Saturday, January 10, 2009

சேந்தனா? சோமாஸ்கந்தனா?

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்துவிடக் கூடாது. இருவர் இடையிலும் ஒரு சிறு இடைவெளியாவது ஆக்கிக் கொண்டு நடுவில் வந்து உட்கார்ந்து கொள்வதில் இந்தக் குழந்தைகளுக்கு என்ன தான் மகிழ்ச்சியோ? அக்காவும் அப்படியே தான் செய்து கொண்டிருந்தாள். தம்பிக்கு ஒரு வயது ஆகும் வரையிலும் அது தொடர்ந்தது. அவன் நடக்கத் தொடங்கியதிலிருந்து இருவரிடையிலும் அந்த இடத்திற்காக கடுமையான போட்டி தொடங்கியது. சின்னவன் என்பதால் மிகப்பெரும்பான்மையான நேரங்களில் தம்பியே வெல்கிறான். இருவரையும் நடுவில் உட்காரச் சொன்னால் அவர்களால் அப்படி அமர முடிவதில்லை. இருவருக்கும் அப்பா அம்மா இருவருமே அருகில் உட்கார வேண்டும்.

தம்பியை வெல்ல விட்டுவிட்டு அக்காள் பல முறை அப்பா பக்கத்திலேயோ அம்மா பக்கத்திலேயோ தான் அமர முடிகிறது. தனக்குக் கிடைத்தது தான் தம்பிக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு நாள் அப்படி போட்டியிட்டுத் தோற்ற பொழுதில் அவள் ஒரு புதிய வாதத்தை எடுத்து வைத்தாள். அந்த வாதத்தை இப்போது கேளுங்கள்.


"பாபா. சன் டீவிம் திருவிளையாடல் நட்கம் அவத்தவேள் விநாய் தேவ்கின் முருகன் தேவ் தெங்கொ அம்பொ போ மத்திம் பிஸுனான். விநாய் தேவ் சிவன் தேவ் லெகுத்தகின் முருகன் தேவ் பார்வதி தேவ் லெகுத்தோ பிஸன். தெல்ல மாதிரினா அமி மெல்லி பிஸுனோ" (அப்பா. சன் டீவில திருவிளையாடல் நாடகம் வர்றப்ப விநாயகரும் முருகனும் அப்பா அம்மா நடுவுல உக்காரமாட்டாங்க. விநாயகர் சிவன் பக்கத்துலயும் முருகன் பார்வதி பக்கத்துலயும் உக்காருவாங்க. அந்த மாதிரி தானே நாம கூட உக்காரணும்)



"கரெக்டூஸ் மாய். லெகுத்தாவால் பபு மத்திம் பிஸத்தக் அவத்த வேள் அமி தீதெனு ஹல்லுனாத்தக் ரீகின் மாய் ஸோனூஸ் பபு மெல்லி தெங்குட் பொக்கட் பிஸுனோ மெனி மென்தெங்கன்" (சரி தான் அம்மா. அடுத்த தடவை தம்பி நடுவுல உக்கார வர்றப்ப நாங்க ரெண்டு பேரும் அசையாம இருந்துக்கிட்டு உன்னை மாதிரியே தம்பியும் அந்தப் பக்கம் உக்காரணும்ன்னு சொல்லிடலாம்)

"அவ தான் அப்படி சொல்றான்னா தம்பி தானே பரவாயில்லைன்னு சொல்லாம நீங்க என்ன இப்படி சொல்றீங்க?" (இது தமிழில் தான் சொல்லப்பட்டது. அவளுக்குப் புரியக்கூடாது என்று நினைப்பதை நாங்கள் இருவரும் தமிழில் பேசிக் கொள்வோம். அதுவும் இன்னும் கொஞ்சம் நாட்களுக்குத் தான். இப்போதெல்லாம் தமிழும் நன்றாகப் புரியத் தொடங்கிவிட்டது அவளுக்கு).

"ஓகே. ஓகே. மாத்தி சொல்றேன்"

"மாய். திருவிளையாடல் நட்கமுமூஸ் திஸொ தெக்கடர்யோ. ஆனா நிஜ்ஜமும் முருகன் தேவ் கொப்பிமூ அம்பா பாபா மத்திமூஸ் பிஸய். தெல்ல மாதிரி பிஸத்த வேள் தெல்ல ஃபேமிலிக் சோமாஸ்கந்தன் மெனி நாவ்" (அம்மா. திருவிளையாடல் நாடகத்துல தான் அப்படி காமிக்கிறாங்க. ஆனா உண்மையில முருகன் எப்பவுமே அம்மா அப்பா நடுவுல தான் உக்காருவார். அந்த மாதிரி உக்கார்றப்ப அந்த குடும்பத்துக்கு சோமாஸ்கந்தன்னு பேரு)

"நிஜ்ஜம்யா?" (உண்மையாவா?)

"ஹாய் மாய். நிஜ்ஜமூஸ். லாப்டாபும் படம் தெக்கடூஸ்" (ஆமாம்மா. உண்மை தான். மடிக்கணியில படத்தை காமிக்கிறேன்)


"ம்ம்ம். ஓகே. அத்தெங்குட் பபூஸ் மத்திம் பிஸந்தோ" (ம்ம்ம். சரி. இனிமேல் தம்பியே நடுவுல உக்காரட்டும்)

நல்ல வேளை. இன்னும் அவள் கீழிருக்கும் படங்களைப் பார்க்கவில்லை. யாரும் காமிச்சுராதீங்க. குறைஞ்சது இன்னும் ஒரு நாளுக்காவது. தம்பிக்கு ரெண்டு வயசு ஆகுது இன்னியோட (11 ஜனவரி). பிறந்த நாளும் அதுவுமா பாவம் அவன் எதுக்கு அக்காவோட போட்டி போடணும். சோமாஸ்கந்தனாகவே இருக்கட்டும்.

23 comments:

துளசி கோபால் said...

குட்டிக் குமரனுக்கு பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)களும் ஆசிகளும்.

குழந்தைகள் மட்டும்தான் நடுவிலே வந்து உக்காருமா?

நம்ம வீட்டில் கோகியும்தான்:-))))))

சோமாஸ்கோகி!!!!

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அருமைச் செல்வத்திற்கு - சோமாஸ் கந்தனைப் பற்றிய பதிவு அருமை.

cheena (சீனா) said...

மீ த மொதல்னு நினைச்சா - சகோதரி துளசி வழக்கம் போல முன்னாலே - அவங்க ஆசியும் வாழ்த்தும் மொதல்லே குட்டிக்குமரனுக்கு கிடைச்சது மகிழ்ச்சியே !

ஆனாலும் நானும் 11:01 க்குப் வாழ்த்துச் சொல்லிட்டேன் = அவங்க கூடயே !

Raghav said...

சோமாஸ்கந்தனாகிய, சேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

பபு சேந்தன்.. பாபோ சோன், சொக்கட் தென ஹொன், அஸ்க்கி கலயத்தன ஹொன், து அவ்னோ மெனி தேவ் ஜோல் மீ பாய்ம் பொடரத்தே...

மகன் பிறந்த நாளுக்கு சிறப்பான பதிவு குமரன்

தமிழ் said...

குட்டிக்கு
என்னுடைய
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்

Geetha Sambasivam said...

ரசிச்சேன் பதிவை. குட்டிக் குமரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், கொஞ்சம் தாமதமாய்ச் சொல்றேனோ?? அங்கே இனிமேல் தானே விடியப் போகுது??



//நம்ம வீட்டில் கோகியும்தான்:-))))))

சோமாஸ்கோகி!!!!//

துளசி, இது சூப்பரோ சூப்பர், எங்க வீட்டிலே மோதி இருந்தப்போ எங்க பையர் அவனோட சண்டை போடுவார். மோதியைத் தனக்குப் போட்டினு நினைச்சுப்பார். அம்மா, செல்லமா நீனு அவருக்குக் கோபம் வரும் அது கிட்டே! இத்தனைக்கும் எங்க பையர் அப்போ காலேஜுக்குப் போயாச்சு!

மெளலி (மதுரையம்பதி) said...

சேந்தனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

G.Ragavan said...

சேந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிவக்கொழுந்து என்பதாலோ என்னவோ கேள்விகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் சேந்தன் என்பதாலோ என்னவோ கேட்டதெல்லாம் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு அன்பு முத்தங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் முத்தங்கள் முருகப்பய சேந்தனுக்கு! :)))

இன்னிக்கு எங்கே பார்த்தாலும் பிறந்தநாளா இருக்கு! இதோ ஓடிக்கிட்டு இருக்கேன் பிறந்தநாள் பார்ட்டிக்கு!
இளா பையன், சூர்யாவுக்கும் இன்னிக்கிப் பொறந்த நாள்ஸ்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்போதெல்லாம் தமிழும் நன்றாகப் புரியத் தொடங்கிவிட்டது அவளுக்கு//

ஹே! சிவக்கொழுந்து, அப்பாவுக்குப் போட்டியா ஒரு வலைப்பூ சீக்கிரமே தொடங்கு! குழு வலைப்பூ-ன்னா நானும் சேர்ந்துகிடறேன்!
உங்க அப்பாவை ஒரு வழி பண்ணீறலாம்! :))

குமரன் (Kumaran) said...

அத்தையின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் சேந்தன் நன்றியோடு ஏற்றுக் கொண்டான் துளசி அக்கா.

ஆமாம் அக்கா. கோகியும் தான் உட்காருவார்ன்னு தெரியும். கோகியோட நண்பர்கள் அப்படி செய்வதைப் பார்த்திருக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனா ஐயா.

குமரன் (Kumaran) said...

முதல் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் துளசி அக்கா & சீனா ஐயா.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி இராகவ்.

சேந்தன் பபு சொக்கட் தென கொன் அஸ்க்கி களயத்தென கொன் அவ்னொ மெனி ஆசிர்வாத் கெரத்த செர்கஸ். ஹொயெதி சேந்தன் தெங்க பாபோ சொக்கட் தெனொ, அஸ்க்கி களயத்தெனொ மெனி கோனக் களாய்? வேஷன் தைலி ஹின்டர்ய சேந்தன் தெங்க பாபோ. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி திகழ்மிளிர்.

ரொம்ப கவிதை எழுதி எழுதி எல்லாத்தையும் உடைச்சு போட்டுச் சொல்றதே பழக்கமாகிப் போச்சு போல. :-)

குமரன் (Kumaran) said...

நேரத்தோட சொல்லிட்டீங்க கீதாம்மா. இந்திய நேரத்துக்கே இடுகையை போட்டுட்டுத் தான் படுத்தேன். வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி கீதாம்மா.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

ஆகா. வந்திருக்கிறது யாரு? இராகவனா? நம்பமுடியவில்லை...இல்லை...இல்லை. ஆன்மிக இடுகைகளுக்கு மட்டும் தான் பின்னூட்டம் போட மாட்டீங்கன்னு நினைச்சா என்னோட எந்த இடுகைக்கும் நீங்க வர்றதில்லை (வந்தாலும் பின்னூட்டம் போடறதில்லை) அதனால படிக்கிறீங்களா இல்லையான்னே தெரியாம இருந்தது. இன்னைக்குப் படிச்சுட்டு சேந்தனுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றிகள் இராகவன்.

தேஜஸ்வினிக்கும் கேட்டவை எல்லாம் கிடைக்கின்றன. என்ன தம்பிப் பாப்பாவிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறாள் சில நேரங்களில். அவ்வளவு தான். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர்.

தமிழ் புரிந்தால் எழுதத் தெரியும் என்று பொருளா? எழுதத் தெரிந்தாலும் பதிவுகள் எழுதும் அளவிற்குத் தெரியும் என்று பொருளா? :-)

அவளும் பதிவெழுதத் தொடங்கிவிட்டால் கட்டாயம் என்னை வீட்டில் இருந்து துரத்திவிடுவார்கள். :-)

தேஜஸ்வினி இப்போது தான் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டு வருகிறாள். அ, ஆ, இ, ஈ, உ, ஊ வரை எழுதத் தெரியும். ப, ட, ம, க, த தெரியும். படம், பட்டம், கட்டம் போன்றவையும் தெரியும். பொள்ளாச்சி நசன் ஐயா அவர்களின் வழிமுறைப்படி கற்றுக் கொண்டு வருகிறாள். வேந்தன் அரசு ஐயா சொன்னது போல் ஒற்றெழுத்துகள் அவளைக் குழப்புகின்றன.

கோவி.கண்ணன் said...

//தம்பிக்கு ரெண்டு வயசு ஆகுது இன்னியோட (11 ஜனவரி).//

இன்னிக்கு தான் பார்த்தேன்.

சேந்தனுக்கு நல்வாழ்த்துகள் !

[குமரன், நெற்றிக் கண்ணுக்கு பயந்துதான் இந்த பக்கம் வருவதில்லை, வந்தால் எதாவது பின்னூட்டம் போடுவேன், உங்களுக்கு ஆகாது, எதுக்கு வம்பு!!!]

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி கோவி.கண்ணன்.

பின்னூட்டம் போடாட்டியும் வந்து படிங்க. நான் கடியாகிற மாதிரி பின்னூட்டம் வந்தா போடாம போங்க. நான் உங்க இடுகைகளை எல்லாம் படிக்கிற மாதிரி. :-)

Kavinaya said...

குழந்தைக்கு தாமதமான ஆனால் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சோமாஸ்கந்தன் பதிவு பொருத்தம் :) விட்டுக் கொடுக்கும் குட்டித் தமக்கைக்கு தனிப்பட்ட வாழ்த்துகள்!

குமரன் (Kumaran) said...

நன்றி அத்தை. நன்றி அத்தை.

எதுக்கு ரெண்டு நன்றின்னு கேக்குறீங்களா? அத்தைக்கு ரெண்டு குழந்தைகளும் ஒரே நேரத்துல நன்றி சொல்ல மாட்டாங்களாம். அப்படி சொன்னா யாரு சொன்னாங்க யாரு சொல்லலைன்னு உங்களுக்குத் தெரியாமப் போயிடுமாம். :-)