Tuesday, September 23, 2008

காற்றே என் வாசல் வந்தாய்! மெதுவாகக் கதவு திறந்தாய்!

அடிக்கடி கேட்கும் பாடல். மனத்தை மயக்கும் பாடல். மெல்லிய தென்றல் வந்து வாசற்கதவையோ சாளரக்கதவையோ சற்றே நகர்த்தும் போதெல்லாம் மனத்தில் ஓடும் பாடல். காற்றைக் காதலனும் காதலியும் விளிப்பது போல் தொடங்கும் பாடல் விரைவில் அவர்களுக்கிடையே நடக்கும் சுவையான உரையாடலாக மாறிவிடும். அந்த உரையாடலும் ஆழ்ந்த பொருள் கொண்ட உரையாடல். பாடலைக் கேட்டுப் பாருங்கள்.



காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

கார் காலம் அழைக்கும் போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா?
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா?
நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம் கண்டுபிடிப்பாயா?

பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க!
பூமிக்கு மேலே வான் உள்ள வரையில் காதலும் வாழ்க! (காற்றே)

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்து போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே!
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ளச் சொல்கிறதா?
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா?
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா?
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா? (காற்றே)


திரைப்படம்: ரிதம்
வெளிவந்த வருடம்: 2000
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: கவிதா, உன்னிகிருஷ்ணன்

13 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர்!...எனக்கும் மிகவும் பிடித்த பாடல் குமரன். பதிந்தமைக்கு நன்றி :)

RATHNESH said...

என்ன குமரன்,

பாட்டினைப் பிரிஞ்சு மேஞ்சிருப்பீங்கன்னு ஓடி வந்தேன். ஏமாத்திட்டீங்களே!

குமரன் (Kumaran) said...

உங்களுக்கும் பிடிக்குமா? ரொம்ப மகிழ்ச்சி மௌலி. :-)

குமரன் (Kumaran) said...

பாட்டைப் பிரிச்சி மேயறதெல்லாம் இரவிசங்கர் கண்ணபிரான் செய்றதுங்க இரத்னேஷ். நான் எழுதுறதெல்லாம் வெறும் விளக்கம் தான். அப்படி விளக்கம் சொல்றதுக்கு இந்தப் பாட்டு அம்புட்டு ஒன்னும் கட்டமா இல்லையே! சங்கப் பாடல் மாதிரி இருந்தா கொஞ்சம் விளக்கலாம். :-)

(உண்மையான காரணத்தை உங்களுக்கு மட்டும் சொல்றேன் - சில வரிகளைக் கேக்குறப்பவே வெக்கமா இருக்கு. அதுக்கு விளக்கம் வேற சொல்றதுன்னா எப்படி? ) :-)

Kavinaya said...

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் :) நன்றி குமரா.

Balakesan said...

Song like this invites people for exploration!

Some time ... silence is the greatest explanations!

I guess kumran left the explanation of this song as ‘silence’ intentionally!

-bala

சிவமுருகன் said...

நல்ல பாட்டு சாமியோவ்,

ரிதம் படத்துல 5 பாட்டு, 5ம் 5பூதங்களை பற்றிய பாட்டு (அதாங்க காத்து, தண்ணி, பூமி, வானம், தீ).

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி கவிநயா அக்கா. :-)

குமரன் (Kumaran) said...

சரியாகச் சொன்ன பாலகேசன். அதனாலத் தான் லேசாத் தொட்டுட்டு விட்டுட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

இந்தக் காற்று பாட்டையும் தண்ணீர் பாட்டையும் கேட்டிருக்கிறேன் சிவமுருகன். பூமி, வானம், தீ - பாட்டெல்லாம் கவனிக்கலையே. என்ன பாட்டுங்க சிவமுருகன்?

சிவமுருகன் said...

// பாட்டெல்லாம் கவனிக்கலையே. என்ன பாட்டுங்க சிவமுருகன்?//
இங்கே

Expatguru said...

Nice song. There is one more superb song "Nadhiye Nadhiye Kaadhal Nadhiye" in the same film which has an equally melodious tune as well as fantastic visual effects.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் Expatguru. நீங்கள் சொல்லும் பாடலைத் தான் அடுத்த 'கேட்டதில் பிடித்தது' வகையில் இடலாம் என்று நினைத்திருக்கிறேன். விண்மீன் வாரத்தில் இடுவதற்காக அந்தப் பாடலை எடுத்து வைத்திருந்தேன். நேரம் இல்லாததால் எழுத இயலவில்லை அப்போது.