Monday, March 01, 2010

காசி போகும் வழியில் கருங்குரங்கு; காசிராமன் மகனோ செங்குரங்கு! - ஒரு சௌராஷ்ட்ர தாலாட்டு

தாலாட்டு பிறந்த கதை:

நண்பர் ஓபுளா விஸ்வேஷுக்கு அவரது தாயார் பாடிய தாலாட்டில் இந்த இரு வரிகள் தான் நினைவில் இருந்திருக்கிறது.

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு

நண்பர்கள் பலரிடமும் கேட்டுப் பார்த்திருக்கிறார். யாருக்கும் தெரியவில்லை. அண்மையில் அவர் மதுரைக்குச் சென்றிருந்த போது அவருடைய நண்பர் மருத்துவர் V. L. R. கணேஷ் அவருக்காக இந்தத் தாலாட்டை எழுதித் தந்திருக்கிறார். அந்தப் பாட்டை விஸ்வேஷ் இசையுடன் அவருடைய மகள் பாடி யூட்யூபில் இட்டிருக்கிறார். இதோ அந்தப் பாடல்.



ந:ன கீஷ்டு எல்லெ ஐகிலிடே பா
சொன்னொ சொகன் காமுன் தூ கென்னொ சே பா
தின்னு ஜியெத் பல்ல அவ்னா இஞ்சிலிடே பா
மொன்னுமூ எல்லெ தூ தொவ்லி இஞ்சி பா

nhanna keeshtu elle aikilide baa
sonno sogan kaamun thoo kenno sE baa
dhinnu jiyeth phalla avnaa injilide baa
monnumoo elle thoo thouli inji baa

சின்ன கண்ணா இதை கேட்டுக் கொள்ளப்பா
பொன்னைப் போன்ற செயல்கள் நீயும் செய்ய வேண்டுமப்பா
தினம் போனால் பின்னர் வராது தூங்கிடு அப்பா
மனத்தில் இதை நீ வைத்துத் தூங்கப்பா

பள்ளாம் சேத்தெ கீஷ்டு இஞ்சிலிடே பா
பொள்ளாம் சேத்தெ குள்ளெ சோன் வத்த கென்ன பா
சொக்கட் சொவ்தி மெனி ஹொய் தூ தெக்கன்ன பெடா
பஸ்கடூ லோக் அவய் த:க்குனகொ பா

paLLaam sEththe keeshtu injilide baa
poLLaam sEththe gullE sOn vaththa kenna baa
chokkat chovthi meni hoi thoo thekkanna betaa
paskadoo lOg avai dhakkunakO baa

தூளியில் இருக்கும் கண்ணா தூங்கிடு அப்பா
பழத்தில் இருக்கும் இனிப்பு போல் பேச வேண்டுமப்பா
நன்கு படித்து ஆளாகி நீ காட்டணும் மகனே
பின்னாடியே உலகம் வரும் பயப்படாதே அப்பா

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு

நஜ்ஜெ நாவுன் கொ:ப்பிம் க:ட ஹோனா
லஜ்ஜெ ஹோத்தெ காமுன் தூ கெர ஹோனா
ஹொல்லொ ஜாத்தக் தி:ல்ல காமுன் கெர ஹோனா
மெல்லரியொ வத்த தூ தொப்ப ஹோனா

najje naavun khobbim khada hOnaa
lajje hOththe kaamun thoo kera hOnaa
holla jaaththak dhilla kaamun kera hOnaa
mellariyo vaththa thoo thoppa hOnaa

கெட்ட பெயர் எப்போதும் எடுக்கக் கூடாது
வெட்கம் தரும் செயல் நீ செய்யக் கூடாது
மேலே போக கெட்ட செயல் செய்யக் கூடாது
சொன்ன வார்த்தை நீ தப்பக் கூடாது

உஜெ காமு ஹவ்டன் சொட ஹோனா
பஜெ சேத்த ந்யாவ் வாடும் ஜொடுஞ்சுனோ பா
போடு பா:துக் கொங்கி போடுர் ஹன ஹோனா
வாடுனு மச்சாய் கா:ல் பொட ஹோனா

uje gaamu howdan soda hOnaa
paje sEththe nyaav vaatum jodunchuno baa
pOtu bhaathuk konki pOtur hana hOnaa
vaatunu machchaai khaal poda hOnaa

பிறந்த ஊர் நினைவு விடக்கூடாது
வேண்டுவதை நியாய வழியில் சம்பாதிக்கணும்பா
வயிற்றுச் சோற்றுக்காக யார் வயிற்றிலும் அடிக்கக் கூடாது
வழிகள் மாறலாம் கீழே விழக்கூடாது

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு

மாய் பாபு வத்த தூ தெட்ட ஹோனா
காய் ஹொயெத் ஹோந்தோ ஹாத் சொட ஹோனா
கௌலான் சொகன் அஸ்கி தெனு செரி ஜிவ்ன பா
ஹவ்லகொன் கொங்கிகு ஹவ்டுனகொ பா

maai baapu vaththa thoo thetta hOnaa
kaai hoyeth hOntho haath soda hOnaa
koulaan sogan aski thenu cheri jivna baa
houlakon konkigu houtunako baa

அம்மா அப்பா பேச்சு நீ தட்டக் கூடாது
என்ன ஆனாலும் ஆகட்டும் கை விடக்கூடாது
காக்கை போல எல்லோரும் சேர்ந்து வாழணுமப்பா
எளிமையாக யாரையும் எண்ணாதேயப்பா

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி
பள்ளாம் சேத்த கீஷ்டு இஞ்சிலிடே பா
பள்ளாம் சேத்த கீஷ்டு இஞ்சிலிடே பா

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi
paLLaam sEththe keeshtu injilide baa
paLLaam sEththe keeshtu injilide baa

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு
தூளியில் இருக்கும் கண்ணா தூங்கிடு அப்பா
தூளியில் இருக்கும் கண்ணா தூங்கிடு அப்பா

6 comments:

Sivasubramanian said...

ஆஹா... அவ்ரோ வத்தாம் இக்க சோகட் கீத் சேத்தே துமி தெல்லெ ஜுக்கு ப்ரய்யாஸ் பொடி அஸ்கி தென்கொ கலடிரியோ ஜுக்கு ஸொந்தொஸ்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் மகனோ செங்குரங்கு//

அப்படின்னா என்ன குமரன்?

//பிறந்த ஊர் நினைவு விடக்கூடாது
வயிற்றுச் சோற்றுக்காக யார் வயிற்றிலும் அடிக்கக் கூடாது
வழிகள் மாறலாம் கீழே விழக்கூடாது//

தாலாட்டில் பண்பூட்டல்/பண்பு ஊட்டல் - ரெண்டுமே நல்லா இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அம்மா அப்பா பேச்சு நீ தட்டக் கூடாது//

இது கொஞ்சம் கஷ்டம் ! :)

//என்ன ஆனாலும் ஆகட்டும் கை விடக்கூடாது//

இது சர்வ சத்தியம்! சர்வ நிச்சயம்!

//காக்கை போல எல்லோரும் சேர்ந்து வாழணுமப்பா
எளிமையாக யாரையும் எண்ணாதேயப்பா//

Yes!

//கெட்ட பெயர் எப்போதும் எடுக்கக் கூடாது
வெட்கம் தரும் செயல் நீ செய்யக் கூடாது//

:)

மீறி..
வெட்கம் தரும் செயல் செய்தால் வீம்பு கொள்ளாதே..
வெட்கம் தரும் செயல் செய்தால் வெட்கப் படணும்!
கெட்ட பெயர் எடுத்தால் பணிவு கொள்ளணும்!
அதை நல்லபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக் கொள்ளணும்!

தாலாட்டை எனக்காக கொஞ்சம் மாத்திக்கிட்டேன் குமரன் அண்ணா! :)

சிவமுருகன் said...

//மீறி..
வெட்கம் தரும் செயல் செய்தால் வீம்பு கொள்ளாதே..
வெட்கம் தரும் செயல் செய்தால் வெட்கப் படணும்!
கெட்ட பெயர் எடுத்தால் பணிவு கொள்ளணும்!
அதை நல்லபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக் கொள்ளணும்!

தாலாட்டை எனக்காக கொஞ்சம் மாத்திக்கிட்டேன் குமரன் அண்ணா! :)//


This is also super...

குமரன் (Kumaran) said...

jukku sonthOs Sivasubramanian.

குமரன் (Kumaran) said...

அது விஸ்வேஷுடைய அன்னையார் பாடிய தாலாட்டுப் பாடலில் அவருக்கு நினைவில் நின்ற வரிகள் இரவி. ஏதேனும் மறைபொருள் உண்டா என்று பார்க்க முழுப்பாடலும் தெரியவேண்டும். அது தான் யாருக்கும் தெரியவில்லை.