Friday, April 04, 2008

உன்னி

வீட்டு நாயோ தெரு நாயோ, அவைகளை உன்னிகள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அவைகள் சொறிவதைப் பார்த்தால் நமக்கே அரிப்பெடுக்கும். அவற்றின் தோலோடு ஒட்டிக்கொண்டு மெல்லிய இரத்த நாளங்களைக் கடித்துத் திறந்து, அங்கே பெருகும் குருதியைச் சுவைத்து உண்ணும் அந்த உயிரியை உண்ணி என்றல்லவா அழைக்க வேண்டும்? மாறாக உன்னி என்பது எதற்காக?

"இல்லை. அது உன்னியல்ல. உண்ணி என்பதுதான் சரி. அதுமட்டுமல்லாமல் ஒட்டுண்ணி சாறுண்ணி என்றெல்லாம் கேட்டதில்லையா? இது ஒட்டுண்ணிதான். அதிலுள்ள உண்ணிதான் தனியாக வந்து பெயராகி உள்ளது." இப்படியெல்லாம் விளக்கம் தரலாம். ஆனால் அது உண்மையல்ல. உன்னி என்பதுதான் சரி.

நாய்களை மட்டுமல்ல மனிதர்களையும் மாடுகளையும் கூட உன்னிகள் வருத்துவதுண்டு. மனிதர்களை வருத்தும் உன்னிகளுக்கு வேறு பெயர் உண்டு. அது பேன். நம் தலையில் ஒளிந்து கொண்டு வாழ்க்கை நடத்தும் அவைகளும் உன்னிகள்தான். அப்படியானால் உன்னி என்று இவைகளை ஏன் அழைக்கிறோம்? உன்னி என்பதற்கு சின்ன அல்லது சிறிய என்று பொருள். உருவில் சிறியாதாக இருந்து பெரிதாக துன்பந்தரும் இவைகளை உன்னி என்று சொல்வதில் என்ன தவறிருக்கிறது?

அதெல்லாம் கிடக்கட்டும். உண்ணி கிருஷ்ணனைத் தெரியுமா? உண்ணி மேனனைத் தெரியுமா? இப்படி எழுதினால் தின்கிற கிருஷ்ணன் என்றும் தின்கிற மேனன் என்று பொருள். இப்படி எழுதுவது பிழை. உன்னி கிருஷ்ணன் என்றும் உன்னி மேனன் என்றுந்தான் எழுத வேண்டும். உன்னி கிருஷ்ணன் என்றால் சின்னக் கிருஷ்ணன். உன்னி மேனன் என்றால் சின்ன மேனன். திவ்யா உன்னி என்றால் திவ்யா குட்டி. என்னதான் சொல்லுங்கள். உன்னி கிருஷ்ணன், வெண்ணெய் திருடி உண்ணி கிருஷ்ணன் என்று சொல்வதுதானே மனதிற்குப் பிடிக்கிறது. உன்னிக்குப் பொருள் என்னவென்று கேரளக் குட்டிகளைக் கேட்கு!

அன்புடன்,
கோ.இராகவன்

***

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் இராகவனால் 30 மே 2006 அன்று இடப்பட்டது.

2 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் இராகவனால் 30 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

25 கருத்துக்கள்:

Anonymous said...
kalakitteenga ponga

May 30, 2006 9:07 AM

பொன்ஸ்~~Poorna said...
ஏங்க ராகவன், இது தமிழா மலையாளமா?

May 30, 2006 9:10 AM

Agent 8860336 ஞான்ஸ் said...
//உன்னி மேனன் என்றால் சின்ன மேனன். திவ்யா உன்னி என்றால் திவ்யா குட்டி. //

திவ்யா குட்டி, வளாந்து பெரிய ஆளானப்புறம் கூட குட்டி தானா?
திவ்யா பாட்டி இல்லியா?!

திவ்யாவோட பேரப்பிள்ளங்க திவ்யா குட்டிய திவ்யா குட்டி பாட்டின்னு கூப்டனுமா?!

//உன்னிக்குப் பொருள் என்னவென்று கேரளக் குட்டிகளைக் கேட்கு!//

இங்கே கேரள உன்னிகளைக் கேள்க்கு என்றல்லவோ வரவேண்டும்!

ஒரே குஜாலா இருக்கு!

;-)

May 30, 2006 9:19 AM

கால்கரி சிவா said...
ஜிரா, நீங்களும் நாயே பிடிச்சிட்டீங்களா? பாவம் அதை விடுங்கையா

May 30, 2006 10:14 AM

வெற்றி said...
இராகவன்,
ஈழத்தில் உண்ணி என்ற சொல்லைத்தான் புழங்குவோம். ஈழத்தில் உன்னி என்ற சொல்லே புழக்கத்தில் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.யாராவது ஈழத்தவர்கள் இதை உறுதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

//அவற்றின் தோலோடு ஒட்டிக்கொண்டு மெல்லிய இரத்த நாளங்களைக் கடித்துத் திறந்து, அங்கே பெருகும் குருதியைச் சுவைத்து உண்ணும் அந்த உயிரியை உண்ணி என்றல்லவா அழைக்க வேண்டும்? //

சிலவேளைகளில் இக்காரணத்தால்தான் ஈழத்தில் உண்ணி என்ற சொல்லைப் புழங்குகிறார்களோ தெரியாது.

நன்றி.

அன்புடன்,
வெற்றி

May 30, 2006 10:16 AM

தேசாந்திரி said...
உன்னிப்பாக கவனிப்பது என்பது என்ன பொருளில் வரும்? கூர்ந்து கவனித்தலா அல்லது சிறிய பொருட்களைக் கூட கவனித்தலா?

May 30, 2006 11:01 AM

வெற்றி said...
தேசாந்திரி,
என் தமிழறிவுக்கு எட்டியவரை, உன்னிப்பாக என்பதன் பொருள் கூர்ந்து எனும் சொல்லுக்கு இணையானதென்றே நினைக்கிறேன்.
உன்னிப்பாக என்பது carefully எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்.
எடுத்துக்காட்டுகள்:
1.Listen Carefully
உன்னிப்பாகக் கேள்
2.watch carefully
உன்னிப்பாகக் கவனி

May 30, 2006 12:13 PM

Suka said...
ஸ் ஆ .. ராகவன் தெரியாம இத க்ளிக் பண்ணீட்டேன் .. :-) மன்னிச்சுகோங்க..

May 30, 2006 2:08 PM

Suka said...
ஓ.. சாரி இது 'சொல் ஒரு சொல்' பதிவா... ஆன்மீகத்துப் பதிவுல ஏன் இப்பிடின்னு குழம்பிக்கிட்டேன். :)

May 30, 2006 2:10 PM

இலவசக்கொத்தனார் said...
உன்னி என்ற வார்த்தைக்கு ஒரு இலக்கிய இ.சு.பொ. போடுங்களேன்.

May 30, 2006 3:51 PM

குறும்பன் said...
உன்னி உண்ணினால் உன்னியாகா.
:-)

May 30, 2006 9:34 PM

சிவமுருகன் said...
உன்னிப்பா பார்த்து படிச்சதுக்கப்புரம் தான் உன்னிக்கும் உண்ணிக்கும் வித்யாசம் தெரிந்தது.

நல்ல விளக்கம்.

May 31, 2006 6:30 AM

johan -paris said...
ஈழத்தில் இதை உண்ணி என்றே! கூறுவோம்; இது அடுத்த உயிர்களின் இரத்தத்தை உண்பதால்; இதுவே பொருத்தமாக உள்ளது.
உன்னிப்பு என்பது; கூர்மை ;தெளிவு என்ற கருத்தில் பாவனையில் உள்ள சொல்!!!
உன்னி கிருஸ்ணன்; உன்னி மேனன் - என்பது மலயாளப் பேர்கள்; அதை இதனுடன் குழப்பவேண்டிய அவசியமில்லை.
யோகன் பாரிஸ்

May 31, 2006 8:08 AM

குமரன் (Kumaran) said...
இராகவன். நீங்களுமா நாய்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று முதல் வரியைப் பார்த்தவுடன் சற்றே அரண்டு போனேன். ;-) தொடர்ந்து படித்தப் பின் தான் அப்பாடா என்று இருந்தது. :-)

'உண்ணி என்பது தவறு; உன்னி என்பதே சரி - அப்படியென்றால் சின்ன, சிறிய என்று பொருள்' என்று சொல்கிறீர்கள். சரி. ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. ஆனால் எடுத்துக்காட்டுகள் எல்லாமே மலையாளத்தில் அல்லவா இருக்கின்றன. தமிழில் எந்த எடுத்துக்காட்டுகளும் இல்லையா? மலையாளத்தில் புழங்கும் அதே பொருள் தான் இந்த சொல்லுக்குத் தமிழில் என்றால் தட்டில்லை. ஆனால் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருந்தால் கேள்வி எழாது. :-)

May 31, 2006 3:50 PM

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். இ.சு.பொ. என்றால் என்ன?

May 31, 2006 3:52 PM

குமரன் (Kumaran) said...
'ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
'

கோதை நாச்சியார் சொல்லும் உன்னித்து என்ற சொல்லுக்கு என்ன பொருள்? சிறிய, கூர்ந்து நோக்கும் இரண்டும் சரியாகப் படவில்லையே?

May 31, 2006 3:56 PM

Suka said...
இ.சு.பொ..
இடம் சுட்டி பொருள்விளக்கம் தருக ..

தமிழ் வினாத்தாளின் ஒரு கடி கேள்வி :)

May 31, 2006 4:26 PM

neo said...
உன்னி என்றால் குதிரை என்ர பொருளும் உள்ளது.

குமரன் குறிப்பிடும் இடத்தில் 'உன்னித்து' என்றால் 'தியானித்து' 'நினைத்து' என்று பொருள் வரக்கூடுமோ?

பார்க்க (அகராதிகளின் தொடுப்புகள் ):

http://www.pudhucherry.com/pages/dic.html

"உன்னி" என்று உள்ளிட்டு பொருள் தேடவும்.

May 31, 2006 4:33 PM

குறும்பன் said...
இதை தான் தேடிக்கொண்டிருந்தேன். அகராதிக்கு நன்றி நியோ.

June 02, 2006 9:53 PM

வெற்றி said...
நியோ அய்யா,
அகராதிச் சுட்டிக்கு நன்றிகள். அருமையான தளம். என் போன்ற தமிழறிவு குறைந்தவர்க்கு மிகவும் பயனுள்ள தளம். நியோ , மீண்டும் நன்றிகள்.

இராகவன்,
நியோ அய்யா தந்த சுட்டிகளில் உள்ள அகராதிகளில் உன்னி எனும் சொல்லிற்கான பொருளில் சின்ன அல்லது சிறிய என்ற பொருள் குறிப்பிடப்படவில்லையே?

June 03, 2006 10:50 AM

G.Ragavan said...
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. மன்னிக்கவும் சரியாகக் கவனிக்காததால் ஒழுங்காகக் கருத்துச் சொல்ல முடியவில்லை.

உன்னி என்ற சொல்லும் உண்ணி என்ற சொல்லும் தமிழே. உண்ணி என்பது எதையும் தின்பது. உன்னி என்பது எதிலும் சிறுத்தது. இன்றைக்கு வழுதுணங்காய் என்று தமிழில் சொல்லாலததால் அது தமிழில்லாமல் போகாது. ஆனால் மலையாளத்தில் இன்றைக்கும் வழுதுணங்காய்தான். அது போல சில பழைய தமிழ்ச்சொற்கள் மலையாளத்தில் பயின்று வரும். கொட்டாரம் என்று கூட ஒரு சொல். வட்டாரத்தை நாமும் கொட்டாரத்தை அவர்களும் பிரித்துக் கொண்டோம்.

June 03, 2006 11:40 PM

G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
'ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
'

கோதை நாச்சியார் சொல்லும் உன்னித்து என்ற சொல்லுக்கு என்ன பொருள்? சிறிய, கூர்ந்து நோக்கும் இரண்டும் சரியாகப் படவில்லையே? //

:-)) இதுக்குதான் சின்னப் பசங்க இந்த மாதிரிப் பாட்டெல்லாம் படிக்கக் கூடாதுன்னு சொல்றது.

உன்னித்து எழுந்த - கூர்ந்து எழுந்தன்னு பொருள் கொள்ளனும். பரந்தாமனுக்கு என்றதும் பெருமிதத்தில் விம்மிப் புடைத்து நிமிர்ந்த முலைகள் முனையில் கூர்ந்து இருக்கும். இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்.

உன்னிப்பு என்றால் என்ன? கூர்ந்து பார்த்தல். ஏன் உன்னிப்பாக பார்க்க வேண்டும். அது கூர்ந்து (சிறியதாக) இருப்பதால். ஊசி முனை கூர்ந்தது. அதை உன்னிப்பாகப் பார்த்தால்தானே தெரிகிறது. அப்படிப் பண்பாகு பெயராக எழுந்ததுதான் உன்னி.

June 03, 2006 11:47 PM

G.Ragavan said...
// //அவற்றின் தோலோடு ஒட்டிக்கொண்டு மெல்லிய இரத்த நாளங்களைக் கடித்துத் திறந்து, அங்கே பெருகும் குருதியைச் சுவைத்து உண்ணும் அந்த உயிரியை உண்ணி என்றல்லவா அழைக்க வேண்டும்? //

சிலவேளைகளில் இக்காரணத்தால்தான் ஈழத்தில் உண்ணி என்ற சொல்லைப் புழங்குகிறார்களோ தெரியாது.

நன்றி.

அன்புடன்,
வெற்றி //

இருக்கலாம் வெற்றி. தமிழில் சிலபல சொற்கள் தங்களின் எழுத்துரு சிதையக் கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை. பவழம் என்ற சொல் இன்று பல இடங்களில் பவளம் என்றே எழுதக் கொள்ளப் படுகின்றன. கறுப்பு என்று எழுதவும் காண்கிறோம்.

June 03, 2006 11:51 PM

neo said...
வெற்றி, குறும்பன் - நன்றி :)

'உன்னி' என்பதன் வேர்ச்சொல்/அண்மைச் சொற்களைத் தொகுத்துப் பார்த்தால் - இதன் பொருள் விளங்கக் கூடும்.

Tamil Lexicon - University of Madras - Vol - I (1982 edition) புத்தகம் கையிலேயே கிடைத்தது. பார்த்ததில் சில சொற்கள் :

உன்னநிலை (p. 0488) [ uṉṉanilai ] n uṉṉa-nilai . < உன்னம் +. 1. (Puṟap.) Theme of invoking an uṉṉam tree for omens before a battle; போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தமறியும் புறத்துறை. (தொல். பொ. 6, உரை.) 2. See உன்னம், 7. உன்னநிலையே யுணருங்காலை (சிலப். 3, 18, உரை).

உன்னம்¹ (p. 0488) [ uṉṉam¹ ] n uṉṉam . < உன்னு¹-. [M. unnam.] 1. Thought, object, intention; கருத்து. (திவா.) 2. Contemplation; தியானம். அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த (தேவா. 847, 2). 3. Mind; மனம். (திவா.) 4. A small tree with golden flowers and small leaves which, in ancient times, was invoked for omens before warriors proceeded to battle; நிமித்தங் குறிக்கும் ஒரு மரம். (தொல். பொ. 6, உரை.)

உன்னம்² (p. 0488) [ uṉṉam² ] n uṉṉam . < உன்னு²-. 1. Kind of swan; அன்னப்பறவை வகை. (திவா.) 2. Pincers for tearing off flesh; தசைகிழிக்குங் கருவி. (W.) 3. (Nāṭya.) A gesture with one hand, in which the thumb and the little finger are kept united and the other three fingers are held upright; சிறுவிர லும் பெருவிரலும் தம்முட்கூட மற்றைமூன்றுவிரல்க ளும் விட்டுநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18.)

உன்னம் (p. 157) [ uṉṉam ] n uṉṉam . Aquatic bird; நீர்வாழ் பறவை. (நாமதீப.)

உன்னயம் (p. 0488) [ uṉṉayam ] n uṉṉayam . cf. உன்னி³. A treatise on hippology; அசுவசாத்திரநூல்களு ளொன்று. உன்னயமுதலாம் புரவிநூல் (பாரத. நாடுக. 21).

உன்னல் (p. 0488) [ uṉṉal ] n uṉṉal . < உன்னு¹-. 1. Thinking; நினைக்கை. (பிங்.) 2. Mind; மனம். (பிங்.)

உன்னயம் (p. 0488) [ uṉṉayam ] n uṉṉayam . cf. உன்னி³. A treatise on hippology; அசுவசாத்திரநூல்களு ளொன்று. உன்னயமுதலாம் புரவிநூல் (பாரத. நாடுக. 21).

உன்னி¹-த்தல் (p. 0488) [ uṉṉi¹-ttal ] 11 v. tr uṉṉi. < உன்னு¹-. To meditate, contemplate; தியானித்தல். கழல் வாழ்த்துமி னுன்னித்தே (திவ். திருவாய். 4, 6, 9).

உன்னி² (p. 0488) [ uṉṉi² ] n uṉṉi . < id. That which is fit to be meditated upon; தியானித்தற்குரிய பொ ருள். ஞால முன்னியைக் காண்டு நாங்கூரிலே (திவ். பெ ரியதி. 1, 1, 3).

உன்னி³ (p. 0488) [ uṉṉi³ ] n uṉṉi . < உன்னு²-. 1. Horse; குதிரை. உன்னிவாய்ப் பொன் கறித்திட (இரகு. நகர. 51). 2. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மூ. அ.) 3. Indian lantana, 1. sh., Lantana indica; செடி வகை. (L.)

உன்னிப்பு (p. 0489) [ uṉṉippu ] n uṉṉi-ppu . < உன்னி¹-. 1. Intentness; கவனிப்பு. அவன் உன்னிப்பாய்க்கேட்கி றான். 2. Acuteness of mind, discernment; புத் திக்கூர்மை. (W.) 3. Guess; ஊகிப்பு. 4. Un erring sign by which a place or person is known; குறிப்பு. இருட்டிலும் உன்னிப்பாக எடுத்து விட்டான். (W.) 5. Exertion, effort; முயற்சி. (W.) 6. cf. un-nata. Height; உயரம். உன்னிப் பான மலை.. 7. Dignity; கௌரவம். உன்னிப்பான பேச்சு. (W.)

உன்னியம் (p. 0489) [ uṉṉiyam ] n uṉṉiyam . prob. derived by wrongly splitting anyōnya into anya + unya. That which is ours, on our side; சொந்தம். (W.)

இணையத்திலும், அகரமுதலிப் புத்தக வெளியீட்டில் உள்ள சொற்கள் அதே வகையில் தேடக் கிடைக்கின்றன.

'உன்னி' என்பதற்கு நம் இலக்கியங்களிலும் பெரும்பாலும், நினைத்து, கருதி, தியானித்து என்ற பொருள் குறித்துப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மேலே சொற்களுக்கான பொருள் விளக்கங்களில்,

* சென்னைப் பல்கலை வெளியிட்ட தமிழ் அகரமுதலியில் - அந்தக் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருள் உள்ள பக்க எண்

* அடைப்புக்குறிக்குள் அந்தச் சொல் கையாளப்பட்டுள்ள நூற் பெயர்(கள்) போன்றவை தரப்பட்டுள்ளன. சான்றாக, 'தொல்' - தொல்காப்பியம், 'திவ்' - திவ்வியப் பிரபந்தம் போன்று.

June 05, 2006 1:18 PM

Elango Ramanujam said...

அய்யா, உண்ணி என்ற மலையாளச் சொல் வெண்ணெய் உண்ட குருவாயூரப்பனைக் குறிக்கும் என்பதை அறிக. இதன்றி விவாதம் விடுக.