Monday, June 03, 2013

திருப்பாவை அறிமுகம் - 5 (கோதையின் கதை)

வாங்கய்யா. வாங்கம்மா. வணக்கம். என் பேரு ரங்கனுங்க. ஐயா வீட்டுல தோட்டக்காரனா இருக்கேனுங்க. ஐயாகிட்ட தோட்டம் எங்க இருக்குன்னு கேக்கிறீங்களா? அதாங்க பூத்தோட்டம். ஐயா தெனமும் பூ பறிச்சு சாமிக்கு மாலை கட்டி குடுப்பாருங்க. அது ஒரு 20 வருசமா நடக்குதுங்க. ராசா கேட்ட கேள்விக்கெல்லாம் ஐயா ரொம்ப நல்லா பதில் சொல்லி பாண்டிய ராசா அவருக்கு பட்டமெல்லாம் குடுத்து பட்டத்து யானை மேல உக்காரவச்சு ஊர்வலம் வந்தாருங்களே. அப்போ நானும் அங்க இருந்தேனுங்க. அப்ப எனக்கு சின்ன வயசு. ஐயா பெருமையப் பத்தி பெரிய பெரிய புலவருங்க எல்லாம் பாடுனாங்க. எனக்கு ஒன்னும் புரியலங்க. ஆனால் அவரப் பாக்குறதுக்காக கருடன்ல ஏறி சாமியே வந்துச்சு பாருங்க; அப்பத்தான் எனக்கு அவரோட மகிமை புரிஞ்சதுங்க. இருந்தா இவர் கூட இருக்கணும்ன்னு தோணிச்சுங்க.

பல்லக்குல ஊருக்கு ஐயா திரும்பி வர்ரப்ப நானும் ஒரு பல்லக்கு தூக்கியா சேந்துக்கிட்டேங்க. ஊருபக்கமா வந்த பொறகு ஐயாகிட்ட என் ஆசைய சொல்லி அவர்கிட்ட வேலைக்காரனா சேந்துக்கறேன்னு சொன்னேங்க. ஐயா எனக்கு வேலக்காரனெல்லாம் வேணாம்ன்னுட்டாருங்க. கெஞ்சி கூத்தாடி அவர்கிட்ட வேலைக்கு சேர்றது பெரும்பாடாப் போச்சுங்க. தோட்ட வேலை தெரியும்ன்னு சொன்ன பொறகு அரைமனசோட தோட்டக்காரன் வேலை குடுத்தாருங்க. தோட்டத்துலயே ஒரு ஓரமா ஒரு குடிசையப் போட்டுக்கிட்டு சந்தோஷமா ஐயாகிட்ட வேலைப்பாத்துகிட்டு இருக்கேங்க.

கோதையம்மாவை ஐயா தொளசி செடிக்குக்கீழ கண்டெடுக்கறப்ப நானும் கூட இருந்தேங்க. குழந்த என்னா அழகுங்கறீங்க. அன்னைக்கு ஐயாவைப் பாக்க கருடன்ல ஏறி சாமி வந்துச்சு பாருங்க. அந்த சாமி கண்ணன் சாமின்னு சொன்னாங்க. எனக்கு எங்கேங்க அதெல்லாம் புரியப்போகுது. ஆனா அந்த சாமி ரொம்ப அழகா இருந்துச்சுங்க. எப்பவும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருந்திச்சுங்க. கோதையம்மாவை குழந்தையா பாத்தவுடனே எனக்கு சாமி ஞாபகம் தான் வந்துச்சுங்க. அவ்வளவு அழகு. ஒரு பொம்பளை சாமியாட்டம் அவ்வளவு அழகு. கருடன்ல வந்துச்சே அந்த கண்ணன் சாமிக்கேத்த அழகு.

ஐயா அந்தக் குழந்தைய எடுத்துகிட்டு போயி பெத்த புள்ளைய விட நல்லா வளத்துக்கிட்டு வர்றது தான் உங்களுக்கு தெரியுங்களே. நீங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதுங்களா? இப்ப போயி வந்திருக்கீங்க. ஐயா கொஞ்ச நாளா ஏதோ கவலையில இருக்கிற மாதிரி தெரியுதுங்க. இன்னைக்கு ஐயாக்கு என்ன கவலைன்னு கேக்கலாம்னு இருக்கேன். நீங்களும் கூட இருந்து ஐயா கவலையை கேட்டு அவருக்கு ஆறுதல் சொல்றீங்களா?

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

11 comments: தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran
oru santhegam. ithil Ranganaga varuvathu kumarana? kannan, kothay and periyazhvar methu avan kodulla kathalay parkum pothu intha santhegam varugirathu.
eppadi irunthalum rangan arimugam pramatham.anban TRC

December 04, 2005 8:29 AM
குமரன் (Kumaran) said...
Dear TRC,

அப்படி இருந்தால் தான் ரொம்ப நன்றாய் இருக்குமே. அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தாதா என்ன? ஆண்டவன் பணியை விட அடியார் பணியே ஆண்டவனுக்கு உவப்பானதாமே.

ரங்கன் அறிமுகம் நீங்கள் பாராட்டும்படி இருந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி.

December 04, 2005 1:44 PM
இராமநாதன் said...
குமரன்,
எனக்கென்னவோ ரொம்ப செயற்கையா இருக்கா மாதிரி பட்டது..

இருந்தாலும் ஒரு குத்து விட்டுட்டேன்.. :)

December 04, 2005 2:09 PM
குமரன் (Kumaran) said...
எது செயற்கையா இருந்ததுன்னு சொல்ல முடியுமா இராமநாதன். நடையா இல்லை மொத்தமா இந்த மாதிரி ஒரு தோட்டக்காரனை வச்சு ஆண்டாள் கதைய சொல்றதா இல்லை வேற ஏதாச்சுமா? எதுன்னு தெரியல; ஆனா செயற்கையா பட்டுச்சுன்னு சொன்னாலும் சரி; ஏன்னா சில நேரம் குறை இருக்கிற மாதிரி தோணும் ஆனா என்ன குறைன்னு சட்டுனு புரியாது. குறைகண்டு குறிப்பிட்டுச் சொல்லமுடிஞ்சா அதை அடுத்த முறை திருத்திக்க முயற்சி பண்றேன்.

December 04, 2005 6:05 PM
G.Ragavan said...
இராமநாதன் கருத்துதான் என்னுடையதும் குமரன். கருத்து சரியாகவே இருப்பதால் நானும் ஒரு +.

December 05, 2005 4:53 AM
G.Ragavan said...
// குறைகண்டு குறிப்பிட்டுச் சொல்லமுடிஞ்சா அதை அடுத்த முறை திருத்திக்க முயற்சி பண்றேன். //

குறைன்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் நடை வித்தியாசமாக இருந்தது. தோட்டக்காரன் சொல்வதால் என்றில்லை. ஏதோ ஒன்று குறைகிறது. எதுவென்று சொல்லத் தெரியவில்லை.

December 05, 2005 4:54 AM
சிவா said...
குமரன்! ஒவ்வொரு பதிவையும் வெவ்வேறு நடையில கொண்டு போறீங்க. கதை எனக்கு ரொம்ப புடிக்கும். உங்க கூடலுக்கு அப்புறம் எனக்கு புடிச்ச உங்க ப்ளாக் இது தான். தொடருங்கள்.

December 05, 2005 5:51 AM
குமரன் (Kumaran) said...
இராகவன், இராமநாதன் - என்ன குறைன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாததால என்னால ஒன்னும் அதிகமாத் திருத்திக்க முடியாது. அடுத்தப் பதிவை குறையில்லாம எழுத முயற்சி பண்றேன். மனதில் பட்டதை தயக்கமின்றி சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. இனியும் தொடருங்கள்.

December 05, 2005 12:44 PM
குமரன் (Kumaran) said...
உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி சிவா. தொடர்ந்து சுவையாக எழுத முயற்சி செய்கிறேன். அவனருளால் அவன் கதையும் அவன் அடியார் கதையும் மேலும் மேலும் படிப்போம்.

December 05, 2005 12:45 PM
இராமநாதன் said...
குமரன்,
எனக்கென்னவோ பணியாள் பேசும் வசனங்கள் செயற்கையாய்ப் பட்டன. இரண்டு மூன்று முறை படித்தபின் இதுதான் தோன்றுகிறது.

எனினும் ஐடியா வித்தியாசமானது.

நன்றி

December 05, 2005 1:37 PM
குமரன் (Kumaran) said...
நன்றி இராமநாதன். இருக்கலாம்.

December 05, 2005 3:14 PM

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தோட்டத்துலயே ஒரு ஓரமா ஒரு குடிசையப் போட்டுக்கிட்டு சந்தோஷமா ஐயா கிட்ட வேலைப் பாத்துகிட்டு இருக்கேங்க//

:)
அந்தமில் பேரின்பம் = அடியவரோடு கூடி!

எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நானென்றான்
= இந்தப் பாட்டில் வருவதும் "ரங்கன்" தான்!

அதில் சிவாஜி நடிப்பாரு; அவர் நடிப்பு பலருக்குச் செயற்கையாத் தெரியும்;

இப்படியெல்லாம் கூடவா வேலைக்காரவுங்க இருப்பாங்க? -ன்னு உலக வழக்கம்; அதனால் "செயற்கையாத்" தெரியலாம்! நியாயமே!

ஆனால்... "ரங்கன்" தப்பாப் பொறந்துட்டானோ என்னவோ?
அவனுக்கு, அது தான் "இயற்கையா" இருக்கு!

அதான் போல, "ஒதுங்கி" வாழறான்!

குடிசையப் போட்டுக்கிட்டு "சந்தோஷமா" வாழு ரங்கா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சீவனுக்கு எது "இயற்கை"?

= அவனுக்கு அடிமையாய் இருத்தலே இயற்கை!

என்னது? அடிமையா?
ரொம்ப செயற்கையா இருக்கே!

= அறியாக் காலத்து
அடிமைக் கண், அன்பு செய்வித்து

= அறியா மா மாயத்து
அடியேனை வைத்தாயால்
-------------

முருகா
"நாயேன்" -ன்னு உன்னையே சுத்திச் சுத்தி வரேன்
"நாயேன்" -ன்னு இருப்பது செயற்கை-ன்னு சொல்லிடாதடா...
என் "இயற்கையே" அதான்!

நீ விரட்டினாலும், உன்னைச் சுற்றியே வருவது;
அது உனக்கும் எனக்குமுள்ள இயற்கை!

ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி
தீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர் தனிமுதலே "நாயேன்"
பிழைக்கின்ற வாறுநீ பேசு!