Sunday, July 01, 2007

தங்கம் - வாங்கினால் குறைந்த விலை; விற்றால் அதிக விலை


அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது ஒரு விந்தையைக் கண்டேன். நாங்கள் நகைக்கடைக்குச் சென்றிருந்த நேரம் ஒரு கிராம் தங்கம் 809 ரூபாய்க்கு விற்றது. கஜானா நகைக்கடையினர் ஒரு கிராம் தங்கம் 784 ரூபாய்க்கு விற்றனர் (சந்தை விலையை விட 25 ரூபாய் குறைவு). இதனை வேண்டுமானால் புரிந்து கொள்ள இயன்றது. சேதாரம், செய்கூலி என்று நகையின் விலையை ஏற்றி இறக்கும் போது இப்படி சந்தை விலையை விடக் குறைவாகக் கொடுக்க முடியும். இன்னொன்று தான் புரிந்து கொள்ள இயலவில்லை. நாங்கள் முன்பு வாங்கியிருந்த ஒரு நகையை விற்று புது நகையை வாங்கினோம். அப்படி பழைய நகையை விற்கும் போது ஒரு கிராமிற்கு 840 ரூபாய் போட்டு வாங்கிக் கொண்டனர். சேதாரமும் மிகுதியாகப் போடவில்லை. இப்படி பழைய நகையை கூடுதல் விலைக்கு வாங்குவதால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை. இதனைப் பற்றி அறிந்தவர்கள் சொன்னால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

21 comments:

இலவசக்கொத்தனார் said...

தராசுக்குக் கீழ புளி வெச்சு இருந்தாங்களான்னு பார்த்தீங்களா? :))

G.Ragavan said...

:) என்ன குமரன் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க?

பழைய நகைல ஓரளவு நல்ல தங்கம் இருக்கும். புதுசுல செம்புதான நல்லா இருக்கும். இதெல்லாம் யாவார டெக்குனிக்கு. :)

தூத்துடியில அழகர் ஜுவல்லரீல வாங்குன நகைகளைல சென்னைக் கடைகளுக்குக் கொண்டு போங்க. ரொம்பப் பேசாம வாங்கிக்கிருவாங்க.

Anonymous said...

அப்ப அவங்கக் கிட்டையே கிலோ கணக்கில் வாங்கி விற்றிருக்கலாமே.

லாபமாக இருந்திருக்கும். அதைவிட்டுவிட்டு வெட்டிக் கேள்விகள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
நீங்கள் விற்ற நகை , பழம்பொருள் எனும் வகைக்குள் வரக்கூடிய பாட்டிகால நகையா?
மற்றும் படி எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஈழத்தில் ஒருகாலத்தில் வெள்ளி 5 சத நாணயம் 10 சதத்துக்கு வாங்கினார்கள்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். எங்க நகை எவ்வளவு எடைன்னு ஏற்கனவே தெரியும். அதனால புளி இல்லைன்னு உறுதியா சொல்லலாம். :-)

குமரன் (Kumaran) said...

இராகவன். நீங்க சொல்றது ஒரு வகையில சரி தான். பழைய நகைகள்ல தங்கம் அதிகமாகவும் செம்பு குறைவாகவும் இருக்கும்; புதிய நகைகள்ல அதுவும் இந்தக் காலத்துல விக்கிற நிறைய வேலைப்பாடுகளோட இருக்கிற நகைகள்ல செம்பு முன்பை விட அதிகம் இருக்கும்; இது தெரிஞ்சது தான். ஆனா நாங்க வித்தது இரண்டு வருடத்துக்கு முன்னாடி பெங்களூருவில வாங்குனது. மகளுக்கு வாங்குன வளையல். அவளோட ஒரு முறை நடை (வாக்கிங்க்) சென்றிருந்த போது கழட்டிப் போட்டு விட்டாள். வீட்டுக்கு வந்த பின் காணவில்லை என்று வந்த வழியே சென்ற போது கார் சக்கரத்தில் பட்டு நசுங்கிக் கிடந்தது. நல்லவேளை இப்படியாவது கிடைத்ததே என்று கொண்டு வந்துவிட்டோம். அதனைத் தான் விற்றோம். அதில் இந்தக் கால நகையில் இருக்கும் அளவிற்குத் தான் செம்பு இருக்கும். அதனால நீங்க சொல்ற வியாபார நுணுக்கமும் இங்கே இல்லைன்னு தோணுது.

குமரன் (Kumaran) said...

கேள்வி கேட்பவரே. கிலோ கணக்கில் வாங்கி விற்க என்னிடம் முதல் இல்லையே. நீங்களும் நானும் கூட்டு சேர்ந்து செய்யலாம். முதல் கொண்டுவாருங்கள். ஹர்சத் மேத்தாவைப் பிடித்ததைப் போல் பிடித்துவிட்டால் நீங்கள் உள்ளே போங்கள். நான் இலாபத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன். அப்புறம் வெட்டிக் கேள்விகள் என்ன, எந்தவித கேள்விகளுமே கேட்கவில்லை. எப்படி வசதி? :-))

குமரன் (Kumaran) said...

இல்லை யோகன் ஐயா. பழம்பொருள் என்று சொல்லும் வகையிலான பாட்டி கால நகை இல்லை. அப்படிப்பட்ட நகைகளை விற்பதில்லை என்று வைத்திருக்கிறேன். பாட்டி, காலம் சென்ற என் தாயார் இவர்கள் நகைகள் எல்லாம் யாரும் அணியாவிட்டாலும் பெட்டியிலாவது இருக்கட்டும் என்று தான் வைத்திருக்கிறேன். (ரொம்ப அதிகம் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் 10 பவுன் இருக்கும்).

இந்தியாவிலும் ஒரு முறை அப்படி நடந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஐயா. ஒரு ரூபாய் நாணயத்தில் இருக்கும் வெள்ளி ஒரு ரூபாயை விட அதிக மதிப்பு பெற்றிருந்ததால் நிறைய பேர் நாணயத்தை உருக்கி விற்கத் தொடங்கினார்கள் என்றும் பின்னர் அரசு வெள்ளியில்லாமல் நாணயம் வெளியிடத் தொடங்கியது என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நாம் நம் நகையை விற்க மட்டும் சென்றால் இந்த அதிக விலையில் பெற்றுக் கொள்வதில்லை; நம் நகையை விற்ற பின் அவர்களிடம் அதன் மதிப்பிற்கோ இல்லை அதிகமாகவோ நகை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த அதிக விலை கிடைக்கும்.

Anonymous said...

Most of the old jewels are made of 22 ct gold. 24 ct is 99.9999% gold and when they use it in jewellery, 2 parts of Copper is aadded to improve its strength. Now a days almost all jewellery shops (especially in chennai) make jewels out of 18 ct gold. Your old ornaments are obviousely made of 22 ct. gold and the shop owener indeed bought it for a cheaper price. Remember the jewels you sold has 4 parts more gold than in the new ones. Clear?

குமரன் (Kumaran) said...

No Sir. As I said earlier, the ones I sold were very recently bought and if the jewels are made of 18 ct gold, this one is also 18 ct gold, not 22 ct gold. So, that argument does not hold good.

இந்த 22 காரட், 18 காரட் வேறுபாடுகள் எனக்கும் ஓரளவிற்கு புரிகிறது. அதனால் தான் மேலே இராகவனுக்குப் பதில் சொன்ன போது தற்கால நகைகளில் காப்பர் அதிகம் இருக்கிறது என்று சொன்னேன். நான் விற்றதும் தற்கால நகை தான். அதனால் அவர்களுக்கு விற்ற நகையில் நான்கு பகுதி அதிகமான தங்கம் இருந்தது என்பது சரியில்லை. சரியா?

வடுவூர் குமார் said...

சிங்கப்பூரில் வாங்கும் நகைக்கு சென்னையில் நல்ல மதிப்பு இருக்கிறது.
இங்குள்ள மினர்வா என்ற நகைக்கடையில் வாங்கினா சென்னையில் உங்க வீட்டுக்கு வந்து கொடுக்கிறார்களாம்.
இதெப்படி இருக்கு. :-))

துளசி கோபால் said...

இப்ப என்னங்கறீங்க? தங்கம் விலை வாங்கும்போது குறைவு. இருக்கட்டும்.
இதுதான் நல்ல சமயம், ஒட்டியானம் வாங்கிக்க. கோபால் கிட்டே
சொல்லிப் பார்க்கலாம்:-))))

பெரியக்கா கல்யாணத்துக்கு, வீட்டுலே இருந்த ஒத்தை ரூபாய்களை உருக்கி,
வெள்ளிப்பாத்திர வகைகள் சீர் செஞ்சாங்களாம். பாட்டி சொல்லி இருக்காங்க.

குமரன் (Kumaran) said...

நீங்க சொல்றதைப் பாத்தா மினர்வா நகைக்கடைக்காகவே சிங்கைக்கு வந்து செல்லலாம் போலிருக்கிறதே குமார். :-))

குமரன் (Kumaran) said...

ஆமாம் துளசி அக்கா. போன வருடம் வாங்குன நகைகளை எல்லாம் வித்துட்டு ஒட்டியானம் வாங்கிக்கோங்க. அப்படின்னா கோபால் சார் உடனே சரின்னு சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன். :-)

நானும் சின்ன வயசுல வெள்ளி கலந்திருக்கிற 1 ரூ நாணயங்களைச் சேத்து வச்ச நினைவு இருக்கு. அதுக்கு ஏதோ ஒரு குறியீடு கூட நாணயத்துல இருந்ததா நினைவு.

வடுவூர் குமார் said...

சீக்கிரம் வாங்க.. நான் கிளம்புவதற்கு முன்பு.

பூங்குழலி said...

குமரன்,

எனக்கிருந்த புரிதலின்படி...

நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் எனறு ஒரு தொகையைத் தீட்டிவிடுவார்கள்.
விற்கும்போது, அது போன்று நீங்கள் கேட்க முடியாது..
விற்ற நகை அதிக உருக்குலையாமல் இருந்தால், சிறிதே மெனக்கெட்டு..
மற்றவருக்கு அதே நகையைச் செய்கூலி சேதாரத்துடன் தள்ளிவிடுவார்கள்...

ஆனால் உங்கள் நகையோ.. உருக்குலைந்தது...
அதனால் என்னப் பயன்?

உங்களிடம் வாங்கிய நகையைக் கொள்முதல் கணக்கில் காட்டுவார்களா.... எனக் கேட்டுப்பாருங்களேன்...


ஆனாலும், இத்தகைய முறைப்படி,
வீட்டில் அதிக வசவு வாங்காமல்,
அடிக்கடி நகைகளை மாற்றிக்கொள்ள வசதியாயிருக்கிறது.

:))

குமரன் (Kumaran) said...

இப்பத் தான் இந்தியா போய் வந்தோம் குமார். அடுத்த முறை அந்தப் பக்கம் வரும் போது சிங்கை வருகிறோம். அழைப்பிற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

பூங்குழலி, அந்த நகைக்கடையில் இருக்கும் கூட்டத்தில் எங்கே இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்பது? அந்தக் கூட்டத்தில் நகையை வாங்கிக் கொண்டு வந்தால் போதும் என்று இருந்தது. அதனால் தான் இங்கே வந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆமாம். இந்த முறைப்படி அடிக்கடி நகைகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் அதிக மதிப்பிலும் விலையிலும் வாங்க வேண்டியிருக்கிறதே. அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. போன வாரம் ஒரு கிராம் ரூ. 845 என்று பார்த்ததாக நினைவு. :-)

தருமி said...

//அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது ...//
//இப்பத் தான் இந்தியா போய் வந்தோம் //

ஆக, இந்தியா வந்த ஆளு மதுரை வராமலா இருந்திருக்க போறீங்க? மதுரை வந்த ஆளு ஒரு தொலைபேசி அழைப்புகூட கொடுக்காமல் போயாச்சி ..இல்ல..

நல்லா இருங்கடே ! (நன்றி: ஆசிப்)

குமரன் (Kumaran) said...

கோவிச்சுக்காதீங்க தருமி ஐயா. அடுத்த முறை வர்றப்ப தொலைபேசறேன்.