Wednesday, December 03, 2008

சுடும் நிலவு சுடாத சூரியன்...

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

(சுடும் நிலவு)





இமை அடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதி இருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கடிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சை தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்

நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

(சுடும் நிலவு)

மழைத் துளி நமக்கு சமுத்திரம் ஆகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய் போகும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்
மத்த பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகம் ஆகும்
மிருகம் தூங்கி தெய்வம் ஆகும்

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

(சுடும் நிலவு)

படம்: தம்பி
வெளிவந்த வருடம்: 2006
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்
இயற்றியவர்: வைரமுத்து

10 comments:

Unknown said...

ரொம்ப நல்ல பாட்டு பாஸ்...
இதுல உன்னியும் ஹரிணியும் ரசிச்சு பாடிருப்பாங்க...
வைரமுத்து விளையாடிருப்பார்...

Unknown said...

குமரன்,

இந்த பாடல் "ரீத கௌள" ராகத்தில் போடப்பட்ட ராகம். அதான் இனிமை.
இதெல்லாம் சுமார்.

Maestro ராஜா "ரீத கௌள" ராகத்தில் போட்ட பாட்டுக்கள்.

சின்ன கண்ணன்(கவிக்குயில்),மீட்டாத ஒரு வீணை(பூந்தோட்டம்)ராமனின் கதை கேளு (சிப்பிக்குள் முத்து) ,தலையை குனியும் (ஒரு ஓடை நதியாகிறது)

மீட்டாத ஒரு வீணை(பூந்தோட்டம்) ராஜா பின்னி எடுப்பார்..இனிமையோ
இனிமை..

கிழ் உள்ளதை அப்படியே copy செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து “meetatha veenai" பாட்டை double click செய்யுங்கள். கேட்டு விட்டு இதே பதிவில் உங்கள் கருத்தைப் போடுங்கள்.

http://www.guruji.com/music?hl=en&q=ponthottam

குமரன் (Kumaran) said...

ஆமாம் கமல். முந்தியே கேட்டிருந்தாலும் நேத்து தான் இரசிச்சுக் கேட்டேன். உடனே போட்டாச்சு. :-)

குமரன் (Kumaran) said...

வாங்க கே. இரவிசங்கர். நீங்க சொன்ன பாட்டெல்லாம் கேட்டுப் பாக்குறேன். 'தலையைக் குனியும் தாமரையே' பாட்டு மட்டும் கேட்டதா நினைவிருக்கு. நல்லா இருக்கும்.

எனக்கு இராகம், இசை இதுல எல்லாம் ஒன்னும் தெரியாதுங்க. பாடல் வரிகள், பாடிய முறை, இசை இப்படி ஏதோ ஒன்னு இல்லாட்டி எல்லாமும் சேர்ந்து 'கேட்டதில பிடிக்குது'ன்னு வகைப்படுத்திப் போட வைக்குது. எனக்கு இசையறிவு இல்லாததால 'மீட்டாத வீணை' எனக்கு அவ்வளவா சுவைக்கலை.

Machi said...

குமரன் நமக்கு இசையில அவ்வளவு ஞானமில்லைங்க அதனால சும்மா எப்பவாச்சும் பாட்டு கேக்கறதோட சரி. அதுவும் பழைய பாட்டு தான்.

குமரன் (Kumaran) said...

இன்னும் என் பதிவெல்லாம் பாக்குறீங்களா குறும்பன்? ரொம்ப நாளா காண்கலையே. அதான் கேட்டேன். :-)

பழைய பாட்டு எதெல்லாம் பிடிக்கும்ன்னு சொல்லுங்க. எனக்கும் பிடிச்சா பிடிச்சு இங்கன போட்டுறலாம். :-)

இலவசக்கொத்தனார் said...

ரீதிகௌளைன்னு சொல்ல வந்தேன். ரவிசங்கர் ஏற்கனவே வந்து சொல்லிட்டாரு!!

குமரன் (Kumaran) said...

எப்படியோ - சொல்ல வந்ததுக்கு நன்றி கொத்ஸ். :-)

Kavinaya said...

பாடல் கேட்டிருந்தாலும் வரிகளை இப்பதான் கவனிக்கிறேன். முதல் ரெண்டு வரிதான் எனக்குப் பிடிச்சது :)

பழைய பாட்டுல எவ்ளோ இருக்கு! முதல்ல "இந்த காற்றுவெளியிடை கண்ணம்மா" பாட்டை போடுங்களேன்...

குமரன் (Kumaran) said...

தேடிப் பார்த்துக் கிடைச்சா போடறேன்கா. :-)