அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெரும்ஜோதி மந்திரத்தை அடியேனின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணபிரேம் ஓதி ஒலிப்பேழையாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டிருந்தார். எனக்கும் ஒரு ஒலிப்பேழையைத் தந்திருந்தார். இன்றைக்கு அதனை யூட்யூபில் வள்ளலார், அவரது ஜோதித் திருவுரு, அவருடன் தொடர்புடைய இடங்கள் போன்ற படங்களுடன் ஏற்றி எனக்குச் சுட்டி அனுப்பியிருந்தார். அவர் அதனை அனுப்பிப் பத்தே நிமிடங்கள் தான் ஆகின்றன. இன்றைக்கு திருக்கார்த்திகைக்கு அருட்பெருஞ்ஜோதி மந்திரம் கேட்கக் கிடைத்ததும் வள்ளலாரின் திருவுருவ அருவ தரிசனங்கள் கிடைத்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
7 comments:
அருமையான ஒலிக்கோர்ப்பு! நல்லா பாடி இருக்காரு! நல்ல மெட்டு!
தனிப் பெரும் கருணை
அருட் பெரும் ஜோதி!!!
தரிசன வைபவத்துக்கு நன்றி குமரன்!
கேட்டு மகிழ்ந்தேன் குமரா, வழங்கியமைக்கு நன்றிகள்!
பார்த்து, கேட்டு, புளகாங்கிதம் அடைந்தேன்.
"வாடிய பயிரையெல்லாம் கண்டு வாடினேன்" என்று வருந்திய அந்த மெய்ஞானியை நினைத்து கண்கள் பனித்தன.
பகிர்தலுக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி, குமர!
ஆமாம் இரவி. மனதிற்கு அமைதியைத் தரும் வகையில் பாடுவார் நண்பர். மீரா படப்பாடல்களையும் நன்கு பாடுவார். பாடலின் பொருளை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு. :-)
மிக்க மகிழ்ச்சி ஜீவா.
ரொம்ப நல்லாருக்கு. பகிர்ந்தமைக்கு நன்றி குமரா.
நன்றி கவிநயா அக்கா
Post a Comment