Monday, July 12, 2010

இராமன் எனும் திராவிடன் - சில குறிப்புகள் - 1


இராவணன் ஒரு பிராமணன் என்று சொல்லும் வடமொழி நூல் தரவுகளையும் அவனை அரக்கன் என்று விளிக்கும் புறநானூற்று பாடலைப் போன்ற தமிழ் நூல் தரவுகளையும் பல நூல்களிலும் இணையத்தில் கிடைக்கும் பல கட்டுரைகளிலும் காணலாம். ஆனால் அனைத்து நூல்களும் இணையக் கட்டுரைகளும் இராமனை ஆரியன் என்றே சொல்லும். ஆரியன், திராவிடன் என்ற சொற்கள் அக்காலத்தில் இனத்தைக் குறிக்கப் பயன்பட்டதா என்பது கேள்விக்குரியது; ஆரிய திராவிட இனவாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த மேற்கத்திய இனவாதத்தின் அடிப்படையில் தோன்றிய வாதம் என்று நினைப்பதற்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனைப் பற்றி வேறொரு நாள் பேசலாம். இந்தக் கட்டுரையில் அந்த வாதத்தை எடுக்கவில்லை.

இராமனை ஆரியன் என்றே அனைத்து நூல்களும் சொல்ல, அப்படியே அனைத்து மக்களும் நினைத்துக் கொண்டிருக்க அவனுடைய முன்னோர்களில் ஒருவன் திராவிட அரசன் என்று கூறும் தரவுகளும் இருக்கின்றன என்று காட்ட எழுதப்படும் கட்டுரை இது. அதற்குள் செல்வதற்கு முன்னர் ஒரு சிறிய முன்னுரை. (இது வரை எழுதியது என்ன என்று கேட்காதீர்கள். :-) )

இராமாயணத்தைப் பொறுத்தவரையில் மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகள் என்று சொல்பவர்கள் முதல் வகை. இவர்களுக்கு இராமன், இராவணன் போன்றவர்கள் எல்லாம் கற்பனைக் கதையில் வரும் கதை மாந்தர்கள் மட்டுமே. இராமனை மட்டும் கற்பனை என்று கூறிவிட்டு இராவணன் உண்மையில் வாழ்ந்த திராவிட மன்னன் என்று இவர்கள் கூற மாட்டார்கள்; கூறவும் கூடாது. இந்த வகையினருக்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை.

2. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க உண்மையானவை என்று எண்ணுபவர்கள் இரண்டாம் வகை. இவர்களுக்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

3. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் உண்மையில் நடந்தவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை; பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவை என்பதால் பல பகுதிகள் பொய்யோ என்று ஐயுறும் வகையில் திரிந்துவிட்டன; ஆனாலும் இவையெல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று கூற இயலாது என்று எண்ணுபவர்கள் மூன்றாவது வகையினர். இப்படி எண்ணுபவர்களே பெரும்பான்மை என்று நினைக்கிறேன். (நானும் இவ்வகை என்பதால் அப்படி எனக்குத் தோன்றுகிறது என்றும் கூறலாம் :-) ). இவ்வகையினருக்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

நீங்கள் எந்த வகை என்று நினைக்கிறீர்கள்?

***

இராமன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் என்பது இராமாயணம் சொல்லும் செய்தி. அதாவது இக்ஷ்வாகு என்பவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். இவன் ஒரு புகழ் பெற்ற அரசனாக இருந்ததால் இவனுடைய வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று புகழ் பெற்றது. இவனுடைய தந்தையின் பெயராக புராணங்கள் சொல்வது வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவின் இன்னொரு பெயர் சத்தியவிரதன். இவனை திராவிட அரசன் என்றே பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய பல புராண நூல்களும் கூறுகின்றன. தரவாக ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.


யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:
ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா
ஸ வை விவஸ்வத: புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம்
த்வத்தஸ் தஸ்ய சுதா: ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:


பாகவதம் 9.1.2 & 9.1.3

இதன் பொருள்: யார் சத்தியவிரதன் என்ற பெயருடையவனோ இராஜரிஷியான அந்த திராவிட அரசன், இறைவனைத் துதித்ததால் சென்ற கல்பத்தின் இறுதியில் ஞானத்தை அடைந்தான். அவன் விவஸ்வான் என்னும் பகலவனின் மகன் என்பதையும் அவனே வைவஸ்வத மனு என்பதையும் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இக்ஷ்வாகு முதலிய அரசர்கள் அவனுடைய மகன்கள் என்பதையும் கேட்டிருக்கிறோம்.

ஆக திராவிட அரசனான சத்தியவிரதன் என்னும் வைவஸ்வத மனுவின் மகன் இக்ஷ்வாகு. அவனுடைய குலத்தில் பிறந்தவன் இராமன். அப்படியென்றால் இராமனும் ஒரு திராவிடன் என்று கூற என்ன தடை இருக்கிறது? இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் தரவுகளுடனும் குறிப்புகளுடனும் தொடரும்...

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)

raaman = karuppu; so dravidan!
raavaNan = veLLai; so, so & so!
nu prove paNNa pOReengaLaa?

raavaN padam paatheengaLaa enna? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

btw...ethu eppadiyO, enga seethai dravidaL thaan!
poRanthu veedu = raavaNan veedu; so if raavaNan = dravidan, she is too!
pukuntha veedu = raaman veedu; so if u prove raaman = dravidan, she is too!
:)))

maayamma seethamma!

மதுரையம்பதி said...

ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க...இந்தியாவுக்கு வரும் முன்னரே இப்படியா? :-)

//கற்பனைக் கதையில் வரும் கதை மாந்தர்கள் மட்டுமே. இராமனை மட்டும் கற்பனை என்று கூறிவிட்டு இராவணன் உண்மையில் வாழ்ந்த திராவிட மன்னன் என்று இவர்கள் கூற மாட்டார்கள்; கூறவும் கூடாது//

நல்லாயிருக்கே இது! :-)

நாடி நாடி நரசிங்கா! said...

இராமன் ஸ்ரீமன் நாராயணன் . என்று நானும் அனுமனும் நம்புகிறோம் .
ஸ்ரீ ராம என்றாலே ஆஞ்சநேயர் மகிழ்ச்சியில் ஆடுவாரு!
இராமர் ஆர்யானா திராவிடனா என்று தெரியவில்லை!

குமரன் (Kumaran) said...

இரவி. இராவணன் படம் இன்னும் பார்க்கலை. ஊருக்குப் போய் நேரம் இருந்தா பாக்கலாம்ன்னு இருக்கோம். இராமன் கருப்பன்/மாயோன் என்கிறது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராவணன் வெள்ளைனு சொல்றது புதுசா இருக்கு. அப்ப இரவைப் போல் வண்ணம் கொண்டவன் இரா வண்ணன் = இராவணன் என்ற விளக்கம் என்னவாகிறது? :-)

இராமன் கருப்பா இருக்குறதால மட்டுமில்லை அவனுடைய முன்னோர்களில் ஒருவன் திராவிட அரசன் என்பதால் இராமன் திராவிடன்!

இராவணன் கருப்போ வெள்ளையோ அவனுடைய தந்தை ஒரு பிராமணன் என்பதால் அவன் பிராமணன்! ஆரியனா திராவிடனா என்பதை இனி மேல் தான் பார்க்க வேண்டும்! :-)

(அதென்ன இராவணனுக்கு மட்டும் சோ & சோ? என்ன சொல்லணும்ன்னு நினைக்கிறீங்களோ அதனைச் சொல்ல வேண்டியது தானே! :-) )

குமரன் (Kumaran) said...

சீதை பொறந்த வீடு இராவணன் வீடா? இலங்கையில கடல்ல விட்டா அந்தப் பெட்டி மிதிலையில போய் புதைஞ்சதா? மிதிலை கடலோரத்திலயா இருக்கு? :-)

குமரன் (Kumaran) said...

மௌலி. இந்தியாவுக்கு வந்த பின்னாடி இன்னும் ஒரு வழி ஆயிடுவேன்னு சொல்லுங்க! :-)

ஆமாங்க. ஒரு பகுதி மட்டும் கற்பனைங்கறது; மத்த பகுதியை வச்சுப் பெருமை பேசறது - அது முட்டாள்தனம் தானே. அதனால தான் முதல் வகையில இருக்குறவங்க அப்படி பேச மாட்டாங்க. பேசவும் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிப் போட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

வாங்க இராஜேஷ். இராமன் திருமால்ங்கறதை அனுமன் நம்புறாரா? எனக்குத் தெரியாதே?! திருமாலே வந்தாலும் சீதாராமனா வா; இல்லாட்டி போயிடுன்னு இல்லே நம்ம சிறிய திருவடி சொன்னாரு! :-)

இராமன் ஆரியனா திராவிடனா என்பதில எனக்கும் கவலையில்லீங்க. ஓ ராம நீ நாமம் ஏமி ருசிரான்னு பாடிகிட்டு இருக்கிறங்க கூட்டத்துல ஓரமா நிக்கிறவன் தான். ஆய்வுன்னு வந்துட்டா கடவுளையும் ஆய்ஞ்சு பாத்துரணும்ன்னு நம்ம இரவி அண்ணாச்சி சொன்னாருல்ல - அதான்! வேற ஒன்னுமில்லை! :-)

arul said...

eppadi ippadi ?