Friday, April 09, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 2

பாரதியார் எழுதிய 'காற்று' என்னும் தலைப்பில் உள்ள வசன கவிதையின் இரண்டாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பாகத்தில் ஒரு கதையை சொல்லி, பின்னர் காற்றுத்தேவன் ஒவ்வொரு உயிருக்கும் பிராணனாக இருக்கிறான் என்று கூறி, காற்றுத்தேவனை வணங்கினார் பாரதியார் - அதனைப் போன பதிவில் பார்த்தோம். இரண்டாம் பகுதியில் காற்றுத்தேவன் புயலாக மாறினால் எப்படி அழிவுசக்தியாக உருவெடுக்கிறான் என்பதைக் கூறுகிறார். இறைவனே ஆக்கவும் அழிக்கவும் செய்கிறான் என்பதைக் கூறுதல் இது.

Dec 11ம் தேதி பாரதியாரின் பிறந்த நாள். அந்த நன்னாளில் பாட்டுக்கொரு புலவனைப் போற்றுவோம்.

---------------------------------------------------------------

நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவது போன்ற புயற்காற்று. அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளிப் படுகின்றன. அவை மோதி வெடிக்கின்றன. சூறையாடுகின்றன. கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது; மின் வேகத்தில் எற்றப்படுகின்றது; பாறையில் மோதிவிட்டது. ஹதம்! இருநூறு உயிர்கள் அழிந்தன. அழியுமுன், அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனமிருக்குமென்பதை அறிந்து கொண்டு போயின.

ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். உலகம் ஓடுநீராகி விடும்; தீ, நீர். சக்தி காற்றாகி விடுவாள்.

சிவன் வெறியிலேயிருப்பான். இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும். அக்து சக்தியென்பது தோன்றும். பின்னே சிவன் நிற்பது தோன்றும்.

காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான்.

காற்றே யுகமுடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக. "நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி".

1 comment:

குமரன் (Kumaran) said...

9 டிசம்பர் 2005 அன்று 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்னும் எனது இன்னொரு பதிவில் இடப்பட்ட இடுகை இது. அதற்கு வந்த பின்னூட்டங்கள்:

12 comments:

சிவா said...
சென்னையில காத்து மழை பேயாட்டம் போட்டு விட்டது. சரியான நேரத்தில் போட்டிருக்கீங்க. ஏதோ கப்பல் விபத்து செய்தியை அறிந்து பாரதிக்கு இந்த கவிதை தோன்றியிருக்குமோ?. சரி! வாயு தேவன் அப்படின்னு சொல்லுவாங்களே. அது யாரு?. விளக்குங்கள்

December 09, 2005 6:28 AM
--

G.Ragavan said...
எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

காற்றின் அணுவை மூச்சாக்கி
என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்

காற்றுதான் மூச்சுக்கு ஆதாரம். அது இல்லையேல் உயிருக்குச் சேதாரம்.

December 09, 2005 7:09 AM
--

குமரன் (Kumaran) said...
காற்றுத்தேவன் தான் வாயு தேவன் சிவா. வாயு என்பது காற்றுக்கு வடமொழிப்பெயர்.

இந்தப் பதிவின் கடைசி வரியில் இருக்கும் 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' என்பது வாயுதேவனை வணங்கும் வேத மந்திரம். 'காற்றே போற்றி. நீயே கண்கண்ட தெய்வமாய் இருக்கிறாய்' என்று பொருள். பாரதியார் இந்த 'காற்று' என்னும் வசன கவிதையில் இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

December 09, 2005 2:21 PM
--

குமரன் (Kumaran) said...
நல்ல பாட்டு இராகவன். நன்றி.

December 09, 2005 2:21 PM
--

சிங். செயகுமார். said...
காற்றே என் வாசல் வந்தாய்..... இன்னிக்கி புயல் அடிக்குதாங்க ஊர்ல நெனச்சா பயமா இருக்குது!

December 09, 2005 6:40 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் சிங்காரகுமரன். நீங்க சொல்ற மாதிரி பயமாகவும் வருத்தமாகவும் தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் புயல் வந்தால் என்ன தான் செய்றது?

December 10, 2005 12:31 PM
--

குமரன் (Kumaran) said...
காற்றே என் வாசல் வந்தாய்....பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த பாட்டு சிங்.

December 10, 2005 12:31 PM
--

குமரன் (Kumaran) said...
காற்றே என் வாசல் வந்தாய்....பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த பாட்டு சிங்.

December 10, 2005 12:46 PM
--

சிவா said...
ஹலோ! எங்களுக்கு வாயுன்னா காற்றுன்னு தெரியாதா? :-) நான் தமிழ் மீடியம் சார்! டெக்னிக்கலி You are wrong :-). காற்றுன்னா வாயுக்களின் கலவை. ஆக்ஸிஜன் ஒரு வாயு (Gas). காற்று இல்லை. எல்லா வாயுக்களும் கலந்தது தான் காற்று (Air). இது எப்படி :-)))

அத விடுங்க. நான் கேட்டது, வாயு தேவன்னு சொல்றீங்களே, அவர் பேர் என்ன? அவர பற்றி ஒரு விளக்கம் கொடுப்பீங்கன்னு பார்த்தா :-)

December 13, 2005 6:42 AM
--

குமரன் (Kumaran) said...
//இது எப்படி :-)))// சூப்பர் விளக்கம் சிவா.

வாயு என்பது தான் காற்று தேவனுடைய பெயர். இந்திரன், வருணன், குபேரன், யமன், சிவன், விஷ்ணு மாதிரி வாயு என்பது தான் அந்த தேவனுடைய பெயர்.

December 13, 2005 11:57 AM
--

Anonymous said...
I've always liked Bharathi's kavithais. But,I've never searched the blogosphere for his kavithais. Thanks for sending me your link - I got achance to look at his vasana kavithai. Thanks Kumaran.

December 13, 2005 1:10 PM
--

குமரன் (Kumaran) said...
Dear Friend, I have sent the link for my blogs to many friends and as you have not left your name I am not able to identify who you are. Can you please come back and leave your name?

December 13, 2005 1:25 PM