டேன் என்று வந்திருக்க வேண்டும். ஆங்காங்கு இலக்கணப் பிழைகள்.

Monday, June 12, 2006 6:11:00 AM

குமரன் (Kumaran) said...
வருகைக்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி நன்மனம்.

Monday, June 12, 2006 6:13:00 AM

குமரன் (Kumaran) said...
ஆமாம் வெளிகண்டநாதர். நீங்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் பத்திக் கேட்டவுடனே நினைவிற்கு வந்தது இந்தப் பாட்டு தான். :-)

இந்த வார தமிழ்மண விண்மீனாய் ஆனதற்கு இன்னொரு முறை என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, June 12, 2006 6:15:00 AM

குமரன் (Kumaran) said...
அனானிமஸ் அன்பரே. சில இடங்களில் க், ச், த் போன்ற ஒற்றெழுத்துகள் மிக வேண்டும் தமிழ் இலக்கணப்படி. பாடலை எழுதியவர் அப்படித் தான் எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன். ஆனால் பாடியவர்கள் சில இடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்தும் சில இடங்களில் மிகாமலும் பாடியிருக்கிறார்கள். அதனைச் சொல்லத் தான் இங்கு வரிவடிவில் தரும் போது அவர்கள் எப்படிப் பாடுகிறார்களோ (இல்லை எனக்கு எப்படி கேட்டதோ) அதே மாதிரி தந்திருக்கிறேன்.

ஒற்று என்றவுடன் ஒற்றறிதல் பற்றி நினைத்துக் கொண்டீர்களோ? அதைப் பற்றி இங்கு சொல்லவில்லை. :-)

Monday, June 12, 2006 6:17:00 AM

குமரன் (Kumaran) said...
உண்மை. தகவல்களுக்கு நன்றி. யாராவது உறுதிபட இந்தப் பாடலை எழுதியவர் இந்தக் கவிஞரே என்று சொன்னால் பதிவிலும் அதனை இடுகிறேன்.

காக்க காக்க படத்தில் வரும் இந்த இரு பாடல்களும் எனக்கும் பிடிக்கும் உண்மை. இனி வரும் நாட்களில் இங்கே தர முயல்கிறேன்.

Monday, June 12, 2006 6:19:00 AM

குமரன் (Kumaran) said...
இல்லீங்களே தருமி ஐயா. இந்தப் பாடலில் வரிகள் தெளிவாகத் தான் கேட்கின்றன. நீங்கள் சொல்வதைப் போல பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன். பொதுவாக இந்தக் காலப் பாடல்கள் பெரும்பாலும் நீங்க சொல்றமாதிரி தான் இருக்கின்றன. ஆனால் இந்தப் பாடலின் வரிகள் இசையில் அவ்வளவாய் அமுங்கிப் போனதாய் தெரியவில்லை.

Monday, June 12, 2006 6:21:00 AM

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. குத்துப் பாடல்கள் என்றால் உடனே ஹிட் தான். இந்த மாதிரிப் பாடல்கள் கொஞ்சம் நாள் எடுக்கும். பின்னர் எல்லோரும் கேட்பார்கள். இளைய தலைமுறையினர் இந்த மாதிரிப் பாடல்களை ரசித்தாலும் குத்துப் பாடல்கள் தான் அவர்களிடம் முதலிடம் பெறுகின்றன என்பது மறுக்க முடியாதது. இந்த மாதிரிப் பாடல்களுக்கும் குத்துப் பாடல்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு - இந்த மாதிரிப் பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும் வலிமை உடையவை; குத்துப் பாடல்கள் நிற்பது அடுத்தப் படத்தில் அதே மாதிரி இன்னொரு பாடல் வரும்வரையே.

Monday, June 12, 2006 6:24:00 AM

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்வரிகள் தான் இந்தப் பாடலின் உச்சகட்டமான வரிகள் என்று நினைக்கிறேன். நானும் இயற்கையில் கருப்பு வெள்ளை நிறங்களில் மலர்களைப் பார்த்ததில்லை (இல்லை என்று நம்புவது எளிமையாக இல்லை. கட்டாயம் கருப்பு வெள்ளை மலர்கள் இருக்கும். ஆனால் பார்த்ததில்லை). கண்களை மலர்கள் என்று உவமிப்பது காலம் காலமாக வருவது தான். ஆனால் அதனை கருப்பு வெள்ளைப் பூக்கள் என்றும் கண்மணியை வண்டென்று உருவகித்து வண்டை உண்ணும் பூக்கள் என்றும் சொல்வது புதுமையான கற்பனை. நான் ஒவ்வொரு முறையும் மிக ரசிக்கும் வரிகள்.

மழை அழகா வெயில் அழகா என்பதனைத் தொடர்ந்து வரும் வரிகள் நான் ரசிப்பது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பல நல்ல பாடல்கள் வந்திருக்கின்றன. நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் இரண்டு சரணங்கள் சேர்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது. :-)

Monday, June 12, 2006 6:29:00 AM

குமரன் (Kumaran) said...
பாடல் முத்துகுமார் எழுதியது என்று உறுதியாகத் தெரியுமா இராகவன். அப்படியென்றால் பதிவிலும் அதனைப் போட்டுவிடுகிறேன். சொல்லுங்கள்.

கவிஞர் எழுதிக் கொடுத்ததில் ஒற்று மிகுந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் பாடியவர்கள் ஒற்று மிகாமல் சில இடங்களில் பாடியிருக்கிறார்கள். ஒற்று அரை மாத்திரை என்பதால் அதனைக் குறைத்து உச்சரித்து அது கால் மாத்திரை அளவே உச்சரிக்கப்பட்டு எனக்குக் கேட்காமல் போய்விட்டதா என்று தெரியவில்லை.

தங்கள் கவிதைகள அரங்கேற்றும் கவிஞர்கள் பலர் ஒற்றுக்களை உச்சரிக்கும் போது அரை மாத்திரை அளவையும் தாண்டி ஒரு மாத்திரை, இரு மாத்திரை அளவு உச்சரிப்பார்களே. அது போல் ஆனால் அதற்கு எதிர்ப்பதமாக இந்தப் பாடலைப் பாடிய வித்தகர்கள் கால் மாத்திரை அளவே உச்சரித்திருப்பார்களோ? :-)

ஒற்று குறைவதைத் தவிர்த்து வேறு எதாவது இலக்கணக் குறை இந்தப் பாடலில் தெரிகிறதா இராகவன்? சொற்குற்றமா? பொருட்குற்றமா? கவிஞர் நெற்றிக் கண்ணைத் திறப்பவர் இல்லை. நாமும் நக்கீரர்கள் இல்லை. அதனால் தைரியமாகச் சொல்லலாம். :-)

Monday, June 12, 2006 6:34:00 AM

இராம் said...
ததா அந்த பாட்டு கவிஞர் தாமரை எழுதினாது....! எனக்கு பிடித்த வரிகள்

தீயிம் இன்றி திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன் உன்னால்..

Monday, June 12, 2006 9:07:00 AM

தி. ரா. ச.(T.R.C.) said...
உறுதியாக, இறுதியாக பாடலை எழுதியது திரு.நா. முத்துக்குமார்தான்.நீங்கள் போட்ட இரண்டு பாட்டும் கர்னாடக இசையை மயமாகக்கொண்டதால்தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அப்படி கொஞ்சம் கொஞ்சமாக என்வழிக்கு வருகிறீர்கள்.தி.ரா.ச

Monday, June 12, 2006 9:23:00 AM

தி. ரா. ச.(T.R.C.) said...
உறுதியாக, இறுதியாக பாடலை எழுதியது திரு.நா. முத்துக்குமார்தான்.நீங்கள் போட்ட இரண்டு பாட்டும் கர்னாடக இசையை மயமாகக்கொண்டதால்தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அப்படி கொஞ்சம் கொஞ்சமாக என்வழிக்கு வருகிறீர்கள்.தி.ரா.ச

Monday, June 12, 2006 9:24:00 AM

பொன்ஸ்~~Poorna said...
வல்லினம் மெல்லினம் ஒற்று விளக்கம் சரி தான்..

//தூக்கத்தில் உளரல் கொண்டேன்//
இதுல கூட வல்லின உளறல் வராதா?

அப்புறம் இதை விட எனக்கு "ஒரு மாலை இள வெயில்" பிடிக்கும்.. அந்தச் சமயத்தில் FM, டீவி எல்லாத்திலயும் இதே பாட்டைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலர்ஜியே ஆகிவிட்டது!!!

Monday, June 12, 2006 9:37:00 AM

குமரன் (Kumaran) said...
ராம். நீங்க இந்தப் பாட்டு கவிஞர் தாமரை எழுதுனதுன்னு சொல்றீங்க. உறுதியா சொல்ல முடியுமா? இந்தப் படத்தின் குறுந்தகடிலோ வேறெதாவதிலோ இதனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்களா?

உங்களுக்குப் பிடித்த வரிகள் எனக்கும் பிடிக்கும். ஆனால் அந்த வரிகளில் சொல்லப்பட்டக் கருத்தினை இதற்கு முன் எத்தனையோ கவிஞர்கள் பாடிவிட்டார்கள். அதனால் புதுமையானக் கருத்துகளை மட்டுமே இங்கே எடுத்துக் காட்டினேன்.

ததாவா? ஓ நீங்களும் மதுரையா? வீட்டுப்பெயர் என்ன?

Monday, June 12, 2006 9:43:00 AM

குமரன் (Kumaran) said...
திராச. உறுதியாக இறுதியாக இந்தப் பாடலை எழுதியது நா.முத்துக்குமார் என்று நீங்கள் சொல்லிவிட்டதால் பதிவிலும் அப்படியே போட்டுவிடுகிறேன்.

நான் போட்ட இரண்டு பாட்டுன்னு எந்தப்பாட்டுக்களைச் சொல்கிறீர்கள் தி.ரா.ச.?

கர்நாடக இசை அடிப்படையில் இருக்கும் பாடல்கள் எனக்குப் பிடிப்பதில் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை தி.ரா.ச. இனிமையான பாடல்கள் கர்நாடக இசையின் அடிப்படையில் அமைவதிலும் ஆச்சரியம் இல்லை. :-)

என்று நான் உங்கள் வழியை விட்டுச் சென்றேன்; கொஞ்சம் கொஞ்சமாக இப்போது உங்கள் வழிக்கு வர? :-)

Monday, June 12, 2006 9:46:00 AM

குமரன் (Kumaran) said...
சரியாப் புடிச்சீங்க பொன்ஸ். இந்த உளரல்ன்னு எழுதிட்டு எதோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ளகரமா லகரமான்னு சிந்தித்தேனே ஒழிய ரகரத்தைப் பத்திக் கவலைப்படலை. ஏதோ உளறியிருக்கான் என்று விட்டுச்செல்லாமல் எடுத்துச் சொன்னதற்கு நன்றி. :-)

ஒரு மாலை இளவெயில் நேரம் பாடலும் பிடிக்கும் பொன்ஸ். விரைவில் போடுகிறேன். நிறைய பேர் சுட்டும் விழிச்சுடரே பாட்டுக்கு வரிவடிவம் வேண்டும் என்று கேட்டதால் அதனை முதலில் இட்டேன்.

Monday, June 12, 2006 9:49:00 AM

Karthik Jayanth said...
:-)

Sunday, June 18, 2006 8:05:00 PM

செந்தூரன் சிதம்பரநாதன் said...
அருமையான பாடல். நன்றி. இந்தப் பாடலைப் எழுதியது நா.முத்துக்குமார். இது மட்டுமல்லாமல், " காதல் வளர்த்தேன்" நினைத்து நினைத்துப் பார்த்தேன்" " உனக்கென இருப்பேன்" " எனக்கு பிடித்த பாடல்" "தேவதையைக் கண்டேன்" போன்ற பாடல்களையும் எழுதியது நா. முத்துக்குமார்.

"உயிரின் உயிரே" பாடலை எழுதியது கவிஞர் தாமரை. "காக்க காக்க, வேட்டையாடு விளையாடு" "பச்சைக்கிளி முத்துச்சரம்" படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியது கவிஞர் தாமரை.

Thursday, February 01, 2007 4:44:00 PM