Tuesday, April 13, 2010

இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்!

விக்ருதி வருட சித்திரை முதல் நாள் (14 ஏப்ரல் 2010) அன்று சௌராஷ்ட்ர விஜயாப்தம் 698ஆம் ஆண்டு தொடங்குகிறது. இந்த வருடமும் இனி வரும் வருடங்களும் உலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும்!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

***

இந்த சௌராஷ்ட்ர விஜயாப்த கணக்கு என்றிலிருந்து தொடங்கியது என்பதை இன்னும் ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்லவில்லை. விஜயாப்தம் என்பதை விஜய + அப்தம் என்று பிரிக்க வேண்டும். அப்தம் என்றால் வருடம் என்று பொருள். விஜயம் என்றால் வெற்றி என்றும் வருகை என்றும் பொருட்கள் உண்டு. இங்கே வெற்றியாண்டு என்பதை விட வருகையாண்டு என்பதே பொருத்தமாக இருக்கும் என்று கொண்டு இது தமிழகத்திற்கு சௌராஷ்ட்ரர்கள் வருகை தந்த ஆண்டுக்கணக்கு என்று சொல்பவர்கள் உண்டு. விஜயநகர பேரரசின் அழிவினை ஒட்டி சௌராஷ்ட்ரர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள் என்றும் திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைக்கு வந்தார்கள் என்றும் சொல்லும் சௌராஷ்ட்ரர்களின் வாய்மொழி வரலாற்றுக் கூற்றுகள் இந்த கருத்திற்கு ஒத்து போகவில்லை.

ஏறக்குறைய 675 வருடங்களுக்கு முன்னர் தான் (கி.பி. 1336) விஜயநகரப் பேரரசே தோன்றியது. அதனால் இந்த விஜயாப்த கணக்கு தமிழகத்திற்கு வருகை தந்த ஆண்டாக இருக்காது.

விஜயநகரத்திற்கு வந்து சேர்ந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது இந்த ஆண்டுக் கணக்கு என்று சொல்பவர்களும் உண்டு. மேலே சொன்ன அதே காரணம் அதுவும் சரியில்லை என்று காட்டுகிறது. விஜயநகரமே 675 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது என்னும் போது 698 என்ற ஆண்டுக்கணக்கு எப்படி பொருந்தும்?

கூர்ஜரத்து (குஜராத்) சௌராஷ்ட்ர தேசத்திலிருந்து சௌராஷ்ட்ரர்கள் புலம்பெயரத் தொடங்கிய காலக் கணக்கு இந்த ஆண்டுக் கணக்கு என்பவர்களும் உண்டு. கஜினி முகம்மதுவின் தாக்குதல்களைத் தாங்காமல் சோமநாதபுரத்திலிருந்து கிளம்பியதாகச் சொல்லும் சௌராஷ்ட்ரர்களின் வாய்மொழி வரலாற்றுக் கூற்று இந்தக் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. கஜினி முகம்மது சோமநாதபுரத்தின் மீது தாக்குதல் நடத்தியது கி.பி. 1024. அது இன்றையிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால் கஜினி முகம்மதுவின் தாக்குதலினால் தெற்கே ஒரு கூட்டம் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு கூட்டங்களாக சௌராஷ்ட்ர மக்கள் தென்னகம் வந்திருக்கலாம். அப்படி வந்த போது ஏதோ ஒரு கூட்டம் விஜயநகரம் தோன்றுவதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கிளம்பி விஜயநகரத்தில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து பின்னர் தமிழகம் வந்திருக்கலாம். அது உண்மையானால் அந்தக் கூட்டம் சௌராஷ்ட்ர தேசத்தை விட்டுக் கிளம்பிய ஆண்டுக்கணக்கே இந்த சௌராஷ்ட்ர விஜயாப்தக் கணக்கு.

***

சித்திரை முதல் நாள் தான் சௌராஷ்ட்ர விஜயாப்தத்தின் முதல் நாளா?

இக்காலத்தில் சித்திரை முதல் நாள் தான் சௌராஷ்ட்ர விஜயாப்தத்தின் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது. அது தமிழகத்திற்கு வந்த பின்னர் வந்த வழக்கமாக இருக்க வேண்டும். விஜயநகரத்தில் வாழ்ந்த போது அங்கிருந்த வழக்கப்படி உகாதியே (சைத்ர மாத முதல் நாள்) சௌராஷ்ட்ர விஜயாப்தத்தின் ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். மொழி வகையில் கொங்கணிக்கு (மராட்டியின் கிளை மொழி) மிக அருகில் இருக்கும் மொழி சௌராஷ்ட்ரம். மராட்டியர்களும் உகாதியையே ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். சௌராஷ்ட்ரர்களும் அப்படியே தமிழகத்திற்கு வருவதற்கு முன்னர் கொண்டாடியிருக்கலாம்.

31 comments:

கோவி.கண்ணன் said...

தகவல்களுக்கு நன்றி !

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் said...

இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்

supersubra said...

Happy Sourashtra new year to you.

அப்தம் என்றால் முடிந்து என்று ஒரு பொருளும் உண்டு என்று நினைக்கிறேன். கலியப்தம் 5110
என்றால் கலி யுகம் பிறந்து 5110 (English year 2010) முடிந்துவிட்டது

குமரன் (Kumaran) said...

நன்றி கண்ணன், திகழ், சூப்பர் சுப்ரா.

அப்தம் என்றால் வயது என்ற அருத்தமும் உண்டு தான். அறுபதாம் ஆண்டு நிறைவை ஷஷ்டியப்த பூர்த்தி என்பார்களே!

வல்லிசிம்ஹன் said...

குழந்தைக்கு ஆண்டு நிறைவு என்பதையே அப்த பூர்த்தி என்றுதான் சொல்கிறோம்.
இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள் குமரன்.

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லியம்மா. உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

UPAMANYUOSS said...

The Sourashtra Panchangam
published by Sourashtra Sabha, Madurai states that
Sourashtra Vijayabdam 698
starts from 14th April 2010.

Historians are to clarify how this Sourashtra Vijayabdam was started and from which year this era is quoted.
How many Sourashtras are aware of this Sourashtra Vijayabdam?

How many Sourashtras are aware that Sourashtra language has got its own script and that even an
Electronic Journal is printed using Sourashtra script besides roman script?

O.S.Subramanian.

குமரன் (Kumaran) said...

Dear OSS Dhaa,

It is true. Only very few Sourashtrians know about Sourashtra Vijayabdam and even fewer know about when it is starting.

All the invitations like Marriage invitation etc are mentioning about this Sourashtra Vijayabdam but only very few have paid attention to it.

Talking about it again and again will increase the awareness. And you have been doing a great service in that part - talking about Sourashtra language related things again and again in all forums to increase the awareness level!

ஜீவி said...

இனிய விக்ருதி - விஜயாப்த புத்தாண்டு வாழ்த்துக்கள், குமரன்!

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவி ஐயா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

ஒரு காசு said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள், குமரன்.

குமரன் (Kumaran) said...

நன்றி ஒரு காசு. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

குறும்பன் said...

குமரன் தங்களுக்கு இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி குறும்பன்.

இராம.கி said...

விஜய அப்தம் எனக்குப் புதுச்செய்தி. எல்லா நலனும் பெற்றுச் சிறக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

pathykv said...

anbu Kumaran,
thru O.S.Subramanian pOl niingaLum sourashtirar alladaarukku immozhi kuRittu solli varukiriirgaL.
nanRi.
K.V.Pathy

ramachandranusha(உஷா) said...

குமரன், சித்திரை முதல் நாள் கொண்டாடலாம்( வேற என்ன சின்ன திரையில் அதே பட்டிமன்றம் ஸ்பெஷல் சினிமா, சினி தாரகைகள் பேட்டி) ஆனால் புத்தாண்டாய் கொண்டாடக்கூடாதுன்னு அரசு ஆணை தெரியுமில்லே,
கோவில்ல கூட விசேஷ பூஜை கிடையாது என்பது உத்தரவு. அதையும் தாண்டி பஞ்சாங்கம்
வாசித்தவர்கள் கைது என்பது பத்திரிக்கை செய்தி. அப்படி இருக்க, இப்படி பொதுவுல
புத்தாண்டு வாழ்த்து சொல்வது சரியா :-)))))))))))

ramachandranusha(உஷா) said...

ஓஹோ, செளடாஷ்டிர புத்தாண்டு வாழ்த்தா? நா சரியா பார்க்காம தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன். ஹாப்பி செள். புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன்!

மெளலி (மதுரையம்பதி) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன். :)

Visvak Prasanth TS said...

Very useful Information

இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்

suresh said...

Hi iam sourastra from chennai suresh

Kavinaya said...

இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் குமரன்!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இராம.கி. ஐயா!

குமரன் (Kumaran) said...

தங்களின் கனிவான சொற்களுக்கு நன்றி பதி ஐயா.

குமரன் (Kumaran) said...

உங்களுக்கு இனிய 'புத்தாண்டு' வாழ்த்துகள் உஷா. ஏகாம்பரி அக்காவைக் கேட்டதா சொல்லுங்க. ஆன்மிக இதழ்களையெல்லாம் ரொம்ப படிக்க வேண்டாம்ன்னும் சொல்லுங்க. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி மௌலி, விஷ்வக் ப்ரசாந்த், சுரேஷ், கவிநயா அக்கா. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

sundari said...

good afternoon dear sir,

HAPPY TAMIL NEW YEAR TO U AND UR FRIENDS AND ALL RELATIVE NEIGHBOURS
I AM UNABLE TO READ UR LESSON PROPERLY
DUE TO I DONOT KNOW UR BLOCK
I AM SEARCHING AND SEARCH FINALY I FIND .
YOUR LOVINGLY
SUNDARI.P

harishiabali said...

The Sourashtra's south vijayam exactly matches the traditional saying. -
See this calculation.
- Sourashtra year 698
So sourashtra's should have started dakshin at year 1312.
tradition says sourashtra's migrated from devagiri ( This was the capital of yadavas - we first came to devagiri after we left somapuri due to muslim invasion)- in search of peace under hindu rulers.
Malik Kafur ( the commnder of alla-ud-din khilji, the Sultan of Delhi, invaded devagiri in 1311 and plundered it) - so we lost the last Hindu kingdom of central india and forced to move south. ( Started to move in 1311 and reached Hoysala at 1312) The left over hindu regime was Hoysala, Kaktiyas and gajapatis of east. Major sourashtra group must have opted south for Hoysala and history say some left to Orissa (Gajapatis) and now they have merged with oriya people losing their identity ( As any of Hindu Brahmins)
So we must have started to move to Hoysala (yadavas) at the time of Veera Ballala III ( 1292-1343) the last ruler of of Hoysala - after him the kingdom came under the Harihara Raya -I the first ruler of Vijayanagara or sangama dynasty - they rose from kakatiya rulers who took large part of Hoysala kingdoms. This is the period we must have moved to new city around Hampi ( Vijayanagaram). The sourashtra's dakshina vijayam ( Southwards movement) is referred as sourashtra vijayaptam-
meaning our real south migration.
The dates match's with the traditional saying of dakshina vijayam.
We don't know why migration days did not start by somnath invasion. In my thinking there must have been a big choas and confusion among the community in getting recoginized with local population. This is the time when we would have adopted weaving - our part time profession as full time for survival (Brahmins of somnath or dwaraka temple weave the cloths required for the diety because once used cloths will be never reused ( even today )). To add the cloths woven by other varnas would not be used in those days so Brahmans of the temple who's turn for puja purpose get completed will take over other temple activities ( cooking, weaving , accounting and management etc). I heard that the there is group of brahmins in Ujjain call themselves as descendants of somnath temple brahmins.

So in nutshell when everthing was normal under Vijayanagar kings , we must of started to trace the dates of south migration for a record to notify that we once were part and parcel of north west India and migrated south.

Ugadi must rightly be our new year just because we adopted maratta-tulu way of leaving.

Jai Shri Ram
Harish Chinna Konda
Pittsburgh

குமரன் (Kumaran) said...

Harish,

Sorry for the delay in my response. Thanks for the explanation. It makes good sense.

மதுரை அமர்நாத் said...

anbaarntha kumaran avargale,
naan oru vaaramaagath thaan ungal pathivugalaip paarthu - padithu - viyanthu varugiren. ungal tamil mozhip patru matrum thaimozhip patru ennai viyakka vaikkirathu. thangal katturaigal miga arumayaaga ullana. than seeriya mozhith thondu thodarattum. mikka nanri.

குமரன் (Kumaran) said...

jukku thanks Amarnath dhaa. continuousgan chokdhilEth avO. Critical comments melli sanguvO.