Friday, July 09, 2010

ஆத்திசூடி சொல்லும் அரனை மறவேல்!

ஒளவையாரின் ஆத்திசூடியைப் பற்றி நம்மில் நிறைய பேர் கேள்விபட்டிருக்கிறோம். சிறு வயதில் அதில் வரும் சில சூத்திரங்களையும் படித்திருக்கிறோம். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்று உயிரெழுத்துகளைக் கொண்டு வரிசையாக வரும் பன்னிரண்டு சூத்திரங்களையும் படித்திருக்கிறோம். ஆத்திசூடி என்றாலே அவ்வளவு தான் என்றொரு எண்ணம் இது நாள் வரை எனக்கு இருந்தது.

ஆத்திசூடி என்று இந்த நூல் தொடங்குவதால் இந்த நூல் இப்பெயரைப் பெற்றது என்று ஓரிடத்தில் படித்தேன். அறம் செய விரும்பு என்று தானே இந்த நூல் தொடங்கும் என்ற ஐயம் எழுந்ததால் இணையத்தில் தேடிய போது, இந்த நூலின் கடவுள் வாழ்த்து ஆத்திசூடி என்று தொடங்குவதைக் கண்டேன். அதனைப் பற்றி இங்கே இப்போது எழுதவில்லை.

இந்நூலின் இணையப் பதிப்புகள் பலவற்றிலும் காணப்படும் ஒரு தவறினைச் சுட்டிக்காட்டுவதே இந்த இடுகையின் நோக்கம்.

உயிர் எழுத்துகள், ஆய்தம் இரண்டு வகைகளையும் எழுதிய பின்னர் மெய்யெழுத்துகளின் வரிசையில் சில சூத்திரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. (மெய், உயிர்மெய் அடிப்படைகளிலும் ஆத்திசுடி சூத்திரங்களைச் சொல்கின்றது என்பதும் இன்று தான் தெரியும்). மெய்யெழுத்துகளின் வரிசையைப் படித்துக் கொண்டு வரும் போது தான் 'அரனை மறவேல்' என்ற வரியைப் படித்தேன். ரகரத்திற்கு ஏற்கனவே 'அரவம் ஆட்டேல்' என்று ஒரு வரியைப் படித்தோமே; மீண்டும் எதற்கு இன்னொரு தடவை ரகரத்திற்கு ஒரு வரி வருகிறது என்று ஒரு ஐயம். மெய்யெழுத்துகளின் வரிசையைப் பார்த்தால் அந்த இடத்தில் றகரத்திற்கான வரி வரவேண்டும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் என்ற மெய்யெழுத்துகளின் வரிசையில் ளகரத்திற்குப் பின்னரும்,னகரத்திற்கு முன்னரும் வருவது றகரம். அதனால் இந்த வரி 'அறனை மறவேல்' என்று இருந்திருக்க வேண்டும். யாரோ அறியாமலோ அறிந்தோ இதனை 'அரனை மறவேல்' என்று எழுதிவிட்டார்கள். அந்தத் தவறு இணையத்தில் அப்படியே பரவுகிறது.

32 comments:

குமரன் (Kumaran) said...

சரியாக 'அறனை மறவேல்' என்று சொல்லும் ஆத்திசூடியை இட்டுள்ள வலைப்பக்கங்கள்:

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t13922.html

http://rexarul.blogspot.com/2005/02/maxim-30-never-forget-virtue.html

http://www.facebook.com/note.php?note_id=384053659709

இன்னும் நிறைய பக்கங்கள் இருக்கின்றன. சரியான வரியைச் சொல்லும் பக்கங்கள் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி!

மதுரையம்பதி said...

//இந்த வரி 'அறனை மறவேல்' என்று இருந்திருக்க வேண்டும். யாரோ அறியாமலோ அறிந்தோ இதனை 'அரனை மறவேல்' என்று எழுதிவிட்டார்கள். அந்தத் தவறு இணையத்தில் அப்படியே பரவுகிறது.//

ஹிஹிஹி....இந்த வரி அருமை குமரன்....இதான் குமரன் டச் என்பதோ? :) [நேற்று நீங்க மதுரைக் குசும்பைப் பற்றிச் சொன்னதும் இன்றைக்கு நினைவுக்கு வந்ததை மறைக்க முடியல்லை :))]

குமரன் (Kumaran) said...

:-) நேற்று இதனை எழுதி முடித்த பிறகு இன்னொரு நூலில் யார் இதனை அறிந்தோ அறியாமலோ சொன்னார் என்று படித்தேன் மௌலி. ஆனால் அது ஆதாரமில்லாத அவதூறு போல் தோன்றியது. அதனால் தான் அந்த நூல் என்ன சொன்னது என்று சொல்லவில்லை இப்போதும். :-)

R.DEVARAJAN said...

’அறனை மறவேல்’ சரியான பாடம்; ஆனால் தெய்வத்தின் குரலில் கூட
‘அரனை மறவேல்’ என்றுதான் எடுத்தாளப்பட்டுள்ளது.
இணையம் தோன்றுவதற்கு முன்பி ருந்தே பிழை தொடர்கிறது

தேவ்

குமரன் (Kumaran) said...

தேவ் ஐயா, நீங்கள் சொன்ன செய்தியைத் தான் நான் இன்னொரு நூலிலும் படித்தேன். ஆனால் அது தெய்வத்தின் குரலில் வந்தது என்று அந்த நூல் சொல்லவில்லை - அதனால் ஆதாரமில்லாத அவதூறோ என்று எண்ணினேன். ஸ்மார்த்தரான நீங்களும் சொல்வதால் இது அவதூறு இல்லை போல் தெரிகிறது. இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை - அதனால் கேட்கிறேன்; தெய்வத்தின் குரலில் இது ஒரு அச்சுப்பிழையாக இருக்க வாய்ப்புண்டா? பெரியவர் இந்த வரியை 'அரனை மறவேல்' என்று சொல்லிவிட்டு அதற்கு விளக்கமாக 'சிவபெருமானை மறக்கக்கூடாது என்று ஒளவையார் சொல்கிறார்' என்று சொல்கிறாரா? அப்போதும் அது வாய்மொழியாக யாரோ சொன்னதை வைத்துப் பெரியவர் சொன்னார் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.

மதுரையம்பதி said...

குமரன், நீங்க கேள்வி என்னிடம் கேட்கவில்லை என்றாலும் பதில் கொடுக்கிறேன். கோச்சுக்காதீங்க. :) தெய்வத்தின் குரலில் பெரியவர் சொல்லியது இறைவழிபாடு என்ற அளவில், இறையை மறக்கக்கூடாது என்பதற்காகவே...அங்கு அரன் ஹரி என்றெல்லாம் ஏதும் சொன்னதாக நினைவில்லை....:)

புத்தகம் இருக்கிறது, இன்னொருமுறை பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.:)

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. பார்த்து சொல்லுங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அ"ற"னை மறவேல்!

மத்ததெல்லாம் கபிலர், பரணர் போன்றோர் கபில தேவ நாயனார், பரண தேவ நாயனார் ஆனா மாதிரி தான்! நல்ல வேளை...வள்ளுவ தேவ நாயனார்-ன்னு ஆக்கலை! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தாங்க தெய்வத்தின் குரல் பகுதி:
http://www.kamakoti.org/tamil/part1kurall47.htm

இதில் காஞ்சிப் பெரியவர் "அரனை" மறவேல் என்பதாகத் தான் எடுத்துக் காட்டி...
ஒளவை, சிவபெருமானை (அரனை) மறவேல்-ன்னு சொல்லியுள்ளாள் பாருங்கள்-ன்னு உபன்யசிக்கிறார் :))

//°குழந்தையாக இருந்தபோதே இந்த ஸமரச உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான் அவ்வைப்பாட்டி ஆத்திச்சுடியில் 'அரனை மறவேல்'என்றும், 'திருமாலுக்கு அடிமை செய்'என்றும் உபதேசம் செய்கிறாள்.//

திருமாலுக்கு அடிமை செய்-ன்னு எல்லாம் ஒளவை எழுதினாளா-ன்னே சந்தேகம் தான்! மொத்த ஆத்திசூடியும் பொதுப்படையாத் தான் இருக்கு! தெய்வம் இகழேல்-ன்னு வேணும்-ன்னா இருக்கு! ஆனால் 'அரனை மறவேல்', 'திருமாலுக்கு அடிமை செய்’ - இதெல்லாம் பின்னாளில் சேர்த்து விட்டாங்களோ என்னமோ? :)

சேர்த்தது தான் சேர்த்தாங்க, கொஞ்சம் பாத்துச் சேர்க்க வேணாமா? அ"ர"வம் ஆட்டேல்-ன்னு வந்துருச்சே! அப்படின்னா அடுத்து அ"ற"னை மறவேல்-ன்னு தானே வரும்! இப்படி மாத்தறமே-ன்னு கொஞ்சம் யோசிக்க வேணாம்? :))

இத்தினிக்கும் அடுத்த அடி - அ"ன"ந்தல் ஆடேல்...ள, ற, ன-ன்னு sequence வருதே-ன்னு கூட பார்க்காம, அடிச்சி ஆடி இருக்காக! :)

Radha said...

http://www.geetham.net/forums/archive/index.php/t-7905.html

From the link above:
30. அரனை மறவேல்
...
...
56. திருமாலுக்கு அடிமை செய்
..
..
60. தெய்வம் இகழேல்
But I am not sure whether this is what our paati said. :)

Btw, I would like to point out that "மறவேல்" has the "ற". :)
Having both "ர",and "ற" in adjacent words as in "அரனை மறவேல்" will help us learn the difference in pronunciation. For all we know our paati might have intentionally kept it that way. :))

~
Giridhaariyin,
Radha

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Btw, I would like to point out that "மறவேல்" has the "ற". :)//

Mr. Giridhaariyin Radha :)
How much ever you point out, that the sequence is not broken bcoz of the "ற" in "அர(ற)னை மறவேல்"...
still this logic is so illogical :)

ஆத்திசூடியில், எங்கள் பாட்டி அடுக்குவது = உயிர் எழுத்துக்கள் + மெய் எழுத்துக்கள், அந்த வரிசையிலேயே! எனவே, அந்த தொடர்ச்சியை (sequence), அவள் முதல் (அ) இரண்டாம் எழுத்திலேயே காட்டி விடுகிறாள்!

சான்றாக...
"அ"றம் செய்ய விரும்பு
"ஆ"றுவது சினம்
...
...
"ஞ"யம்பட உரை.
இ"ட"ம்பட வீடு எடேல்
இ"ண"க்கம் அறிந்து இணங்கு
"த"ந்தை தாய்ப் பேண்
"ந"ன்றி மறவேல்
etc etc...

எங்கெல்லாம் முதல் எழுத்து தமிழில் வராதோ, அப்போது, அங்கே ரெண்டாம் எழுத்திலே வைக்கிறாள் (ண,ழ)!
அதன்படி அர(ற)னை மறவேல் என்பதில் வரும் "ற, "மறவேல்"-இல் இல்லை! "அர(ற)"னில் தான் உள்ளது! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஒப்புக்கோங்க! :) இல்லீன்னா பாட்டி கிட்ட சொல்லிக் கைத்தடியை உங்க மேல பாய்ச்சச் சொல்லுவேன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காஞ்சிப் பெரியவர் கிட்ட இருந்த புத்தகத்தில் பிழையாக அச்சாகி இருக்கலாம்! அதனால் அவரும் அப்படி தவறாகச் சொல்லிவிட்டிருக்கக் கூடும்!

ஆனால் பிழை என்று தெரிந்த பின், திருத்திக் கொள்வது அவர் குணம்! நாமும் அவ்வழியே நிற்றலே சால்பு!

காஞ்சிப் பெரியவர் சொன்னார் என்பதே முடிந்த தரவாகி விடாது! அன்னாரின் பண்பும்/நற்குணங்கள் மட்டுமே வைத்து, அவர் சொல்வதெல்லாம் பிழையற்றதாகத் தான் இருக்கும் என்று முடிவு கட்டி விட முடியாது! அப்படிப் பார்த்தால் தெய்வத்தின் குரலில், வரலாறு மற்றும் தமிழ் மொழி தொடர்பான பொருந்தாத தகவல்களும் ஆங்காங்கே இருக்கத் தான் செய்கிறது!

மூல நூல்களைப் பொருத்திப் பார்த்து, Sequential-ஆக ஒத்து வருகிறதா என்று பார்ப்பதும் ஆய்வே!
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
அதுவே அறம்!
அறனை மறவேல்!!

மதுரையம்பதி said...

குமரன், இப்போது தான் தெய்வத்தின் குரலைப் பார்த்தேன்...அரனை மறவேல், திருமாலுக்கு அடிமைசெய் என்ற இரு வரிகளையும் சேர்த்துச் சொல்லி, இரு தெய்வங்களுக்கும் ஒற்றுமையைக் கூறியிருக்கிறார்.

Radha said...

Dear KRS,
I hope you don't kill me for not accepting your viewpoint. :)
I am more interested in the message given by Kanchi Periyavar rather than logic. :) Even if its a mistake the message impresses me.

Btw, I hope you read the disclaimer that I made in my previous comment.
"I am not sure whether this is what our paati said. :)"

~
Giridhaariyin,
Radha

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@Radha
//I hope you don't kill me for not accepting your viewpoint. :)//

No No...Itz my pleasure killing you Radha :)))

//I am more interested in the message given by Kanchi Periyavar rather than logic. :)//

Thatz fine...
Anybody can read any message in any statement. Thatz left to their own whims & fancies. But truth is what that prevails!

காபி-ல உப்பு போட்டுக் கொடுத்த பின்னால,
காபி உப்பா இருக்கா-ன்னு முக்கியமில்லை,
உப்பிட்டவரை உள்ளளவும் நினை-ங்கிற மெசேஜ் தான் எனக்கு முக்கியம்-ன்னு விதம் விதமா ஞான பரமா பேசலாம்!

ஆனால் இந்தக் காபி-ல உப்பு கரிப்பதென்னவோ உண்மை தான்! அதை மாற்ற முடியாதே! :)

//Even if its a mistake the message impresses me//

Thanks for admitting that itz a mistake by kanchi periyavar :)

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி அண்ணா

//தெய்வத்தின் குரலில் பெரியவர் சொல்லியது இறைவழிபாடு என்ற அளவில், இறையை மறக்கக்கூடாது என்பதற்காகவே...
அங்கு அரன் ஹரி என்றெல்லாம் ஏதும் சொன்னதாக நினைவில்லை....:)// என்று முதலில் உங்கள் இயல்பு நிலையில் இருந்து சொல்லி விட்டாலும்...

பிற்பாடு, மூலத்தைத் தேடிப் பிடித்து, அங்கு அரன் ஹரி என்றெல்லாம் சொன்னதாக ஒப்புக் கொண்டு, அதைப் பின்னூட்டியமைக்கும் நன்றி அண்ணா!

I like this approach in a fact based discussion.
Its natural that ppl talk from their own planes.
But when the fact is put across the table and verified, then the fact prevails.

Itz good that discussion is NOT people-centric, but fact-centric! Thanks Mouli aNNa.

குமரன் (Kumaran) said...

விபீஷணாழ்வார், கம்பநாட்டாழ்வார்ன்னு எல்லாம் ஆன மாதிரி தானே கபில தேவ நாயனார், பரணதேவ நாயனார் எல்லாம் ஆனார்கள்?! சரி தானா இரவி?! :-)

குமரன் (Kumaran) said...

ஒரு டிஸ்கி: இந்த இடுகை காஞ்சிப்பெரியவரின் கருத்து தவறென்று சொல்ல எழுதப்படவில்லை. அரியும் சிவனும் ஒன்று என்ற சமரச மனப்பான்மையைப் பெரியவர் தன் சொற்களாலும் செயல்களாலும் வற்புறுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அப்பெரியவரின் கருத்தில் எந்த மறுப்பும் இல்லை. இந்த இடுகை ஆசாரியர் பேச்சினைச் சொல்லும் தெய்வத்தின் குரலில் மட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் தவறாகக் குறிக்கப்படும் ஆத்திச்சூடியின் வரியைப் பற்றிச் சொல்வது மட்டுமே. ஆசாரியரே ஆனாலும் தவறு என்றால் பணிவாகச் சொல்ல வேண்டும் என்பதே நம் மரபு நமக்குக் காட்டிய வழி. அதனையே நாம் செய்வோம். யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

குமரன் (Kumaran) said...

இரவி,

ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஒளவைப்பாட்டி தானா அன்றி வேறு யாராவது எழுதி அவர் பெயரில் இட்டுவிட்டார்களா? ஒளவையார் எழுதியதே என்றாலும் எந்த ஒளவையார் எழுதியது? ஒரு பகுதியைத் தான் ஒளவையார் எழுதினாரா, மற்ற பகுதியை/களை மற்றவர் எழுதி இணைத்தனரா? இவை போன்ற கேள்விகளை இன்னொரு நாள் பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். இந்த இடுகை 'அரனை மறவேல்' vs. 'அறனை மறவேல்' என்ற ஒரு கருத்திற்கு மட்டுமே ஆனது.

குமரன் (Kumaran) said...

பாட்டி மட்டும் 'திருமாலுக்கு அடிமை செய்' என்று எழுதிவிட்டு 'அரனை மறவேல்'ன்னு எழுதாம விட்டிருக்கட்டும் - இந்தப் பாட்டி வைணவப்பாட்டின்னு சொல்லி ஒளவையாழ்வார்ன்னு கூப்புடத் தொடங்கிறலாம்! :-)

குமரன் (Kumaran) said...

இராதா, ஆசார்யர் சொன்ன கருத்து அருமையான கருத்து. ஆனால் அதற்காக, மிகத் தெளிவாகத் தெரியும் ஒன்றை பூசி மெழுகப் பார்த்தீர்களே? :-) இரவி சொன்னதைப் போல் முதல் எழுத்து வரிசையிலேயே ஆத்திசூடி அமைந்திருக்கிறது. தமிழிலக்கணப்படி எந்த எழுத்துகள் சொல்லின் முதல் எழுத்தாக வராதோ அவற்றை மட்டுமே இரண்டாவது எழுத்தாக அமைத்து வரிகள் உள்ளன. அதனால் அங்கே அ'ற'னை என்பதில் உள்ள றகரமே கணக்கில் வரும். இதுல இரவியோட கருத்து, குமரனோட கருத்து எல்லாம் இல்லைங்க. சரி எது, தவறு எது - அம்புட்டு தான். அதுவும் எந்த வரி சரி, எந்த வரி தவறு என்பது தான் பேச்சு; ஆசாரியரின் கருத்து சரியா தவறா என்ற பேச்சு இல்லை. அது எப்படியோ பின்னூட்டங்களில் வந்துவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்.

குமரன் (Kumaran) said...

ஆசாரியர் சொன்னது என்ன என்று சொன்னதற்கு நன்றி மௌலி.

Radha said...

// ஆனால் அதற்காக, மிகத் தெளிவாகத் தெரியும் ஒன்றை பூசி மெழுகப் பார்த்தீர்களே? :-) //
பூசி மெழுக எல்லாம் இல்லை குமரன். எனக்கு இது பாட்டி சொன்ன ஆத்திசூடி தானா என்பதிலேயே சந்தேகம் உண்டு என்பதை தான் தெரிவித்திருந்தேனே. இது மிக அப்பட்டமான ஒரு பிழை. The pattern is such an obvious thing for anybody to miss. பின்னர் ஒரு வீம்புக்காக... உண்மையை சொல்வதானால் ரவி எப்படி பதிலளிக்கிறார் என்பதை பார்பதற்காக..:)) "அரனை மறவேல்" என்றும் இருந்து இருக்கலாம் என்று சொன்னேன். எதிர்பார்த்தது போல ரவி பதில் அளித்து இருந்தார். :) இதுல ஒரு அற்ப சந்தோஷம். :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எதிர்பார்த்தது போல ரவி பதில் அளித்து இருந்தார். :) இதுல ஒரு அற்ப சந்தோஷம். :))//

ஹா ஹா ஹா

ஹோய் ராதா...உன் அற்ப சந்தோஷம் கண்டு அடியேன் அதிக சந்தோஷம்! :))

//உண்மையை சொல்வதானால் ரவி எப்படி பதிலளிக்கிறார் என்பதை பார்பதற்காக..:))//

அடா அடா அடா
என்னா ஒரு ரவீஈஈஈ பாசம்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விபீஷணாழ்வார், கம்பநாட்டாழ்வார்ன்னு எல்லாம் ஆன மாதிரி தானே கபில தேவ நாயனார், பரணதேவ நாயனார் எல்லாம் ஆனார்கள்?! சரி தானா இரவி?! :-)//

Enna? Balancing "Act" aa? :)

//சரி தானா இரவி?! :-)//

சரி இல்லை குமரன்!

வள்ளுவ ஆழ்வார், கபிலாழ்வார், பரணாழ்வார்-ன்னு ஆக்கி இருந்தா, அப்போ அது தவறு!

அவர்கள் திருமாலைப் பக்தி என்னும் அடிப்படையில் பாடவில்லை! பொதுவாகப் பாடியவர்கள்! தமிழ்ச் சான்றோர்கள்!

"தாமரைக் கண்ணான் உலகு" என்று வள்ளுவர் ஒரு வரி சொல்வதை வைத்து எல்லாம் அவரை வைணவ வளையத்துக்குள் அடக்குதல் தவறு!

ஆனால் கம்பர் அப்படியில்லை! ஆவியே அமுதே என்றெல்லாம் தொடர்ந்து பாடியதால் கம்பநாட்டாழ்வார்! அதே போல் வில்லிபுத்தூர் ஆழ்வார்!

ஆனால் இதையே ஒளவையாழ்வார், கபிலாழ்வார், பரணாழ்வார், காக்கைப்பாடினி ஆழ்வார்-ன்னு சொன்னா, அப்போ தப்பு! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை!

குமரன் (Kumaran) said...

//ஆனால் இதையே ஒளவையாழ்வார், கபிலாழ்வார், பரணாழ்வார், காக்கைப்பாடினி ஆழ்வார்-ன்னு சொன்னா, அப்போ தப்பு! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை//

உண்மையாவா? நீங்க என்னோட பின்னூட்டத்தைச் சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். மேலே பாருங்க சொல்லியிருக்கேன். ஒருவேளை இராதாவோட பின்னூட்டம் எல்லாம் படிச்சதுல என் பின்னூட்டம் கண்ணுலயே படலை போலிருக்கு. :-)

Radha said...

//அது எப்படியோ பின்னூட்டங்களில் வந்துவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்.//
குழப்பமான பின்னூட்டங்கள் அளித்ததற்கு நீங்களும் மன்னித்து கொள்ளுங்கள். :)

சிவகுமாரன் said...

வணக்கம். என் தளத்திற்கு வருகை தந்ததிற்கு நன்றி.
நான் சிவபக்தன்.எண்கள் தளத்தை பின்தொடர்கிறேன்.
இறையருளைப் பற்றி நான்(அவனருளால்) எழுதிய கவிதைகளுக்காக தனி ப்ளாக் தொடங்கலாமா என யோசிக்கிறேன் - உங்களைப் போன்றோரின் ஆதரவு இருந்தால்.

சிவகுமாரன் said...

வணக்கம். என் தளத்திற்கு வருகை தந்ததிற்கு நன்றி.
நான் சிவபக்தன்.உங்கள் தளத்தை பின்தொடர்கிறேன்.
இறையருளைப் பற்றி நான்(அவனருளால்) எழுதிய கவிதைகளுக்காக தனி ப்ளாக் தொடங்கலாமா என யோசிக்கிறேன் - உங்களைப் போன்றோரின் ஆதரவு இருந்தால்.

குமரன் (Kumaran) said...

சிவகுமாரன்,

தங்களது சிவகுமாரன் கவிதைகள் பதிவிலேயே தனியாக ஒரு வகையாக இறையருள் கவிதைகளை இடலாம் என்று எண்ணுகிறேன். அவற்றைத் தனியாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் தனியாக ஒரு பதிவைத் தொடங்குங்கள்.

Radha said...

குமரன்,
திருவாய்மொழி படித்து கொண்டிருந்தேன். இந்தப் பாசுரம் வந்தது.

"பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே."

"அறவனை மறவேல்" என்றும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. :-)
திருவாய்மொழி = divine wine. :-)

Kannan said...

தமது வார்த்தைகள் ஏற்புடையது. அறவாழி அந்தணன் என பெருமாள் கொண்டாடப்டுகிறார்.