Saturday, June 01, 2013

திருப்பாவை அறிமுகம் - 3

ஆடி மாதம். நந்தவனத்தில் ஒரு சிறு குடிசை இருக்கிறது. ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்னும் முதுமொழிக்கேற்ப அடிக்கும் காற்றில் நந்தவனத்தில் இருக்கும் பூச்செடிகளும் கொடிகளும் சிறு மரங்களும் தத்தளிக்கின்றன. இது நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சியாயினும் இந்த அதிகாலை நேரத்தில் சித்திரை மாதம் போல் அதிக வெப்பமும் இல்லாமல் மார்கழி மாதம் போல் குளிரும் இல்லாமல் காற்று மிதமான வெப்பத்தோடு வீசுகிறது. இந்த இனிமையான சூழலில் அந்த நந்தவனத்தின் நடுவில் இருக்கும் குடிலில் இருந்து நறுமணங்கள் வருகின்றன. இனிமையான குரலில் இறைவனை வழுத்தும் பாடல்களும் கேட்கின்றன. உள்ளே பார்த்தால் விஷ்ணுசித்தர் இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்.

ச்ரிவில்லிபுத்தூரில் இருக்கும் வடபெரும் கோயிலுடையானின் திருக்கோயிலுக்கு மலர்மாலை கட்டித் தரும் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் விஷ்ணுசித்தர். பூமாலையோடு பாமாலையும் தொடுத்து இறைவனை வழிபடுபவர். பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்து அவனால் பட்டர் பிரான் என்று அழைக்கப்பட்டவர். இறைவன் மேல் அவருக்கு இருக்கும் பரிவைப் பார்த்து இறைவனாலேயே பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்டவர்.

இன்று பூர நட்சத்திரம். இறைவன் திருப்பணிக்காக மலர்களை கொய்வதற்காக பெரியாழ்வார் நந்தவனத்திற்கு வருகிறார். மலர்களைக் கொய்யும் போது அழகிய தமிழ்ப்பாமாலைகளையும் பாடிக்கொண்டிருக்கிறார்.

எல்லா வகையான பூக்களும் அந்த நந்தவனத்தில் வளர்கின்றன. கறு நிற பூக்களைக் கண்டபோது கார்மேக வண்ணனின் உருவம் பெரியாழ்வார் எண்ணத்தில் தோன்றுகிறது. வெண்ணிறப் பூக்கள் அவன் திருமுறுவல் பூக்கும் போது தெரியும் வெண்ணிறப் பற்களை நினைவூட்டுகிறது. சிவந்த மலர்கள் அவன் கொவ்வைச் செவ்வாயைக் காட்டுகிறது. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டாடையை நினைவூட்டுகிறது. இப்படி எங்கும் எதிலும் இறைவனையே கண்டு மகிழ்ந்து பெரியாழ்வார் மலர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறார்.

திடீரென்று யாரா ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. அந்த அழுகுரல் இப்போதே பிறந்த குழந்தையின் குரல் போல மென்மையாக இனிமையாக ஒலிக்கிறது. பெரியாழ்வார் அந்த அழுகுரல் வந்த திசையை நோக்கி செல்கிறார். எங்கோ அருகில் இருந்து தான் கேட்கிறது; ஆனால் எங்கு என்று தெரியவில்லை. நன்றாய்த் தேடிப்பார்த்த போது அந்தக் குழந்தை திருத்துழாய் செடிகளின் கீழ் இருக்கிறது. பெரியாழ்வாரைக் கண்டதும் அழுகையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்து கைகால்களை ஆட்டி சிரிக்கிறது.

அந்த குழந்தையை வார் எடுத்துக்கொண்ட பெரியாழ்வார் இது யாருடைய குழந்தை என்று வியந்து சுற்றிலும் சென்று பார்க்கிறார். யாரையும் காணவில்லை. சரி இந்த குழந்தையை இப்படியே இந்த நந்தவனத்தில் விட்டுச் செல்ல முடியாது; நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம்; யாராவது தேடி வந்தால் கொடுப்போம்; இல்லை இது இறைவன் அருள் என்று கொண்டு நாமே இந்த குழந்தையை வளர்ப்போம் என்று எண்ணிக்கொண்டு பெரியாழ்வார் அந்த அழகிய பெண் குழந்தையை தன் சிறிய குடிலுக்குக் கொண்டுவந்தார்.

சிறிது நாட்கள் ஆகிவிட்டன. யாரும் குழந்தையைத் தேடி வரவில்லை. பெரியாழ்வாருக்கும் இந்த குழந்தை நமக்காக இறைவனே அருளிய குழந்தை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. இறைவனுக்காக மலர்மாலை கட்டிக் கொடுக்கும் தனக்கு இன்னொரு அழகிய மலர்மாலையைப் போல் கிடைத்த இந்தப் பெண் குழந்தைக்கு மலர்மாலை என்னும் பொருள் படும் 'கோதை' என்றப் பெயரை இட்டார்.

கோதை என்னும் அழகிய பெயருக்கு வேறு பல பொருள்களும் உண்டு. வடமொழியில் கோ என்றால் 'செல்வம், பூமி' என்ற பொருள்களும், தா என்றால் 'கொடுப்பவள், கொடுக்கப்பட்டவள்' என்ற பொருள்களும் உண்டு. அதனால் கோதை என்றால் 'அருட்செல்வத்தை, ஆன்மிகச் செல்வத்தை அருளுபவள்' என்ற பொருளும், 'பூமியால் கொடுக்கப்பட்டவள்' என்ற பொருளும் உண்டு.
கோதை பெரியாழ்வாரின் அரவணைப்பில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவருகிறாள்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே!


(2005ல் எழுதியதன் மறுபதிவு)

9 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

24 comments: சிவா said...
கதை நல்லா சொல்லறீங்க குமரன்.

November 29, 2005 5:37 AM
G.Ragavan said...
கோதை பிறந்த கதை நன்றாக வளர்கின்றது. மார்கழி வரை இந்தக் கதையைக் கொண்டு சென்று மார்கழி தொடங்கியதும் திருப்பாவை இடத் திட்டமா? இப்பொழுதே வாழ்த்துகிறேன்.

November 29, 2005 6:26 AM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவா. நீங்க நல்லா கேக்கறதால நல்லா சொல்றமாதிரி இருக்குன்னு நெனைக்கிறேன்.

November 29, 2005 9:37 AM
குமரன் (Kumaran) said...
இராகவன், Man proposes, God disposes. திருப்பாவை முன்னுரை எவ்வளவு பதிவுகள் வருகிறதோ அத்தனைப் பதிவுகள் எழுதலாம் என்று எண்ணுகிறேன். அதனால் திருப்பாவை முதல் பாடலை மார்கழி தொடங்குவதற்கு முன்னரே இடமுடியலாம். முன்னுரை இன்னும் அதிகப் பதிவுகள் எடுத்துக்கொண்டால், மார்கழி தொடங்கியபின் முதல் பாடல் வரலாம். :-)

எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பில் தான் உள்ளது. அது சரி, எப்போது நீங்கள் திருப்பாவை பாட ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

November 29, 2005 9:42 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
Kumaran,
Padikkum pothe audio vidio effect varugirathe eppadi.periyazhvar varunanai migapramatham. unmay nilayay unarthukirathu.'periyazhvar petruedutha penpillay vazhi' enpatharku vilkam koduka muduyuma
Anbudan TRC.

November 29, 2005 10:12 AM
மதுமிதா said...
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பிறந்த இடத்திற்கு சென்று வருவோம் மார்கழியிலும் மற்ற மாதங்களிலும்.

கோதை நாச்சியாரின்
'மார்கழித்திங்கள்'

காத்திருக்கிறோம் குமரா பாடுவதற்கு.

November 29, 2005 10:20 AM
குமரன் (Kumaran) said...
//Padikkum pothe audio vidio effect varugirathe eppadi//

பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி TRC சார்.

பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழி என்பதற்கு பல பொருள்கள் படித்துள்ளேன். இப்போது நினைவுக்கு வரும் இரண்டைக் கூறுகிறேன்.

பெரியாழ்வார் பெரும் பேறு பெற்று திருத்துளாய் செடியின் கீழ் எடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே என்பது ஒரு பொருள்.

பெரியாழ்வார் திருத்துழாய் வனத்தில் கோதையை கண்டெடுத்தாலும் பெற்ற மகளைவிட மேலாக வளர்த்ததனால் 'பெற்றெடுத்த' என்கிறார்கள் என்பது இன்னொரு பொருள். இந்தப் பொருளை மேலும் விளக்கமாய் அறிய நம் இராகவனின் இந்தப் பதிவைப் படிக்கலாம். அருமையாகச் சொல்லியிருப்பார் பெரியாழ்வாரின் பெற்ற மகளைப் பிரிந்த வேதனையை.

http://gragavan.blogspot.com/2005/09/blog-post.html

இது போக இன்னும் பல பொருள்களை நீங்கள் சொல்லப்போகிறீர்கள் என்று எண்ணுகிறேன். சரியா? :-)

November 29, 2005 3:29 PM
குமரன் (Kumaran) said...
காத்திருப்பதற்கு நன்றி மதுமிதா அக்கா. ச்ரிவில்லிபுத்தூர் என்ற பதத்தில் வரும் ச்ரியை எப்படி Unicodeல் எழுதுவது. நான் என்று sri தான் எழுதுகிறேன். ஆனால் உங்களுக்கு வந்தது போல் ச்ரி எனக்கு வரவில்லையே?

November 29, 2005 3:31 PM

குமரன் (Kumaran) said...

G.Ragavan said...
// எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பில் தான் உள்ளது. அது சரி, எப்போது நீங்கள் திருப்பாவை பாட ஆரம்பிக்கப் போகிறீர்கள்? //

இறையருளால் அனைத்தும் சிறப்பாக நடக்கும் குமரன்.

நான் மார்கழியில்தான் தொடங்குவேன். நாளுக்கு பா வீதம் முப்பது நாட்களுக்கு முப்பது பா. சனி ஞாயிறுகளுக்கானது வெள்ளிக்கிழமையே இடப்படும்.

November 29, 2005 11:48 PM
G.Ragavan said...
// பெரியாழ்வார் திருத்துழாய் வனத்தில் கோதையை கண்டெடுத்தாலும் பெற்ற மகளைவிட மேலாக வளர்த்ததனால் 'பெற்றெடுத்த' என்கிறார்கள் என்பது இன்னொரு பொருள். இந்தப் பொருளை மேலும் விளக்கமாய் அறிய நம் இராகவனின் இந்தப் பதிவைப் படிக்கலாம். அருமையாகச் சொல்லியிருப்பார் பெரியாழ்வாரின் பெற்ற மகளைப் பிரிந்த வேதனையை. //

கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் என்பார் கம்பர். அந்த நிலைதான் பெரியாழ்வாருக்கும். ஒன்றும் இல்லாமல் இருந்து மகள் கிடைத்து அவளும் தன்னை விட்டுப் போனால் என்னதான் செய்வார்.

மேலும் பெற்ற பாசத்திற்கு எந்தக் குறைவும் இல்லாதது வளர்த்த பாசம். பெறாததைத் தவிர அந்தக் குழந்தைக்கு அவர் செய்யாதன என்ன? ஆகையால் பெற்ற என்ற பொருள் சரியே. நான் பெண்ணைப் பெற்றவன் என்ற தலைப்புக் கொடுத்ததற்கு உண்டான கேள்வியைத்தான் trc கேட்டிருக்கிறார்.

sr என்று அடித்தாலே எனக்கு ஸ்ரீ வருகிறது குமரன். (நான் பயன்படுத்துவது கீமேன்.)

November 29, 2005 11:59 PM
குமரன் (Kumaran) said...
// நாளுக்கு பா வீதம் முப்பது நாட்களுக்கு முப்பது பா. சனி ஞாயிறுகளுக்கானது வெள்ளிக்கிழமையே இடப்படும்.
//

செஞ்சொற் பொற்கொல்லரே. ரொம்ப சுறுசுறுப்பா இருக்க வேண்டி இருக்கும். என்னால் தினமும் ஒரு பாடல் என்று இட முடியாது. நீங்கள் தவறாமல் தினம் ஒரு பாடல், வெள்ளிகிழமை மூன்று பாடல்கள் என்று இட்டுவிடுங்கள்.

November 30, 2005 9:42 AM
குமரன் (Kumaran) said...
//sr என்று அடித்தாலே எனக்கு ஸ்ரீ வருகிறது குமரன். (நான் பயன்படுத்துவது கீமேன்.)
//

கீமேன் என்றால் என்ன? எனக்கு இன்னும் sr வேலை செய்யவில்லை.

November 30, 2005 9:43 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran,
Janakar sonna 'iyam setha mama sudha' enpathrku ethanai vilakkum periyavargal kodutharkalo athanayum ithrkum porunthum TRC

November 30, 2005 10:26 AM
குமரன் (Kumaran) said...
TRC சார். ஜனகர் சொன்னதற்கு பெரியோர்கள் என்ன என்ன விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்று கொஞ்சம் சொல்லுங்களேன். முடிந்தால்.

November 30, 2005 10:28 AM
மதுமிதா said...
sr மட்டும் போட்டாலே ஸ்ரீ
வந்துவிடும் குமரன்.
sri இட வேண்டாம்.

November 30, 2005 10:40 AM
மதுமிதா said...
இயம் சீதா மம சுதா என்றால்
இந்த சீதா எனது மகள் என்று பொருள்.

November 30, 2005 10:43 AM
குமரன் (Kumaran) said...
//இயம் சீதா மம சுதா என்றால்
இந்த சீதா எனது மகள் என்று பொருள்.//

அது எனக்கு புரிந்தது அக்கா. அதற்கு பெரியோர்கள் சொல்லும் விளக்கம் என்ன என்று தான் TRC சாரிடம் கேட்டேன். உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்.

November 30, 2005 10:45 AM

குமரன் (Kumaran) said...

Anonymous said...
உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது

December 01, 2005 5:01 AM
குமரன் (Kumaran) said...
அனானிமஸ். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நானும் அவ்வப்போது அப்படி நினைப்பதுண்டு. ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. என்னால் முடிந்த அளவு போரடிக்காமல் எழுத முயல்கிறேன்.

December 01, 2005 5:43 AM
குமரன் (Kumaran) said...
TRC சார் 'முடிந்தால்' என்று சொன்னது நேரமிருந்தால் என்ற பொருளில். வேறு பொருள் வருவதை இப்போது தான் கவனித்தேன். தவறுக்கு வருந்துகிறேன்.

December 01, 2005 1:14 PM
இராமநாதன் said...
கதை அருமை..

என்னால் முடிந்தது ஒரு ப்ளஸ் குத்திவிட்டேன்.

ராகவன் சொல்லும் கீமேன் என்பது ஈ-கலப்பை தான். ஸ்ரீ - sr

December 01, 2005 4:34 PM
குமரன் (Kumaran) said...
இராமநாதன். + குத்தியதற்கும் கீமேன் பற்றி சொன்னதற்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள்.

December 02, 2005 5:26 AM
கவிநயா said...
நந்தவனமும், நறுமண மலர்களும், நடுவே ஒரு குடிலும், குடிலில் குடியிருக்கும் பக்தரும்... ஆஹா. என்ன அருமையான சூழல். கண்முன் நிறுத்தி விட்டீர்கள், குமரா.

May 18, 2008 5:14 PM
குமரன் (Kumaran) said...
படித்து மகிழ்ந்ததற்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் கவிநயா அக்கா.

May 22, 2008 9:11 AM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இறைவனுக்காக மலர்மாலை கட்டிக் கொடுக்கும் தனக்கு
இன்னொரு அழகிய மலர்மாலையைப் போல் கிடைத்த இந்தப் பெண் குழந்தைக்கு
மலர்மாலை என்னும் பொருள் படும் 'கோதை' என்றப் பெயரை இட்டார்//

பாடிக் குடுத்தாள் நற் பாமாலை - பூமாலை
சூடிக் குடுத்தாளைச் சொல்லு

Sorry, kothai is only nice; godha = not so nice:)
குஸ்தி "கோதா"வில் எறங்குறாப் போல இருக்கு:)
------

கோதைக்கு அம்மா இல்லையா?

பெரியாழ்வார் மனைவி? விட்டு சித்தர் துறவி அல்லவே?
------

"கோதை" = சேர மன்னர்களின் பட்டமும் கூட!
(பெருமாக் கோதை, சேரலர் கோதை)

பெரியாழ்வாரின் பூர்வீகம், சேர நாட்டு முன் குடுமிச் சோழிய பிராமண மரபு என்று சொல்வாரும் உளர்;

மாதேவி said...

'சூடிக்கொடுத்த மலர்கொடி" மீண்டும் பகிர்வதில் காணக்கிடைத்தது.

மகிழ்கின்றேன்.

குமரன் (Kumaran) said...

பெரியாழ்வார் மனைவியைப் பற்றி எங்கும் படித்ததாக நினைவில்லை இரவி. அதனால் தான் 2005ல் அப்படி எழுதிவிட்டேன் போல. இப்போது மறுபதிவு போடும் போது அந்த வரியைப் படித்து கொஞ்சம் நெருடியது. தவறென்றால் மாற்றி எழுதலாம்.

சோழிய = சோழ எதாவது தொடர்பு உண்டா? அப்படிப் படித்ததாகத் தான் நினைவு. சேரலத்து/கேரளத்து நம்பூதிரிகளுக்கும் முன்குடுமி சோழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

நன்றி மாதேவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பெரியாழ்வார் மனைவியின் பெயர் = விரஜை

திருப்புல்லாணி சுவாமி ரகுவீர தயாள் கட்டுரையிலும் குறிப்பார்
http://thiruppul.blogspot.com/2013_04_14_archive.html

இன்ன பிற:
http://andalanugraham.org/incarnation.htm

இன்னும் நம்பகமான தரவு வேண்டுமெனின்...
ஆழ்வார்களின் வரலாற்றை ஒரு பாகமாகச் சொல்லும் குரு பரம்பரை ஆறாயிரப் படியிலும் வரும்-ன்னு நினைக்கிறேன்; தேடிப் பார்த்து உறுதி செய்கிறேன்;

குமரன் (Kumaran) said...

நன்றி இரவி. எங்கெல்லாம் தவறு செய்திருக்கின்றேனோ அங்கெல்லாம் திருத்திவிட்டேன்.

http://koodal1.blogspot.com/2013/06/4.html