அம்பரமே
தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்
நந்தகோபாலா எழுந்திராய்!
கொம்பனார்க்கு
எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி
யசோதாய் அறிவுறாய்!
அம்பரம்
ஊடு அறுத்து ஓங்கி உலகு
அளந்த
உம்பர்
கோமானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற்கழல்
அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும்
நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
ஆடைகளும்
தண்ணீரும் சோறும் அளவில்லாமல் தானம்
செய்யும் எங்கள் தலைவனே நந்தகோபாலா
எழுந்திடுவாய்!
கொடியைப்
போன்ற பெண்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவளே!
எங்கள் குலவிளக்கே! எங்கள் தலைவியே யசோதையே
எழுந்திடுவாய்!
வானத்தை
ஊடு அறுத்து ஓங்கி உலகங்கள்
எல்லாம் அளந்த தேவர்கள் தலைவனே
கண்ணனே! உறங்காது எழுந்திடுவாய்!
செம்பொன்னால்
செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடியை உடைய
செல்வா! பலதேவா! உன் தம்பியும்
நீயும் உறங்கா வேண்டாம்!