Thursday, June 17, 2010

தாழையாம் பூமுடிச்சு....

தாழையாம் பூ முடிச்சு
தடம் பார்த்து நடை நடந்து
வாழையிலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

(தாழையாம்...)

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா - இந்த
ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா!

(பாளை போல்...)

தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா?
மானாபிமானங்களைக் காட்டுமா?

(தாழையாம்...)

மானமே ஆடைகளாம்
மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணையிருந்தால் போதுமே! - எங்கள்
நாட்டுமக்கள் குலப்பெருமை தோன்றுமே!

(பாளை போல் ...)




அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா? - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?

மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா?

(பாளை போல்...)
(தாழையாம்...)

No comments: