பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதினொன்றாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பத்து பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.
----------
காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம். எற்றுகிற சக்தி. புடைக்கிற சக்தி. மோதுகிற சக்தி. சுழற்றுவது. ஊதுவது. சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று. எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம். காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.
----------
இந்தக் கவிதைக்கு விளக்கம் தேவையில்லை.
1 comment:
8 comments:
Merkondar said...
எற்றுகிற என்றால் என்ன?
January 14, 2006 10:25 PM
--
G.Ragavan said...
இதுக்கு விளக்கம் எதுக்கு? இதத்தான் aerodynamics அப்படீன்னு சொல்றோம். இப்படியே thermodynamics and hydraulics பத்தியும் பாரதி ஏதாவது சொல்லீருக்காரான்னு பாருங்க.
January 15, 2006 2:56 AM
--
G.Ragavan said...
என்னார், இன்றைய தமிழில் அதை எத்துதல் என்கிறோம்.
January 15, 2006 2:57 AM
--
குமரன் (Kumaran) said...
இராகவன். எற்றுதலுக்கு விளக்கம் தந்ததற்கு நன்றி. பாரதியார் அவர் காலத்தில் தெரிந்திருந்த அறிவியல் விஷயங்களைப் பற்றி நிறைய அவருடைய கட்டுரைகளிலும் கவிதைகளிலும் சொல்லியிருக்கிறார். அடுத்த்ப் பாகத்தில் hydralics தொட்டுச் செல்கிறார்.
January 15, 2006 8:30 AM
--
Merkondar said...
நன்றி ராகவன்
January 15, 2006 10:45 AM
--
rnateshan. said...
தங்கள் நினைவிற்கும் நினைவூட்டியமக்கும்நன்றி.!
January 17, 2006 2:19 AM
--
Satheesh said...
kumaran,
you must be really good. how do you get so many + ratings?
January 19, 2006 4:33 AM
--
குமரன் (Kumaran) said...
Satheesh,
The answer is obvious. If you see the comments for most of my postings you could see the same people reading and putting comments. Got some regular readers who read but do not put comments here but rather send the comments by email. Hopefully most of them are voting +. Without any doubt, I get my share of - votes also :-)
The way you said 'you must be really good' sounds like you do not think I am good :-) If you have not read my other blogs, please read and then decide whether I am 'really' good or not. :-)
Thanks,
Kumaran.
January 19, 2006 5:08 AM
Post a Comment