Saturday, May 05, 2007

ஒளி ஒலியில் இராமாயணம்

SriRam

SriRam

10 comments:

G.Ragavan said...

சற்று அதிகப்படியாகவே தெரிகிறது. இப்படி நல்லவர்கள் ரொம்ப நல்லவர்களாகவும் கெட்டவர்கள் ரொம்பக் கெட்டவர்களாகவும் ஆகிக்கொண்டேயிருக்கிறார்கள் காலங்காலமாக. இது போன்றத் திரிபுகள் ஏற்கனவே எக்கச்சக்கம். என்னவோ போங்கள். உங்களுக்கெல்லாம் பிடித்திருந்தால் சரி.

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
ராவணனுக்கு பல நல்ல குணங்கள் இருந்திருந்தாலும் அவனுக்கு இருந்த பெண்ணாசையும், ஆணவமும் அவனுக்கு அழிவை தேடி தந்தது. அவ்வளவு தான் கதை...

இது எல்லாம் கதை தாங்க. ரொம்ப ஃபீலிங்காக வேண்டாம்...

குமரன் (Kumaran) said...

எந்த இலக்கியம் தான் இதனைச் செய்யவில்லை இராகவன்? கந்தபுராணமோ எந்தபுராணமோ எல்லாமே அப்படி தானே? நம் புரிதலின் படி தான் எல்லாமே இருக்கவேண்டும் என்றால் எப்படி?

இந்தப் படத்தில் எதுவும் புதிதாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதுவரை எழுத்தில் படித்ததை இங்கே ஒலி ஒளியில் பார்க்கிறோம். அவ்வளவு தான். அதே போல் பல வகை இராமாயணங்களில் இல்லாத ஏதோ ஒன்றை இங்கு காட்டியதாகத் தெரியவில்லை. அதனால் திரிபு என்பதும் இதனை விவரிக்கச் சரியான சொல் இல்லை.

கோவி.கண்ணன் said...

இந்த வீடியோ இராமயணத்தைவிட இராமர் பாலாயணத்தைத் தான் அதிகமாக வெளிச்சமிடுது.
:))

குமரன் (Kumaran) said...

கண்ணன் அண்ணா. அவரவர் பார்வையில் தோன்றுவது தான் மற்றவர்களிடம் தெரிகிறது போலும். :-) எனக்கு முழு இராமாயணமும் தெரிகிறது; உங்களுக்கு ஒரு பகுதி மட்டுமே தெரிகிறது.

இராமர் பாலத்தைப் பற்றி பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி. இராமாயணத்தின் படி இராமரின் திருநாமத்தை எழுதிய கற்கள்/பாறைகள் நீரில் மிதந்தன; அப்படித் தான் இராமர் பாலம் முழுதுமே கட்டப்பட்டது. இப்போது இராமர் பாலம் என்று சொல்லப்படுவது அப்படி மிதக்கும் கற்களால் மட்டுமே ஆனாதா? இல்லை ஒரு திட்டு மாதிரி இருக்கிறதா? ஒரு திட்டு மாதிரி இருக்கிறதென்றால் இராமாயணம் சொல்வது பொய்யா இல்லை நாசா சொல்வது பொய்யா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்படி நல்லவர்கள் ரொம்ப நல்லவர்களாகவும் கெட்டவர்கள் ரொம்பக் கெட்டவர்களாகவும் ஆகிக்கொண்டேயிருக்கிறார்கள் காலங்காலமாக//

அட, ஆமாம் ஜிரா
நேத்து பாத்த ஸ்பைடர் மேன் கூட நீங்க சொன்னது மாதிரி தான் தெரியுது! :-)

குமரன்
இந்த வீடியோவில் இன்னொன்னு கவனிச்சீங்களா? சீதையை அபகரிக்கும் முன் ராவணன் கையெடுத்து சாமி கும்பிடுகிறார். அப்புறம் தான் வேடம் மாறுகிறார்! :-)

ஆகக் கூடி, கெட்டவர்கள் ரொம்பக் கெட்டவர்களாக ஆக வில்லை.
நல்லவர்கள் தான் விபரீத ஆசையால் கெட்டவர்களாக மாறுகிறார்கள். சரியாகத் தான் காட்டி உள்ளார்கள்!:-)

கோவி.கண்ணன் said...

//இராமர் பாலத்தைப் பற்றி பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி. இராமாயணத்தின் படி இராமரின் திருநாமத்தை எழுதிய கற்கள்/பாறைகள் நீரில் மிதந்தன; அப்படித் தான் இராமர் பாலம் முழுதுமே கட்டப்பட்டது. இப்போது இராமர் பாலம் என்று சொல்லப்படுவது அப்படி மிதக்கும் கற்களால் மட்டுமே ஆனாதா? இல்லை ஒரு திட்டு மாதிரி இருக்கிறதா? ஒரு திட்டு மாதிரி இருக்கிறதென்றால் இராமாயணம் சொல்வது பொய்யா இல்லை நாசா சொல்வது பொய்யா? :-)//

கருங்கடலில் மிதக்க முடியும் என்கிறார்கள். உப்பு அதிகம் ஆக ஆக நீரின் அடர்த்தி அதிகரிக்கும் உள்ளே செல்லக் கூடிய பொருள்கள் கூட மிதக்கும், இராமயணம் நடந்ததாக சொல்லப்படுகின்ற காலத்தில்(?) கடல் நீரில் இந்த அளவுக்கு உப்பு இருக்க வாய்ப்பு இல்லை. பாறை மிதந்ததாக சொல்கிறீர்கள் வேறு. எனக்கு ஒன்றும் புரியவில்லை. :)

குமரன் (Kumaran) said...

இராகவனுக்கு எது பிடிக்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை இரவிசங்கர். இராகவனை நல்லவனாகக் காட்டினார்கள் என்றால் அது பல வருடங்களாக நடப்பது தானே; இராவணனைத் தீயவனாகக் காட்டினார்கள் என்றால் நீங்கள் சொல்வது போல் இந்த சூப்பர் ஹீரோ காலத்தில் அப்படி காட்டுவது தானே வழக்கமாக இருக்கிறது. பத்துத் தலையும் ஒரே வரிசையில் இருக்கும் படி முன்பெல்லாம் படம் எடுப்பார்கள்; இந்தப் படத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி புதிதாக எதுவும் இருப்பது போல் தோன்றவில்லை.

ப்ரசன்னா said...

//ஆகக் கூடி, கெட்டவர்கள் ரொம்பக் கெட்டவர்களாக ஆக வில்லை.
நல்லவர்கள் தான் விபரீத ஆசையால் கெட்டவர்களாக மாறுகிறார்கள். சரியாகத் தான் காட்டி உள்ளார்கள்!:-)//
இப்படித்தான் எனக்கும் தோன்றியது... எதுவும் புதிதாக இல்லை. இருப்பதை மிகைப்படுத்திய மாதிரியும் இல்லை.

குமரன் (Kumaran) said...

நன்றி ப்ரசன்னா.