Friday, April 09, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 3

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் மூன்றாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் இரண்டு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

-------------------------------------------------------------------

காற்றுக்குக் காது நிலை. சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான். காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது. காற்றுக்குக் காதில்லை. அவன் செவிடன்.

காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு, இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா? காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகின்றோம்.

------------------------------------------------------------------

எனது உரை: ஐம்புலன்களில் காது தான் காற்றுக்கு இருப்பிடம் என்று பழைய நூல்கள் கூறும். அந்த செய்தியை அடிப்படையாக கொண்டு இந்தப் பாகத்தைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.

காற்று இருப்பதால் தான் நம் காது ஓசையை ஒலியை கேட்கமுடிகிறது. காற்றில்லாவிடில் ஒலி கேட்காது என்பது அறிவியலார் அறிந்து கூறியது. அதைத் தான் நம் முன்னோர்கள் காற்றின் நிலை காது என்று கூறினர். அந்தக் காற்று இல்லாவிட்டால் யாருக்கும் (சிவன் உட்பட) காது கேட்காது என்று பாரதியார் கூறுகிறார்.

அப்படி சொல்லிக்கொண்டே காற்றுக்குக் காதில்லை என்றும் கூறி அதன் காரணங்களையும் சுவைப்பட அடுக்குகிறார். அந்தக் காரணங்களுக்கு விளக்கம் தேவையில்லை என்பதால் விளக்கவில்லை.

1 comment:

குமரன் (Kumaran) said...

2 comments: சிவா said...
//**காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு, இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?**//

குமரன்! சின்ன கவிதை. மிகவும் நகைச்சுவையாக, பாரதிக்கே உரிய நக்கலோடு இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.
பாரதி வாயுதேவனை செவிடன் என்கிறாரா? என்ன
கோவமோ அவர் மேல்?.

December 28, 2005 10:02 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவா. இது ஒரு நல்ல கவிதை.

December 29, 2005 5:30 AM